Thottal Thodarum

Aug 4, 2014

கொத்து பரோட்டா -4/8/14

சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி பனுவல் புத்தக நிலையத்தில் ஒர் கலந்துரையாடல் மற்றும் விமர்சனக் கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இயக்குனர் விநோத் எனக்கு ரொம்ப நாளாய் பழக்கம். தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அன்று தான் நேரில் சந்தித்தோம். படம் பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒர் அரவாணி தோழி படத்தில் ஒர் காட்சியில் பொட்டையா என்று வரும் வசனத்தை பற்றி கூறி சாடினார். இதே வசனம் நான்கைந்து முறை வேலையில்லா பட்டதாரி படத்தில் வருகிறது. அதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை. பொட்டை என்றால் அது அரவாணியைக் குறிக்கும் என்பது கூட அன்றைக்கு பல பேருக்கு செய்தியாய்த்தான் இருந்தது. ஏனென்றால் ஒர் பெரியவர் ஒருவர் அதை குறித்து பேச முயன்ற போது முகத்தில் அடித்தாற்ப் போல பதில் சொன்னார் அந்த அரவாணித் தோழி. ஆம்பளைகளை அவமானப் படுத்தும் விதமாய் திட்ட, நீ என்ன பொம்பளையா? என்று கேட்பது தான் பொட்டையா என்பதாய் மருவியிருக்கிறது என்பதுதான் என் கருத்தும். அரவாணிகளை அழைக்கும் சொல்லாய் எனக்கும் தெரியவில்லை. எனிவே இச்சொல் இவர்களையும் குறிக்குமென்பது அன்றைய நிகழ்வின் மூலம் அறிந்து கொண்ட உண்மை. இனி தவிர்ப்போம். ஆனால் ஒர் கோரிக்கை இம்மாதிரியான நிகழ்வுகளில் அதை பொறுமையாய் கோபத்தை தூண்டும் விதமாய் சொல்லாமல், உங்கள் மன உணர்வுகளை அழகாய் சொல்லாம் என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@



