சென்ற வாரம் வளசரவாக்கத்திலிருந்து நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு பிரிசம் அண்ட் பிக்சலுக்கு போய்க் கொண்டிருந்தேன். அது ஒரு குறுகலான தெரு. எதிரே வெகு வேகமாய் ஒர் வண்டி ஹாரனுடன், பாஸ்ட் அண்ட் பியூரியசில் வருவது போல வந்து கொண்டிருந்தது. நமக்கெதுக்குடா வம்பு என இடது பக்கம் ஓரம் கட்ட, அதே நேரத்தில் என் பின் பக்கத்திலிருந்து ஒரு வண்டி எதிர் வண்டி போலவே வெகு வெகு வேகமாய் வர, இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதவிருக்கும் வேளையில் சட்டென எதிர்புறம் வந்தவனும், என் பக்கம் வந்தவனும் அவரவர் இடது புறம் திருப்ப, என் பக்கம் வந்தவனின் ஹேண்டில் பார் என் வண்டியின் ஹாண்டில் பாரைத் தட்டிவிட, ஷணத்தில் மண்டைக்குள் மின்னல். 5நிமிடம் யாருமில்லாமல் வண்டி என் மேல் விழுந்திருக்க, வலது கால் முழுவதும் வண்டிக்குள் மாட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் “ஆ”வென அலறினேன். தூரத்தில் ரெண்டு பேர் யோசித்து எதோ சம்பவம் நடந்திருக்கு போல என யோசித்து, சரி போனாப் போட்டும் என்று வந்து எழுப்பினார்கள். இடித்தவனும் சரி, எதிர்பக்கம் ஓட்டி வந்தவனும் சரி அங்கு இல்லவேயில்லை. “யாருக்கும் ஈவுமில்லை இரக்கமில்ல பாஸு பாஸு” பாட்டு சரிதான் என தோன்றியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்னொரு மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் மிசைல் தாக்குதல் மூலம் விபத்துக்குள்ளாகி 200 சொச்ச பயணிகள் இறந்திருக்கிறார்கள். மலேஷியன் ஏர்லைஸுக்கு கெட்ட காலம் போல. ரெண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன விமானத்தை இன்று வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஏதோ உளவு விமானம் வந்ததாய் நினைத்து சுட்டு விட்டோம் என்று மிகச் சாதாரணமாய் உக்ரைன் சொல்வதும், லோக்கல் பஞ்சாயத்துகளை வைத்துக் கொண்டு தகவல்களை அழிக்க முயற்சிப்பது படு அநியாயம். சென்ற முறை காணாமல் போன விமானத்தில் பயணிக்க வேண்டிய ஒர் மலேஷியன் ஏர்லைன்ஸ் ஊழியப் பெண் கடைசி நேரத்தில் போக முடியாமல் தன் தோழியை அனுப்பியிருக்கிறார். அம்முறை தப்பித்த அப்பெண் இம்முறை மிஸ் ஆகவில்லை. இந்த விமான விபத்தில் மாட்டிக் கொண்டுவிட்டார்.. ம் விடாது கருப்பு போல.

