Thottal Thodarum

Dec 1, 2014

கொத்து பரோட்டா -1/12/12

காவியத்தலைவன்
மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டே நாடகம், நடிப்பு, சினிமா என ஆர்வம் கொண்ட இரு இளைஞர்கள்.  இருவரில் ஒருவருக்கு எழுதுவதோடு, நடிப்பும், கொஞ்சம் வியாபாரமும் வரும். எனவே ஒரு அமெச்சூர் நாடக அமைப்பை உருவாக்கி, அதை மார்கெட் செய்ய ஒரு சபாவை நடத்த ஆரம்பித்து, அதில் தானும், நண்பரும் எழுதிய நாடகங்களை கதாநாயகனாய் நடித்து, அரகேற்றி தன்னையும், தன் நண்பனின் எழுத்தையும் மேடையேற்றி அழகு பார்த்தவர். நடிகராய் அவருக்கு அந்நாளில் கிடைத்த வெற்றியும், அதை சந்தைப் படுத்தியதால் அவர் நஷ்டம் அடைந்தாலும் கிடைத்த புகழ் வெறும் எழுத்தாளராய் இருந்த நண்பருக்கு கிடைக்கவில்லை என்று ஃபீல் செய்ய அரம்பித்தார். இதனால் பொறாமை ஏற ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களில் நடிக, இயக்குனர் சினிமா எடுக்கும் அளவிற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர, எழுத்தாள நண்பருக்கு பொறாமை காரணமாய் பிரிவு ஏற்பட்டு பின்னடைவு. 




வீட்டை அடமானம் வைத்து படம் தயாரிக்க பணம் ரெடி செய்த நடிக இயக்குனர் படப்பிடிப்புக்கு செல்லவிருந்த ரெண்டு நாட்களுக்கு முன் அவரது அலுவலகத்திலிருந்து பணம் சுமார் ஐந்து லட்சம் காணாமல் போகிறது. அதன் பின் நடிக இயக்குனரின் மொத்த சினிமா வாழ்க்கையும் அஸ்தமனமாகி மீண்டும் தன் பழைய அரசு மின்சார வாரிய வேலைக்கே போய் விட, ஒரு கட்டத்தில் எழுத்தாள நண்பருக்கு மஞ்சள் காமாலை வந்து சீரியஸாய் கிடப்பதாய் தெரிய வர, நட்பின் பாசத்தால் இருவருக்கிடையே ஆன மனஸ்தாபத்தை மீறி பார்க்கச் செல்கிறார். விலையுர்ந்த மருந்து ஒன்றை போட்டால் பிழைப்பதற்கு வாய்ப்பு எனும் போது,கடன் வாங்கி மருந்தை வாங்கிக் கொடுத்து நண்பரை காப்பாற்றுகிறார். கண் முழித்த நண்பருக்கு தன் நண்பனின் செய்கை புரிந்து கலங்குகிறார். தனிமையில் நண்பரை அழைத்து, நடிக நண்பரின் படப்பிடிப்பு பணத்தை திருடியது தான் தான் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார். நடிக நண்பர் ஏதும் சொல்லாமல் கண் கலங்கியபடி வீட்டுக்கு வருகிறார். ரெண்டொரு நாள் கழித்து எழுத்தாள நண்பர் இறந்துவிட்டதாய் தகவல் வருகிறது.  பணம் தொலைந்து போது கலங்காதவர், நண்பன் தான் தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்ற போது கலங்காதவர், முதன் முதலாய் அவர் இறந்து விட்டார் என்று தெரிந்த போது முதல் முறையாய் அழுது பார்தது அவரது குடும்பம். அவர் அவரது சாவுக்கு கூட போகவில்லை. அந்த நடிக, எழுத்தாள இயக்குனர் என் அப்பா. என்றைக்கும் என் காவியத்தலைவன் அவர் தான். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 


”கொத்து பரோட்டா” இணையத்தில் என்னை பிரபலமாக்கியதில் இந்த  பத்தி எழுத்துக்கு முக்கிய பங்குண்டு. 2010 அதை ஒரு தொகுப்பாக்கி புத்தகமாய் போடலாமென்று “ழ” பதிப்பகம் சார்பாக, புத்தகமாய் போடலாமென்று கேட்டார்கள். எதுக்கும் சின்னதா ட்ரை பண்ணலாம்னு ஒரு வருஷத்தோட கொத்தை மட்டும் புத்தகமாய் கொத்தினோம். அந்த வருடமே அமோக வரவேற்பு கிடைத்தது. இணையம் தவிர்த்து புதிய வாசகர்களை எனக்கு கொடுத்தது. புத்தகம் ஆல்மோஸ்ட் எல்லாமே விற்று தீர்ந்ததால் அதை இ-புக்காக வெளியிடலாம் என ஒர் சின்ன முயற்சி. இதற்கான ஆதரவை பொறுத்து அடுத்தடுத்து வர இருக்கும் புதிய தொகுப்புகளை இணைய புத்தகங்களாய் கொண்டு வர ஆவல். முதல் முயற்சி என்பதால் இலவசமாய்  இங்கே இணைப்பை கொடுக்கிறேன். டவுன்லோடிட்டு உங்கள் ஆதரவை நவிலுங்கள்.
கொத்து பரோட்டா - E-Pub
கொத்து பரோட்டா - mob

