கொத்து பரோட்டா -28/04/14
தேர்தல் முடிந்துவிட்டது என்றதும் என் நண்பர் ஒருவர் மிக வருத்தமாய் இருந்தார். ஏன்ணே? என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே? அதுக்கு அடுத்த எலக்ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க? என்று பேஸ்புக், ட்விட்டரில் பயமுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு பக்கம் நான் இவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேனென்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களாவது பப்ளிக் சரி.. டிவி சேனல்களில் முக்கியமாய் அரசு தரப்பு சேனலில் ஊரில் இருக்குற முதல் ஓட்டு மாணவ மாணவிகளையெல்லாம் ஓட்டுச்சாவடியில் வழிமறித்து எங்களுக்கு இத்தனை நல்லது பண்ணியிருக்காங்க.. அத்தன நல்லது பண்ணியிருக்காங்க.. அதனால அவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்னு பேட்டிக் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் ஆக்வார்டாத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் நண்பர்கள் இரண்டு பேர் ஓட்டு எண்ணிக்கையன்று பெட்டு வச்சிருக்காங்க.. அதிமுக 30 சீட்டு வரும் ஒருத்தரும் வராது 25தான்னு. இதுல சிறப்பு என்னன்னா.. காலையிலேர்...