கொத்து பரோட்டா - 29/12/14
தொட்டால் தொடரும்
வழக்கமாய் நான் கடந்து சென்ற வருடங்களை ரீவைண்ட் செய்து பார்க்கும் பழக்கமில்லாதவன். நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும், அனுபவிச்சு, உணர்ந்து, புரிந்து, திகைத்துதானே கடந்து வந்திருக்கிறோமென்பதால் கூட இருக்கலாம். ஆனால் 2013 ஜூலையில் கமிட் ஆகி, பற்பல தடைகளைத் தாண்டி, படப்பிடிப்பு முடிந்து, பர்ஸ்ட் காப்பி தயாராகி, சரியான வெளியிடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது எங்களது ”தொட்டால் தொடரும்”. இது என் முதல் படமாதலால் இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் ஒர் பாடமாய்த்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லா எழுதுறவன், , அறிவா பேசுறவனெல்லாம் நமக்கு துணையாய் தோதா இருப்பாங்கன்னு அவசியமில்லைங்கிறதை புரிஞ்சிக்க பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சும்மா வருவாளா சுகுமாரி?. எப்ப ரிலீஸ்? என்று கேட்பவர்களுக்கு, வரிசையாய் பெரிய படங்களின் அணிவகுப்பு இருப்பதாலும் ரிலீஸ் செய்வதற்கான சரியான நேரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறோம். வரும் ஜனவரி 2015 தொட்டால் தொடரும் உங்கள் பார்வைக்கு
என் ட்வீட்டிலிருந்து
rofl first half starts dragging after... and after..
காதல் உணரப்பட வேண்டியது. அதை சொல்லி புரிய, உணர வைக்க முயற்சிப்பது நாக்கே இல்லாதவனுக்கு சிக்கன் டிக்கா எப்படி இருக்கும்னு சொல்றதுக்கு சமம்
நாலு வருஷத்துக்குஅப்புறம் இப்பத்தான் மாதொருபாகன் இந்துக்களுக்கு எதிரான புத்தகம்னு கண்டுபிடிச்சிருக்கிறானுங்க.. ம்ஹும் எத்த தாண்டா எழுதறது.
Happy.. is just not the word to me yesterday :))))
stylish, gracefull, lethargic, gripping 2nd half, poor villan ????
இன்று வெளியாகும் கயல், கப்பல், வெள்ளைக்காரதுரை, மீகாமன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சமயங்களில் உரிமையுள்ளவர்களிடம் கோபப்படக்கூட உரிமையில்லையோ என்று தோன்றுகிறது.;(
கலை உள்ளவரை உங்களுக்கு அழிவேயில்லை சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மாதொருபாகன்
மாதொருபாகன்
மாதொரு பாகனை தடை செய்ய வேண்டுமென சில இந்து, சாதிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறது.ஆயிரம் வருஷமா செவி வழிச் செய்தியாக சொல்லப்பட்ட விஷயத்தை நாவலாக்கியிருப்பது என்ன தவறு. அதுவும் புத்தகம் வந்து நான்கு வருடங்களுக்கு அப்புறம் சிவனை அவமதித்துவிட்டார்கள், கலாச்சாரத்தை காலி செய்துவிட்டார்கள் என இம்பூட்டு சீக்கிரமாய் கொதித்தெழுந்து இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது. ஒரு விதத்தில் சந்தோஷம். சும்மா படம் மட்டுமே பார்த்துவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்து இலக்கியம் பக்கம் எதிர்ப்பாளர்கள் வந்திருப்பது அவர்களின் பார்வையை அகண்டதாய் ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பாகவே இருக்குமெனவே தோன்றுகிறது. வளர்க இவர்களது இலக்கிய தொண்டு.
@@@@@@@@@@@@@@@@
லிங்கா
எல்லாத்தையும் பத்தி சொல்லுறீங்க.. லிங்காவைப் பத்தி மட்டும் எதுவும் சொல்ல மாட்டேன்குறீங்களேன்னு ஆளாளுக்கு கேள்வி. வழக்கமாய் மாஸ் பட ஹீரோக்கள் படம் எப்போது சூடாக, சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் அவரை எதிர்க்கும் வில்லனின் கேரக்டர் படு ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். படையப்பாவில் ஒரு நீலாம்பரி, எந்திரனில் ஒர் அட்டகாச ரஜினி, சிவாஜியில் வில்லனுக்கே வில்லனான மொட்டை பாஸ் என ஸ்ட்ராங் கன்பர்ண்டேஷன் இருந்தது. லிங்காவில் அது மிஸ்ஸிங், வீரபாண்டிய ஜாக்சன் துரையாகட்டும், ஜெகபதிபாபுவாகட்டும் படு மொக்கை. ஸோ..ஸ்ட்ராங்கான வில்லன் இருந்த படங்கள் எல்லாம் ஜெயித்தேயிருக்கிறது, சிங்கம் ப்ரகாஷ்ராஜ், ஆர்னால்டின் ப்ரிடேட்டர் ஏலியன், எம்.ஜி.ஆர். படங்களில் வரும் நம்பியார் என பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ரெண்டு ரஜினியை காட்டி முடிக்கவே ரெண்டு மணி நாற்பது நிமிஷம் ஆகிவிட்டபடியால்.. மேஜிக் இல்லாமல் போய்விட்டது.