நிகழ்ச்சி முடிந்ததும் எங்காச்சும் சாப்பிடப் போகலாமா? என்றார் விநோத். உடன் வந்த செளமியனும், அழைக்க சரி வாங்க ஒர் வித்யாசமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று கரோக்கேவுக்கு கூட்டிச் சென்று ரெண்டு பாடல்களை பாடிவிட்டு, உணவகத்தில் உணவருந்திவிட்டு இரவு 12 மணிக்கு மேல் தான் கிளம்பினோம். அற்புதமான உணவுடன், சினிமாவைப் பற்றிய மிசச் சுவாராஸ்யமான விவாதங்களுடன் சென்றது அந்த இரவு. சினிமா விமர்சனங்களைப் பற்றி பேச்சு வரும் போது என் தளத்தை பல ஆண்டுகளாய் படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் பார்ப்பது தன் வழக்கமென்றார். சதுரங்க வேட்டைக்கு இணையமெங்கும் கிடைத்த் ஆதரவு தான் படத்தின் வெற்றிக்கு காரணமென்று நன்றியும் சொன்னார். சந்தோஷம். எந்த அளவுக்கு இணையத்தில் விமர்சனம் எழுதும் நண்பர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைப்பது குறித்து சந்தோஷமாயிருந்தாலும், சமயங்களில் எதைப் பற்றி, விமர்சனம் செய்கிறோமென்ற நாலேட்ஜ் கூட இல்லாமல் எழுகிறவர்களும் அதிகமாயிட்டாங்க என்று வருத்தப்பட்டேன். அப்படி என்ன எழுதினாரு என்றார் செளமியன். “கோச்சடையான் படத்தில லொக்கேஷன் எல்லாம் அருமைன்னு எழுதினார் என்றேன். கிளம்புகிற நேரத்தில் ராஜு முருகன் வேறு வந்து சேர்ந்து கொண்டார். “உங்க படத்தைப் பத்தி நேத்து கூட பேசிட்டிருந்தேன் என்றார். சந்தோஷமாய் இருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
 படத்திற்கு பாடல் கம்போசிங் என்று ஆரம்பிக்கும் போதே நண்பர் நா. முத்துகுமாருக்கு போன் செய்துவிட்டேன். தலைவா.. நம்ம படத்துக்கு பாட்டெழுதணும் என்றேன். பட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்த்து சொல்லி, எப்பன்னு சொல்லுங்க.. கலக்கிடுவோம் என்றார். பெண்ணே.. பெண்ணே பாட்டுக்கான ட்யூன் ரெடியானவுடன் அவரை அழைத்தேன். அப்பாடல் ஒரு மாண்டேஜ் பாடல் நாயகனுக்கும், நாயகிக்குமிடையே காதல் அரும்பு வேளை, பாடல் முடியும் போது காதல் மலர்ந்திருக்க வேண்டிய சூழல். தலைவரே அப்படியே காருல உக்காருங்க.. ஒரு ட்ரைவ் போய்ட்டே வந்திருவோம் என்று சொல்லி, பாடலின் ட்யூனை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். போகிற வழியில் கதை சொன்னேன். நல்ல சுவாரஸ்யமா இருக்கு தலைவரே என்றார். பாடலின் முதல் வரியை “பெண்ணே.. பெண்ணே.. என்று ஆரம்பித்தவர் சடசடவென அடுத்தடுத்த வரிகளை சொல்லிக் கொண்டே போக.. கார்க்கி படியெடுக்க ஆரம்பித்திருந்தான். அவனுக்கு முத்துகுமார் ஒர் ஆதர்சம். ஆதர்ச நாயகனின் வார்த்தைகளை படியெடுக்கும் வாய்ப்பை பெற்ற தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.   “ஒர் நத்தை போல மாறுதடி என் நெஞ்சம் உன்னிடம், நான் சிக்கி முக்கி திணறுகிறேன் அறியாதோ உன் மனம்” என ஆண் பெண் இருவருக்கிடையே காதல் அரும்பி நெருக்கமாகிக் கொண்டிருப்பதை மிக அழகாய்  சொன்னார்.  அதான் முத்துகுமார். கேட்க கேட்க பிடிக்கும் மெலடி  பாடலாய் இது அமையும் என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் இப்பாடல் தொடர்ந்து ஹலோ எப்.எம்மில் ஒளிபரப்படுவதிலிருந்து தெரிகிறது.  உங்கள் கருத்துக்காக..
