கொத்து பரோட்டா - 29/09/14
85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர் டெல்லி ஜூவில் புலிக்கு இறையான சிறுவனைப் பற்றிய செய்தியையும், வீடியோவையும் பார்த்த மாத்திரத்தில் அரை மணி நேரம் சே.. ஏண்டா பார்த்தோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். அடுத்த சில மணி நேரங்களில், ஜு அதிகாரிகளைப் பற்றியும், இதை வீடியோ எடுத்தவர்கள் மனநிலை பற்றியும், கீழ இருக்கிற மண்ணை எடுத்து புலி கண்ணுல தூவியிருக்கலாம், புலியின் இரண்டுகண்கள் மிக அருகில் தான் இருந்திருக்க, கைகளால் அதை குறி பார்த்து குத்தியிருக்கலாம் என்றெல்லாம் ஆளாளுக்கு புலியிடமிருந்து தப்பிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்கள் போல படமெல்லாம் போட்டு விளக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து ரெண்டு அடி ரோட்டுல நாய் துரத்துனா என்ன பண்றதுன்னு தெரியாம பின்னங்கால் பிடறி பட ஓடி வர்றவங்க. புலிகிட்டேயிருந்து தப்பிக்க என்ன பண்ணனுங்கிறது எனக்கு தெரியாது. ஆனால் நாய் கிட்டேயிருந்து தப்பிப்பது எப்படின்னு தெரியும். துரத்துற நாய் பார்த்து ஒரு செகண்ட் அப்படியே வண்டி ஓட்டிக் கொண்டி...