Thottal Thodarum

Dec 8, 2014

கொத்து பரோட்டா -08/12/12

நடு நிசி (பகல்) கதைகள்
சென்ற வாரம் நண்பன் பெஸ்கியின் வீட்டு கிரகப்பிரவேசம். அதற்காக நானும் கே.ஆர்.பியும் சென்று கொண்டிருந்தோம். மீனம்பாக்கம் தாண்டியவுடன் சிக்னலைத் தாண்டி ஒர் இடத்தில் ரேபான் போட்ட ஓர் டிராபிக் கான்ஸ்டபிள் திடீரென புகுந்து வழி மறித்தார் அங்கே இருந்த மக்கள் கிராஸ் செய்வதற்காக,
நாங்களும் நிறுத்தினோம். கொஞ்சம் அவரின் அருகில். ரேபானுள் வழியாய் என்னைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கேயிருந்த பெண் காவலரைப் பார்த்து “ உங்க டீடெயில் கொடுத்துட்டு போங்க’ என்றார். “ஏன்?” என்று கேட்டதற்கு சும்மாதான் என்றார். வழக்கம் போல வந்த பெண் போலீஸிடம் “என் போன் நம்பர் தவிர எல்லா டீடெயிலும் கொடுப்பேன்”. என்றதும் வாழக்கம் போல அவரும் ஏன் என்று கேட்க என் பர்சனல் டீடெயிலை கொடுக்க, அல்லது கொடுக்க கட்டாயப்படுத்த உங்களுக்கு ரைட்ஸ் இல்லை என்றேன். அதை புரிந்து கொள்ளாமல் “பாருங்க சார்.. நமக்கு ரைட்ஸ் இல்லையாம்” என்று பொத்தாம் பொதுவாய் அங்கிருந்த ட்ராபிக் சார்ஜெண்டிடம் முறையிட, “சார்.. நான் உங்களுக்கு என் வண்டி பேப்பர், டீடெயில்ஸ், இன்சூரன்ஸ், என் லைசென்ஸ் எல்லாமே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் என் பார்சனல் தொடர்பு விஷயங்களை உங்களுக்கு தர தேவையில்லை” என்று விளக்கிக் கொண்டிருக்கும் போதே, ரேபான் கான்ஸ்டபிள் என் வண்டியிலிருந்து சாவியை எடுத்தார். சட்டென கோபம் வந்து “ அவர் கையிலிருந்து என் சாவியை புடுங்கினேன். அவர் என்னிடமிருந்து இந்த ரியாக்‌ஷனை எதிர்பார்க்கவில்லை. “என் வண்டியிலிருந்து என் அனுமதியில்லாமல் சாவியை எல்லாம் எடுக்க கூடாது” என்றேன். “நீ ஏன் வண்டியை நிறுத்தலை?” என்று மிரட்ட ஆரம்பிக்க “நான் நிறுத்தாமத்தான் நீ இவ்வளவு நேரம் பேசுறியா? மிரட்டிப் பாக்குறியா? மிரட்டு கேஸ் போடேன் நான் எங்க போய் என்ன பண்றதுன்னு தெரியும்” என்றவுடன் சார்ஜெண்ட் விடுங்க விடுங்க என்று அவரிடம் சைகை செய்ய, “நான் சாவியை எடுக்கவேயில்ல.. நீங்கதான் என் கிட்டேயிருந்த் புடுங்கினீங்க?” என்றார் முட்டாள் தனமாய். நான் சிரித்துக் கொண்டே.. கிளம்பினேன். கிளம்பும் போது அந்த கான்ஸ்டபிள் அம்மணியிடம் என் விலாசத்தை எழுதச் சொல்லி எழுதிய லட்சணத்தை பார்த்தால் “அய்யோடா.. என்ன கொடுமைடா சாமி” கோழி கிறுக்கல் பரவாயில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@


தொட்டால் தொடரும்
இம்மாதம் திரைக்கு வரலாமென்றிருந்த வேலையில் ரஜினியும், மிஸ்கினும், ஆர்யாவும்,விக்ரம்பிரபுவும், பிரபு சாலமனும்,  வரிசைக் கட்டி நிற்கிறார்கள். எனவே கொஞ்சம் தள்ளி ஜனவரியில் வரலாமென்ற ஒர் முடிவில் இருக்கிறோம். அதற்கு முன்னர் தொட்டால் தொடரக்கூடிய விஷயங்கள் சிலவற்றைக் குறித்து சிறு சிறு குறும்படங்களை எடுக்க தீர்மானித்தோம். கொஞ்சம் சமூக விழிப்புணர்வு விஷயமாய் இருந்தால் நன்றாக இருக்குமென்று யோசித்து இந்த 36 செகண்ட் குறும்படத்தை அளித்துள்ளோம். பெரிய அளவிற்கு திரைத்துறையினரிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ். இதே போன்ற சிறு சிறு குறும்படங்களை அனுப்பச் சொல்லி கேட்டிருக்கிறோம். சிறந்தவற்றை தெரிவு செய்து பரிசும், அக்குறும்படங்களை தொட்டால் தொடரும் ப்ரோமோவுக்கும் பயன்படுத்தவிருக்கிறோம். இதோ எங்களது குறும்படம் உங்களது பார்வைக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
EXODUS - Gods & Kings - Ridley scott movie A Emotionless Movie. Cecil B. DeMille is God 

din't expect this response.. iam happy :)

