Thottal Thodarum

Sep 22, 2014

கொத்து பரோட்டா -22/09/14

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
யூட்யூபுல இத்தனை லட்சம் ஹிட்ஸு.. அத்தனை லட்சம் ஹிட்ஸுன்னு ஆளாளுக்கு விளம்பரம் போட்டுக்கிற காலத்துல பிஃபா 15 எனும் புட்பால் கேமுக்கு போட்டிருக்கிற விளம்பரத்த பாருங்க..  அசத்துராய்ங்க.. என்னா ஒர் எக்ஸ்பீரியன்ஸ்... உடனே வாங்கணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சிவாஜி ரசிகர்களை வைத்து நடந்தேறிய நீயா நானா நிகழ்ச்சி நிறைய பேருக்கு நாஸ்டால்ஜியா நிகழ்ச்சியாய் இருந்திருக்கும். கலந்து கொண்ட பெண்களி பெரும்பாலானவர்கள் சிவாஜியைப் பற்றி பேசும் போது கண்களில்காதல் பொங்கத்தான் பேசினார்கள். அதில் ஒர் பெண்மணி படத்தில் வரும் ஹிரோயினெல்லாம் சிவாஜியோட அப்படி வாழுறாங்களே.. நமக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைக்கலையேன்னு வயசுல சொல்ல முடியாததை வயதான காலத்தில் சொல்வதாய் சொன்னார். அது நிஜமென்பது எப்படி ஆண்களுக்கு எல்லாம் சரோஜாதேவியோ, பத்மினியோ, தேவிகாவோ அப்படித்தான் அவர்களுக்கும். அதில் ஒர் பெண்மணி சிவாஜி போல சுருள் முடி க்ராப் வைத்ததினால் தான் தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைய பிடித்ததாய் சொன்னது செம்ம. எல்லாம் மனசுக்குள்ளும் சிவாஜியோ, எம்.ஜி.ஆரோ, ரஜினியோ,கமலோ, அனுஷ்காவோ, மனிஷாவோ, இருக்கத்தான் செய்கிறார்கள். 
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
அரண்மனை
ஹாரர் காமெடி எனும் ஜேனர் சமீபகாலமாய் செல்ப் எடுக்கிறது என்பதால் ஊரெல்லாம் ஆளாளுக்கு ஹாரர் காமெடி எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த எபெக்டை அறுவடை செய்ய வந்திருக்கும் படம். மலையாளத்தில் யக்‌ஷகானமாய் வந்து பின்பு தமிழில் ரஜினி, லதா, விஜயகுமார் நடித்து பல ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் உட்டாலக்கடிதான். அதில் கொஞ்சம்  சந்திரமுகி, அம்மன், இன்னும் பல தெலுங்கு பட விஷூவல்ஸ் எல்லாம் சேர்த்தால் அரண்மனை ஆகிவிட்டது. சந்தானம் மீண்டும் தன் காமெடி சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். கிட்டத்தட்ட முதல் பாதி தப்பிப்பதே இவரால்தான். அதன் பிறகு லஷ்மிராய், ஆண்ட்ரியா, ஹன்சிகா என ஆளாளுக்கு தங்கள் பங்குக்கு கவர்ச்சி காட்டுகிறார்கள்.  ப்ளாஷ்பேக் கதை, CG எல்லாம் அரத பழசு
@@@@@@@@@@@@@@@@@@@@
ஆள்
ஏற்கனவே ஒர் பிலிபினோ படமொன்றை தழுவி ஹிந்தியில் 2008 என்று நினைக்கிறேன் யுடிவி ஸ்பாட் பாய் எனும் நிறுவனத்தை தொடங்கியது. அதில் நான் கமர்ஷியம் படங்கள் மற்றும் சீரியஸ் படங்களை தயாரித்து வெளியிட ப்ளான் செய்தது. அப்படி எடுக்கப்பட்ட முதல் படம் ஆமீர். ராஜிவ் கண்டேவால் எனும் டிவி நடிகர் தான் கதாநாயகனாய் நடித்திருந்தார். பிரபல வைல்ட் லைப் ஒளிப்பதிவாளர் அல்போன்ஸ் ராய் முதல் முதலாய் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். மிக