கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தொட்டால் தொடரும் ஆரம்பித்த சமயம். இயக்குனர் பார்த்திபன் அவர்களை சந்திக்க நண்பர் குலசேகரன் கூப்பிட்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் மிகவும் பழகியவர் போல பேசினார். நிறைய சினிமா பற்றி பேசினோம். சமீபத்திய படங்கள், அவரின் மலையாள ப்ராஜெக்ட், அவர் எடுக்க போகும் படம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். போகும் போது அவரின் எண்ணைக் கொடுத்து எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க என்று நம்பர் சொன்னார். நான் என்னுடயதை கொடுத்த போது “அட ஏற்கனவே உங்க நம்பர் என்கிட்ட இருக்கே.. சங்கர் நாராயணன்னு வச்சிருக்கேன். எதுக்கோ உங்களை முன்னாடியே மீட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன் என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவரை என் பட பாடல் டீசருக்காகத்தான் அழைத்தேன். படப்பிடிப்பில் இருந்தார். அதனால் ஒரு தேதி சொல்லி, அவரது உதவியாளர் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது வேலைகளுக்கு நடுவே எங்கள் டீசர் படப்பிடிப்புக்கும் ஒத்துழைத்தார். ஆனால் அதற்காக அவர் எடுத்த மெனக்கெடல்கள் அபாரம். பெரிதும் நெருக்கமில்லாத எனக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் என்றால் அவரின் படத்திற்கு எவ்வளவு இருக்கும்?. காலை 9 மணிக்கு ஆரம்பித...