வழக்கமாய் நானும் எங்கள் ஹீரோ தமனும் வாரத்தில் ஏழு நாட்கள் இரவில் சந்திப்பதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஏதேனும் சினிமாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். மனுஷன் அநியாய சினிமா அப்டேட் உள்ளவர். தமிழ் தவிர, கொரிய, அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்கள், சீரியல்களைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீபகாலமாய் கொரிய படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அன்றிலிருந்து மீண்டும் கொரிய படங்களைப் பார்க்கும் அரிப்பு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான கொரியப் படங்கள் தமிழ் இந்தி படங்களைப் போலவே இருக்கிறது. ஒருபக்கம் பக்கா மசாலா என்றால் இன்னொரு பக்கம் நெஞ்சை நக்கிவிடுகிறார்கள். அப்படி இந்த வாரம் பார்த்த படங்களைப் பற்றிய ஒர் தொகுப்பாய் இந்த கொத்து பரோட்டா
@@@@@@@@@@@@@@@@@@
Montage
15 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஒர் இளம் பெண்ணின் தாயிடம் அந்த கேஸை 15 வருடங்களாய் கண்டுபிடிக்க முடியாததால் மூட சொல்லிவிட்டார்கள் என்று குற்ற உணர்ச்சியுடன் சொல்ல வரும் டிடெக்டிவ். ஏன் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. நீங்கள் முயற்சிக்கவில்லை என்று இன்னும் ஒரு வாரமிருக்கும் நிலையில் இப்படி கைவிடுவது சரியில்லை என்று அழும் அவளது தாய். கட்டங்கடைசியாய் பெண் இறந்த இடத்தை பார்க்க போகும் டிடெக்டிவ்விற்கு ஒர் க்ளூ கிடைக்கிறது. பின் பு அங்கிருந்து தொடர்கிறது பரபர ஜெட் வேக திரைக்கதை. பெண்ணின் அம்மாவாக நடித்தவரின் நடிப்பு அபாரம். பின்னணியிசை, மேக்கிங், எல்லாமே க்ளாஸ். ஒரு கட்டத்தில் மிஷ்கினின் அஞ்சாதேவை அப்படியே ஞாபகப்படுத்தும், கடத்தல், போன் ட்ராக்கிங், வீட்டில் நடக்கும் காட்சிகள், கொலையாளி மிரட்டல் விடும் போன்கால் காட்சிகள் என என்னடா இது என்று ஆச்சர்யப் பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப்படம் சென்ற ஆண்டு தான் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ஞாபகப்படுத்திய ஜாக்கியிடம் படத்தின் பெயர் காரணமான மாண்டேஜ் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். படம் நெடுக நான் லீனியரில் கதை சொல்லப் படுகிறது. அதையெல்லாம் பின் வரும் காட்சிகளில் ஒர் சிறிய காட்சியில் தொகுத்தால் அதற்கான கதை புரிய ஆரம்பித்துவிடுகிறது. மனதை உருக்கும் அருமையான திரில்லர். கதை, மற்ற விஷயங்களைப் பற்றிச் சொனால் படத்தை ரசிக்க முடியாது.

@@@@@@@@@@@@@@@@@@@
The Thieves
அட்டகாசமான ஒர் கொள்ளையோடு ஆரம்பிக்கிறது படம். நான்கு பேர் கொண்ட கொரியக்குழு அது. தலைவன் ஒர் மெக்கானிக் ஷெட் வைத்திருந்தாலும், ஸ்னைபர் ஷாட அடித்து அடுத்த கட்டிடத்திற்க் இணைக்கும் கம்பியை இணைப்பதில் வல்லவன். டீமிலேயே இளைமையும் துடிப்பும், துடுக்குத்தனமும் உள்ளவள் அக்கயிற்றிலே பயணிப்பதில் கெட்டிக்காரி. இன்னொருத்தி சூவிங் கம் என்ற வயதானவள். ஏதாவது ஒரு மிராக்கில் நடந்து செட்டிலாக மாட்டோமா என்று நினைத்து இவர்களுடன் வளைய வருபவள். இந்த டீமோடு வந்து இணையும் மிடில் ஏஜ் ஏஞ்சல் ஒருத்தி. இவர்கள் அனைவரும் சேர்ந்து மக்காவில் உள்ள ஒர் குழுவை சந்தித்து அவர்களுடன் இணைந்து இன்னொரு பெரிய கொள்ளையை ப்ளான் செய்கிறார்கள். இந்த ப்ளானை செய்பவன் இரண்டு குழுவுக்கும் அறிமுகமானவன். கொரியக் குழுவில் கடைசியில் வந்து சேரும் பெண்ணிற்கும் அவனுக்கு காதல், அதை ஒர் கொள்ளையின் கடைசி நேரத்தில் சொல்லி, கொள்ளையடித்த தங்கத்தோடு அறுந்து விழுந்த கம்பிக் கயிற்றோடு தப்பித்துவிடுகிறான். அதையும் மீறி இவர்களோடு கொள்ளையடிக்க ஒத்துக் கொண்டு, அவனுக்கு வேலை செய்வது போல அவர்களின் ப்ளானையும் சேர்த்து செயல்படுத்த நினைக்கிறார்கள். அவர்கள் ப்ளான் செய்வது ஒர் கேசினோவில் வரும் பணக்கார ஜப்பானிய பெண்ணிடம் உள்ள வைரத்தை கொள்ளையடிப்பதுதான். அந்த கேசினோவில் தங்கி அவர்களை நோட்டம் விட்டு, கொள்ளையடிக்க ப்ளான் செய்யும் போதே இதை ஏற்பாடு செய்தவன் மீண்டும் இவர்களை மாட்ட விட்டு, தனியே வைரத்தை கொள்ளையடிக்கிறான். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. மேலே சொன்னது புரியலை.. என்பவர்கள் யோசிக்காமல் படத்தை பார்த்துவிடுங்கள். அட்டகாசமான ஆக்ஷன் பிக் பட்ஜெட் த்ரில்லர் நிச்சயம். இத்தனை களேபரங்களுக்கும் நடுவே காதலுக்கும் லேசான காமெடி, மற்றும் ஆக்ஷன் இணைந்திருப்பது பெரிய ப்ளஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Always
வாட்டர் கேன் போடுவதிலிருந்து, நைட் வாட்ச்மேன் வரை எல்லா வேலையும் செய்து சர்வைவ் செய்து கொண்டிருப்பவன் ஹீரோ, ஒர் கால் செண்டரில் வேலை செய்து கொண்டிருக்கும் க்யூட்டான் கண் பார்வையில்லாத் ஹீரோயின். இவருக்குமிடையே ஆன காதல் தான் கதை. ஹீரோ ஒர் கிக் பாக்சிங்காரன். அராஜகனாய் இருந்தவன் இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அடையாளம் இல்லாமல் வாழ்பவன். தன் காதலிக்காக தன் வாழ்க்கையில் மீண்டும் களம் இறங்கும் செண்டியான அழுகாச்சிக் கதைதான் என்றாலும், ஆங்காங்கே நிஜமாகவே நெகிழ வைக்கும் காட்சிகள் அதிகம் கொண்ட படம். ஹீரோவின் கேபினில் கதவை சாத்தி வைத்திருக்க, அவனின் ஷூவை கழற்றியதால் ஏற்படும் நாற்றத்தை நாசுக்காக சொல்லுமிடம், சீரியலில் வரும் ஹீரோயினின் காதணியைப் பற்றி பேசுமிடம், ஹீரோயினின் அலுவலக அதிகாரி அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்யுமிடத்தில் வந்து காப்பாற்றியவுடன், நீ பாட்டுக்கு அவனை அடிச்சிட்ட நாளைக்கு அவன் என்னை வேலைய விட்டு தூக்கிட்டான்னா என்ன செய்றது? என்று கவலைப்படும் இடத்தில் அவன் அவளை காப்பதாய் சொல்லுமிடம், என நிறைய இடங்கள். அவனுடன் கான்செர்ட்டுக்கு போக தன் சிகையலங்காரம் எல்லாம் மாற்றிக் கொண்டு அவனின் அங்கீகாரத்துக்காக நிற்குமிடம். அன்றைய இரவில அவனை பற்றி கேட்டு விட்டு அவன் முகத்தில் அடித்தாற்ப் போல பேசிவிட, ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு வளையவரும் காட்சிகளாட்டும் க்யூட்டோ க்யூட்.. கண் தெரியாத கேரக்டர்கள் எப்படி நடிக்க வேண்டுமென்று பார்த்தாவது கற்றுக் கொள்ளலாம். க்ளைமேஸ் மட்டும் அரத பழசு.
@@@@@@@@@@@@@@@@@@
யாமிருக்க பயமே..
இந்த வார கருப்பு குதிரை. முதல் இருபது நிமிஷம் இம்சை செய்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் செட்டில் ஆகி இடைவேளைக்கு பிறகு டேக் ஆப் ஆகிறார்கள். படம் நெடுக வரும் டபுள் மீனிங் ஜோக்குகள் நிறைய இடங்களில் சரவெடி, சில இடங்களில் கிளுகிளு. ஓவியாவுடன் ஜன்னல் கம்பியினூடே தலை மாட்டி கொண்டு பேசப்படும் வசனங்கள். அவ பூரிய பெருசா பேசுறியே.. நீ என் பூரிய பாத்திருக்கியா? என கிளுகிளுப்பு வசனங்கள் தமிழில் இல்லாத டபுள் எக்ஸ் காமெடிகளுக்கு ஆரம்பம். க்ளைமாக்ஸ் வாக்கில் வரும் ப்ரதர் மயில்சாமியின் எண்ட்ரி மொத்த படத்தையே அல்லோலகல்லோல படுத்திவிடுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் ட்வீட்டிலிருந்து
ஏன் இப்படி விக்குது? #TNmegaTweetUp
இந்த அம்மா கோண்டு பசங்களை என்ன சொல்ல..:)
தெலுங்கில் என்ன இருந்துச்சோ அதே தான் இதிலேயும்.. கொஞ்சம் ஸ்மார்ட்டான ஹீரோவோட#vallavanukupullumayutham
Last ten min mayilsamy rocks # yamirukka bayame
நண்பரோ, தெரிந்தவரோ கேட்கப்படாத உதவிகள் எப்போது வாரா..