அருமையாய் இருக்கும் படம். தமிழில் வித்தார்த் ராஜிவ் கண்டேவால் கேரக்டரில் வருகிறார். தேவையில்லாத காதல், குடும்பக் கதைகள் எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். ஹிந்தியில் வரும் வில்லனின் முகத்தை முடிந்தவரை காட்டவே மாட்டார்கள். இதில் தயாரிப்பாளர் விடியல் ராஜுவே அந்த கேரக்டரை செய்திருப்பதால் நன்றாக காட்டப்பட்டிருக்கிறார். ஹிந்தியில் வரும் பல க்ளோசப் காட்சிகளை அப்படியே இதிலும் வைத்திருக்கிறார்கள். ஹிந்தியில் கிடைத்த அனுபவம் ஏனோ தமிழில் மிஸ்ஸிங். களைமேக்ஸ் டைம் ஸ்லைஸ் காட்சி மட்டும் க்ளாஸ்
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
DAAWAD-E-ISHQ
ட்ரைலரில் பர்னிதியை பார்த்த மாத்திரத்தில் பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். படத்தில் வேறு சாப்பாட்டை பின்னணியாய் வைத்து கதை சொல்லியிருக்கிறார்கள் என்றதும் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஷூ கடையில் வேலை பார்க்கும் குல்லு காதர், நல்ல அழகி, படிப்பாளி, கோல்ட் மெடலிஸ்ட். அவளது அப்பா அப்துல் காதர் கோர்ட்டில் வெறும் க்ளார்க். ஹைதையின் பின்னணியில் கதை ஓடுகிறது. வருகிற மொக்கை மாப்பிள்ளைகள் எல்லாரும் வரதட்சணையாய் லட்சங்கள் கேட்க வெறுத்துப் போய் அப்பா மகள் இருவரும் ஒர் ப்ளான் செய்கிறார்கள். 439ஏ எனும் வரதட்சணை கொடுமை சட்டத்தை பயன்படுத்தி, ஊர் விட்டு ஊர் போய் தலுக்காய் திருமணம் செய்துவிட்டு, அடுத்த நாள் வரதட்சணை கொடுமை என்று புகார் கொடுத்து, முடிந்தவரை பெரும் பணத்தை கரந்துவிட்டு, பெண்ணின் கனவான அமெரிக்காவில் போய் பேஷன் டிசைனர் ஆவது என்கிற ப்ளானை ஒர்கவுட் செய்கிறார்கள். தங்களது ப்ளானை லக்னோவில் உள்ள முஸ்ஸிம் சமூக வெப் சைட்டுகளில் போட்டு, அப்பா மகள் இருவரும் துபாயில் பெரும் பணக்காரர்கள் என்று செட்டப் செய்து வரும் மாப்பிள்ளை வீட்டார்களிடம் இண்டர்வியூ வைத்து, அவர்கள் வரதட்சணை கேட்பதை திருட்டுத்தனமாய் வீடியோ எடுக்கிறார்கள். அப்போதுதான் லக்னோவில் பிரபல சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் அதித்யாவை சந்திக்கிறார்கள். பெரியதாய் படிக்காதவனாய் இருந்தாலும், ஆர்பாட்டமான, புத்திசாலி இளைஞனாய் இருக்கிறான். பார்த்த மாப்பிள்ளைகளில் அவர் குடும்பம் மட்டுமே பணக்கார குடும்பமாய் இருக்க அவரை தெரிந்தெடுக்கிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டார் சைடில் ஹீரோ ஒர் கண்டீசன் போடுகிறார். மூன்று நாட்கள் தன்னுடன் நேரத்தை செலவிட வேண்டுமென்று. வேறு வழியில்லாமல் ஹீரோயின் ஓகே சொல்ல அந்த மூன்று நாட்களில் அவர்களிடையே அவனின் ரசனை, அன்பு, அடாவடித்தனம், உணவின் சுவை எல்லாம் அவளுக்கு பிடித்து போகிறது. அதையெல்லாம் மீறி உண்மையை சொன்னால் தாங்கள் போலீசில் பிடித்துக் கொடுக்கப்படுவோம் என்று உணர்ந்து தங்கள் ப்ளானை செயல்படுத்தி பணத்தை கரந்துவிட்டு எஸ்சாகிவிட, அவர்களை தேடி கண்டுபிடித்து ஹைதை வருகிறார் ஹீரோ. பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.

