கொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல் அறையில் - ஈடிவி- தமிழ் சினிமா நிலவரம்.
மேற் காணும் வீடியோவில் நம் சமுதாயத்தில் உள்ளவர்களில் எத்தனை பேர் மற்றவர்களின் ப்ரச்சனைகளுக்கு செவி சாய்க்கிறார்கள் என்பதை ஒர் காண்டிட் நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்த நினைத்து எடுத்த வீடியோ. நிஜமாகவே பெரும்பாலானவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்கிற நினைப்புடன் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமே நமக்கு நடக்கும் வரை செய்தியாகவே இருக்கும். அட்லீஸ்ட் இந்த வீடியோ பார்த்தாவது இனிவரும் காலங்களில் நாம் ஹீரோயிசமாய் செயல்படாவிட்டாலும் அட்லீஸ்ட் போலீஸுக்காகவாவது தெரிவிப்பது நல்ல குடிமகனுக்கு அழகு
தமிழ் சினிமாவின் வசூல் நிலவரம் பற்றி நிறைய பேர் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த மாத்திரத்தில் போட்ட காசை எடுத்துவிடும் என்பது போன்ற கமெண்டுகளைப் படித்தால் படு காமெடியாய் இருக்கிறது. இப்படி விமரசனம் மூலம் வசூலைப் பற்றி ஞான திருஷ்டியில் சொல்லும் கூட்டம் ஒரு பக்கம் என்றால், அவர்ரவர்களுக்க் பிடித்த படம், பேஸ்புக், டிவிட்டரில் ப்ரோமோட் செய்யப்பட்ட படங்களை எல்லாம் வெற்றிப்படம் என்று தனியே கட்டுரை எழுதுகிறார்கள். நிஜத்தில் சொல்லப் போனால் இது பற்றிய செய்திகளை எழுத மிக தகுதியானவர்கள் விநியோகத் துறையில் அனுபவம் உள்ளவர்களும், தயாரிப்பாளர்கள் மட்டுமே. தயாரிப்பாளர்கள் கூட தங்கள் கை சுட்டுக் கொள்ளாத வரை வெற்றிப் படம் என்று சொல்லுவார்கள். நூறு கோடி ரூபாய் தயாரிப்பில் உருவான படம் விளம்பரம், எல்லாம் சேர்த்து ரிலீஸ் ஆகும் போது 110 கோடியாகிவிடும். அப்படியான படம் மாபெரும் வெற்றி படமென்றால் சுமார் மூன்னூறு கோடியாவது வசூல் செய்தால்தான் ஹிட் படம். நூறு கோடி ரூபாயை வசூல் செய்தால் அது ஒரு தோல்வி படமே. ஏனென்றால் நூறு கோடி தியேட்டரிலேயே வசூல் செய்ததாய் வைத்தாலும், அதில் அதிகபட்ச வசூலாய் 60- 70 சதவிகிதம் தயாரிப்பாளர்களுக்கு வருதாய் இருந்தாலும், கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@
ஈடிவியும் சாட்டிலைட் ரைட்சும்.
தமிழ் சினிமாவின் சாட்டிலைட் மார்கெட் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறாது என்று தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஆந்திராவில் ஈடிவி ஒர் புதிய விஷயத்தை மார்கெட்டி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த திட்டத்தை நிறைய துண்டு துக்கடா சேனல்கள் செயல்படுத்த ஆசைப்பட்டு கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நம்பி ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை. அது என்ன முறை என்றால் படம் தயாரித்த தயாரிப்பாளர் தங்களது படத்தை மொத்தமாய் 99 வருட பெர்பட்சுவல் ரைட்ஸ் கொடுத்து சேனலுக்க்கு விற்க தேவையில்லை. அதற்கு பதிலாய் படத்தை ஒவ்வொரு ஞாயிறு மதியம் ப்ரைம் டைமில் ஒளிபரப்பி, அதில் வரும் விளம்பர வருமானத்தை பகிர்ந்து கொள்வது என்பதுதான் ஈடிவி அமல் படுத்தியிருக்கும் முறை. ஒரு விதத்தில் சேனலுக்குத்தான் இதில் லாபம் அதிகம். ஏனென்றால் படங்களை விலைக்கு வாங்கி அதற்கு பணத்தை முடக்குவதற்கு பதிலாய் கூலாய் இந்த இரண்டரை மணி நேர ஸ்லாட். உனக்கும் எனக்கும் பாதி பாதி என விளம்பர வருவாயை பிரித்துக் கொண்டால் படத்துக்கு படம் போட்டார்ப் போல ஆச்சு, வருமானத்து வருமானமும் ஆச்சு. ஏனென்றால் சில வருடங்களாய் ஈடிவி புதிய தெலுங்கு படங்களை விலைக்கு வாங்கி போடுவதேயில்லை. பெரும்பாலும் பழைய படங்களை வைத்துக் கொண்டே ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறது. நம்மூர் ராஜ் டிவி மாதிரி. பெரிய நடிகர்கள், அவர்களின் வாரிசு படங்கள் எல்லாம் அவர்கள் பங்குதாரர்களாய் இருக்கும் மாடிவிற்கு விற்கப்பட்டுவிட, மிதமுள்ள படங்களை ஜெமினி வாங்கி கொள்கிறது. இவர்களின் போட்டியில் ஆட்டமே ஆடாமல் தங்கள் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிற ஈடிவி எடுத்திருக்கும் இந்த ஆட்டம் அவர்களுக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஒர் லாபகரமான விஷயமாய் இருக்குமென்று நம்புவோம். ஏனென்றால் நம்பிக்கைத்தான் வாழ்க்கை. ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை விரிவாய் இன்னொரு கட்டுரையில் இந்த வியாபாரத்தின் பின்னணி பற்றி பேசுவோம்.

