Posts

Showing posts from 2015

கொத்து பரோட்டா - 21/12/15

Image
வெள்ளம் வந்து போய் வாரம் தாண்டியாகிவிட்டது.ஆங்காங்கே நிவாரணப் பணி என்று பேனருடன் முக்கியமாய் அம்மாவின் ஆணைப்படி, அவரது முகம் போட்ட பேனருடன் வளைய வருகிறார்கள். நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாய் வாங்கி வைத்துக் கொள்ளும் மனோபாவம் அதிகமாகிவிட்டது. பல இடங்களில் தகராறு ஏற்பட்டு, விட்டால் போதுமென்ற எஸ்ஸாகிய குழுக்கள் அதிகம். இதனால் நிஜமாய் தேவையானவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போகிற வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது. சென்னை முழுவதும் எங்கும் மீண்டும் புதிய ரோடுக்களை போடுவதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. சென்னை ஆற்காடு சாலை முழுவதும் பகல் நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் பனிக்கிடையே பயணிக்கும் எஃபெக்ட்டில் புகை மூட்டத்தில் பயணிக்க வேண்டியிருக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீருக்குள் பள்ளமிருந்து விழுந்தவர்கள், இப்போது தூசு மூட்டத்தில் விழுகிறார்கள் அவ்வளவே. அப்படியே வாட்ஸப்பில் நான் ஆணையிடுகிறேன் ரோடெல்லாம் சரியா போடுங்கன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்.

வெள்ளம்.....

வெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒருமுறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய்ஆரம்பித்து, சளசளவென வீடு முழுதும் ஈரவாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். ஜுரம் வந்து ”தண்ணிவருது.. தண்ணிவருது” என புலம்பியிருக்கிறேன்.  

எண்டர் கவிதைகள் -27

Image
கிளர்ந்தெழுந்து அடங்கிவிட்ட காமம் கொடுக்கும் அவ்வளவுதானா? என்கிற உணர்வு ருசிக்குமிருக்கிறது.  கேபிள் சங்கர்

ஃபுட் வாக்

ஃபுட் வாக் மாலை நேரம். ஸ்நேக்ஸ் டைம். உதவி இயக்குனர்களுடன் பேசி கொண்டிருந்தேன். என் அலுவலகத்தின் அருகில் இருக்கு ஒரு தள்ளுவண்டிக் கடையில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜியையும், அதற்கு பக்கத்து டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் கிடைக்கும் மசால் வடையையும் வாங்கி வரச் சொன்னேன். உதவியாளர் புதியதாய் சேர்ந்தவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு, கிளம்பினார். சூடான ஒரு டீயுடன், லேசான சுளீர் மிளகாய் பஜ்ஜியும், மொறு மொறு மசால் வடையும் கொடுத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிய ஆரம்பித்தது. வாங்கி வந்த உதவியாளர் “எப்படி சார் இப்படி தேடித் தேடி கண்டுபிடிச்சி வச்சிருக்கீங்க. அட்டகாசம்” என்று சிலாகித்தபடி இன்னொரு வடையையும், பஜ்ஜியையும் கையில் எடுத்துக் கொண்டார். ”நாம சீன் பிடிக்கிறதுக்காக தேடியலையறோமில்லை அது போலத்தான்” என்றேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாலு பேராவது ஏரியா பேர் சொல்லி அங்க நல்ல சாப்பாட்டுக்கடை எதுனாச்சும் சொல்லுங்க என போன் பண்ணாத நாளே இல்லையென்று சொல்ல முடியும்.

கொத்து பரோட்டா - 23/11/15

ஏற்கனவே சென்னை மிதந்து இப்போதுதான் வடிய ஆரம்பித்திருக்கிறது. இப்போது திரும்பவும் அவ்வப்போது நாலு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் கொட்டித் தீர்க்கிறது. இதற்கிடையில் அங்க ஏரி உடைஞ்சிருச்சு, இங்க ரோடெல்லாம் வெள்ளம், செம்பரம்பாக்கத்தை மறுக்கா திறந்துட்டாங்கன்னு எல்லாம் வாட்ஸப்பில் புரளி பரப்பி வருகிறார்கள். நண்பர்களோடு வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, தானே புயலில் செயல்பட்ட அளவில் பாதி செய்திருந்தால் கூட சென்னைக்கு விடிந்திருக்குமென்றார்கள். அதானே என தோன்றியது.

