Thottal Thodarum

Jul 14, 2014

கொத்து பரோட்டா -14/07/14- தொட்டால் தொடரும், நளனும் நந்தினியும், Dawn of the Planet of the Apes, C2H,

தொட்டால் தொடரும் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு கடந்த 4ஆம் தேதி சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர். வெளியிட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பெற்றுக் கொண்டார். திரையுலக பிரபலங்கள், பதிவுலக நண்பர்கள் என கல்யாண களை கட்டியது காலை முதலே. இதற்கு முன்னர் படத்தின் டிசைனையும், ப்ரோமோ சாங்க் டீசரை வெளியிட்டிருந்தோம். அதற்கு கிடைத்த நல் ஆதரவு கொடுத்த தைரியத்தோடு ஒன்றுக்கு ரெண்டாய் ட்ரைலர்கலையும், பாஸு பாஸு பாட்டையும் சேர்த்து மூன்று பாடல்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு போட்டுக் காட்டி, பாடல் சிடி வெளியிடப்பட்டது.  ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியையும், படத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது. SS Media  என்கிற விநியோக நிறுவனம் படத்தை வெளியிட ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.  பர்ஸ்ட் காப்பி எடுக்கப்படாமல் இருக்கும் நிலையில், ரஷ்களையும், டப்பிங்கிலும் பார்த்த படத்தை வைத்து அவர்கள் ஒப்பந்தம் போட்டிருப்பது எனக்கும்,  தயாரிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறது.  பாடல் மற்றும் ட்ரைலர்களுக்கு ஆன்லைனின் கிடைத்த விமர்சனங்கள், மற்றும் பாராட்டுக்கள் மேலும் தொட்டால் தொடரும் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டுமென்ற உத்வேகத்தை கொடுக்கிறது. விரைவில்  தொட்டால் தொடரும் வெள்ளித்திரையில்.. அதுவரை உங்களுக்காக.. ட்ரைலரும் பாடல்களும். காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்காகவும், ஆதரவிற்காகவும் நன்றி.
@@@@@@@@@@@@@@@@@


C2H
ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் வெளியாகியிருக்கிறது. வாரத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது வெளிவர தயாராய் இருக்க,  இன்னொரு பக்கம் 1000 சில்லறை தியேட்டர்கள் இருந்த இடத்தில் தற்போது அதற்கு குறைவாய் தியேட்டர்கள் போய்க் கொண்டிருக்க, படங்களைப் பற்றிய செய்தி மக்களிடையே போய் சேர்வதற்குள் தியேட்டர்களில் அடுத்த படம் வெளியாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இயக்குனர் சேரன் ஒர் புதிய முயற்சியை செய்ய முனைந்திருப்பதாய் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. C2H அதாவது சினிமா டு ஹோம் என்கிற புதிய திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு இன்று மாலை காமராஜ் அரங்கில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தெரிவிக்க இருப்பதாய் சொல்லியிருக்கிறார். அது எப்படிப் பட்ட திட்டமாய் இருக்கும் என்று ஆர்வம் செய்தியை அறிவித்த நாளிலிருந்தே இருந்து கொண்டுதானிருக்கிறது. 

சினிமாவை தியேட்டருக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், அதை மக்களுக்கு வீட்டிற்கே கொண்டு செல்லும் முறைகளில் மிக சாத்தியமிக்கது கேபிள் டிவி, டி.டி.எச், மற்றும் மொபைல் மூலமாய் செய்ய முடியும். டிவிடி எல்லாம் பத்து ரூபாய்க்கு விற்றாலும், நம்மூர் காப்பிரைட்டு ஆக்ட் எல்லாம் அதை காக்க தேறாது என்பதால் கேள்விக்குறியே. கேபிள் டிவி நெட்வொர்க்குகளில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பது என்பது இன்றைய டெக்னாலஜியில் சாத்தியமென்றாலும், நெட்வொர்க்கில் ஒவ்வொரு படத்திற்கு பணம் வசூலிக்கு முறையில் இன்னமும் பேர் பர்வியூ முறைகளை அமல் படுத்த முழுவது டிஜிட்டலைஸ் ஆன நெட்வொர்க், மற்றும் செட்டாப் பாக்ஸுகள் இருந்தால் மட்டுமே சாத்தியம். வரும் சில ஆண்டுகளில் நிச்சயம் நடக்கக் கூடிய விஷயமே. டி.டி.எச் ப்ளாட்பார்மில் சாத்தியம் அதிகம். இல்லாவிட்டால் தனியாய் ஒரு சேனலைத் துவக்கி, அதை டி.டிஎச் ப்ளாட்பார்மிலோ, கேபிள் டிவிலோ வெளியிட்டு, அதன் மூலம் வரும் விளம்பர மற்றும், சப்ஸ்கிரிப்ஷன் முறைகள் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். இல்லாவிட்டால் தனியே ஒர் டிடிஎச் நெட்வொர்க்கை தனி செட்டாப் பாக்ஸை விற்று அதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். பேபர்வியூவில் காட்டி வருமானம் ஈட்ட செய்த முயற்சியை கமல் செய்ய நினைத்த போது கிடைத்த எதிர்ப்புகளினால் இந்தியாவில் சாத்தியமில்லாமல் போனது வருத்தமான விஷயம். மீண்டும் அது போல சேரன் முயற்சித்தால் வெற்றியடைய சாத்தியங்கள் அதிகம்.  

