Thottal Thodarum

Aug 21, 2014

சாப்பாட்டுக்கடை - செட்டிநாடு சைவ பவன்

பெயரைப் பார்த்த மாத்திரத்தில் அட என்னடா இது செட்டிநாடு அசைவ உணவகம் பார்த்திருக்கிறோம். சைவ உணவகமா? என்ற ஆச்சர்யத்தோடு கடையின் உள் நுழைந்தேன். ஓரளவுக்கு நல்ல கூட்டமிருந்தது. உள்ளே போய் உட்கார்ந்த மாத்திரத்தில் நல்ல வரவேற்பும், ஒரே நேரத்தில் பல பேர் ஆர்டர் சொல்லிட்டீங்களா? என்று அதீத உபசரிப்பை பார்த்த மாத்திரத்தில் கடையை திறந்தே ரெண்டொரு நாட்கள் தான் இருக்குமென தோன்றியது. மெனு கார்ட் கேட்டேன். “ சார் இன்னைக்குத்தான் திறந்திருக்கோம். இப்போதைக்கு மீல்ஸ் மட்டுமே இருக்கு” என்றார். எனக்குள் சிரித்துக் கொண்டேன். ஓகே மீல்ஸ் என்று ஆர்டர் செய்த மாத்திரத்தில் தட்டில் சாப்பாடு வந்தது.  


வட்டில் சாதம், பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, ஒரு ஸ்வீட், அப்பளம் என சுத்தமான சைவ சாப்பாடு. சாம்பார் ஓகே. ரசமும் ஓகே.. காரக்குழம்பு ஒன்று கொடுத்தார்கள். அட.. அட அட ரெண்டு முறை வாங்கி சாப்பிட்டேன். முதல் நாள் வேறு தயாரிப்புகள் முன் பின் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் மற்ற அயிட்டங்களைப் பற்றிய குறைகளை முன் வைக்காமல் அவர்களை வாழ்த்திவிட்டு வந்தேன். ஏனோ என் உள்நாக்கில் அந்த காரக்குழம்பின் சுவை அன்று முழுவதும் இருந்து கொண்டேயிருந்தது.  அடுத்த சில நாட்களில் நானும் தொட்டால்தொடரும் நாயகன் தமனும் மெரினா பீச்சுக்கு போய்விட்டு வரும் போது, “தமன் இங்கே ஒரு இண்ட்ரஸ்டிங் வெஜ் ரெஸ்டாரண்ட் பார்த்தேன். எப்படியிருக்கும்னு தெரியலை ஒரு வாட்டிப் போய் பார்ப்போமா? என்றேன். ஏற்கனவே நான் சாப்பிட்ட மதிய லஞ்சை நான் கணக்கில் கொள்ளாமல்.  

இம்முறை ரெஸ்ட்டாரண்டில் நல்ல கூட்டமிருந்தது. இம்முறை நல்ல தீர்க்கமான மெனு கார்ட் கொடுத்தார்கள். இதற்கு முன்னர் இங்கே இட்லி விலாஸ் இருந்ததாலோ என்னவோ, இட்லியிலேயே பத்து வைரைட்டிகள் வைத்திருந்தார்கள். நான் மல்லி இட்லியும், தமன் பூண்டு குழம்பு இட்லியும் ஆர்டர் செய்தோம். கத்திரிக்காய் கொத்துஸுடன் சூடான இட்லியை கொடுத்தார்கள். வாவ்.. வாவ்.. வாவ்.. டிவைன். ஹோட்டல் ஓனரை அழைத்து இதே கொத்ஸை அவர்கள் மெனுவில் இருந்த அரிசி உப்புமாவோடு தாருங்கள் அட்டகாசமாய் இருக்குமென்று புதிய காம்பினேஷன் சொன்னேன்.  அடுத்ததாய் பூண்டு குழம்பும் அட்டகாசமாய் இருக்க, இப்படி ஆரம்பித்த எங்களது விசிட் அதன் பிறகு நான், தமன், விஜய் டிவி மகேஷ் என தொடர்ந்து போக அரம்பித்தோம். என் பிறந்த நாள் அன்று என் குடும்பத்தோடு, மகேஷ், தமனும் சேர்ந்து கொள்ள,  ஆளாளுக்கு ஒர் அயிட்டம் என ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம். ஒவ்வொருவரும் ஆவரவர்களுக்கு பிடித்த உணவுகளை மற்றவர்களுக்கு ரெகமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.  பனங்கற்கண்டு பால், பால் கொழுக்கட்டை, ராகி ஸ்வீட் உருண்டை, ப்ரைட் இட்லி, பணியாரம், சிவப்பரிசியில் ஒர் அல்வா போன்ற டெசர்ட்டோடு முடித்தோம். 
பால் கொழுக்கட்டையெல்லாம் காரைக்குடி பக்கம் சார்ந்த்வர்களின் விழாக்களில் மட்டுமே நான் சாப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் ஒர் விழாவில் வெள்ளை தண்ணீரை பால் என்று சொல்லி அதில்  போட்டிருந்த கொழுக்கட்டை சாப்பிட்ட வாய்க்கு, அற்புதமாய் இருந்தது. ஹனிமூன் பரோட்டா சூர்யகலா போல.. சுவீட் பரோட்டா. இட்லி ப்ரை நல்ல காரத்துடன் டீப் ப்ரை செய்யப்பட்டிருந்தது. சோளா பூரி ஒன்று என் பெரிய மகன் ஆர்டர் செய்திருந்தான். சைசில் கொஞ்சம் சிறுசாய் இருந்தாலும், டேஸ்டில் குட்.  இதை தவிர சுய்யம், அரிசி உப்புமா, மிளகாய் பொடி இட்லி, குருமா இட்லி என இட்லியில் பல வகைகளும், சைனீஸ், வகை உணவுகள் இருந்தாலும், நிச்சயம் ஒர் வித்யாசமான சவுத் இந்தியன் செட்டிநாட்டு சைவ உணவுவகைகளை சுவைப் பார்க்க ஒரு முறை சென்று வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

செட்டிநாடு சைவ பவன்
ராதாகிருஷ்ணன் சாலை. 
(பழைய இட்லி விலாஸ்)
  • கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

செங்கதிரோன் said...

More than you,Your sons are enjoying the foods so much...

Thulasidharan V Thillaiakathu said...

நீங்கள் எழுதியிருக்கும் விதமே அந்த ஹோட்டலுக்கு ஒரு நல்ல டீசர் போல ஆகிவிட்டது!!! ஓரு கை பார்த்துட வேண்டியதுதான்.....

'பரிவை' சே.குமார் said...

படிக்கும் போதே சாப்பிட வேண்டும் எனத் தோன்றுகிறது....