பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர் என்ற டேக்குடன் அஞ்சான் வருவதால் உடன் எந்த படமும் வராது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் "கதை திரைக்கதை வசனம், இயக்கம்" படமும், பத்திரிக்கையாளர் முத்துராமலிங்கத்தின் சிநேகாவின் காதலர்கள்" படமும் உடன் வெளியாகி உள்ளது ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்திபன் சார்.. மற்றும் முத்து ராமலிங்கம் இருவரையும் சந்தித்த போது இருவருமே உறுதியாய் இருந்தார்கள். 25 வருடங்களுக்கு முன் இதே போல புதிய பாதை படத்தை ரெண்டு மூன்று படங்களுக்கு இடையே வெளியிட்டு வெற்றி பெற்ற அனுபவத்தை சொன்னார். மீண்டும் அதே கான்செப்டோடு "அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வாங்க என்று விளம்பரம் செய்து இன்று வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு படத்தை பற்றி சொல்லுகிறேன் வாழ்த்துகள் பார்த்திபன் சார். முத்துராமலிங்கம் சார்.
சென்ற வாரம் கும்பகோணம். இந்த வாரம் சேலம். சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, பார்க் ப்ளாஸா எனும் 4ஸ்டார் ஓட்டலுடன் சேர்ந்து விழா நடத்தினார்கள். அவ்விழாவிற்கு இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில், ஹரிதாஸ் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேல், எழுத்தாளர், வசனகர்த்தா அஜயன் பாலா, மதுபானக்கடை இயக்குனர் கமலக்கண்ணன், நெடுஞ்சாலை கிஷோர், ஆகியோருடன் நானும். விடியற்காலை 5 மணிக்கு கிளம்பி, மதியம் பன்னிரெண்டு மணிக்கு மெல்லப் போய் சேர்ந்தோம். நிகழ்ச்சி அமைப்பாளர் கைலாஷ் வரவேற்று அருமையாய் நகரத்தார் எனும் ஒர் புதிய உணவகத்தில் விருந்தளித்தார்கள். மாலை நிகழ்ச்சி எஸ்.பி.எம் பேச்சுடன் ஆரம்பித்தது. அடுத்தடுத்து, ஒவ்வொருவராய் பேசினோம். அஜயன் பாலா விரைவில் மைலாஞ்சி என்ற பெயரில் படம் இயக்கப் போவதாய் அறிவித்தார். அப்படத்தின் கதாநாயகனாக கிஷோர் நடிக்கவிருப்பதாய் சொன்னார். மகிழ்ச்சியாய் இருந்தது. விழாவில் ஒவ்வொருவராய் அழைக்கும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட விடியோக்களை ஒளிபரப்பினார்கள். என் முறை வரும் போது தொட்டால் தொடரும் ட்ரைலரையும், பாஸு பாஸு பாடலையும் ஒளிபரப்பினார்கள். கிட்டத்தட்ட 600க்கும் மேற்ப்பட்டவர்கள் குழுமியிருந்த அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, தாவணிக் கனவுகள் என்று இளம் பெண்கள் தாவணியில் வளைய வரும் போட்டி என கலர் கலராய் பல நிகழ்வுகள் நடத்தினார்கள். அடுத்த நாள் விடியற்காலை வழக்கம் போல கிளம்பி பேக் டு சென்னை. விழாவின் இரவின் போது அனைத்து நண்பர்களுடன் கலந்து கொண்டு சினிமா, அரசியல், என கலந்து கட்டி பேசியது மகிழ்ச்சியாய் இருந்தது. குமாரபாளையத்திலிருந்து வாசகர், இணைய நண்பர் ivptele என்கிற பெயரில் வலம் வரும் வரதராஜன் குமாரபாளையம் புகழ் லுங்கிகளோடு வந்திருந்தார். குறுகிய நேரத்தில் போன் செய்துவிட்டு வந்து சந்தித்தது நெகிழ்ச்சியாய் இருந்தது.நன்றி தலைவரே.. என்ன இம்பூட்டு தூரம் போய், செல்வி மெஸ்ஸிலும், சேலம் மங்களத்திலும் சாப்பிடாமல் வந்ததுதான் பெரும் சோகம். ம்ஹும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
