Thottal Thodarum

Oct 13, 2014

கொத்து பரோட்டா - 13/10/14

வெண்ணிலா வீடு, குபீர், யாவும் வசப்படும், ஆலமரம், குறையொன்றுமில்லை, அப்படின்னு கிட்டத்தட்ட பத்து தமிழ் படங்கள் இந்த வாரம் ரிலீசாயிருக்கு. கேட்கவே பயமாயிருக்கு. மிச்ச படத்தோட பேர் கூட ஞாபகத்துக்கு வராத நிலையில் விளம்பரம், தியேட்டர் கிடைத்தல் என பல ப்ரச்சனைகளுக்கு பிறகு ரிலீஸாகிறது. குறைந்த பட்ச விளம்பரத்தோடு இந்த வாரம் வந்த படத்தில் ஓரளவுக்கு அடையாளம் தெரிகிற படமாய் அமைந்தது வெண்ணிலா வீடு மட்டுமே. அதற்கு காரணம் வைப்ரண்டான  ப்ரோமோஷன். ஆனாலும் வசூல் ரீதியாய் எந்த படமும் சரியாக பண்ணவில்லை என்பதுதான் ரிப்போர்ட். தமிழ் படங்களைத் தவிர மேலும் ஹிந்தியில் ரெண்டு, தெலுங்கில் ரெண்டு, மலையாளத்தில் ஒன்று என படங்கள் வெளியாகியிருக்கிறது. ஒரிரு படங்களுக்கு ரிலீசுக்கு முன் விளம்பரம் செய்தவர்கள் படம் வெளியாகி இரண்டாவது நாளிலிருந்து விளம்பரம் செய்யக்கூட இல்லை. படம் தயாரிக்க ஆசைப்படுகிறவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். படம் தயாரிக்க ஆகும் செலவோடு, அதனை ப்ரோமோட் செய்து வெளியிட ஆகும் செலவையும் சேர்த்து படம் தயாரிக்க வருவது சால சிறந்த செயல். சமயங்களில் சரியாக ப்ரோமோட் செய்யப்படாத நல்ல படங்கள் மக்களின் கவனத்திற்கே வராமல் போய்விடக்கூடிய ஆபாயம் உள்ளது.
@@@@@@@@@@@@@@@@@@


பேஸ்புக் நீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற ஒர் குறும்படம் வெளியீட்டுக்கு ஏவிஎம் சென்றிருந்தேன். ஏகப்பட்ட கூட்டம். அனைவரும் 20-25 வயதுக்குள்ளான இளைஞர்கள். ஏதோ யூத் பெஸ்டிவல் போல இருந்தது. இந்த குறும்பட விழாவிற்கு ஏகப்பட்ட பேஸ்புக் ப்ரோமோக்கள், அதற்கு பி.ஆர்.ஓ. ப்ரஸ் ஆட்கள், மகாலஷ்மி தியேட்டர்காரர்கள் தான் அதை ரிலீஸ் செய்ததாய் போட்டிருந்தார்கள். ஒரு திரைப்படத்துக்கான அத்துனை விஷயங்களுக்கும் செலவு செய்திருந்தார்கள்.  பேஸ்புக்கினால் லைக்கோ போபியாவில் அவஸ்தைபடும் இரண்டு மிக இளைஞர்களின் கதை என்று சன் டிவி மோசஸ் மூலம் கதை ? சொல்லப் படுகிறது. இளைஞர்களில் குண்டுப் பையனாய் வரும் பேட்டீயின் நடிப்பும், பாடி லேங்குவேஜும் அருமை. பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.  7ஜியில் வரும் சுனில் ஷெட்டி போல. யாஹூ சேட்டில் பெண்கள் பேரில் ஃபேக் ப்ரோபைல் ஏற்படுத்து நண்பர்களிடையே செய்யும் கலாப்பைத்தான் இப்போது பேஸ்புக்கில் செய்வதாய் காட்டியிருக்கிறார்கள். ரொம்பவே சினிமாத்தனமான டெம்ப்ளேட் குறும்படம்.
@@@@@@@@@@@@@@@@@@
வெண்ணிலா வீடு
ரொம்ப நாளாகிவிட்டது புருஷன் பொண்டாட்டி, குழந்தையோடு கதை ஆரம்பித்து. டிபிக்கல் குடும்பக் கதை. விஜயலஷ்மி ரொம்பவே பாந்தமாய் இருக்கிறார். புருஷனோடு ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் அவ்வளவு இயல்பான நடிப்பு. பக்கத்துவீட்டு பெண்ணிடமான நட்பு, அவரிடமிருந்து நகை கடன் வாங்கிப் போட்டுக் கொண்டு பார்க்கும் போது கண்களில் தெரியும் சந்தோஷம். அதன் பிறகு ஏற்படும் சோகங்களில் கண்களில் தெரியும் இயலாமை இப்படி படத்தை தன் நடிப்பால் சோபிக்க வைக்கிறார். இயக்குனர் வெற்றி மகாலிங்கம் ரொம்பவே செண்டியாகி, அழுது பிழிய வைத்திருக்க வேண்டாமென்று தோன்றுகிறது. இவர் ஏற்கனவே அரும்பு மீசை குறும்புப் பார்வை என்ற படத்தை இயக்கியவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ரெண்டு மூணு ராம.நாராயணன் Annabella டைரக்டர் உள்ள இருக்காப் போல..