சிடுமூஙஞ்சி முகத்தோடு சரவணபவனில் பதில் சொல்கிறார்கள் ஒரு வேளை நிஜமாவே அவங்க வாங்கிட்டாங்களோ
தமிழ் சினிமாவின் கோடைக் கால வசூல் கேள்விக்குறியாய் மாறியது
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hasse To Passe
வழக்கம் போல குழப்படி காதல் கதைதான். ஆனால் கேரக்டரைஷேஷனில் நம்மை கவர்ந்திருந்தார்கள். அதிலும் பர்ணிதி சோப்ரா.. பொண்ணு என்னம்மா நடிக்குது. வித்யாசமான கேரக்டர் பர்ணிதிக்கு. அதை திறம்பட செய்திருந்தார். மிக மெல்லிய காதல் கதை தான் ஏனோ நமக்குள் சின்னதாய் பூ பூக்க வைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நீயா நானா?
வழக்கமாய் நான் பார்ப்பதில்லை. ஏனோ தெரியவில்லை அன்று சீக்கிரமே வந்துவிட்டதால் பார்க்க ஆரம்பித்தேன். அப்பா - மகள் உறவைப் பற்றியது. ஒரு பக்கம் அப்பாக்களும், இன்னொரு பக்கம் பெண்களுமாய் பேசினார்கள். நிறைய சீரியலுக்கான காட்சிகள் லைவ்வாக அரங்கேறிக் கொண்டிருந்தது. அப்பாக்களின் காதலைப் பற்றி பேசினார்கள். அப்போது ஒரு பெண் அவரின் அப்பா தன் காதலியின் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, தன் மனைவியின் பெயரில் இருந்த வீட்டை , சண்டைப் போட்டு விற்று, திருமணம் செய்து வைத்ததாய் சொன்னார். என் மனைவியும் அம்மாவும், ‘பாருங்க காதல் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு?” என்று சொல்ல, எனக்கென்னவோ காதல் ஸ்ட்ராங்காத் தெரியல என்றேன். பின் என்ன என்பது போல இருவரும் பார்க்க, “அந்த பொண்ணு அவருக்கு பொறந்ததா இருக்கலாம்” என்றேன். உங்களுக்குன்னு போகுதே புத்தி என்றாள் மனைவி. நீங்களே சொல்லுங்க... நான் சொன்னது தப்பா..? நான் சொன்னது தப்பா? @@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
“A teacher is teaching a class and she sees that Johnny isn't paying attention, so she asks him, "If there are three ducks sitting on a fence, and you shoot one, how many are left?" Johnny says, "None." The teacher asks, "Why?" Johnny says, "Because the shot scared them all off." The teacher says, "No, there are two left, but I like how you're thinking." Then Johnny asks the teacher, "You see three women walking out of an ice cream parlor. One is licking her ice cream, one is sucking her ice cream, and one is biting her ice cream. Which one is married?" And the teacher responds, "The one sucking her ice cream." Johnny says, "No, the one with the wedding ring, but I like how you're thinking!”
கேபிள் சங்கர்

Post a Comment
6 comments:
Please say where I get korian movie original or good quality DVDs with sub tittle @Chennai
யாமிருக்க பயமே.. copy from - The Quiet Family (South Korea).
@ Saravanan.
சரவணன் நுங்கம்பாக்கம் ஜெமினி FLYOVER பக்கத்திலுள்ள PARSN COMPLEX-ல்(பார்க் ஓட்டல் அருகில்)அனைத்து உலக சினிமா DVD-களும் கிடைக்கும்.
பிரபல பதிவர்களாக இருப்பதற்கு முதல் தகுதியே,யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் இருப்பது-தான் என்று தெரியாதா உங்களுக்கு?...
' VAARATHTHIL EEZHU NAATKALTHANA ?
What else you are doing on other days?
Always - துள்ளாத மணமும் துள்ளும் படத்தை ஞியாபகப்படுத்துகிறது. அதேபோல் அந்த இரு படங்களுக்கும் Streetlights தான் முன்னோடி என்பது என் கருத்து.
Oceans Eleven மாற்று வடிவம் தான் the thieves.
ஒரு திரைப்படம் எப்படி மனதில் இடம்பிடிக்கிறது என்பதையும், அதை நம்ம ஊருக்கு ஏற்றவாறு எப்படி மெறுகேற்றுகிறோம் என்பதை பொறுத்து வெற்றி அமையும். இயக்குனர்களின் மொழியில் சொன்னால்INSPREATION.
நன்றி நண்பா..
Post a Comment