@@@@@@@@@@@@@@@@@@
கப்பல்
கப்பல்
சிறு வயது முதலே கல்யாணம் செய்தால் ஒரே பெண்ணை செய்து கொள்ள வேண்டும் இல்லையேல் நட்பு பிரிந்துவிடும் என்ற சத்தியத்துக்கு கட்டுப்பட்டு வாழும் வைபவ், கருணாகரன், அர்ஜுன், நட்பு கூட்டம். அதிலிருந்து எப்படியாவது தப்பித்தால் போதுமென பொய் சொல்லிவிட்டு, சென்னை வருகிறார் வைபவ். அதன் பிறகு என்ன ஆனது?. அவர் காதலில் விழுந்ததை தெரிந்து கொண்ட நண்பர்கள் எப்படி அவர்களை பிரிக்க முயல்கிறார்கள்? என்பதுதான் கதை. முதல் பாதியில் வைபவ் தன் நண்பர்களைப் பற்றி ப்ளாஷ்பேக்கில் அறிமுகப்படுத்து காட்சி அட்டகாசம். அதிலும் ஸ்கூலில் மார்க் வாங்க கண்டுபிடித்த டோட்டல் மிஸ்டேக் தகிடுதத்தத்தில் ஆரம்பித்து, சோனம் பாஜ்வாவை, கர்க்ட் செய்து முடிக்கும் வரை தொடர் சிரிப்புக்கு உத்திரவாதம். நண்பர்கள் வில்லன்களாய் வந்து இருவரையும் பிரிக்க நினைத்து நடத்தும் காட்சிகளில் தொய்வு அதிகமாகி, சீக்கிரம் முடிங்கப்பாங்கிற மாதிரி ஆகியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
மீகாமன்
கோவாவில் சரக்கு கடத்தி விற்கும் கும்பலில் தலைவனை பிடிக்க, அண்டர்காப் வேலை செய்யும் ஆர்யா, ரமணாவைப் பற்றிய கதை. மிக ஸ்டைலிஷான மேக்கிங். ஆக்ஷன் ப்ளாக்குகள். க்ரிஸ்பான எடிட்டிங். ஆர்பாட்டமில்லாத அழகான ஒளிப்பதிவு, ஆர்யாவின் சப்டிலான நடிப்பு என பல விஷயங்கள் சுவாரஸ்யமே. முக்கியமாய் ஆர்யாவின் நண்பர் ரமணா மாட்டியதும், அவர் ஆர்யாவின் பேரைச் சொன்னதும், அங்கே வரும் ஆர்யா மற்றவர்களை எதிர் கொள்ளும் காட்சியும், இன்னொரு வில்லனை தன் ஆட்களைக் கொண்டே போட்டுத் தள்ளூம் ப்ளானும் க்ளாஸ். இரண்டாம் பாதியில் ஆங்காங்கே ரொம்பவும் ப்ரெடிக்டபிளான காட்சிகள் வந்து சோர்வடைய வைக்கிறது. பல படங்களில் பார்த்த விஷயங்கள். ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பின்னனியிசையில் தமன், எடிட்டிங்கில் ஸ்ரீகாந்த் ஆகியோர் இயக்குனருக்கு மிகவும் பக்கபலமாய் இருந்திருக்கிறார்கள். படம் முடிந்து கதாநாயகியின் காதலுக்கு முடிவுரை எழுதும் காட்சியில் ரைட்டர், இயக்குனர் மகிழ் திருமேனி பளிச்சென்று தெரிகிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கயல்
மைனா, கும்கிக்கு அடுத்து மீண்டும் ஒர் காதல் கதையோடு களமிறங்கியிருக்கிறார் பிரபு சாலமன். முதல் பாதியில் காதல் என்ற ஒன்று வரும் வரை அதகளம். அந்த வயதான பரம்பரை பெரிசு, வழுக்கைத்தலை அல்லக்கை, கல்யாணப்பெண் அப்பா, மாமா தேவராஜ், என சும்மா பின்னி எடுக்கிறார். முக்கியமாய் வாய் பேச முடியாத பாட்டியின் ரியாக்ஷன்கள் அட்டகாசம். ஹீரோவும், அவனது நண்பனும், ஆறு மாதம் வேலை ஆறு மாதம் ஊர் சுற்றல் என்கிற வாழ்க்கையைப் பற்றியும், பறவைகளாய் சுற்றி திரிகிறவர்கள் என மறுக்கா, மறுக்கா சொல்லி கொண்டிருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் கிட்டத்தட்ட டேன் கார்னகி புத்தகத்தின் தமிழாக்கத்தை கேட்கிறோமா என்கிற அளவுக்கு திகட்ட, திகட்ட வாழ்க்கைப் பாட வசனங்கள். காதல் என்ற ஒன்று பார்த்த மாத்திரத்திலேயே வருவது ஓகே. ஆனால் அக்காதலை கேரக்டர்கள் உணருவதற்கு பதிலாய் அது உயர்வான ஒரு காவியம் என்கிற ரேஞ்சுக்கு சம்பந்தப்பட்ட கேரக்டர்களுக்கு