எந்த பார்ட்டிக்கு சென்றாலும், எந்த ஒரு குழு நிகழ்வுக்கு சென்றாலும் இந்த “தும்பிஹோ” பாடலை கேட்காமல் இருந்ததில்லை. இப்பாடலில் பல டி.ஜே வர்ஷன்களை கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்டதும் இப்படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தாலும், ஏனோ தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. பாடல் நன்றாக இருக்கிறது என்பதை விட, ஒவ்வொரு இடத்திலும் இப்பாடலை கேட்ட மாத்திரத்தில் படம் பார்த்தவர்களின் கண்களின் ஓரம் லேசாய் ஒர் ஈரம் படர்வதை தவறாமல கவனித்தேன். பாடலை பாடியவரின் குரலும், பாடல் வரிகளும், காதலை, அதன் வலியை சொல்வது புரிந்தும் ஏனோ எனக்கு கண்ணீர் வரவில்லை. காரணம் படத்தின் கதையைப் பற்றி கேட்டறிந்ததுதான். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும், பார்த்த கதைதானே A Star Is Born படத்தின் உல்டா, எத்துனை படங்களில் இம்மாதிரியான டெம்ப்ளேட் காதல், காட்சிகளை பார்ப்பது, அவனவன் இந்திய படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்க் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இருபது வருஷத்துக்கு பின்னாடி ரீவைண்ட் பண்ற மாதிரியான கதை என்பது போன்ற பல அலட்சியக் காரணங்கள் என்று கூட சொல்லலாம். பட்.. படம் பா...