கொத்து பரோட்டா -16/11/15

Image
பேய் மழை பெய்துகொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாய் நான் கே.கே.நகரிலிருந்து விருகம்பாக்கம் வரை மட்டுமே அதுவும் காரில் சென்று கொண்டிருக்கிறேன். அதுவும் ட்ராபிக் இல்லாத மதிய நேரமாய் பார்த்து. டி.நகர் பக்கமெல்லாம் போக வர தைரியமில்லை. பாதி நேரம் இருக்கும் சப்வேயெல்லாம் தண்ணீர் ரொம்பி நீச்சல் குளமாய் காட்சியளிக்கிறது. நடுவில் மழையில்லாத ஒரு நள்ளிரவில் என் தாய் மாமா அகால மரணமடைந்தார். மாஸிவ் அட்டாக். பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர் சப்வே எல்லாம் தண்ணீர் இல்லாமல் இருந்தது. அவர் செய்த புண்ணியம். மழைக்காலத்திற்காக எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாத ஒர் அரசாங்கம். இருக்கும் வரை நமக்கென்ன என்று ப்ளாஸ்டிக் மற்றும் கழிவுகளால் சாக்கடைகளை அடைத்த பொது மக்கள் என மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீ செய்ய வேண்டியதுதானே என்று கேட்டால் நான் ஒருத்தன் செய்து சரியாகிவிடுமா? சமூகம் மாறணும் என்கிறார்கள். நாம் சமூகத்தின் ஒர் அங்கம் என்பதை மறந்துவிட்டு. 

கொத்து பரோட்டா -09/11/15

Image
மால் உள்ள இடத்தில் பக்கத்தில் பார்க்கிங் திறப்பதுதான் தற்போது லாபகரமான பிஸினெஸ். ஏனென்றால் மால்கள் அடிக்கும் கொள்ளை அப்படி. பீனிக்ஸ் மாலுக்கு எதிரே ஒரு பைக் பார்க்கிங்.  இன்னொன்று பக்கத்தில் 200 அடி ரோட்டில். விருகம்பாக்கம் ஐநாக்ஸுக்கு அதன் பக்கத்தில் உள்ள சின்ன தெருவில் பைக் பார்க்கிங் இருக்கிறது. பிவிஆருக்கு எதிரே பைக் மற்றும் கார் பார்க்கிங் கூட உள்ளது.  என்ன காருக்கு கொஞ்சம் சீக்கிரம் போய் இடம் பிடிக்கணும் என்கிறார்கள். மற்றபடி வெறும் பத்து ரூபாய்க்கு காலை முதல் மாலை வரை கூட பார்க் செய்து கொள்ளலாம். ஆட்டோக்களின் கொள்ளையால் கால் டாக்ஸி வளர்ந்தது. அது போல மால்களின் கொள்ளையாய் தற்போது புதிய பார்க்கிங் இடங்கள். இதுவும் கடந்து போகாமல் இருக்கட்டும். @@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -02/11/15

Image
வரி விலக்கு அளிக்கப்படும் தொகை பொது மக்களுக்கே அன்றி தயாரிப்பளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிடையாது என்பதை கோர்ட் தெளிவாக சொல்லியிருப்பது வரவேற்க்க தக்க விஷயம். என்ன இதே போல சில மாதங்களுக்கு முன் கோர்ட் இதோ போன்ற தீர்ப்பை சொன்ன போது சென்னையில் தேவி திரையரங்கம் மட்டும் வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு வரியில்லாம டிக்கெட் விற்க, அதற்கு மற்ற திரையரங்க உரிமையாளர்களிடமிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும், எதிர்ப்பு வர, மீண்டும் 120 ரூபாய்க்கே விற்க ஆர்மபித்தார்கள். கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்துவதில் நம் அரசிற்கு இருக்கும் அக்கறை அந்த அளவுக்குத்தான்.  அரசே கவலைப்படாத போது எப்படி தொழில் செய்கிறவர்கள் கவலைப்படப் போகிறார்கள் மதிக்கப் போகிறார்கள்? பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறதென்று. ஒரு வகையில் டாக்ஸ்ஃப்ரீ இல்லாமல் இருந்தால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு நான்கைந்து லட்சம் வெட்டிச் செலவு மிச்சம்.