கொத்து பரோட்டா - Pdf
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லோரும் குஷ்பு காங்கிரஸுக்கு போனதைப் பற்றியும், ஏற்கனவெ அவர் திமுக மேடைகளில் பேசியதையும் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னவோ இதற்கு முன்னால் அரசியல்வாதிகள் பேசிய பேச்சை மாற்றாமல் அப்படியே வழுவி வாழ்ந்து வந்ததாகவும் குஷ்பு மட்டும் மாறி போய்விட்டதாகவும் ஓவர் கூச்சலிடுவதாய் தெரிகிறது.அது மட்டுமில்லாமல் குஷ்பு எங்கே நேஷனல் லெவல் தலைவியாகிவிடுவாரோ என்கிற சின்ன அச்சம் கூட இருப்பதாய் தெரிகிறது. எங்க குடும்பத்திலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா சாட்டையால அடிங்கன்னு சொன்ன கட்சியவே நாம பார்த்திருக்கோம். இதெல்லாம் சாதரணமப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆ...
ஹரீஷுக்கும் ஹரிக்கும் சாதாரணமாகவே யோசிக்கத் தெரியாது.  எப்போதும் வித்யாசமாய்த்தான் யோசிப்பார்கள். முதல் படமான ஓர் இரவிலும் சரி, ரெண்டாவது படமான அம்புலி 3டியிலும் சரி. இதோ இப்போது இந்த ஆ விலும் சரி. ஏதாவது ஒன்றை புதிதாய் சொல்ல, செய்ய அஞ்சுவதேயில்லை. ஐந்தாறு அமானுஷ்ய கதைகளை தொகுத்து ஒர் படமாய் கொடுக்கலாம் என்று சொன்னார்கள். அட நல்ல ஐடியாவா இருக்கே என்றேன். அப்போது என் சிறுகதை ஒன்றைக்கூட எடுக்க அனுமதி கேட்டார்கள். தாராளமாய் என்றிருந்தேன். சரி ஆவுக்கு வருவோம். கோகுல், அவரது தோழி, பாலசரவணன் மூன்று பேரும் அவர்களது கல்லூரி தோழன் பாபி சிம்ஹாவிடம் கட்டும் பேய் இருக்கா இல்லையா எனும் பெட்டுக்காக பேயைத் தேடியலையும் கதைகளின் தொகுப்புதான் “ஆ”. முதல் கதையில் வரும் நடுக்கடல் விஷயம் திக் திக்கில் ஆரம்பித்து தொடர்ந்து ஜப்பான், துபாயில் எல்லாம் போய் பேய் தேடுகிறார்கள். விதவிதமாய். க்ளைமாக்சில் வரும் பேய்க்கதையில் பேயை தேடுகிறவர்களுக்கு பேய் இருப்பதை உணர்த்தி பெட்டில் ஜெயித்தார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க. சிம்பிளான கதை களன், சாமின் நல்ல பின்னணியிசை. என ஒர் சுவாரஸ்யமான பேய் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் திரைக்கதை, டெக்னிக்கல் வேல்யூ போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். பாபி சிம்ஹா ஒர் ஆடட் வேல்யூ  கேரக்டராய்த்தான் வருகிறார். வித்யாச முயற்சிக்காக
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
At school, Little Johnny's classmate tells him that most adults are hiding at least one dark secret, so it's very easy to blackmail them by saying, "I know the whole truth." Little Johnny decides to go home and try it out.
Johnny's mother greets him at home, and he tells her, "I know the whole truth." His mother quickly hands him $20 and says, "Just don't tell your father." Quite pleased, the boy waits for his father to get home from work, and greets him with, "I know the whole truth." The father promptly hands him $40 and says, "Please don't say a word to your mother." 
Very pleased, the boy is on his way to school the next day when he sees the mailman at his front door. The boy greets him by saying, "I know the whole truth." The mailman immediately drops the mail, opens his arms, and says, "Then come give your Daddy a great big hug!"
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

உங்கள் தந்தையை காவியத் தலைவன் என்று சொல்வதில் மிகையில்லைதான்! பகிர்வுக்கு நன்றி!