Thottal Thodarum

Mar 20, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-4

சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களின் படங்கள் விநியோக நிறுவனங்கள் மூலமாய் வெளியிட தயாராக முதலில் செய்ய வேண்டிய தியாகம் தங்கள் படத்தின் வியாபாரம் முழுவதும் அந்நிறுவனம் மூலம் செய்து கொள்ள சம்மதித்து ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான். இங்கிருந்துதான் அந்நிறுவனங்களின் வேலை ஆரம்பிக்கிறது. எல்லா சின்னப் படங்களையும் அவர்கள் இம்மாதிரியான ஒப்பந்தங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அப்படங்களையும் பார்த்து ஓரளவுக்கு தப்பிக்கும் என்று நினைக்கும் படங்களை மட்டுமே தெரிவு செய்வார்கள்.

சரி.. படத்தை விநியோக நிறுவனத்திடம் ஒப்படைத்தாயிற்று அடுத்து என்ன? என்றால் அந்நிறுவனம் தங்கள் படத்தை எப்போது வெளியிடுமோ என்று காத்துக் கிடக்க வேண்டும். நல்ல கேப் பார்த்து பப்ளிசிட்டி பெருசா பண்ணி ஜெயிப்போம். நீங்களும் நாலு காசு பாக்க வேணாமா? என்று செண்டிமெண்டலாய் கேட்டு அசத்துவார்கள். வெறு வழியேயில்லாமல் தயாரிப்பாளர் விநியோகஸ்தரின் கருணைப் பார்வைக்காக காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் சொல்லும் நல்ல தருணம் தயாரிப்பாளரிடம் சொன்னது அல்ல, அப்படத்த்ற்கு விளம்பரம் செய்ய ஆகும் பணத்தை ரெடி செய்வதற்குத்தான். அவர் எப்படி ரெடி செய்வார்? அங்குதான் அவரின் பலம் தெரிய ஆரம்பிக்கும்.


தன் விநியோக நெட்வொர்க்கின் மூலமாய் நெருக்கமாய் உள்ள டிவி சேனல்களுக்கு கூப்பிட்டு அவர்களிடம் இப்படத்தை நாங்கள் வாங்கியிருக்கிறோம் என்ன விலைக்கு சாட்டிலைட் உரிமை போகும்? என்று விலை பேச ஆரம்பிப்பார்கள். மெல்ல ஒவ்வொரு சேனலிலும் பேசி ஒர் நல்ல விலைக்கு ஒப்பந்தமானவுடன் தயாரிப்பாளரிடம் சொல்லி, வர்ற வாரத்துல ப்ரொமோ ஆரம்பிச்சிரலாம் என்பார்கள். தயாரிப்பாளர் உற்சாகமடைவார். பிரபல விநியோக கம்பெனியின் முத்திரையோடு தங்களின் படம் வெளியாவதாய் வரும் விளம்பரம் அவருக்கு பெருமை அளிப்பதோடு, மட்டுமில்லாமல், மார்க்கெட்டில் தன் படத்திற்கு நல்ல பேர் என்றும் சந்தோஷப்பட ஆரம்பிப்பார்.  

நம்ம படத்துக்கு சென்னையில மட்டும் 110 பேனர் வைக்கிறோம். மத்த ஊர்ல எல்லா மெயின் செண்டர்லேயும் பேனர், சிக்ஸ் ஷீட் போஸ்டர் ஒட்டறோம் என்று விநியோக நிறுவனம் சொல்லச் சொல்ல தயாரிப்பாளர் புளகாகிதமடைவார். அஹா.. ஒத்த பைசா நம்ம செலவில்லாமல் இவ்வளவு கிராண்டியரா செலவு பண்ணி நம்ம படம் ரிலீஸாகப் போவுதே? என்று. ஆனால் செலவு செய்யப்படும் அத்தனை பணமும் அவருடது தான்.

Post a Comment

2 comments:

இராய செல்லப்பா said...

சரி, தயாரிப்பாளர் எப்போதுதான் பணத்தைக் கண்ணால் பார்க்க முடியும்? அதைச் சீக்கிரம் சொல்லிவிடுங்கள் நண்பரே! (2) இவ்வளவு தொல்லையா திரைப்படத் தயாரிப்பாளர் வாழக்கையில்? பிறகு ஏன் ஆளாளுக்குப் போய் அங்கேயே விழுகிறார்கள்?

gktex10 said...

Super