every body what to be a king maker. only very few come in front.
என் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் பொழுது போக்கே நாவல்கள் படிப்பதுதான். பைண்ட் செய்யப்பட்டவை சிறப்பு. சாண்டில்யனை என் 10ஆம் வகுப்பு லீவில்

extrodinary.. supportive.. and positive.. WoW little bit relaxed..
don't know how to express my feeling regarding 30 sec teaser review for 4-5 mins? :))
ஆன்லைன்ல வர முடியாத அளவுக்கு வேலை இருக்கிறது வரமா? சாபமா? :)
We are not supposed think that friends are always to be here to help us
தனக்கு மட்டுமே புரிந்தது உலகத்துக்கு புரியலைங்கிறத நினைச்சு புல்லரிக்கிறவங்களைப் பத்தி புரியாதவங்களுக்கு புரியவே புரியாது.#நானேஜிந்திச்சது
Started Reading Pride Of Tamil cinema @@@@@@@@@@@@@@
சினிமா வியாபாரம் புத்தகமாய் கிழக்கில் முதல் பதிப்பாய் வந்து, பின்பு மதி நிலையத்திற்கு இரண்டாம் பதிப்பாய் போய் பல பதிப்புகள் கண்டு, எனக்கு சினிமா உலகில் ஒர் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. தற்போது அப்புத்தகத்தை சாரமாய் வைத்து சினிமா வியாபாரம் என்ற ஒர் டாக்குமெண்டரியை எடுக்கலாம் என்று ப்ளான் செய்து கொண்டிருக்கிறோம். அதற்கான முதலீடுகளையும் பெற முயன்று கொண்டிருக்கிறோம். புத்தகமாய் படிக்க இயலாதவர்கள், படிக்கும் பழக்கமில்லாத ஒர் உலகில் நாம் உழன்று கொண்டிருக்கும் வேலையில், புத்தகத்தில் உள்ள விஷயங்களை விஷூவலாய் கொண்டு போய் கொடுத்தால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்குமென திரை துறை நண்பர்கள் வரவேற்கிறார்கள். எனவே அடுத்த பட வேலைகளுக்கு இடையே “சினிமா வியாபாரம்” ஆவணப்படத்தை ஆரம்பிக்க விருக்கிறோம். உங்களது ஆதரவை தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் sankara4@gmail.com
@@@@@@@@@@@@@@@@@@@@@
EXODUS - Gods & Kings
பைபிள் கதை தான். மோசஸ் தன் மக்களை கடவுளின் அருளோடு, கடல் பிரிந்து வழிவிட, காப்பாற்றிய கதை.  இதையே தான் சிசில்பி டெமிலி டென் கமாண்ட்மென்ட்ஸில் எடுத்திருப்பார். இன்றைக்கு பார்த்தாலும் எமோஷனால் இருக்கும். நல்ல டெக்னாலஜி, சிஜி, பட்ஜெட், ரிட்லி ஸ்காட், என பெரும் பேர் பெற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து சவசவ, எமோஷன்லெஸ், படத்தை 3டியில் கொடுத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோவோ, அல்லது கடவுளோ, அதனதன் பேண்டஸியில் இருக்கும் வரைதான் சுவாரஸ்யம். சமீப காலங்களில் ஹாலிவுட் பேண்டசி ஹீரோக்களை எல்லாம் சாதாரண மனிதன் ரேஞ்சுக்கு யோசிக்க வைக்கிறேன் என்று இம்சித்து வரும் வேளையில், கடவுள் கதை மாந்தர்களையும், அதே ரேஞ்சுக்கு மோசசுக்கும் கடவுளுக்குமான பரிவர்தனை அவருக்குள் கேட்கும் குரல் என்று வைக்காமல் ஒரு குழந்தையாய் காட்டி, மோசஸ் கடவுளிடம் பேசியவுடன் கடல் பிரிந்தது என்று காட்டாமல் எல்லாவிதமான சாதாரண மனிதனின் குழப்பங்களையும், வேண்டுதல்களையும் காட்டி, கடல் பிரியும் காட்சி, சுனாமி சமயத்தில் கடல் உள்வாங்கியதைப் போல காட்டியிருப்பது என பில்டப்பையும் சொதப்பலாய் காட்டி. ஏமாற்றி விட்டார்கள்.  வயதாகும் போது திடீரென எல்லோருக்கும் கடவுள் மேல், அல்லது ஆன்மீகத்தின் மீது ஒரு காஜி வரும். அது தான் இப்போது ரிட்லி ஸ்காட்டுக்கு வந்திருக்கிறது போல. சிசில்பி டெமிலி நிச்சயம் கடவுள் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
“A little boy caught his mom and dad having sex. After, he asked, "What were you and daddy doing?" The mom said, "We were baking a cake." A few days later, the little boy asked his mom, "Were you and daddy baking a cake in the living room?" She said yes, and asked him how he knew. He answered, "Because I licked the frosting off the couch! It was sweet!” 
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

ராபின் ஹூட் said...

//இம்மாதம் திரைக்கு வரலாமென்றிருந்த வேலையில்//

கடல் வத்திப் போனதுக்கு அப்புறம் மீன் பிடிக்கலாம்னு நினைச்சா வேலைக்கு ஆகாது. படத்துல சரக்கு இருந்தா எதுக்குப் பயப்படனும். போட்டி எதுவும் வேணாம்னு நினைச்சா கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் ரிலீஸ் பண்ணுங்க, அங்கதான உங்களுக்குப் போட்டி இருக்காது