@@@@@@@@@@@@@@@@@@@@
பர்மா
ட்ரைலரைப் பார்த்ததும் Gone In 60 Seconds" படத்தின் உட்டாலக்கடியாய் இருக்குமென்ற எண்ணத்தை படம் பார்த்த 60 செகண்டில் மாற்றிவிடும் என்று இயக்குனர் ட்விட்டரில் சொல்லியிருந்தார். அது நிஜமே. படத்தின் களமாய் அமைத்திருந்த கார் சீஸிங் பின்னணி அட்டகாசமான களம். சீஸிங்கில் கில்லாடியான சம்பத் தங்களை ஏமாற்றுகிறார் என்று தெரிந்து உதவியாளாய் இருக்கும் மைக்கேல் அவரை ஜெயிலில் மாட்டிவிட்டு, சீஸிங் தாதாவாகிறார். அவருக்கும் ஒர் அப்பர் மிடில் க்ளாஸ் பெண்ணான ரேஷ்மிக்கும் காதல். இன்னொரு பக்கம் எலிசெபத் மகாராணியின் வைர முட்டை, அதை விலை பேசும் பெண். அதை ஆட்டையைப் போட முயற்சி செய்யும் இன்னொரு பெண் தலைமை கும்பல், கொலை, திரும்பி வரும் சம்பத், மைக்கேலை பழிவாங்க அவர் சீஸ் செய்யும் பென்சை திருடி விற்பது, அதனால் ஹீரோயினை ஹாஸ்டேஜாக வைத்துக் கொண்டு காரை கொடுத்துட்டு பொண்ணை தூக்கிட்டு போ எனும் வில்லன் என விறுவிறுப்பு பஞ்சம் இல்லாத கதை களன் எல்லாம் இருந்தும், ஹைஸ்பீட் ஷாட்கள், க்ரைம் பேக்ட்ராப், பூப்போட்ட சட்டை, பின்னணியில் லைட்டாய் லட்டினோ, டைப் டடங்..டடங் இசை என்று அமைத்தால் அது கல்ட் பிலிம் ஆகிவிடுமேன்ற கட்டாயம் இல்லை. நல்ல ஸ்டைலிஷ் மேக்கிங் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிகரம் தொடு
விக்ரம் பிரபுவின் அடுத்த த்ரில்லர். தூங்காநகரம் கொடுத்த கவுரவ் நாராயணின் படம். அப்பா, மகன் செண்டிமெண்ட். அப்பாவின் ஆசைக்காக போலீஸ் ஆக ட்ரைனிங் போவதும், இன்னொரு பக்கம் பேங்க் ஆபீஸராக ஆசைப்பட்டுக் கொண்டு இரண்டு பக்கமும் வலிக்காமல் எஸ் ஸாக நினைக்கும் விக்ரம் பிரபு. எப்படி இண்ட்ரஸ்டே இல்லாத போலீஸ் வேலையில் கலங்கடிக்கும் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்கிறார்? அதற்கு காரணம் என்ன? என்பதுதான் கதை. முதல் பாதியில் ஆங்காங்கே ஸ்பீட் ப்ரேகர்களாய் காதல் காட்சிகள் வந்தாலும், சாகப் போற நேரத்தில் விமானத்தில் பக்கத்திலிருக்கும் பெண்ணை முத்தமிடுவது சுவாரஸ்யம். இரண்டாம் பாதி முழுவதும், ஏடிஎம் வில்லன், அப்பாவின் உயிர் ஆபத்து, விக்ரம்பிரபுவின் கோபம், எல்லாம் சேர்ந்து விறு விறு க்ளைமாக்ஸை கொடுத்திருக்கிறார்கள். இமான் இசையில் கானா பாட்டும், பிடிக்குதேவும் மட்டும் பிடிக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வானவராயன் வல்லவராயன்
ஆண்பாவம் படத்தின் உட்டாலக்கடி. நீ மட்டும் என் அம்மாவ கட்டிக்கலாம், நான் உன் அம்மாவ கட்டிக்க கூடாதா? என்ற டயலாக்குக்கு ஈடாய் ”பேசாம நாம அம்மாவுக்கு மட்டுமே பொறந்திருக்கலாம்டா” என்ற டயலாக் தான் லேட்டஸ்டாய் இருக்கிறது. மற்றது எல்லாம் ஆண்பாவம் காலத்து அதே கதை திரைக்கதை வசனம் இயக்கம் தான். க்ளைமாக்ஸில் சந்தானம் வந்து காப்பாற்றுகிறார். யுவனின் இசையில் ரெண்டொரு பாடல்கள் சுவாரஸ்யம். கோயமுத்தூர், பொள்ளாச்சியில் நடக்கும் கிராமத்து கதை. கோவை சரளாவைத் தவிர யாருமே கோவை பாஷை பேசுவதில்லை.ஸோ.. இக்கதைக்கு முக்கியமான நேட்டிவிட்டி மிஸ்ஸிங்..
@@@@@@@@@@@@@@@@@@@@@
விமர்சன இம்சைகள்
//முதல் கொலைக்காட்சிக்கு ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என்ற சிவாஜிகணேசன் செண்டிமெண்டெல் பாட்டை இணைத்ததிலிருந்தே சந்தோஷ் நாராயணனின் ரகளை ஆரம்பித்துவிடுகிறது.//
பாராட்டணும்னு முடிவு பண்ணியாச்சு பாராட்டட்டும். நிஜமாவே பாராட்ட ஆயிரம் விஷயம் இருக்கு. ஆனால் சினிமாவில் யார் யார் எந்தெந்த வேலையை செய்வார்கள் என்று கூட தெரியாம, இருண்ட நகைச்சுவை, கெக்கிலின்னு எல்லாம் நாலைஞ்சு உட்டாலக்கடி வார்த்தைய வச்சிட்டு
இவங்க எல்லாம் விமர்சனம் எழுதி.. அதை படிச்சி.. அந்த பாட்டை சீனில் வர வழைத்தது இசையமைப்பாளரா? அல்லது அப்படத்தின் திரைக்கதை, எழுதி இயக்கியவரா? முடியலை.. தயவு செய்து லிங்க் கேக்காதீங்க. தேவையில்லாம ஹிட் ஏறி.. நாம கரெக்டாத்தான் எழுதியிருக்கோம்னு நினைச்சி இன்னும் நாலு கெக்கிலி புக்கிலி கட்டுரை எழுதிரப் போறாரு..
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் ட்வீட்டிலிருந்து
Post a Comment
1 comment:
//இவங்க எல்லாம் விமர்சனம் எழுதி.. அதை படிச்சி.//
இந்த அணுகுமுறை சரி அல்ல என்பது என் கருத்து
Post a Comment