ஆனால் மேற்ச் சொன்ன முறைகளில் ஒரு சேனலை இப்படங்களை வெளியிட மட்டுமே பே சேனல் அமைத்து, மக்கள் பணம் கொடுத்து பார்க்க வைக்க, டிடிஎச், கேபிள் ஆப்பரேட்டர்களின் துணை தேவை. எப்படி விநியோகஸ்தர்களின் துணை தேவையோ இங்கும் அதே நிலை வௌர்ம். அதே போல எல்லா படங்களையும் மக்கள் காசு கொடுத்து பார்ப்பார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது. சேரன் போன்ற கலைஞர்கள் தொடர்ந்து இம்மாதிரியான பட வெளியீட்டு முறையில் தொடர்ந்து செயல்பட ஆரம்பிக்கின்ற போது இதற்கான மார்கெட் வரும். இன்று சரி புதியதாய் ஒர் விஷயம் வருகிறது என்று எல்லோரும் ஆர்வம் காட்டினாலும், பின்னாளில் வருமானம் வராத நிலையில் எப்படி விநியோகஸ்தர்கள் பெரிய நடிகர்களின் படத்துக்கு மட்டுமே பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் அளித்துள்ளார்களோ அது போலவே  இங்கேயும் நடக்க வாய்ப்பு அதிகமாகிவிடும். இவர்களே ஒரு டி.டி.எச் சேனலை ஆரம்பித்து, படங்களை வெளியிட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை ஷேர் செய்ய சாத்தியங்கள் அதிகம், இண்டர்நெட் வீச்சு ஸ்மார்ட் போனில் அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் மொபைல் மூலம் செய்யவும் வாய்ப்பு அதிகம். ஒரு ஹோஸ்யமாய் இம்முறையில் தான் ஏதோ திட்டத்தை வைத்திருப்பார் என்று என்னுள் பட்சி சொல்கிறது. சேரன் போன்ற ஆகச்சிறந்த படைப்பாளிகளின் உறுதுணையோடு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும், புதிய சினிமாவை எதிர்நோக்கும் கலைஞர்கள், மற்றும், திறமையாளர்களுக்கு  ஒர் புதிய அனுபவத்தை, வருமானத்தை, சந்தோஷத்தை தருமென்ற நம்பிக்கையோடும் மிக ஆவலாய்  காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் சேரன் சார்..உங்கள் முயற்சி வெற்றியடைய அணிலாய் இருந்து உதவ காத்திருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Dawn Of The Planet Of The Apes
இதனுடய முந்தைய பாகம் பார்த்துவிட்டு மிரண்டு போய் ஒர் பதிவை எழுதியிருந்தேன். அம்பூட்டு அட்டகாசமான படம், மேக்கிங்காகட்டும், கதை சொன்னவிதமாகட்டும் நைல் பைட்டிங், டெக்னிக்கல் எக்ஸலன்சாய்  அமைந்த படம் அது. அதே எதிர்பார்ப்போடு மிக ஆவலாய் கமலா தியேட்டருக்கு போய் உட்கார்ந்தேன். மொத்தமே நூத்தி சொச்ச ஆடியன்ஸ் மட்டுமிருக்க, முன்பை விட மிக சிறப்பான மோஷன் கேப்சரிங், மற்றும் டெக்னிக்கல் விஷயங்களை மீறி அரத பழசான எம்.ஜி.ஆர் காலத்து கதை,  திரைக்கதையை வைத்துக் கொண்டு ஜல்லியடித்திருக்கிறார்கள். சீசர் கேரக்டரை முன்நிறுத்தி கிட்ட சின்னக்கவுண்டர் ரேஞ்சுக்கு பில்டப் வேறு. டெக்னிக்கல் விஷயங்களை தவிர. .இது ஏமாற்றம் தரும் படமே
@@@@@@@@@@@@@@@@@@@@
நளனும் நந்தினியும்
சிம்பிளான கதை தான். சிறு வயதிலிருந்தே இவனுக்கு இவளென முடிவான ஜோடிகள்.பெற்றோர்களிடையே ஆன ப்ரச்சனையால் இவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் போய்விட, ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இலக்கேயில்லாமல் சுற்றியலையும் ஹீரோவும், அவனை ஒரு முகப்படுத்தி, அவனை இலக்கை அடைய வைத்து, அவனின் வெற்றிக்கு பின்புலமாய் இருந்து பெண் எப்படி ஜெயிக்க வைக்கிறாள் என்பதுதான் கதை. முதல் பாதி முழுவதும் மிக இயல்பான காட்சிகள். சூரி ஆங்காங்கே கலக்கியிருகிறார். இரண்டாம் பாதி மொலோட்ராமா.  நந்திதா க்யூட்டாய் இருக்கிறார் நடிக்கவும் செய்கிறார். பின்னணி இசையும், ரெண்டு பாடல்களும் இதம்.  பட் நீட் ஃபிலிம். வாழ்த்துகள் வெங்கடேஷ் அண்ட் லிப்ரா ரவிந்தர் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
  • மோஷன் கேப்சர்னா என்னாங்கிறத.. @dwanoftheapes பார்த்தா தெரியும்.