இரண்டே மணி நேரப் படம் தான். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இழுக்கிறது. பர்னிதி செம்ம க்யூட். அதே போல ஹீரோ அதித்யா ராய் கபூர். மசோ, கொஞ்சம் உசரமான அக்‌ஷய் குமார் போல இருக்கிறார். நேர்மையான குடும்பத்து பெண் தங்களின் இயலாமையால் இம்மாதிரியான ப்ளானில் இறங்குகிறார்கள் என்றதுமே கதையில் சுவாரஸ்யம் குறைந்து சினிமாட்டிக்கான களமாய் போய்விடுகிறது. படம் முழுக்க பார்க்க பர்நிதியும், அழகான ஒளிப்பதிவும், சாப்பாட்டு மேட்டர்களும் காப்பாற்றி விடுகிறது. மத்தபடி டெம்ப்ளேட் ஃபீல் குட் காதல் படம்.
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
என் ட்வீட்டிலிருந்து
உடனிருப்பவன் நண்பனாய் நடித்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தும் சில பல சமூக காரணங்களுக்காகவே நாமும் நடித்துக் கொண்டிருப்பது மகா கொடுமை.
  • உண்மையை எப்ப சொல்ல ஆரம்பிக்கிறோமோ அப்பவே நம்மளை துரோகியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.
  • போற போக்குல படம் பூஜை போடுறதுக்கு முன்னாடியே சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னு விளம்பரம் போட்டுருவாஙக் போல..
  • சமரசம் உலாவும் இடமே - பாண்டு கிளாரினெடில் -எதிர் வீட்டு பெரியவர் - மர்கயா ;(
    • அவனுக்கென்ன சின்ன வயசிலேயே ஆண்டு அனுபவிச்சிட்டான் என்கிறவர்களுக்கு அசை போட வயசிருந்தாத்தான் ஆண்டத அனுபவிக்க முடியும்
      • இன்னைலேர்ந்து டயட்டுல இருக்கலாம்னு ப்ளான் பண்ணா பக்கத்துவீட்டுலேர்ந்து டீப்பா உருளை ரோஸ்ட் வாசனை. என்னை சுத்தியே எனக்கு எதிரிகள் 
        • ரோட்டுல இருக்கிறத நடு வீட்டுல கூட்டி வந்து வச்சாலும் அது திரும்ப ரோட்டுக்குத்தான் போவுமாம். அது போலத்தான் இவங்க#ப்ளாட்பாரகடை
          • ஆகடு. அரண்மனை, ஆடாம ஜெயிச்சோமடா, ஆள், வர்ற வாரம். அ ஆ வரிசை வாரம் போல,,
            • வீட்டை கட்டிட்டு கிரகப்பிரவேசம் பண்ண யோசிக்கிறாய்ங்க..#ம்ஹும்..
              • பொவண்டோவுடன் கொஞ்சம் பெப்பரை கலந்து லைட்டா எலுமிச்சை போட்டு ஒர் கலக்கு கலக்கி குடிச்சேன் அட்டகாசம்#நன்றி அயன் பாய்
                • ஐ பாடல் வெளியீட்டிற்கு அழைப்பு இருந்து போக விருப்பமில்லை என்றவனை ஐய்யே என்று பார்க்கிறார்கள்
                • EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
                • அடல்ட் கார்னர்
                • “A cucumber, a pickle, and a penis are sitting at a bar complaining about their lives. The cucumber says, "My life sucks. I'm put in salads, and, to top them off, they pour ranch dressing all over me. My life sucks." The pickle says, "That's nothing compared to my life. I'm put in vinegar and stored away for months, out of sight. Man, my life is boring. I hate life." So the penis says, "What are you guys complaining about? My life is so messed up that I feel like shooting myself. They constantly wrap me in a plastic bag, shove me in a cave, and make me do push-ups until I throw up.” 
                • கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

Raj said...

ஆடாம ஜெயிச்சோமட படம் பார்த்தோம்.. கடைசியில் நீங்கள் வருகையில் இன்ப அதிர்ச்சி.. கூடவே ஒரு காமெடியும்.

ப்ரோபைலில் பழைய படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எதுக்கும் ரஜினி மாதிரி ஒரு கேரளா வைத்தியசாலைக்கு அடிக்கடி போயிட்டு வந்திடுங்க.