சாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்
ஏற்கனவே சார்மினாரின் ஹைதராபாத் பிரியாணியைப் பற்றி நம் சாப்பாட்டுக்கடையில் எழுதியிருக்கிறேன். அவர்களது புதிய கிளை தாம்பரம் சானிட்டோரியத்தில் மெப்ஸுக்கு எதிரே ஆரம்பித்திருப்பதாகவும், புதியதாய் டிபிக்கல் ஆந்திர சாப்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறோம், சாப்ட்டு பார்த்து உங்கள் கருத்த சொல்லுங்க என்றார் லஷ்மண்.
வெளியே பார்க்க சின்னதாய் இருந்தாலும் உள்ளே நல்ல விசாலமாய் இரண்டு மாடிக் கட்டிடமாய் இருந்து. வழக்கமான பிரியாணியின் ஆரோமா என்னை பிரியாணிக்கு அழைக்க, அதை மீறி சரி இன்று சாப்பாடுதான் என்று முடிவோடு, சட்டென சாப்பாடு என்றேன். வழக்கமாய் வரும் சரவணபவன் ரவுண்டு தட்டில் பத்து பதினைந்து கிண்ணங்களோடுதான் வந்தது. அதில் ஸ்வீட், வெஜ்ஜில் சாம்பார், ரசம், ப்ருப்புக்கீரை, காரக்குழம்பு, சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகள்,பொரியல், கூட்டு, கேபேஜ் சட்னி, அப்பளம், கோங்குரா என வரிசைக்கட்டியிருந்தார்கள். ஆந்திர சாப்பாட்டுக்கே உரித்தான பொல பொல ஆந்திர அரிசி சாதத்தை சூடாக தட்டில் போட, பக்கத்திலிருந்த ஆந்திர ஸ்பெஷல் பருப்புப் பொடியை ரெண்டு ஸ்பூன் போட்டுக் நெய் ஊற்றி ஒர் கவளம் அப்பளத்தோடும், இன்னொரு கவளம், கொஞ்சம் காரக்குழம்போடும், இன்னொரு கவளம், சிக்கன் குழம்போடு, சாப்பிட்டேன். பொடி கொஞ்சம் காரக்குறைவுதான். பட் நம்மூருக்கு ஓகே. நல்ல குவாலிட்டி பொடி. சைடிஷாக கொத்தமல்லி கோடி எனும் சிக்கன் அயிட்டத்தை ஆர்டர் செய்திருந்தேன். கொத்தமல்லியை பேஸாக வைத்து வித்யாசமாகவும், சுவையாகவும் இருந்தது. சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகளில் மீன் குழம்பு கொஞ்சம் தனி டேஸ்ட். கொஞ்சம் கூட வாடையேயில்லாமல், ஆந்திர ஸ்டைலில் கொஞ்சம் நீர்த்ததாய்.. ம்ம்ம்

Comments
சில தமிழ் படங்களை இயக்குனர் சேரனின் C2H வழியாக பார்க்க விரும்புகிறேன். இத்திட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டதா? http://www.cinema2home.com/ - இத்தளத்தில் படங்களை எப்படி தருவிப்பது போன்ற எந்த விபரங்களும் இல்லை.
இது தொடர்பான சில தகவல்களை கூறினால் திரையரங்குகளில் பார்க்க இயலாத சில படங்களை பார்க்க உதவியாக இருக்கும்
Relaly amazing briyany.. I have tried bawargchee biriyani in hydrabad.. here i got the same taste.. Super ji..
Thanks for the info