    • துரோகம், வஞ்சம், கொள்ளை, கொலை, பணம் மட்டுமே பிரதானமில்லாத அன்பை, காதலை கொஞ்சம் ட்ரமாட்டிகாக சொல்லும் படம் நளனும் நந்தினியும். வாழ்த்துகள்

      • நம்பிக்கைதான் வாழ்க்கைங்கிறதுல பாஸிட்டிவ் மட்டுமில்லை நம்பி கெட்ட வாழ்க்கையும் இருக்கு

        • ஒலகத்திலேயே த்ரிடி கண்ணாடிய அரை மூட்டை அழுக்குல முக்கி கொடுத்தவங்க..கமலா தியேட்டர்காரங்களாத்தான் இருப்பாங்க. கேட்டா டைமில்லையாம் க்ளீன் பண்ண

          • படம் பார்க்கும் ஆடியன்ஸை நம்பி இல்லையாம் கமலா தியேட்டர். பின்ன யாருக்காக படம் ஓட்டுவாங்க#டவுட்டு

            • ஆளேயில்லாத நைட் ஷோ பார்க்கிங்கிற்காக மழை பெய்கையில் பார்க்கிங் வண்டியை எடுக்க சொல்கிறார் கமலா தியேட்டர்காரர்#Forumlasathyamvarattum

              • இம்முறை ஏப்ஸுக்கு நாமத்தைப் போட்டு வடகலை ஐய்யங்கார் ஏப்பாக்கியிருக்கிறார்கள் #DawnofApes
                எம்.ஜி.ஆர். படமெல்லாம் இப்ப ஹாலிவுட்டுல எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.. லேட்டஸ்ட் மிடில#DawnofApes
              • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
“A little boy and his friends are being called bastards and bitches by bullies at school. The boy goes home and asks, "Dad, what are bastards and bitches?" And his dad replies, "Bitches are ladies and bastards are gentlemen." Then the boy goes upstairs to see his mom. As he enters the room, he accidentally drops a perfume bottle, and his mom says, "Shit!" "Mom, what is shit?" and she says, "Perfume." So he goes to see his dad (who is carving a chicken), and his dad cuts himself and yells, "Fuck!" The boy asks, "Dad, what does fuck mean?" and dad says "preparing." Then he follows his dad upstairs. A few minutes later his mom and dad are about to have sex when his dad says, "Where are the condoms?" The little boy asks, "What are condoms?" and his father says, "Condoms are coats and jackets." The following night his father invites over some important business clients. The boy opens the door for them and says, "Hello! Please come in, Bastards and bitches. Hang your condoms up here, my mom is upstairs rubbing shit on her face and my dad is downstairs fucking the chicken.” 




Post a Comment

11 comments:

Ponchandar said...

தொட்டால் தொடரும் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.... டிரைலர் அருமை.....

இந்தவருட சீச்சனுக்கு குற்றாலம் வரலையா ?????

Mari Raja said...

Trailer is cool. All the best Sir.

”தளிர் சுரேஷ்” said...

தொட்டால் தொடரும் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்! சின்ன பசங்க கிட்ட விவரமா இருக்கணும்னு ஜோக் சொல்லுது! ஹாஹா!

அமர பாரதி said...

Congratulations and I wish you all the best Cableji.

Senthoor Ram said...

Congrats to your team sir...songs and trailer are very good....expecting good movie from you sir

கரந்தை ஜெயக்குமார் said...

தொட்டால் தொடரும் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்

செங்கதிரோன் said...

TT trailer is awesome...I am sure that it will be big hit..Vaazthukkal Sankar

மகேஸ் said...

சீக்கிரமா தொட்டால் தொடரும் படத்தை ரிலீஸ் பண்ணுங்க.

சீக்கிரமா டோரண்டுல அப்லோட் பண்ணுங்கடா.

டிரெயிலர் அருமையா இருக்குடா!!

காசு கொடுக்காமல் படம் பாக்குற சொகமே தனி தான்!!

Vaa.Manikandan said...

ட்ரைலரும் கலக்கல்ங்ண்ணா

'பரிவை' சே.குமார் said...

தொட்டால் தொடரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

நா.கார்த்திகேயன் said...

தொட்டால் தொடரும் வெற்றியடைய வாழ்த்துகள்...