@@@@@@@@@@@@@@@@@@@
Filmistaan
படம் வெளியாவதற்கு முதல் நாள் தனஞ்செயன் சார் ஒர் ஸ்பெஷல் ஷோ போட்டிருக்கிறார். பார்த்துவிட்டு வந்த சினிமா உலக பிரமுகர்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு பாராட்டிக் கொண்டிருக்க, இயக்குனர் பத்ரி போன் செய்து சங்கர் மிஸ் பண்ணிடாத அப்புறம் வருத்தப்படுவ.. என்று இமான் அண்ணாச்சி கணக்காய் சொல்ல உடனடியாய் ஸ்டூடியோ 5யில் புக் செய்து இரவு காட்சி பார்த்துவிட்டேன். நிச்சயம் எல்லோரும் சிலாகித்த அளவிற்கான படம் தான். ரொம்ப சிம்பிளான கதை. அமெரிக்க டாக்குமெண்டரி குழுவுடன் சினிமா வெறியனான ஹீரோ நடிக்க ஆசைப்பட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டராகி பயணிக்க, அவர்களை கடத்த நினைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், தவறுதலாய் இவனை மட்டும் கடத்திக் கொண்டு, பார்டரின் அருகில் உள்ள கிராமத்தில் ஹாஸ்டேஜாய் வைத்துக் கொள்கிறார்கள். ஆள் மாற்றி கடத்தி கொண்டு வந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் நாட்கள் கடத்த, சினிமா எனும் மாய சக்தி எப்படி இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே இருக்கிறது. எப்படி அந்த சினிமா இந்தியனை காப்பாற்றுகிறது என்பதை பல இடங்களில் சுவாரஸ்யமாய், ஒரே லெந்தில் அசத்தியிருக்கிறார்கள். சர்காஸ்டிக் என்றால் அப்படி ஒரு சர்காஸ்டிக் வசனங்கள். காலையில் எழுந்து சப்பாத்தி சாப்பிட கொடுக்க, தான் இருப்பது பாகிஸ்தான் என்று தெரிந்ததும், அதிர்ச்சியாகும் ஹீரோவை பார்த்து இது கூட தெரியலையா? என்று கேட்க, எப்படி தெரியும், அதே முகம் அதே சாப்பாடு, ஊரு மட்டும் வேறன்னா எப்படி? என்று கேட்குமிடமும், பார்டர் தாண்டி ஹிந்தி பட பைரஸி டிவிடியை கடத்தி வரும் கேரக்டர், வயதான மருத்துவ பெரியவர் இந்திய பாகிஸ்தான் பிரிவினக்கு முன்னர் தான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசுமிடம், தீவிரவாதியிடம் நீங்க எப்படி இங்க சேர்ந்தீங்க? என்று கேட்க, பண்டிகைக்கு ட்ரஸ் கேட்டேன் வாங்கித் தர மாட்டேன் அப்பா சொன்னாரு. அதனால வீட்டை விட்டு ஓடி வந்திட்டேன். ட்ரஸ் கிடைச்சுது இது வரைக்கும் அதுக்கான விலையை கொடுத்திட்டிருக்கேன் என்பது போன்ற வசனங்க, வேறு வழியேயில்லாமல் ஹாஸ்டேஜிடமே கேமரா கொடுத்து மிரட்டல் வீடியோ எடுக்குமிடம் என சொல்லிக் கொண்டே போகலாம். மிக இயல்பான நடிப்பு, நேர்க் கோட்டில் பயணப்படும் திரைக்கதை என்பதையெல்லாம் மீறி மிக இயல்பாய் ஒர் இந்திய பாகிஸ்தான் பார்டர் ப்ரச்சனையை எல்லாம் மீறி சினிமா எனும் ஒர் விஷயம் இரண்டு நாட்டு சாதாரணர்களிடம் ஏற்படுத்தும் நெருக்கமும், அன்பின் வெளிப்பாடும் நிதர்சன அழகு. 2012ல் வெளிநாட்டு பிலிம் பெஸ்டிவலில் வெளியான இத்திரைப்படம் பல நாட்டு விருதுகளைப் பெற்று 2012 ஆம் ஆண்டு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. இவ்வளவு பேரு பெற்ற இத்திரைப்படம் கமர்ஷியலாய் வெளியாக இரண்டு வருடம் பிடித்திருக்கிறது. அதுவும் யுடிவி தன் கையில் எடுத்து வெளியிட வேண்டியிருக்கிறது. தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் பெரிய நெட்வொர்க், பேக்ரவுண்ட் இருந்தால் தா கல்ட் படங்களும் விலை போகிறது. டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒண்ணுமே புரியலை
