Queen
கங்கனா ராவத். பேஷன் படத்தில் இவரது நடிப்பை பார்த்து மிரண்டிருக்கிறேன். இப்போது குயினில். டெல்லியில் மிட்டாய் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்த பெண் ராணி. அவளின் திருமண மெகந்தி விழாவில் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் கலந்து கட்டிய சந்தோஷத்தோடு படம் ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் கல்யாணம் என்கிற நிலையில் வருங்காலக் கணவன் காபி டேவுக்கு அழைத்து இந்த திருமணம் நடக்காது என்று சொல்கிறான். என்ன ஏதுவென புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறாள் ராணி. கல்யாணம் நிற்கிறது. கல்யாணம் முடிந்து ஹனிமூன் போவதற்காக ப்ளான் செய்யப்பட்ட, பாரீஸ், ஆம்ஸ்டர்டாம் பயணத்தை தனியே கிளம்புகிறாள். பொத்தி பொத்தி வளர்கக்ப்பட்ட, ஆணாதிக்கம் கொண்ட சமூகத்தில் வளர்ந்த, எல்லாவற்றுக்கும் ஜெய் மாதா ஜி என கடவுளை துணைக்கழைக்கும் பயந்த சுபாவமுள்ள, அவ்வளவாக வெளியுலக எக்ஸ்போஸர் இல்லாத கல்யாணத்திற்காகவே வளர்க்கப்பட்ட பெண்ணின் இந்த பயணம் மூலம் கிடைத்த அனுபவம் தான் படம். கொஞ்சம் அசந்தாலும் சோம்பிப் போக வாய்ப்புள்ள திரைக்கதை. ஆங்காங்கே சோம்பி நின்றாலும், கங்கனாவின் இன்னொசென்ஸ் படத்தை காப்பாற்றுகிறது.
படம் முழுக்க ரசிக்க வைக்கும் கேரக்டர்கள். பாரீஸில் பக்கத்து ரூமில் கஸ்டமரோடு உறவு வைத்துக் கொண்டுவிட்டு, யாரிடமும் சொல்லாதே என்று பேசியபடி நட்பாகும், இந்தியனுக்கும் ப்ரெஞ்சுகாரிக்கு பிறந்த விஜய லஷ்மி, லண்டனின் வேலை செய்தாலும், டிபிக்கல் மிடில் க்ளாஸ் மனப்பான்மையில் வளைய வரும் மாப்பிள்ளை, ஆம்ஸ்டர்டாமில் கண்ணாடி ரூமில் விபச்சாரம் செய்யும் முஸ்லிம் பெண், ரூம்மேட்டாய் வேறு வழியில்லாமல் ஒர் கருப்பன், ஜப்பானியன், ரஷ்ய கேரக்டர்கள். வீடியோ சேட்டில் விஜயலஷ்மியின் க்ளீவேஜை பார்த்துவிட்டு, ஜொள்ளு விடும் கங்கனாவின் வயதுக்கு வர இருக்கும் தம்பி சோட்டு. ஆம்ஸ்டர்டாமில் ரெஸ்டாரண்ட் வைத்திருக்கும் இளைஞன். கொஞ்சம் நழுவினாலும் க்ளீஷேவாக போய் விடக்கூடிய கேரக்டர்கள் தான். ஆனால் அக்கேரக்டர்களின் உண்மைத்தன்மை அதை காப்பாற்றுகிறது.
முதல் முதலாய் தண்ணியடித்துவிட்டு சலம்பும் கங்கணாவை காண கண் கோடி வேண்டும். அப்படி ஒரு சலம்பல்.அழுகை, துக்கம், சந்தோஷம் என வர்ணஜால பர்பாமென்ஸ். அதுவும் எல்லாவற்றிக்கும் பயந்து அழுதுவிடக்கூடிய கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாய் நட்பும் உலக அறிவும் பெற ஆரம்பித்த பின் அதே காதல் கணவனை ஆம்ஸ்டர்டாமில் மீட் செய்யும் இடத்தில் கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் டீல் செய்யும்மிடம். க்ளைமாக்ஸில் அவர் முகத்தில் தெரியும் உற்சாகம், நம்பிக்கை. அத்தனையும் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார் கங்கணா.