ஆன்லைன்ல எனக்கு சட்டை ஆர்டர் பண்ணா என் பையனுக்கு அனுப்புறானுங்க..குட்

பசங்க கும்பலா தண்ணி அடிச்சிட்டு எப்படி சந்தோஷமா இருக்காங்கன்னு பொண்ணுங்க தெரிஞ்சிக்க பாருங்க குபீர். செம்ம

ஒரு மணி நேரத்தில தினமலர்ல 100 கோடியும் மூவி க்ரோவுல 200 கோடியும் பேங் பேங் வசூல் பண்ணியிருக்கிறது மெடிக்கல் மிராக்கிள்.

Another Bing YaaWWWN in hindi ‪#‎BangBang‬

VTV, Varanam Ayiram, Pirivom Santhippom, 80's Old Indian cinema all together comes alive in @chetan_bhagat Halfgirlfriend

போட்டோவுல போட ஒரே ஒரு பீஸை மட்டும் வச்சிட்டு வித்து போச்சே.. வித்துபோச்சேன்னு குதிக்கிறானுங்க. ப்ராண்ட்நேம் பில்டிங் ‪#‎flipkartOffer‬
@@@@@@@@@@@@@@@@@@@@@
Flipcartம்- டிஸ்கவுண்ட் சேலும்
காலையில் பேப்பரை பார்த்து சாம்சங் டேப்ளட் வெறும் 1300 ரூபாயும், 1டிபி ஹார்ட் டிஸ்க் வெறும் 500 ரூபாய் என்று ஒரு பக்க விளம்பத்தை பார்த்ததும் என் பெரிய மகன் டாப்லெட் பயன்கள், மற்றும் ஒன் டிபி நீ சேவ் செய்து வைத்திருக்கிற படத்தையெல்லாம் அதில் சேமித்து வைக்கலாம் என்று ஏதோ எனக்காக யோசிக்கிறார்ப் போலவே அதை வாங்க என்னை ஸ்ட்ரெஸ் செய்து கொண்டிருந்தான். அதில போட்டு இருக்கிற விலையில கிடைக்கவே கிடைக்காது பாரு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். கிடைச்சா? என்று ஏழுரை மணிக்கே ஆன்லைனில் உட்கார்ந்திருந்தான். எட்டு மணிக்குத்தான் சேல் என்று போட்டிருதார்கள். ஆனால் எட்டு மணிக்கே சோல்ட் அவுட் என்று வந்தது. கொஞ்சம் நேரம் வேற வேறா ப்ராடெக்டுகளை பார்த்துவிட்டு, ஒரு சாம்சங்கில் மிடில் ரேஞ்சு போன் வாங்கட்டுமா? என்றான். அது தான் அவர்கள் ப்ளான் செய்தது. நிறைய பேரை ஒரே நாளில் சைட்டுக்கு வர வழைத்து, சரி வந்திட்டோமேன்னு ஏதையோ ஒண்ணுத்த வாங்க வைக்கிறது. அதுல ஃபிப்கார்ட் ஜெயிச்சிட்டாங்க.. அந்த போனெல்லாம் இப்ப தேவையில்லைனு சொல்லு நானும்  ஜெயிச்சிட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Annabelle
கன்சூரிங் படத்திற்கு ப்ரீக்யுவல். கதாநாயகியை காட்டும் போதே அவர் கர்பிணி. பின்ன செண்டிமெண்டுக்கு கேட்கணுமா? விட்டு பிழியிறாங்க. பக்கத்துவீட்டில் ப்ரச்சனையாகி கதாநாயகியை அட்டாக் செய்யும் காட்சியும், பெண் குழந்தை ஒன்று ஓடிவரும் போதே பெரிய பெண் பேயாய் மாறி அட்டாக் செய்யும் காட்சியும் நச். சாத்தானுக்கு தன் முனைப்போடு ஆன்மாவை கொடுக்க வேண்டும் என்பது, க்ளைமாக்சில் தியாகம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட பக்கத்து பில்டிங்கில் புத்தக கடை வைத்திருக்கும் கறுப்பினப் பெண். சர்ச் பாதர். அவருக்கு பாதிப்பு என போல்டர்கீஸ்டின் டெம்ப்ளேட் தான். ஆனால் ரிலீஸான பத்து தமிழ் படங்களுக்கு இல்லாத ஒர் கூட்டம் இந்த படத்திற்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A boss said to his secretary I want to have SEX with you I will make it very fast. I'll throw $1000 on the floor, by the time you bend down to pick it I'll be done. She thought for a moment then called her boyfriend and told him the story. Her boyfriend then said to her, do it but "Ask him for $2000, pick up the money very fast he wouldn't even have enough time to undressed himself." So she agrees. Half an hour goes by, the boyfriend decides to call girlfriend, he asks, what happened? She responds, "The Bastard used coins I'm still picking and he is still fucking!"
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

R. Jagannathan said...

Did you post your review of 'Half Girl friend' in CB's facebook page - he has asked for it!

The flipkart experience is good for the firm and the greedy customers. They apologised and say that they have learnt a lesson. Let us hope so. And the minister - Nirmala Seetharaman - has also stated that she will look into the online cut throat pricing which affects sales in shops. It is essential that the manufacturers are advised to print a reasonable MRP - not exceeding 20% so those who sell in bulk can have a lower margin of profit and those selling small quantities (buying from agents) also make some money. The buyers shall realise that there is no meaning in Sales which claim 50% , 75% discount and get one free when you buy one etc. The costs are covered and profits too in the price we pay. No one is running a charity. - R. J.

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு அண்ணா...

Gujaal said...

//சமீபத்தில ekadai.in நண்பர் ஜெயராஜ் பாண்டியன் நடத்தும் ஆன்லைன் மளிகை கடையிலேர்ந்து அடிமான்னு ஒரு செக்குல ஆட்டின நல்லெண்ணெய் வாங்கினேன். //

சென்னையில் டெலிவரி இல்லையே. எப்படி வாங்கினீர்கள்?