Race Gurram
அல்லு அர்ஜுன் படம் என்றாலே கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவாய்த்தான் இருக்கும். படத்தின் பேர் வேறு ரேஸ் குர்ரம்.. பந்தயக் குதிரை. கேட்கணுமா? ஓப்பனிங் சீன்லேயே குதிரையையெல்லாம் தாண்டி ஹைஸ்பீடுல ஓடி வர்றாரு.
சரி விடுங்க கதைக்கு வருவோம். ராம், லஷ்மண் இரண்டு சகோதரர்கள். ராம லஷம்ணன் மாதிரி இருக்கணும்னுதான் பெத்தவங்க ஆசை படுறாங்க.. ஆனா எங்க.. ரெண்டு எதிரும் புதிருமாவே வளருது. மூத்தது போலீஸாவும், இளையது வழக்கமான சினிமா ஹிரோ எப்படி தத்தாரியா திரிவாரோ அப்படி திரியுது. எல்லா மாஸ் சினிமா போலவே வில்லன் எப்படிப் பட்டவன்னு தெரியாம..போகுற போக்குல அவன துவம்சம் செய்திடுறாரு.. பின்னாடி தெரிய வர்றப்ப.. ஹீரோவாச்சே.. கெத்த விட்டுக் கொடுக்க முடியுமா? வில்லன் வீட்டுக்கே போய், அவங்க அப்பா கிட்ட “தபாருங்க.. ஏதோ நடந்தது நடந்து போச்சு.. அடுத்த வேளைய பாருங்கன்னு” சொல்லிட்டு கிளம்பி வந்திடறாரு.. ஏன்னா.. அவங்க அண்ணனுக்கு வச்ச குறியிலதான் தான் மாட்டிக்கிட்டு ப்ரச்சனையாயிருச்சுன்னு தெரிஞ்சதுனால.. பாசம் எகிறிப் போய் இப்படி பண்ணிட்டு வர்றாரு.. பின்னாடி வில்லன் என்ன செய்வான்னு யோசிக்கிறீங்களா? படத்தைப் போய் பாருங்க..::
அல்லு அர்ஜுன் வழக்கம் போல. துள்ளுகிறார், துடிக்கிறார், குதிக்கிறார், ஹீரோயினோடு கெட்ட ஆட்டம் போடுகிறார். பஞ்ச் வசனம் பேசுகிறார். பெரியதாய் எமோஷன் வராமல் தடுமாறுகிறார். இருந்தாலும் ஸ்கீரின் ப்ரெசென்ஸ் அட்டகாசம். ஸ்ருதி அமைதியின் ஸ்வரூபமாய் வரும் கேரக்டர். இப்பத்தானே சிரிச்சேன் உள்ளூக்குள்ளே என்று வளைய வரும் காட்சிகள் எல்லாம் க்யூட். சினிமா ஸூவித்தாம் பாடலில் அவரின் ஆட்டம் ஹாட். அல்லுவின் அண்ணனாய் ஷாம்.. ரெண்டு காட்சிக்கு ஒரு முறை ஒரிஜினல் மீசையோடும், ஒட்டு மீசையோடும் வளைய வருகிறார். ப்ரகாஷ் ராஜ் வழக்கம் போல..
தமனின் இசையில் சினிமா ஸூவிஸ்தான் ஆந்திர அதிரடி. வழக்கம் போல பளிச் டெம்ப்ளேட் ஒளிப்பதிவு. எழுதி இயக்கியவர் சுரேந்தர் ரெட்டி. டிபிக்கல் ஆந்திர மசாலா. மூளையை கழட்டி வைத்துவிட்டு, காரம், மணம், குணத்தை மட்டுமே வைத்து எழுதப்பட்ட திரைக்கதை. அதை ரசிக்கும் மனோபாவம் இருப்பவர்களுக்கு இது கரம் மசாலா. முதல் பாதியில் ஏதோ லவ் அது இது என்று அலைந்தாலும், ரெண்டாம் பாதியில் வில்லன், ஹீரோ கன்பர்ண்டேஷன் சுவாரஸ்யம் ஆரம்பித்து அதுவும் சொதப்பும் போது “கில்பில் பாண்டே:” வை அறிமுகப்படுத்தி அதகளமாக்கியிருக்கிறார்கள். நிஜமாய் சொல்லப் போனால் இப்படத்தின் சூப்பர் ஸ்டார்.. ப்ரம்மானந்தம் தான். மனுஷன் ராக்ஸ்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Why Telugu Industry always taking same sort of masala movies?
Why they don't like to come out it? Yedhaartha cinemava yen avunga kuduka maatikraanga?