படத்தோடு கடந்து செல்லும் அமித் திரிவேதியின் பாடல்கள், பளிச் ஒளிப்பதிவு. உறுத்தாத வசனங்கள் (கங்கணாவும் சேர்ந்து எழுதியிருக்கிறார்). ராணியை அழைத்து காபிடேவில் நம் கல்யாணம் நடக்காது என்று சொல்லிவிட்டு எதுவும் நடக்காமல் இருக்கும் விஜய் அவர் போன பிறகு கங்கணாவின் கையிலிருந்து உதிர்ந்த மருதாணி தூள்களை துடைத்துவிடுவது போன்ற சின்னச் சின்ன ரியாக்ஷன்கள் படத்திற்கு வலிமை கூட்டுகிறது. என்ன தான் கல்யாணம் வேண்டாம் என்று விஜய் சொல்வதற்கு அவரின் கேரக்டர் மீதான காட்சிகள் படத்தின் நடு நடுவே காட்டினாலும், க்ளிஷேவாகத்தான் இருக்கிறது. குறையாய் சொல்ல விஷயங்களிருந்தாலும், நிறையாய் நிறைய இருப்பதால் குயின்.. க்ளாஸ் டோண்ட் மிஸ் இட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நிமிர்ந்து நில்
டெபிஸிட் காரணமாய் ஒரு நாள் இரண்டு ஷோக்கள் கழித்து ரிலீஸானது படம். ஆனாலும் கூட்டத்திற்கு குறைவில்லை. அது ஒன்றே படத்தின் மீதான எதிர்பார்ப்பை காட்டியது. நேர்மையாய் இரு, நல்லவனாய் இரு, என்று சொல்லி வளர்க்கப்பட்ட ஒருவன் இன்றைய சமுதாயத்தோடு இணைந்து வாழ முடியாமல் இருக்க, ஒரு நூறு ரூபாய் லஞ்சம் கொடுக்க கூடாது என்பதில் ஆரம்பித்து அவன் எவ்வளவு பெரிய இடர்களை சந்திக்கிறான். அதனால் அவன் எடுக்குமோர் முடிவு அந்த அதிகாரிகள் அனைவரையும், மட்டுமில்லாது, அரசு இயந்திரம் எவ்வளவு மோசமாக செயல் படுகிறது என்பதை தோலுரித்து காட்டுகிறது. இவனால் பாதிப்படைந்தவர்கள் எப்படி சட்டத்தின் முன் தங்களை நல்லவர்களாய் காட்ட முயல்கிறார்கள் என்பதுதான் கதை. முதல் பாதி வேகமென்றால் வேகம் டெரர் வேகம். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் போன்ற பரபர வசனங்கள், காட்சியமைப்புகள் என பட்டையை கிளப்புகிறது. இவ்வளவு வேகமான திரைக்கதைக்கு தீனி போடக்கூடிய அளவு கண்டெண்டும், கேரக்டர்களும் இருந்தால் மட்டுமே தாங்கும் எப்படி எடுத்துப் போகிறார்களோ? என்று யோசிக்க வைத்தது. இங்கேயிருக்கும் ஜெயம் ரவியைப் போலவே இன்னொரு ஜெயம் ரவியை கொண்டு வந்து ஒரு மாதிரி உட்டாலக்கடி செய்ததால் முதல் பாதியில் விரைப்பாய் நிமிர்ந்து நின்ற படம் லேசாய் தளர்ந்தது. பட்.. தமிழ் சினிமாவில் கொஞ்சமாவது சமுதாய அக்கறையோடு படமெடுப்பவர்கள் அரிதாகி வரும் நேரத்தில் இம்மாதிரியான படங்கள் வருவது சிறப்பான ஒன்றே. கேட்டால் கிடைக்கும் கொள்கைகளோடு உடைய ஒருவன் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதை கொஞ்சம் லாஜிக் மறந்து சினிமாட்டிக்காக சொல்லியிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
300 Rise of an Empire
ஏனோ தெரியவில்லை. முதல் பாகம் பார்த்த போதிருந்த ஆர்வம் கொஞ்சம் கூட இதில் வரவேயில்லை. ஆரம்பித்ததிலிருந்து க்ளைமேக்ஸ் வரை என்ன நடக்கும் என்பது கிட்டத்தட்ட படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஓட ஆரம்பித்துவிடுவதாலும், கிட்டத்தட்ட காட் ஆஃப் வார் கேமில் வரும் பார்த்து பழகிய விஷுவல்களாலும், தூக்கம் தான் வந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
