கொத்து பரோட்டா - 29/12/14
தொட்டால் தொடரும் வழக்கமாய் நான் கடந்து சென்ற வருடங்களை ரீவைண்ட் செய்து பார்க்கும் பழக்கமில்லாதவன். நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும், அனுபவிச்சு, உணர்ந்து, புரிந்து, திகைத்துதானே கடந்து வந்திருக்கிறோமென்பதால் கூட இருக்கலாம். ஆனால் 2013 ஜூலையில் கமிட் ஆகி, பற்பல தடைகளைத் தாண்டி, படப்பிடிப்பு முடிந்து, பர்ஸ்ட் காப்பி தயாராகி, சரியான வெளியிடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது எங்களது ”தொட்டால் தொடரும்”. இது என் முதல் படமாதலால் இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் ஒர் பாடமாய்த்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லா எழுதுறவன், , அறிவா பேசுறவனெல்லாம் நமக்கு துணையாய் தோதா இருப்பாங்கன்னு அவசியமில்லைங்கிறதை புரிஞ்சிக்க பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சும்மா வருவாளா சுகுமாரி?. எப்ப ரிலீஸ்? என்று கேட்பவர்களுக்கு, வரிசையாய் பெரிய படங்களின் அணிவகுப்பு இருப்பதாலும் ரிலீஸ் செய்வதற்கான சரியான நேரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறோம். வரும் ஜனவரி 2015 தொட்டால் தொடரும் உங்கள் பார்வைக்கு @@@@@@@@@@@@@@@@@@