கொத்து பரோட்டா - 26/10/15

சாப்பாட்டுப் சிறப்பிதழ் வெளிவர இருக்கிறது. சாப்பாடுன்னு முடிவானதுக்கு அப்புறம் நீங்க எழுதலைன்னை எப்படி? ஒரு கட்டுரை அனுப்புங்க என்றார் பிரியா கல்யாணராமன். இணையத்தில் ஆரம்பித்து, விகடன், கல்கி, இணைய இதழ்கள், தமிழ் இந்துவென பத்திரிக்கைகளிலும் எழுத ஆரம்பித்து வருடங்கள் ஆனாலும், குமுதத்திற்காக உத்தம வில்லனுக்காக எழுதிய சிறு பத்தி தவிர எழுதியதில்லை. முதல் முறையாய் ஒரு கட்டுரை. அதுவும் சாப்பாடு குறித்த என் அனுபவத்தை குறித்து. குமுதத்தில் எழுதுவது என்பது பிக் பட்ஜெட் கமர்ஷியல் படத்திற்கு ஈடான விஷயம். அவர்களுடய வாசகர் வட்டம் அவ்வளவு விரிவானது. படிச்சிட்டு சொல்லுங்க.

கொத்து பரோட்டா - 19/10/15

துவரம் பருப்பு பிரச்சனையிலிருந்து ஆயிரம் பிரச்சனைகள் ஊரிலிருக்க, மீடியாவில் ஒரு மாதமாய் நடிகர் சங்க பிரச்சனையை மட்டுமே ஊதி டி.ஆர்.பி ஏற்றிக் கொண்டிருப்பதும். இது தேவையா? அது தேவையா?  என்று ஏதோ சமூக அக்கறையுடன் கேள்வி கேட்பது போது நடிகர்களையும், சினிமா துறை சார்ந்தவர்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்துவதும், தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்பது போன்ற அபத்தங்களை மீடியா ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறது. பேச வேண்டிய விஷயத்தை விட்டு, தேவையில்லாததை பற்றி பேசுவதில் உள்ள இவர்களது சமூக அக்கறையை பற்றி யோசித்தால் இன்னும் அபத்தமாகவும், அபாயகரமான விஷயமாகவும் இருக்கிறது. மீடியா நினைத்தால் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அஸ்திரம் தங்களிடம் இருக்கிறது என்று தெரிந்தும் அதை மொக்கை கிராபிக்ஸ் அம்புகளாய் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நினைத்தால்  பயமாய் இருக்கிறது. சரி இப்ப ஜெயிச்சாச்சு.. அப்புறம்.. வேற என்ன?

கொத்து பரோட்டா -12/10/15

Image
நமக்கு  நாமே என ஸ்டாலின் ஊர் ஊராய் சுற்றுவதை ஆன்லைனில் ஓட்டு ஓட்டு என ஓட்டுகின்றனர். கூட்டத்தின் நடுவே புகுந்து செல்பி எடுத்தவரை விலகிச் செல் என்று சைகை செய்யும் போது கன்னத்தில் கை பட்டால் ஓட்டுகிறார்கள். எனக்கென்னவோ.. அவ்வளவு கூட்டத்திற்கு நடுவே சொல்லாமல் கொள்ளாமல் யார் வந்து போட்டோ எடுத்தாலும்  தள்ளுங்க எனும் போது கை பட்டால் அடிப்பது போலத்தான் தோன்றுமென தோன்றுகிறது. ஊர் பட்ட ஊழல் பண்ணி விட்டு, மக்களிடம் போய் கேட்க என்ன தகுதியிருக்கிறது என்று கேட்டீர்களானால், அதற்கு தகுதி நமக்கே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆதிமுகவில் முந்தைய ஆட்சியில் செய்யாத ஊழலா, இப்போது நடக்காததா? மாற்றி மாற்றி இவர்களையே தெரிந்தெடுத்தது நமது தவறு என்றே தான் தோன்றுகிறது. சரி. அதுக்கு பதிலாய் ப.ம.காவை செலக்ட் செய்யலாமென்றால். இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் சின்ன பணக்காரர்களாய் இருந்தவர்களின் சொத்து இப்போது கணக்கிட்டால் அது எங்கேயோ போகிறது. அவ்வப்போது ஆட்சியில் ஓர சீட்டில் உட்கார்ந்ததுக்கே இப்படியென்றால். முக்கிய சீட்டில் உட்கார வைத்தால்?. சரி விஜயகாந்த், என யோசித்தால் பல சமயம் சிரிப்புத்தான் வ...

