தேர்தல் முடிந்துவிட்டது என்றதும் என் நண்பர் ஒருவர் மிக வருத்தமாய் இருந்தார். ஏன்ணே? என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே? அதுக்கு அடுத்த எலக்ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க? என்று பேஸ்புக், ட்விட்டரில் பயமுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு பக்கம் நான் இவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேனென்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களாவது பப்ளிக் சரி.. டிவி சேனல்களில் முக்கியமாய் அரசு தரப்பு சேனலில் ஊரில் இருக்குற முதல் ஓட்டு மாணவ மாணவிகளையெல்லாம் ஓட்டுச்சாவடியில் வழிமறித்து எங்களுக்கு இத்தனை நல்லது பண்ணியிருக்காங்க.. அத்தன நல்லது பண்ணியிருக்காங்க.. அதனால அவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்னு பேட்டிக் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் ஆக்வார்டாத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் நண்பர்கள் இரண்டு பேர் ஓட்டு எண்ணிக்கையன்று பெட்டு வச்சிருக்காங்க.. அதிமுக 30 சீட்டு வரும் ஒருத்தரும் வராது 25தான்னு. இதுல சிறப்பு என்னன்னா.. காலையிலேர்ந்து பார்ட்டியாம். ரிசல்டுக்கு ஏற்ப செலவை கொடுத்துப்பாங்களாம். ரெண்டுமே வரலைன்னா.. ஈக்குவல் ஷேராம்.. என்னையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. யார் ஜெயிச்சா என்ன நம்ம வேலைய பார்ப்போம்ங்கிற அரசியல்ஞானி மனநிலையோட காத்திருக்கேன்.
வாய் மூடி பேசவும், போங்கடி நீங்களும் உங்க காதலும், என்னமோ ஏதோ, என்னமோ நடக்குது என இந்த வாரமும் நான்கு படங்களுக்கு மேல் வெளியாகியிருக்கிறது. என்னமோ நடக்குது படத்தின் மீது எந்த விதமான் எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டரில் பார்க்க அமர்ந்தேன். படத்தின் முதல் காட்சியிலிருந்து களை கட்ட ஆரம்பித்தது. விஜய் வசந்த் நடிப்பில் கொஞ்சம் தேறி அசல் லோக்கல் பாயாக இருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கே டார்ச்சா என்பது எவ்வளவு பழசோ அது போலத்தான். என்னா மனுஷி இவர் மெட்ராஸ் ஸ்லாங்கில் செம்மயாய் பேசியிருக்கிறார். சாட்டை மஹிமாவா இது.. ம்ஹும்.. என்னமாய் இருக்கிறார். கிரிப்பிங்கான முதல் பாதி. சினிமாட்டிக்கான ரெண்டாவது பாதியில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்கள். ப்ரேம்ஜியின் இசையில் ஒரிரு பாடல்களும் பின்னணியிசையும் சிறப்பு. எனிவே இந்த வார படங்களில் என்னமோ நடக்குது இன்ப அதிர்ச்சி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
செல் எடுத்து போகக்கூடாதுன்னு சொன்னாங்க.. கூட்டம் இருக்கு இல்லைன்ன்னு போட்டோ போட்டு அப்டேட்டுல இருக்காங்க..ம்ஹும்
ஓட்டுப் போட்டுட்டேன்னு செல்ஃப்பி போட்டோக்களைப் பார்த்தா பயம்மா இருக்குப்பா..
ஓட்டு போட்டாச்சு.. ஜெயிக்கிற கட்சிக்கு
144 இருக்கிறப்ப நாலு பேருக்கு மேல ஒண்ணா ஒரு இடத்துல கூடக்கூடாதாம். எல்லாரும் கிளம்புங்க
never expected that this film will be sober and lethargic #2states
குடும்பம் குடும்பமாய் சினிமா பார்க்கும் பழக்கும் இந்திக்காரர்களுக்கு இருப்பதால் தான் இந்தி சினிமா வாழ்கிறது என தோன்றுகிறது.#அவதானிப்பூஊஊஊ
எந்த கட்சி வர்ற மூணு நாள் டாஸ்மாக்கை திறந்து வச்சிருப்பேன்னு சொல்றாங்களோ அவங்களூக்குத்தான் என் ஓட்டு - குடிமகன்
ஆம்பளையெல்லாம் புல் கோட் சூட் போட்டு பொண்ணுங்க அரைகுறையா ட்ரெஸ் போட்டு நடந்தா அதான் பேஷன் ஷோ.