கே.எப்ஸியில் டோர் டெலிவரி இருக்கிறது என்று என் மகன் சொன்னான். ஒர் பனீர் ஜிங்கர் பர்கர், மூன்று வெஜ் ஸ்ட்ரிப், மற்றும் கோக் என்றால் 189 ரூபாய் என்றும் கோக் வேண்டாம் என்று க்ரஷராய் மாற்றி கொள்ள வேண்டுமென்றால் எக்ஸ்ட்ரா 40 ருபாய் வரும் என்றார்கள். மொத்தம் எவ்வளவு என்ற போது முன்னூற்றி சொச்சம் என்றதும் எப்படிங்க.. 189+40 =239 தானே என்றதும் சார்.. டாக்ஸ் மற்றும் பேக்கிங் சார்ஜெஸ் 22 ரூபாய் வரும் என்றார். டாக்ஸ் எவ்வள்வு வாட் 14.+சர்வீஸ் டேக்ஸ4.499 மிச்சம் பாக்கிங் சார்ஜெஸ் என்றார். ஏண்டா டோர் டெலிவரின்னா எப்படி பாக்கிங் பண்ணாம கொடுப்பீங்க.. இதே பாக்கெட்டுலதானே அங்கே சாப்பிடும் போதும் கொடுக்கிறீங்க? என்று கேட்டால் பெப்பெப்பே என்று முழிக்கிறான் டெலிவரி செய்தவன். இனிமே இவனுங்க கிட்ட டோர் டெலிவரி வாங்கக் கூடாது என்றான் என் மகன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
உன் சமையல் அறையில்
எப்போது எந்த படத்தின் ரீமேக்கை பார்த்தாலும் ஒரிஜினலுடன் கம்பேர் செய்யக்கூடாது என்ற முடிவோடுதான் படம் பார்ப்பேன். ஏனோ தெரியவில்லை இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த விநாடியிலிருந்து சால்ட் அண்ட் பெப்பர் ஞாபகத்தில் இழையோடிக் கொண்டேயிருந்தது. பிரகாஷ்ராஜ், சிநேகா, என நடிப்பாற்றலில் குறைவில்லாமல் நடித்திருந்தாலும், லால் முகத்தில் காதல் வயப்பட்டதும் தெரியும் ஒர் இன்னொசென்ஸ் மிஸ்சிங் என்றே சொல்ல வேண்டும். படமெங்கும் வியாபித்திருக்கும் புத்திசாலித்தனமான வசனங்கள் பல இடங்களில் ப்ளஸ் என்றாலும் அதுவே எல்லா கேரக்டர்களூம் பேசும் போது மைனஸாக போய்விடுகிறது. ராஜாவின் இசையில் இந்த பொறப்புத்தான் அட்டகாசம். ரோஜா பூந்தோட்டம் சாயலில் வரும் ஈரமாய் பாடல், ப்ரீதாவின் நச் ஒளிப்பதிவு எல்லாம் பெரிய ப்ளஸ்தான். மலையாள படங்கள் பெரும்பாலும் கேரக்டர்கல் அரசியல் சார்ந்த விஷயங்களை காமெடி படமாய் இருந்தாலும் பேசுவது அவர்களது கலாச்சாரம் என்றே தோன்றுகிறது. அதை அப்படியே தமிழிலும் வைத்துக் கொண்டு அந்த காட்டுவாசி எபிசோட் படத்திற்கு எந்த விதத்திலும் உதவாமல் தொய்வடையவே வைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
மகேஷ் பாபுவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேனொக்கடைனே படத்தின் ப்ரோமோவை பார்த்து மிரண்டு போய் தியேட்டருக்கு போய் நொந்து போய் வந்த கதையை மறந்துவிட்டால் மகேஷின் இந்த அகாடு பட டீசர் அட்டகாசம் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
என் ட்வீட்டிலிருந்து
கேபிள் சங்கர்
Comments
இதை டெலிவரி செய்தவன் கிட்ட தான் கேட்பீங்களா? அவன் தான் இளிச்சவாய் மாதிரி இருந்தனா?
நன்றி அண்ணா
*வரிகளை படித்தபோது கண்களில் நீர் துளித்தது..
niceeeee