கொத்து பரோட்டா - 28/07/14
கேட்டால் கிடைக்கும் எனக்கும் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்டுக்கும் ஏழரைப் பொருத்தம் ஏனென்றே தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் பிரியாணி நன்றாக இருந்தாலும், போகப் போக படு மோசமாய் போனது. அதுவும் 150 ரூபாய்க்கு ரெண்டு கரண்டி பிரியாணியை கொடுத்துவிட்டு, பீசை தேடி கலைத்துப் போய் எங்கய்யா பீசு என்று கேட்டால் மட்டுமே நான்கைந்து பீஸை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் வேறு வழியேயில்லாமல் நானும் எங்கள் ஹீரோவும் பெசண்ட் நகர் தலைப்பாக்கட்டியில் சாப்பிட போயிருந்தோம். இரவு நேரமாக இருந்தாலும் செம ஹூமிடிட்டி. வியர்த்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்ததும் ஏசியே இல்லை. ஏசி இல்லையா என்று கேட்டவுடன் மேல உக்காருங்க என்றார். அங்கிருந்தவர். மேலே ஏதோ ஒண்ணுத்துக்கில்லாத வகையில் குளூமை இருக்க, சாப்பிட வழக்கம் போல பிரியாணி ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருந்தோம். வியர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தொப்பலாய் நனைய ஆரம்பித்துவிட்டோம். பிரியாணி வேறு சகிக்கவில்லை. பில் வந்தது 180 மேனிக்கு ரெண்டு பேருக்கு பிரியாணி பில்லோடு, சர்வீஸ் டேக்ஸ், மற்றும் வாட் போட்டிருந்தார்கள். இதற்குள் பக்கத்தில் சாப்பிட்டுக் கொ...