காரில் பயணம் செய்யும் போது முன் வண்டியை பார்த்துக் கொண்டு போவது சுவாரஸ்யமான விஷயம். நேற்று அப்படித்தான். முன்னால் போன பஸ்ஸில் பின் பக்கம் பெரிய ஓட்டையுடன் அதன் நடுவில் உட்கார்திருந்த மக்களின் கால்கள் தெரிந்தது. அதை எப்படியாது செல்லில் படம்பிடிக்க முயற்சி செய்து அவ்வண்டியை துறத்தி போன அனுபவம் ஒர் சுவாரஸ்யம் என்றால், டெம்போக்களின் பின்னால் வீடு காலி செய்து கொண்டுப் போகும் தம்பதிகளின் ரொமான்ஸ் செம.. முழுக்க, முழுக்க சாமான்களால் நிரப்பப்பட்ட வண்டியின் பின்பக்கம், கணவன் மனைவி இருவர் மட்டுமே உட்கார்ந்திருக்க, யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் கணவன் அவளை கண்ணால் சீண்ட, அவளோ..பதிலுக்கு கண்ணிலேயே .. சீ.. போங்க வில் ஆரம்பித்து, ஒதைப் படப் போறே என்று செல்ல அதட்டல் வரை செம்ம க்யூட் ரியாக்க்ஷன்கள். அதே போல போன வாரம் வரும் போதும் ஒர் குடும்பம் டெம்போவில் போய்க் கொண்டிருந்தது. உறவினர்கள் கூட்டம் தான் என்றாலும், அக்குழுவில் இருந்த பெண்ணும் பையனும் விட்ட லவ்ஸ் இருக்கிறதே அட.. அட..அட.. வண்டியின் முனையில் பையன் உட்கார்ந்திருக்க, உட்பக்கமாய் உட்கார்ந்திருந்த பெண் தலையை அவளுடய அம்மாவாக இருக்க வேண்டும் அவளின் மடியில் தலை வைத்து படுத்தபடி, அவனை பார்த்த பார்வையில் ஆயிரம் டயலாக்குகள், பதிலுக்கு பையன், அவளை கண்டு கொள்ளாதது போல பக்கத்தில் உள்ள ஒர் பெருசுடன் பேசிக் கொண்டே அவளை பார்க்க, கொஞ்சம் வெளிப்பக்கமாய் சாய முற்படும் போது அவள் முகத்தில் தெரிந்த கலவரம், அக்கலவரத்தைப் பார்த்து அவன் கொடுத்த ரியாக்ஷங்கள் எல்லாம் அட்டகாசம்.. காதல் எப்பவுமே சுவாரஸ்யமானதுதான்.. மத்தவங்க பண்ணும் போது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
திடீரென கீபோர்டில் என்.எச்.எம்மில் டைப் அடிக்கும் போது ஷிப்ட் கீ போட்டால் வர வேண்டிய எழுத்துக்க\ள் எல்லாம் வர மாட்டேன் என்கிரது.. என்ன செய்ய/ /??
Post a Comment
5 comments:
அருமை :-) உங்கள் அடுத்தப் படத்தின் காதல் காட்சிகளின் trailer இந்தப் பதிவில் உள்ளது :-))
amas32
compare to review live story car traveler super
பார்த்திபனின் படத்தினைப் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம்
கொத்து பரோட்டா வழக்கம் போல அருமை சார். பார்த்திபன் ஒரு வித்தியாசமான டைரக்டர்.....உங்கள் விமர்சனம் பார்த்தாயிற்று ஸோ பார்க்கணும் சார்.
அந்த வீடு காலி பன்னற டெம்போ, உறவினர் பயணித்த டெம்போ கொடுத்த விஷுவல்ஸ் உங்களுக்கு நிறைய கதை சொல்லியிருக்குமே சார்!
உங்க படத்தில் காதல் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்னு தோணுது...
Post a Comment