@@@@@@@@@@@@@@@@@@@@@
- தொட்டால் தொடரும்
- பின்னணியிசை கோர்பு முடிந்து, சவுண்ட் மிக்ஸிங் ஆரம்பித்துவிட்டது. இன்னொரு பக்கம் டி.ஐ மற்றும் சி.ஜி வேலைகள் ஆரம்பமாகியிருக்கிறது. இன்னும் பத்திருபது நாட்களில் படம் முடிந்துவிடும். விரைவில் பாடல் டீசருடன் உங்களை சந்திக்கிறேன்.
- @@@@@@@@@@@@@@@@@@@@@@@@
- பழைய நூர்ஜஹான் தியேட்டரை புதுப்பித்து சில பல வருடங்கள் முன்னால் அதை ராஜ் என்று மறு நாமகரணமிட்டு ஆரம்பித்த போது அட பரவாயில்லை என்று சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் நியாயமான விலையில் வீட்டுக்கு அருகில் ஒரு ஏசி/டி.டிஎஸ்/க்யூப் ப்ரொஜக்ஷன் என்பதால். என்னதான் தியேட்டரில் ஏசி நன்றாக இருந்தாலும் டி.டி.எஸ். சுமார்தான். பால்கனியில் கடைசி ரோவை தவிர மற்ற எந்த வரிசையில் உட்கார்ந்தாலும், முன் பக்க சீட் மறைக்கும். அதனால் கீழே கட்டை சீட்டில் உட்கார முடிவெடுத்துவிடுவேன். தியேட்டர் ஆரம்பி சில வாரங்களிலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய செண்டராகிவிட்டது தியேட்டர் ராஜ். சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, கிண்டி, ஏரியாவாசிகளுக்கு அருகில் உள்ள ஒரே தியேட்டர் என்பதாலும்,புதிய படங்களை வெளியிடும் திரையரங்காக இருப்பதாலும், மிடில் க்ளாஸ் ரசிகர்களின் விரும்பும் தியேட்டராய் வலம் வர ஆரம்பித்தது. இங்கே மூன்று வாரங்கள் ஓடினால் சூப்பர் ஹிட் படம் என்று முடிவெடுத்துவிடலாம். அப்படியொரு கலெக்ஷன் காட்டும் அரங்கம். சில வருடங்களாய் சரியாய் போவதில்லை என்று சொன்னார்கள். காரணம் என்ன என்பது சென்ற வாரம் என்னமோ நடக்குது போன போதுதான் தெரிந்தது. டிக்கெட் விலை தான் காரணம். பால்கனி 100 ரூபாய். கீழே 80 ரூபாயாம். 120 ரூபாய்க்கு அற்புதமான ஏசி, அட்மாஸ், 4கே டிஜிட்டல் ப்ரொஜக்ஷன் என தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் காம்ப்ளெக்சுகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி காலை/பகல்/மாலை/இரவு கொள்ளையடித்தால் எப்படி ரசிகன் தியேட்டருக்கு வருவான். இதில் வரி ஏய்ப்பு வேறு. வெறும் கூப்பனை மட்டுமே கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள். தமிழக அரசின் சட்டப்படி, சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரில் 10, 30, அதிகபட்சமாய் 50 என மூன்று வகை டிக்கெட்டுகள் வழங்கப் பட வேண்டும். இப்படி இருந்தால் எப்படி சினிமாவிற்கு மக்கள் வருவார்கள்?. சிந்திப்பீர் செயல்படுவீர்.. இல்லாட்டி கஷ்டம்தான்.
- @@@@@@@@@@@@@@@@@@@@@@@
Comments
Dont you feel that there should be fairness in handling handling charges.
I knw tat u wl come back..but, movie mattum concentrate panni blog a vittudatheenga...