@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று திடீரென நினைத்து கும்பகோணம் குலதெய்வ கோயில் ட்ரிப். கார்க்கியும் நானும் காலை ஆறு மணிக்கு கிளம்பினோம். வழக்கம் போல சினிமா, அரசியல் என்று பேச்சு சுவாரஸ்யத்தோடு போனது. வழக்கமாய் காலை டிபன் சாப்பிடும் பாலாஜி பவனில் சாப்பிடாமல் ஒரு முறை நாங்கள் பண்ரூட்டி அருகே சரஸ்வதி மெஸ் எனும் சின்ன ஓட்டலில் சாப்பிட்ட இடத்தில் சாப்பிடலாம் என்று ஹைவே கும்பகோணம் காப்பி மட்டும் குடித்துவிட்டு பண்ட்ரூட்டி போன போது, அந்தக் கடையைத் தவிர  மற்ற கடைகள் எல்லாம் திறந்ததிருந்தது. பக்கத்திலிருந்த அதே போன்ற குட்டி மெஸ்ஸில் இட்லி, பூரி , வெங்காயம் போட்ட மெதுவடை வைத்தார்கள். வாயில் போட்டால் கரைந்தது. அட அட அட..  அணைக்கரை பக்கம் வந்த போது ஒரே ட்ராபிக் ஜாம்.  என்னடாவென பார்த்தால் ஆடிப் பெருக்கு விழாவிற்கு மக்கள் கூட்டம் அங்கே இத்துக்குணியூண்டு தேங்கிக் கொண்டிருந்த கொள்ளிட தண்ணீரில் அம்பூட்டு மக்கள் கூட்டம். வழக்கம் போல சோழ பெருங்குடிகள் நீ எம்பூட்டு பெரிய கார்ல வந்தாலும் நான் நடு ரோட்டுலத்தான் போவேன் என்று போய்க் கொண்டிருந்தார்கள்.  கோயில் தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ சிடியை வைத்து பூஜை செய்துவிட்டு, படம் நல்ல படியாய் ரிலீஸாக எல்லாம் வல்ல என் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டேன். எப்போது அங்கே சென்று வந்தாலும் எனக்கு ஒர் மன அமைதி கிடைக்கும், அது இப்போதும்.  வரும் வழியில் சீர்காழி அருகே நண்பர் நந்துவின் எரால் பண்ணையை சுற்றிப் பார்க்க சென்றோம். ஊர் எல்லை என்று கேள்விப்பட்டிருப்போம் நிஜமாகவே எல்ல்லையில் இருந்தது பொட்டைக்காட்டில் ஆங்காங்கே குட்டை வைத்து ஆள் அரவம் இல்லாத இடத்தில் நடுவே ஒர் பெரிய குடிசைப் போட்டு, தங்கியிருந்தார். நல்ல செக்கச் சிவந்த நந்து வத்தி போய் கருகும்மென இருந்தார்.  உப்புக் காத்து. காரில் போகும் போது ஜிகர்ந்தண்டாவின் பாடலை பின்னணியாய் போட்டுக் கொண்டு போனது ஒர் டெரர் உணர்வை பொட்டல் காடும், இசையும் கொடுத்தது.  எரால் வளர்ப்பு, அதனை பாதுகாக்கும் முறை, பேக் வாட்டரிலிருந்து தண்ணீர் மாற்றும் முறை, எராலுக்கு பீடிங், அதனுடய சைஸ், தண்ணீரில் ஆக்ஸிஜன் குறைந்தால் என்னவாகும், அதை மெயிண்டெயின் பண்ண அவர்கள் செய்யும் முறை என ஒர் திரில்லர் பட ரேஞ்சுக்கு சொல்லிக் கொண்டே போனார். எரால் பண்ணை வைத்து நடத்தி சம்பாதிப்பது என்பது கிட்டத்தட்ட டைமர் செட் செய்யப்பட்ட பாமை இடுப்பில் கட்டிக் கொண்டு அலைவதற்கு சமம் என்பது மட்டும் புரிந்தது. நந்து சந்தோஷமாய் சிரித்தபடி இருந்தார். வீரம்னா பயமில்லாம நடிக்கிறது என்ற கமலின் பொன்மொழி ஞாபகம் வந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
  • பேங்குக்கு நேரே போய் காசு எடுத்தாலும் காசு கேக்குறீங்க.. இப்ப ரெண்டு வாட்டிக்கு மேல ஏடிஎம்முல எடுத்தாலும் காசு கேக்குறீங்க பேங்கே வேணாம்டா:(

