ட்ரைலர் பார்த்ததிலிருந்து ஒரு நடை போய்ட்டு வந்திருவோம்னுதான் தோணிட்டே இருந்தது. சைல்ட் ட்ராபிக்கிங் தான் கதை. ஏற்கனவே இக்கதை களனில் ஏகப்பட்ட படங்கள் உலகம் பூராவும் வந்திருக்கிறபடியால் இதில் என்ன புதுசாய் இருந்துவிட போகிறது என்ற எண்ணம் தலைப்பட்டாலும், எனக்கு பிடித்த ராணி முகர்ஜியும், அவரது கரகரகுரலும் என்னை தியேட்டருக்குள் அழைத்தது.
ஷிவானி மும்பை க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி. டெரர் பார்ட்டி, தொடர்ந்து பளார்.. பளாரென கன்னத்தில் அறைந்து கொண்டு செக்ஷன் சொல்லி மிரட்டும் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர். ஆஸ்ரமத்தில் வளரும் சிறு பெண் ஒன்று காணாமல் போக, அவளை தேடும் முயற்சியில் இறங்கும் போது சைல்ட் ட்ராபிக்கிங் பத்தி தெரிய வர, அதன் வேரை தேடி பிடிக்கும் போது ஆணி வேர் நேரடியாகவே ஷிவானியுடன் மோதுகிறது. ஷிவானி அப்பெண்ணை கண்டு பிடித்தாளா? அவளுக்கு என்ன ப்ரச்சனைகள் வந்தது? ஷிவானிக்கும், வில்லனுக்குமான க்ளைமேக்ஸ் என பல கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்கள்.
ஷிவானியாய் ராணி முகர்ஜியின் நடிப்பு ஆரம்பத்தில் பிடிக்க ஆரம்பித்தாலும் க்ளைமேக்ஸில் ரெண்டாகால் அடி இருந்து கொண்டு ஐந்தடி வில்லனை கராத்தே கிக்கெல்லாம் அடித்து நேரடி சண்டை போட்டு வீழ்த்துவதெல்லாம் உட்டாலக்கடி. ஆக்ஷன் ஹீரோயின் ஆக சண்டை போட வேண்டியதில்லை. ஆக்ரோஷமாய் நடித்தால் மட்டும் போதும்.
நிறைய நம்மூர் ஆட்கள் முகங்கள், பெயர்கள் படத்தின் க்ரெடிட்டில் தட்டுப்பட்டது. பின்னணியிசை கார்த்திக் ராஜா. டிவி சிரியலில் மற்றும் ஒர் சில தமிழ் படங்களில் தலைக்காட்டிய நடிகர் ஒருவர் கூட நடித்திருக்கிறார். ஆர்பாட்டமில்லாத ஒளிப்பதிவு, ஸ்லீக் எடிட்டிங் எல்லாம் இருந்தாலும், ஒரு கட்டத்தில் படம் மிக மெதுவாகத்தான் நகர்கிறது. அதுவும் பெண் குழந்தை கடத்தல் காட்சிகள் எல்லாம் ட்ரேட் தொடங்கி, நம்மூர் இந்திப் படங்கள் வரை அதீதமாய் ஒரே காட்சிகளை காட்டியிருப்பதால் கொஞ்சம் சரி அப்புறம் என்ன என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. மார்தானி ராணி முகர்ஜிக்காக..
Post a Comment
2 comments:
விமர்சனம் நன்று அண்ணா...
அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
வணக்கம். படமே விமர்சனத்தைப் படிக்கத் தூண்டியது. விமர்சனம் நன்றாக இருந்தது.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
Post a Comment