கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது.
ரொம்ப சிம்பிளான கதை. ஹீரோ எப்பாடு பட்டாவது ஒர் டிவி நியூஸ் ரீடயாய் ஆவதுதான் தன் வாழ்க்கை குறிக்கோள் என்று அலைபவன். விசாகபட்டினத்திற்கு மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது அங்கே வரும் டெல்லி பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க ஆர்மபிக்க, அவளோ, எனக்கு நீ ஸ்பெஷல்தான் பட்.. அதுக்கு ஏன் காதல் அது இதுன்னு பெயர் வச்சிக்கணும் கொஞ்சம் செட்டிலாகி அப்புறம் முடிவு செய்வோம்னு சொல்ல, வழக்கம் போல ஹீரோ அவளையும்,அவளோட டெல்லி வளர்ப்பு குடும்ப எல்லாத்தையும் கலாய்ச்சிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுறாங்க. சில வருடங்களுக்கு பின் ஒரு டிவி சேனலில் வேலைக்கு சேர, சேனலின் சி.ஈ.ஓவிற்கு ஹீரோயினை பெண் பார்க்க, அவளின் அழகில் மயங்கிய சி.ஈ.ஓ எப்படியாவ்து அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். பெண்களிடம் பேசி பழகி செட் ஆக்க முடியாத அவன், தன்னிடம் வேலை பார்க்கும் ஹீரோவிடம் ஐடியா கேட்டு அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். இடையில் ஹீரோவும், ஹீரோயினும் சந்தித்துவிட, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
கொஞ்சம் மின்சாரக் கனவு, கொஞ்சம் அடுத்த வீட்டுப் பெண், கொஞ்சம் எட்டி மர்பி ஸ்டைல் நடிப்பு, அபரிமிதமான இளமை இவையெல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு ஆட்டி எங்கேஜிங்கான படமாய் வந்திருப்பதால்தான் இப்படத்தின் வெற்றி என தோன்றுகிறது. ஹீரோ நாக செளரியா அழகாய் இருக்கிறார். மீசையில்லாத ஸ்டபுள் லுக்கைவிட, தாடி மீசையுடன் நன்றாக இருக்கிறார். ஓரளவுக்கு நடிக்கவும் செய்கிறார். ஹீரோயின் ராக்ஷி கன்னா. செம்ம அழகு. கொஞ்சம் ட்ரீமியாய் கண்கள். அழகாய் தெரியவும், அழகாய் இருப்பதைத் தவிர பெரிய வேலையேதுமில்லை. பாராட்டப்பட வேண்டிய நடிப்பு என்றால் அது இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அவசாரலாவின் நடிப்பு மற்றும் திரைகதை இயக்கத்தைத்தான். கொஞ்சம் ஃபன்னியான பாடி லேங்குவேஜுடன், எட்டிமர்பி தனத்துடனான நடிப்பு. சிறப்பாக செய்திருக்கிறார். ப்ரெஞ்ச் நாடகத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் அப்பட்டமான ரீமேக் காட்சிகள் படம் நெடுக இருக்கிறது. ஆனாலும் ப்ரெஷ்ஷான கேஸ்டிங், கல்யானின் மெலடியான இசை, வெங்கட் சி திலிப்பின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ஒர் ஃபீல் குட் காமெடி படமாய் அமைந்துவிட்டது.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
நல்ல அழகான ஒரு திரைப்பார்வை.....
Post a Comment