@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும் பின் தயாரிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து காப்பி எடுக்க தயாராகிவிட்டோம். ஆடியோ ரிலீஸின் போது கிடைத்த வரவேற்பு, ட்ரைலருக்கும், பாடல்களுக்கு கிடைத்திருப்பது மாபெரும் சந்தோஷம். ஒர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியிருந்தாலும், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற பயமும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டுதானிருக்கிறது. கடைசி நேரத்தில் கம்போஸ் செய்யப்பட்டு, சேர்க்கப்பட்ட இந்த குட்டியூண்டு துண்டுப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீங்களும் கேட்டு சொல்லுங்களேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
போன மாசம் என்னடான்னா.. ஹிந்திதான் அரசு மொழி அல்லாரும் கவர்மெண்ட் ஆபீசுல ஹிந்தி தான் பேசணும்னு ஒரு அன் அபீஷியல் ஆர்டர் போட்டதா சொன்னதும் தமிழ்நாடே ரெண்டு பக்கமா பிரிஞ்சு, மீண்டும் தார் டப்பா எடுத்துட்டு போராடுற க்ரூப்பும், ஏன் படிச்சா என்னன்னு ஒரு க்ரூப்பும் கிளம்பிட்டிருக்க, இல்லை இல்லை. அது உங்களுக்கெலலாம் கிடையாதுன்னுச்சு மத்திய அரசு. இப்போ என்னடான்னா.. சமஸ்கிருதத்த வளக்குறேன்னு ஒரு வாரம் எல்லா ஸ்கூல்லேயும் கேடிவில வர்ற நகைச்சுவை வாரம் மாதிரி சமஸ்கிருத வாரம் கொண்டாட சொல்லியிருக்காங்க. வழக்கம் போல தமிழக முதல்வர்லேர்ந்து எல்லா தமிழ் தலைவர்களும் எதிர்ப்பு காட்ட, இதுவும் உங்களுக்கு இல்லைன்னு சொல்லப் போறாங்கன்னு தோணுது. எனக்கென்னவோ.. வேற எதையோ சரிகட்ட, ரீடைரக்ட் பண்ண இந்த மாதிரியான ஓல்ட் ஸ்டைல் அரசியல் வழிமுறைய பி.ஜே.பி பண்ணுதுன்னுதான் தோணுது. பேனரு போஸ்டர்லதான் இந்தியாவே ஒளிருதப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் ஓட்டிக் கொண்டு வரும் வண்டியின் பெயர் Mofa. என்பீல்ட் கம்பெனியின் தயாரிப்பு. எது நல்லாருக்கும்னு நாலு பேர் கிட்ட கேட்டு, ஒப்பீனியன் வாங்கி ஒர் உருப்படிய வாங்குறது ஒரு வகைன்னா.. சரி.. புதுசா ஒண்ணு வந்திருக்கு வாங்கி பாத்துருவோங்கிறது ஒரு வகை. அதுல என் அப்பா ரெண்டாவது வகை. என்பீல்ட் கம்பெனிக்காரங்க.. 20-30 சிசில ஒர் குட்டி மொபெட்டை, லைட் வெயிட், லைசென்ஸ் தேவையில்லாத வண்டியா, சின்ன பசங்க எல்லாம் ஓட்டுற மாதிரியான ஸ்பீடோட லாஞ்ச் பண்ணாங்க.. என் ஞாபகத்துக்கு தெரிஞ்சு அதோட விலை மூவாயிரம்னு நினைக்கிறேன். சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சாலே இந்த வண்டிய ஓட்டலாம்ங்கிற தைரியம் வேற.. வண்டி வாங்கின அன்னைக்கேன் ஓட்டின சந்தோஷம். அப்பா வீட்டுல வண்டி வச்சிட்டு போற நேரத்தில எல்லாம் சும்மா ஒரு ரவுண்டுன்னு ஓட்டி பழகின வண்டி. ஒரு வாட்டி அவர் அவசரமா ஏதோ ஒரு விஷயத்தை மறந்து வச்சிட்டதற்காக வீட்டிற்கு வந்திருக்க, ஐ.. ஜாலி வண்டி இருக்கேன்னு அவர் கிட்ட கேட்காம கொள்ளாமல் வண்டிய எடுத்துட்டு போய் அரை மணி நேரம் கழிச்சு வந்து மண்டகப்படி வாங்கிக் கொடுத்த வண்டி. ஒரு லிட்டருக்கு மேல பெட்ரோல் போட முடியாது. சுமார் 80 கி/மீட்டருக்கு மேல வரும்னு நினைக்கிறேன். ரொம்ப நாள் ஓடிட்டிருந்த