கதையேயில்லாம படமெடுக்கிறேன் என்று பார்த்திபன் சார் சொன்னாரு. ஆனா அவரை எல்லாம் தூக்கி சாப்புடறாப்புல வந்திருக்கிறப் படம் குபீர். பேரே அல்லு குல்லா இருக்கில்ல. படம் பார்க்கலாமென்று நண்பர் அழைத்த போது இந்த வார பத்து படங்களில் ஒன்றாய்த்தான் நினைத்துப் போயிருந்தேன். முழுக்க முழுக்க புதுமுகங்கள். ரொம்பவும் சாதரணமான விளம்பரங்கள். இதில் ஏ சர்டிபிகேட் படம் வேறு. அசுவாரஸ்யமாய்தான் போய் உட்கார்ந்தேன்.
ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் நான்கு இளைஞர்கள். வெள்ளிக்கிழமை வீக் எண்ட் பார்ட்டிக்காக மதியமே தயாராகி இரவு அவர்களது அறையில் சந்திக்கிறார்கள். குடிக்கிறார்கள். கொண்டாட்டமாய் இருக்கிறார்கள் அம்புட்டுத்தான் கதை என்கிற வஸ்துவே. நாலைஞ்சு ஆரம்பக் காட்சி லொக்கேஷன். மற்றபடி மொத்தமும் ஒரே வீட்டினுள்.
ஆரம்பத்தில் படத்தில் வரும் ஐந்து பேர்களின் கேரக்டர்கள் விளக்கத்திற்காக வரும் சில பல காட்சிகளில் அசுவாரஸ்யமாய் இருந்தாலும், சரக்கடிக்க ஆரம்பித்த மாத்திரத்தில் அவர்களின் பேச்சு சுவாரஸ்யமாக ஆரம்பித்தது. பசங்க எல்லா ப்ளான் பண்ணி ரூம்ல சரக்கடிக்கிறப்ப வானத்துக்கு கீழே இருக்கிற அத்துனை விஷயங்களைப் பத்தியும் பேசி, கலாய்ச்சு, அதகளம் பண்ணியிருகாங்க.
கதை, திரைக்கதை என்று ஒரு சுக்குமில்லாமல் வெறும் தண்ணியடிக்கும் போது நண்பர்களிடையே நடைபெறும் அரசியல், உலக அரசியல், செக்ஸ், நண்பர்களுக்கிடையே ஆன கால் வாரிவிடும் சம்பவங்கள். பார்ட்டியில் எவனாவது ஒருத்தனை டார்கெட்டா வச்சிட்டு ஆடும் சலம்பல்கள் என வெறும் டயலாக்குகளாலேயே படம் ஓடுகிறது. பொண்ணுங்களின் உடை, காதல், கரெக்ட் செய்வது, பேஸ்புக், தமிழ் உணர்வு, இந்தி திணிப்பு, , அண்ணா, கலைஞரை தாத்தா எனவே விளித்தது, கூடங்குளம், பவர்கட், குறும்படம், விடுதலைபுலிகள், பிரபாகரன், சினிமா, ஹீரோயின்கள், உலகப்படம், ஹிட்லர் என பேசாத விஷயங்களே இல்லை.
புதியதாய் அறிமுகமான டீமில் போய் சரக்கடிக்க ஆரம்பிக்கும் போது இருக்கும் தயக்கம் போல படம் ஆரம்பித்தாலும், இடைவேளையின் போது அவர்கள் டேபிளின் மேல் இன்னும் ரெண்டு புல் பாட்டிலை வைக்கும் போது “எடு மச்சி சரக்கு பத்தல” என்று “குபீர்” என சொல்லி சியர் சொல்ல வைக்கிறார்கள். ஒலக சினிமா, லோக்கல் சினிமா, மொக்க சினிமா, இதெல்லாம் ஒரு சினிமாவா என்று ஆயிரம் விதமான ஒப்பீனியங்கள் வரும். ஆனால் கும்பலாய் நண்பர்கள் உட்கார்ந்து தண்ணியடிக்கும் போது யாராவது வீடியோ எடுத்து உங்களுக்கு காட்டினால் தெரியும் நாம் என்ன பேசினோம், செய்தோம், ஆடினோமென.. அப்படியான ஒரு கேண்டிட் அனுபவத்திற்காக “குபீர்”. யாரு என்ஜாய் பண்ணாங்களோ இல்லையோ நானும் என் நண்பர்களும் படம் பார்த்துவிட்டு என்ஜாய் பண்ணோம். அதான் படத்தோட இம்பாக்ட் ஹி.ஹி..
கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
கையில் பாட்டிலோடு படம் பாக்கணுமா!- ஜெ.
குபீர் - குபீர் ரகமோ...
விமர்சனம் அருமை அண்ணா....
Post a Comment