தேர்தல் நெருங்க.. நெருங்க.. எல்லா இடங்களிலும், அவரவர் ஆதரவு கட்சிகள்தான் பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்ற பேச்சுக்கள் சண்டைகளாய் மாறிக் கொண்டிருக்கிறது. யார் எவ்வளவு ஜெயிச்சா என்ன நாம இப்படியேத்தான் இருக்கப் போறோம்னு புலம்பிட்டிருக்கிறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களுடய பேச்சும் சண்டையும் தான் மக்களின் மனநிலையை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கென்னவோ இவர்களின் பேச்சின் வழியாய் புரிவது தமிழ் நாட்டை பொறுத்த வரை முதலிடம் அதிமுகவும், இரண்டாவதாக ப.ஜ.க கூட்டணியும், மூன்றாவதாய் தான் திமுக வருமென்று தெரிகிறது. நாற்பதும் நமதே என்பதெல்லாம் எந்த கட்சிக்கும் உய்யலாலாதான். இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதையும், பப்ளிக் மெமரி இஸ் ஷார்ட் என்ற ப்ளஸ் பாயிண்டை எல்லா அரசியல் வாதிகளும் தெளிவாய் உபயோகிக்கிறார்கள். இல்லாவிட்டால் எந்த தேசிய கட்சியுடனோ, அல்லது திராவிட கட்சிகளுடனோ கூட்டணி வைக்க மாட்டேன்னும், என் வீட்டுலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா என்னை சாட்டையால அடிங்கன்னு சொன்ன ராமதாஸ். மின் வெட்டேயில்லை என்று மாறி மாறி கூறினாலும், தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு இருக்கத்தான் செய்கிறது என்பதையும், 2ஜி, அழகிரி, மாறன் குடும்ப அரசியல் எல்லாவற்றையும் மீறி தைரியமாய் நல்லாட்சி வழங்கிட என்று திமுகவும், குஜராத்தை தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் தெளிவான ஆட்சியைத் தராத, ஊழல் மற்றும் உட்கட்சி பூசலோடு குழப்பமாய் திரியும் ப.ஜ.க, எதிர்கால இந்தியாவை உலக அரங்கில் முன்னிறுத்துவோம் என்று இருந்த பத்து வருடங்களில் முன்னிறுத்தாத காங்கிரஸும் ஓட்டு கேட்க வருமா? சிந்திப்பீர் வாக்களிப்பீர்.
@@@@@@@@@@@@@@@@@@@@
விஜய்காந்தின் தேர்தல் பிரசார பேச்சு வீடியோவைப் போட்டு, கிண்டல் செய்து அவரின் புகழை கெடுப்பதாய் நினைத்து பேஸ்புக்கிலும், இணைய வெளியிலும், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன தான் கிண்டல் செய்தாலும், இன்றைய அரசியல் நிலையில் அவர் யாருடன் கூட்டணி என்ற ஆர்வமும், அவருடன் கூட்டணி சேர நான் நீ என போட்டி போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். நல்ல பேச்சாளர்களை கொண்ட கட்சி தலைவர்களை முன் வைத்து அவர்களை தொடர்ந்து வெற்றி பெற வைத்து நாம் கண்டது தான் என்ன மக்களே!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@
மான் கராத்தே
தமிழ் சினிமாவின் புதிய மாஸ் ஸ்டாராய் சிவகார்த்திகேயனை உருவாக்க ப்ரயத்தனப்பட்டிருக்கும் படம். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்கு சான்று தியேட்டர் வாசலில் நிற்கும் இளம் பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள். நல்ல படம் மொக்கை படம் என்பதை மீறி இந்த கூட்டம், இந்த வசூல் இதெல்லாம் நிச்சயம் தற்போதைய சினிமாவிற்கு தேவை.
@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
கோடையை குறிவைத்து வரிசையாய் டீசர்களும், ட்ரைலர்களும், பாடல் வெளியீடுகளுமாய் நடந்து கொண்டேயிருக்கிறது. தொட்டால் தொடரும் படத்தின் பாடல்களின் மிக்ஸிங் முடிந்துவிட்டது. பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் தொடங்கியாகிவிட்டது. சிஜியும், டி.ஐயும் நாளை முதல் ஆரம்பமாகிறது. விரைவில் தொட்டால் தொடரும் பாடல், மற்றும் டீசர், ட்ரைலர் வெளியீடு உங்கள் பார்வைக்கு
@@@@@@@@@@@@@@@@@@@
படிப்பதும் படம் பார்பதும் தொட்டால் தொடரும் வேலையின் காரணமாய் குறைந்து விட்டது. புத்தக கண்காட்சியின் போது வாங்கிய புத்தகங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் மீறி வாத்தியாரின் ஒர் நாவலை எத்தேசையாய் படிக்க ஆரம்பித்தேன். கல்லாஸ்... எழுதி 33 வருஷம் ஆனாலும் இன்னும் ப்ரெஷ்ஷாவே இருக்காரு. வாத்யார் வாத்யார்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்

கேபிள் சங்கர்
Post a Comment
9 comments:
All the best for your new film.
வாத்தியாரின் ஒர் நாவலை எத்தேசையாய் படிக்க ஆரம்பித்தேன். கல்லாஸ்... எழுதி 33 வருஷம் ஆனாலும் இன்னும் ப்ரெஷ்ஷாவே இருக்காரு. வாத்யார் வாத்யார்தான்..
sir book name please..
vanakkam thalaivare
Yeah...book name...
தற்போதைய நம் சினிமாத் தேவைக்காக 'மான் கராத்தே' மாதிரியான படு அபத்தப் படங்கள் எல்லாம் நன்றாக ஓடினால் அல்லது ஓட வேண்டும் என்று நினைத்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு நம் தமிழ் சினிமா மசாலாக் குப்பைகளில் இருந்து வெளிவராது. சரியான விளம்பரம் இல்லாததால், பல தரமான படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கத் தவறி விடுகின்றன. ஆனால் பகட்டான விளம்பரங்கள் மற்றும் TV-ல் மாய்ந்து மாய்ந்து பேசியே, 'மான் கராத்தே' மாதிரியான அபத்தங்களை ஓட வைக்கின்றனர். இந்த நிலை மாறாத வரை, நம் தமிழ் சினிமா அடுத்த நிலைக்கு சற்றும் முன்னேறாது.
உங்கள் 'தொட்டால் தொடரும்' படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Sujatha Book name please...!!!
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்
வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!
i very much support Arun's view on the movie man karathey
, at the same time very much surprised that cablesankar has made up his mind
to support the movie just for the sake of making more money.
Tamil Cinemavin Van Kodumai
சிவகார்த்திகேயன் நடன முன்னேற்றம் தான் என்னை வியக்க வைத்தது...
தொட்டால் தொடரும் ஒவ்வொரு கட்டத்துக்கும் காத்திருக்கிறேன் அண்ணா :)
Post a Comment