அசோக் நகர் உதயம் தியேட்டரிலிருந்து வலது பக்கம் காசி தியேட்டருக்கு போகும் வழிக்கு திரும்பும் இடத்தில் ஒர் சிக்னல் போட்டிருக்கிறார்கள். பில்லருக்கு அடியில் வண்டியைப் போட்டுவிட்டு போலீஸ் காரர்கள் உட்கார்ந்துவிட, இன்னொரு ஓரமாய் மறைந்த படி ஒர் போலீஸ் நிற்கிறார். சிக்னல் தாண்டி வருகிறவர்களை உடனடியாய் மடக்கி, கேஸ் போடுகிறார்கள் அல்லது கட்டிங் வாங்கிக் கொண்டு அனுப்புகிறார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இது அதிகம் நடக்கிறது. சிக்னலை மீறுகிறவர்களிடம் அபராதம் விதிப்பது ஒன்று தவறல்ல. ஆனால் இவர்கள் அதை அமலாக்கம் செய்யும் முறை தான் சரியல்ல. முக்கியமாய் ஒர் சார்ஜெண்ட் தன் வண்டியோடு பில்லருக்கு கீழ் நிற்கிறார். இன்னொரு கான்ஸ்டபிள் கேஸ்களை பிடித்து ஓரக்கட்டியவுடன் மீண்டும் தன் கடமையை செய்யாமல், பிடித்தவர்களிடம் பேரம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் சிக்னல் இல்லாத போதே வண்டிகள் போக ஆரம்பித்துவிடுகிறது. அதை கண்டு கொள்வதேயில்லை. அதுவும் அரசு பஸ்களுக்கு சிக்னல் என்பதே கிடையாது என்ற நினைப்பில் தான் வண்டியோட்டுகிறார்கள். செய்யுற வேலையை ஒழுங்கா செஞ்சா நல்லாருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
HighWay
ரோட் மூவி என்றழைக்கப்படும் ட்ராவல் வகையறா படங்களின் மேல் இந்திய சினிமா இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எப்போதும் ஒர் காதல் உண்டு. ஏனோ தெரியவில்லை நம்மூரில் ட்ராவல் வகையறா படங்கள் பெரிதாய் செல்ப் எடுப்பதில்லை. எனக்கு ஞாபகத்திற்கு உட்பட்டு, தமிழில் ட்ராவல் மூவி ஹிட் என்றால் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரியை சொல்லலாம். ஹிந்தியில் கொஞ்சம் பழைய தில் ஹே கி மாந்தா நகின், அப்புறம் ராம் கோபால் வர்மாவின் தவுட் ஆகியவை நல்ல முயற்சியாய் இருந்தாலும் ம்ஹும். இத்தனைக்கும் ரஹ்மானின் அற்புதமான பாடல்களை கொண்டிருந்த படம். இப்போது இம்த்யாஸ் அலியின் ஹைவே. மீண்டும் ரஹ்மானின் இசையுடன். அற்புதமான விஷுவல்ஸ், அதிகம் பேசாத, கரடு முரடான ஹீரோ, லூசா, இல்லை தெளிவானவளா என்று புரிந்து கொள்ள முடியாத, கொஞ்சம் பழைய சோகக் கதை உள்ள ஹீரோயின் என டெம்ப்ளேட்டாய் படம் போகிறது. க்ளைமாக்ஸ் வரும் போது மனதை தைக்க வேண்டிய விஷயம் சரி.. அப்புறம் என கேட்க வைத்துவிடுவதால்.. மீண்டும் என்றாவது ஒர் சிறந்த ரோட் மூவி வருமென்ற நம்பிக்கையில் பயணிப்போம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் ட்வீட்டிலிருந்து
மகளிர் இல்லாத ஒர் தினத்தை நினைத்து பார்க்கவே முடியாதவன் நான். அதென்ன இன்னைக்கு மட்டும்?.ஹேப்பி மகளிர் இயர்ஸ்:)
300 பார்த்தா எனக்கு தூக்கம் தான் வருது. ஏன்னே தெரியலை..
- @@@@@@@@@@@@@@@@@@
- அடல்ட் கார்னர்
- after 20 years of sex in the dark a wife finds out her husband used a dildo. she said:"explain the dildo fucker!" he said:"explain the kids bitch"
- கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
ஹிமாச்சலப்ரதேசத்தில் வசிபவர்கள் (பாக் பார்டரில்) உள்ள வைஷ்ணோதேவி'யை வணங்குபவர்கள் 'ஜெய் மாதா தி' என்று சொல்வார்கள். நம்மூர் 'சாமி சரணம்', 'ஓம்சக்தி' போல. ஹி.பி. மக்கள் மட்டுமல்ல பெரும்பான்மை பஞ்சாபி, சிந்தி மக்களும் தேவி பக்தர்களே.
சுவை குறையாத கொத்துப் பரோட்டா அருமை அண்ணா...
Post a Comment