வண்டிக்கு அப்புறம் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கிடைக்காம சைக்கிள் ரிப்பேர் கடைக்காரங்ககிட்ட எல்லாம் ஸ்பேர் ரெடி பண்ணி, ஒரு கட்டத்தில காயலான் கடைக்கு எடைக்கு போட்டோம். அதுக்கு அப்புறம் ஒரு புது மொபெட் வாங்கினோம். அந்த வண்டியும் இது மாதிரி ஒரு புது மாடல் வண்டிதான். வண்டி ஸ்பீடு போனா இன் ஜின் உள்ளூக்கு போயிரும். பேரு மறந்திருச்சு. அவங்களும் மொத மொதலா ஆட்டோமொபைல் பீல்டுக்கு வந்தவங்களோட வண்டி.நாஸ்டால்ஜியா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சதுரங்க வேட்டை
வாழ்க்கையில மோசமான நேரத்தில அதிலேயும் பைனான்ஸியலாய் ஊத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் யாராவது நம்ம கிட்ட வந்து சீக்கிரம் பணம் சம்பாதிக்கிற வழி ஒண்ணு இருக்கு சொல்லட்டுமான்னு அத பத்தி சொல்லும் போதே பாதி நம்ப ஆரம்பிச்சிருவோம். மீதிய அவங்களே பாத்துப்பாங்க.. அப்படியான நேரத்தித்தில தான் ரைஸ்புல்லிங், இரிடியம், ஒன்மில்லியன் டாலர் நோட்டு, எம்.எல்.எம்., ப்ளாக் மணிய ஒயிட்டா மாத்துறது, கண்டெயினர்ல 500 கோடி பணமிருக்கு அக்கவுண்டட் மணியா மாத்தணுங்கிறது, மண்ணுளி பாம்பு, ராஜ நாகம் கக்கின மாணிக்க கல்ன்னு மனுஷனுக்குள்ள இருக்கிற ஆசை, பேராசை, கையறு நிலை எல்லாத்தையும் பயன்படுத்தி நம்மளை அலேக்கா தூக்கி மல்லாக்க போட்டு மிதிக்கிறவன் தான் இந்த படத்தோட ஹீரோ. இத்தனை தில்லாலங்கடியையும் படு சுவாரஸ்யமா ஆர்டர் படுத்தி சொல்லியிருக்கும் படம் தான் சதுரங்க வேட்டை. பஞ்ச் டையலாக்னு கேள்வி பட்டிருப்பீங்க. படம் முழுக்க பஞ்சாவே டயலாக் வர்றதை இந்த படத்துல தான் பார்க்க முடியும். அதுவும் சென்சிபிளா.. சமயங்களில் ஓவர் டயலாக் உடம்புக்கு ஆகாமல் போனாலும், சாமியார் வேஷம் போட்டு நட்ராஜ் பேசும் காட்சி அட்டகாசம். . எப்பவுமே இந்தமாதிரியான கான் படங்களில் ஹீரோ திருந்துவதாய் காட்டுவது கொஞ்சம் படத்தின் சுவாரஸ்யத்த குறைக்கத்தான் செய்யும். ஏன்னா படம் பாக்குற நம்ம மனநிலையும் அப்படித்தான். நட்ராஜின் நடிப்பு மிக கேஷுவல். முழுக்க முழுக்க, எழுத்தினாலும் கதை சொல்லல் முறையினாலும் இம்ப்ரெஸ் செய்த படம். எதை விவரித்தாலும் சுவாரஸ்யம் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதாலும், க்ளிஷேக்களை பற்றி கமெண்ட் அடித்துவிட்டு இரண்டாம் பாதியில் முக்கால் வாசி க்ளேஷேக்களின் உச்சமாய் காட்சிகள் வைத்திருப்பது உறுத்தினாலும், இந்த வார மெகா ஹிட், அதகள வெற்றியான வி.ஐ.பியின் போட்டியினூடேயும், அடுத்த வாரம் வரக்கூடிய பெரிய படங்களின் வரிசை வேறு பயமுறுத்தும் நிலையில் இருப்பதால் இந்த வாரத்திற்குள் உங்கள் அமோக அதரவை கொடுத்து சதுரங்க வேட்டையில் நண்பர் வினோத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@
வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில் ஒர் சின்ன குறும்பட திரையிடல் அரங்கம் அமைத்திருந்தார். அதன் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார். விழாவில் பேசிய அனைவரும் சின்ன அரங்கை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதுடன் ஏன் டிஸ்கவுண்ட் புக் போடக்கூடாது. அமெரிக்காவில ஒரு டாலருக்கெல்லாம் 500 ரூபா புத்தகம் கிடைக்குமென்று வேடியப்பனின் தலையில் கைவைக்கும் ஐடியாக்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எஸ்.ரா வந்திருந்து வாழ்த்தி விட்டு பேசினார். விழா முடிந்ததும் எப்படியிருக்கீங்க கேபிள் என்று அழைத்து, படம் பற்றி விசாரித்து, பாஸு பாஸு பாட்டைப் பற்றியும், மற்ற பாட்டுக்களைப் பற்றியும் பேசிவிட்டு, நிறைய பேருக்கு இண்டஸ்ட்ரியில ஒரு எக்ஸ்பட்டேஷனை பாட்டும், ட்ரைலரும் கிளப்பி விட்டிருக்கு. அதுவே ரொம்ப பாஸிட்டிவான விஷயம் என்றார். மகிழ்ச்சியாய் இருந்தது. இடம் வசதியாய் இருக்கிறது வேடியப்பனின் சிறு ஹால். நிச்சயம் நல்ல இலக்கிய கூட்டங்கள், குட்டிக் குட்டி திரையிடல்கள் நடத்த ஏதுவான இடம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நேரம் நல்லா இல்லாத நேரத்திலதான் MLM,RP,Iridium,snake,onemillio ndollor,Black to White,Lingam,Statue, இன்னும் நிறைய டகல்பாஜிகள்#சதுரஙகவேட்டை

நேரம் நல்லா இல்லாத நேரத்திலதான் MLM,RP,Iridium,snake,onemillio
Post a Comment
10 comments:
"இவ்வெற்றி முழுவதும் தனுஷையே சாரும் "
" என்ன அண்ணே . . . தனுசுக்கு கதை சொல்ல போறீங்களா . .
"ரெண்டு படமும் நல்லாருக்குன்னும் நியூஸ் வர்றத பாக்கும் போது. "
அண்ணே . . . இருக்கு ஆனா இல்ல ?
அதுக்கு அப்புறம் ஒரு புது மொபெட் வாங்கினோம். அந்த வண்டியும் இது மாதிரி ஒரு புது மாடல் வண்டிதான். வண்டி ஸ்பீடு போனா இன் ஜின் உள்ளூக்கு போயிரும். பேரு மறந்திருச்சு
hero majestic , luna ?
//அதுக்கு அப்புறம் ஒரு புது மொபெட் வாங்கினோம். அந்த வண்டியும் இது மாதிரி ஒரு புது மாடல் வண்டிதான். வண்டி ஸ்பீடு போனா இன் ஜின் உள்ளூக்கு போயிரும். பேரு மறந்திருச்சு.//
hero puch?
உங்களுக்கு பைக் accident ஆனதுக்கு அப்புறம் என்ன நடந்தது என்றே சொல்லவேயில்லை.பெரிய அடியா இல்லை சின்ன அடியா? இப்போது எப்படி உள்ளது?
வேலையில்லா பட்டதாரி முதல் பாதி நன்று. இரண்டாம் பாதி ஒரு குப்பை. இந்த படத்துக்கு சில English online websites நிறைய ஸ்டார்ஸ் குடுத்திருப்பதில் politics இருப்பது நன்றாக தெரிகிறது.
வணக்கம்
திரைக்கு வந்து சிலமாதங்கள் சென்ற பின்புதான் தெரியவரும்.. இதன் வெற்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுவாரஸ்யமான பகிர்வு! அந்த குட்டி மொபெட் நாங்களும் வாங்கனும்னு நினைச்சோம் அப்போ? ஆனா அந்த மூவாயிரம் பணம் எங்களாலே அப்ப சேர்க்க முடியலை!
Good review
பதிவு சுவாரசியம்
நல்ல சுவாரஸ்யமான பதிவு சார்! வழக்கம் போல ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா எழுதியிருக்கீங்க! சதுரங்க வேட்டையும், vip யும் நல்லா ஓடுதுனுதான் உங்க பதிவும் சொல்லுது....இனிதான் பார்க்கணும் சார்....உங்கள் படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் சார்!
THAT SMALL MOPED IS KNOWN AS ' LUNA WINGS' I HAD SUCH A ONE AND WORKED WITHOUT ANY PROBLEM FOR A LONG TIME; THIS MOPED WAS BOUGHT MAINLY FOR GIRS TO GO TO SCHOOL OR COLLEGE; NO LICENCE IS REQUIRED TO DRIVE THIS
Post a Comment