பதிலாய் ஹீரோயின் பாட்டி, ஹீரோவின் நண்பன் ஃபீல் செய்து வசனமாய் காதலை திணித்ததால், அஹா என்ன மாதிரியான காதல்டா.. வலிடா, எப்படியாவது சேரணும்டா என்பதற்கு பதிலாய், சரி.. ஓ.. காதலிக்கிறாங்களாமா? என்று தோணும் அளவிற்கு போனது வருத்தமே. க்ளைமேக்ஸ் சுனாமி காட்சியில் உழைத்திருக்கிறார்கள். பாடல்களை விட இமானின் பின்னணியிசை அபாரம். குறிப்பாய், கதாநாயகிக்கு ஹீரோவின் காதல் உறுத்த ஆரம்பித்து அது அழுகையாய் மாறும் காட்சிகளில் வாவ்.. மகேந்திரனின் ஒளிப்பதிவு பளிச். காதலை இயல்பாக்கியிருந்தால் கயல் காவியம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சங்கீத சீசன்

அட்டகாசம். சத்யப்ரகாஷ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Three brothers are traveling along a road, and their car dies. They all get out of the car, and start walking to a barn that's a little ways away. When they get their, the farmer comes out of the barn, and offers them a room for one night. He says to the first one, "You can sleep with the pigs," the second guy," you can sleep with the cows", and the third guy, "I like the cut of your jib. You can sleep with my 18 daughters." The next morning, he asks everyone how they slept. The first man said, "I slept like a pig." The second man said ,"I slept like a cow." The third guy said, "I slept like a rabbit. I jumped from hole, to hole, to hole."
கேபிள் சங்கர்

Comments
அருமையான குரல். நல்ல ஞானம்
2.1.2015 ம் தேதியிட்ட தி ஹிந்து நாளிதழில் மாதொருபாகன் என்ற நாவலைப் பற்றிய விமர்சனத்தில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளருக்கு வரிந்து கட்டி எழுதியிருந்தீர்கள்.
கற்பனை நாவல் என்பது முற்றிலும் புனையப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த நாவலில் வரும் கதையில் குறிப்பிட்டுள்படி திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் பண்டிகையில் பதினான்காம் நாள் இரவு நடப்பதாக எழுதியுள்ள சடங்குகளுக்கு எந்தவித சரித்திர ஆதாரமும் இல்லை. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. இது போன்ற சடங்குகள் ஒரு காலத்தில் நடந்ததற்கான ஆதாரத்தை நாவலாசிரியர் காண்பிக்க முடியுமா?
உலகப்புகழ் பெற்ற திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் பண்டிகை இன்று வரை சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் குறுகிய எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை புண்படுத்தும் நோக்கிலும் ஒட்டு மொத்த பெண் குலத்தையே பெருமாள் முருகன் இழிவு படுத்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முற்போக்கு எழுத்தாளன் என்ற போர்வையில் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா? கருத்து சுதந்திரம் என்ற பேரில் வேற்று மதத்தினரைப் பற்றி இவ்வாறு தகாத முறையில் ஆதாரமின்றி எழுதியிருந்தால் இவர் நிலைமை என்னவாகியிருக்கும்?
எனவே இதுபோன்ற கீழ்த்தரமான எழுத்தளர்களுக்கு வக்காலத்து வாங்காமல் உண்மையான சமூக சிந்தனையாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.