    • It's a Director film. #Jigarthanda congrats @karthiksubbaraj

      • Sleekly made racy thriller.dont miss and pldont reveal story #Sarabham all the best @vijayvyoma @salonyluthra @Naveenc212 @abineshaditiyaa @

        • பால், தண்ணி, டீத்தூள், சக்கரை எல்லாம் போட்டு கொடுக்குற டீ 8 ரூபாவாம். வெறும் க்ரீன் டீ வெந்நீத்தண்ணில போடுட்டு குடுக்குறதுக்கு விலை 10-15 

          • ஒழுங்கா ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளை விட்டுட்டு, சமையல் செய்த ஆயாவுக்கு தண்டனை கொடுத்திருக்காங்க ரைட் சட்டம் தன் கடமையை செய்யுது போல..
          • It was a nice eve with Vinoth Harimoorthy Sowmiyan and with Raju Murugan. Thx to Vinoth Harimoorthy
          • @@@@@@@@@@@@@@@
          • நண்பர், நடிகர், ஆர்.ஜே, பாலாஜியின் நண்பர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் ஒர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். என்னைப் பற்றி சொன்னதும், அட அவரை நான் படிச்சிருக்கேன் நிச்சயம் மீட் பண்ணலாமென்று சொன்னதாய் சொன்னார் பாலாஜி. ஷேன் ரோல்டனின் மயக்குற பூவாசத்தில் மயங்கியவன் நான். அதைப் பற்றி ஒர் கொத்து பரோட்டாவில் எழுதி அறிமுகப்படுத்திக் கூட இருந்தேன். மிகக் குறுகிய காலத்தில், வாயை மூடி பேசவும், முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை என வளர்ந்து நிற்கிறார். இன்னும் வெளிவராத அவருடய ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் பாடல்களை கேட்டவன் என்கிற வரையில் சொல்கிறேன். “ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற பாடல் இன்னொரு ஹிட் லிஸ்டில் உலாவப் போகிறது. அட்டகாசமான வரிகள், செம்ம ட்யூன். பாடலை எழுதியவர் நம்ம ரமேஷ் வைத்யா. இயக்குனர் பத்ரி. சரி ஷான் ரோல்டனுக்கு வருவோம். கதவை திறந்த மாத்திரத்தில் முகத்தில் ஸ்நேகத்துடனான சிரிப்போடு வரவேற்று, அளவளாவ ஆரம்பித்தோம். அவருடய படங்களைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன், “சார்.. உங்க பட பாஸு பாஸு பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சிவன் எனக்கும் நண்பர் தான் என்று பாராட்ட ஆரம்பித்துவிட்டார். சமீபகாலங்களாய் நான் சந்திக்கும் பல இளம்படைப்பாளிகள் அனைவருக்கு ஒர் ஒற்றுமையை கவனித்தேன். சக கலைஞர்களை பற்றி பாராட்டுவதற்கு தயங்குவதேயில்லை. கொஞ்சம் கூட பொறாமையில்லாமல் சந்தோஷமாய் பேசுகிறார்கள். ஹெல்த்தி வே.. எட்டு மணிக்கு ஆரம்பித்த எங்கள் சந்திப்பு, மெல்ல அவருடய படம், என்னுடய படம், அவருடய குரல் வளம், பின்னணியிசை ஆகியவற்றை பற்றி பேச்சு போய்க் கொண்டேயிருக்க, இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னால் எம்.பி.ஏ படித்துவிட்டு அவர் வேலைப் பார்த்த விஷயங்களைப் பற்றி கேட்டு நான் கேபிள் டிவி ஆப்பரேட்டர் என்பதால் நீங்க ரவுடிகளை எல்லாம் எப்படி டீல் பண்ணீங்க என்று ஆர்வத்துடன் கேட்டார். எனக்கும் ஒர் ரவுடிக்குமான கதையை சொன்னேன். மணி பத்தாகிவிட்டது. அவர் கதை கேட்கும் ஆர்வம் என்னை தொடர்ந்து அவர் வெளியே போக வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரலை மீறி கேட்டு கொண்டிருந்தார். மொத்த கதையையும் கேட்டுவிட்டு. செம்ம சார்.. செம்ம இண்டரஸ்டிங்கா சொல்லுறீங்க.. என்று சொல்லிட்டு “எனக்கு சின்ன வயசில ரவுடியாகணுங்கிறதுதான் பெரிய ஆசை என்றார். ஒர் சின்ன விஷயம் ஷான் ரோல்டன் என்பது அவரது இயற்பெயரல்ல.. தமிழ் எழுத்துலகில் மாபெரும் சாதனை புரிந்து இன்றளவிலும் சரித்திரக் புனைக் கதைகளின் மன்னன் என்ற பெயரை மறைந்தும் தன் பெயரோடு வைத்துக் கொண்டிருக்கும் சாண்டில்யனின் பேரன் இவர். அன்றைய மாலையை இனிமையாக்கிய ஷான் ரோல்டனுக்கும், பாலாஜிக்கும் என் நன்றிகள் பல. மேலும் பல வெற்றிகளை பெற்று மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
          • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@
          • போற போக்க பார்த்தா இது எங்க போய் முடியும்னு தெரியலை.ம்ஹும். பொறாமைதான்.
            @@@@@@@@@@@@@@@@@@@
            அடல்ட் கார்னர்
            Q: When do you kick a midget in the balls? 
            A: When he is standing next to your girlfriend saying her hair smells nice 
            கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

R.Gopi said...

//வீரம்னா பயமில்லாம நடிக்கிறது என்ற கமலின் பொன்மொழி //

ஹா ஹா ஹா ஹா ஹா...... யப்பா..... நடிப்புன்னா நடிப்பு, இது ஒலக மகா நடிப்புடா சாமி.....

ஆண்டவர் வாயில் இருந்து வரும் அனைத்துமே பொன்மொழி தான்