கோணங்கள்-4
கண்ணீர் கலந்த பிளாக் காமெடி! “இயக்குநரை விடுங்க… கேமராமேன், எடிட்டர், எல்லாரும் புதுசு. ஸ்டில் கேமராவுல போட்டோ எடுத்துட்டு இருந்தவரெல்லாம் ஒளிப்பதிவாளர். சொந்தமா செலவு பண்ணி ரெக்கார்டிங் ஸ்டூடியோ வச்சிருக்கிறவர் எல்லாம் இசையமைப்பாளர். இவங்களால எவ்வளவு பிரச்சினை தெரியுமா? ஒரு கோடிக்குள்ள நச்சுன்னு படமெடுத்துக் கொடுக்கிறேன்னு ஷார்ட் பிலிம் எடுக்கிற நினைப்பிலேயே தயாரிப்பாளர்கிட்ட சொல்றாங்க. அது எப்படிங்க எடுக்க முடியும்?. யார் கிட்டேயும் பர்மிஷன் வாங்காம, ஒரு 5டி கேமராவை வச்சிட்டு கூட இருக்கிறவங்கள வச்சி ஷார்ட் பிலிம் எடுக்குறது, முழுநீளப் படம் எடுக்குறது மாதிரி சாதாரண விஷயமா? லெஃப்ட் ரைட் பார்க்கத் தெரியுமா? ஷாட் வைக்கத் தெரியுமா..? (மூச்சு விட்டுக்கொள்கிறார்)