Talvar

Image
ஏழு வருடங்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கிய ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்குதான் படத்தின் கதை. ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தான் மகளின் தகாத உறவின் காரணமாகவும், ஜாதிப் பெருமைக்காகவும் கொன்றதாக முடிவு செய்யப்பட்டு, இன்று ஜெயிலில் இருக்கிறார்கள். அக்காலத்தில் மீடியா தன் வசம் எடுத்து பரபரப்பாக பேசப்பட்ட வழக்கை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். விஷால் பரத்வாஜும், மேக்னா குல்சாரும்.

கொத்து பரோட்டா - 05/10/15

Image
குற்றம் கடிதல் கலந்துரையாடல் படம் பார்த்ததிலிருந்து இயக்குனரை சந்தித்து பாராட்ட வேண்டுமென்று இருந்தேன். ஏன் அதை ஒரு கூட்டமாய் நடந்தக்கூடாது என்று யோசித்த போது வேடியப்பனும் உடனே நடத்தணும் என்றார். அந்த பரபரப்பில் ஏற்பாடானதுதான் இந்த கலந்துரையாடல் கூட்டம். வழக்கம் போல அறை கொள்ளாத கூட்டம்.  குற்றம் கடிதல் படத்தை எப்படி ஆரம்பித்தோம் என்பதில் ஆரம்பித்து படத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு வந்திருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இயக்குனர் பிரம்மா. இயக்குனர் சசி, கேள்விகள் கேட்க ஆரம்பித்து வைத்தார். பின் நான் தொடர்ந்தேன். நாங்கள் அதிகம் பேசாதவர்கள் எங்களை பேசச் வைத்தது இக்கூட்டத்தின் உண்மையென்றார் பிரம்மா. வந்திருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு விதமாய் பாராட்டி தள்ளினார்கள். விவாதித்தார்கள். பதில் பெற்றார்கள். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது மூலம். நன்றி வேடியப்பன். நன்றி சசி சார். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குற்றம் கடிதல்

Image
தேசிய விருதும் உலகபட விழாக்களிலும் அங்கீகாரமும், பரிசும் பெற்ற படம். ட்ரைலர், ஏற்கனவே பார்த்தவர்கள் சொன்னதை வைத்து பார்க்கும் ஆவல் அதிகமாகியிருக்க, சரியான தியேட்டர்களில் காட்சிகள் இல்லாமல் போரூர் கோபாலகிருஷ்ணாவில் பார்த்தேன். 

கொத்து பரோட்டா -21/09/15

Image
வேளச்சேரி லூக்ஸ் சத்யமிடமிருந்து வேளச்சேரி லூக்ஸ் ஜாஸ் சினிமாஸின் வசம் போய் விட்டது. ஆன்லைன் புக்கிங்கில் புக் செய்து  அரை மணி நேரம் கழித்து எஸ்.எம்.எஸ் வந்தது. எல்லாருக்கும் வயலட் கலரில் யூனிபார்ம் கொடுத்திருந்தார்கள். வழக்கமான சத்யம் சினிமாஸின் விளம்பரங்கள் இல்லை. அதே பட்டர் பாப்கார்னுடன், டாப் அப் செய்யும் பவுடர்கள் வைத்திருந்தது பல சத்யம் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. நிர்வாகம் கை மாறியிருப்பதை உணர முடியாத வகையில் சமாளிக்கிறார்கள். முன்பெல்லாம் சத்யமிடம் இருந்த வகையில் பத்து ரூபாய் டிக்கெட்டை கொடுக்க மாட்டார்கள் அல்லது காலையிலேயே கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். இவர்கள் அந்த வரிசையையும் 120 ரூபாய்க்கே ஆன்லைனிலேயே விற்கிறார்கள்.காரணம் எப்படி என்று சொல்லியா தெரிய வேண்டும். ஆல்ரெடி மாயாஜாலில் பத்து ருபாய் டிக்கெட்டை 120 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்.

கொத்து பரோட்டா - 14/09/15

Image
சில்லு 2065ல் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் உடலில் ஒரு சின்ன சிலிக்கன் சில்லை பொறுத்துகிறார்கள். அதில் ஒரு சில சில்லுகளில் ப்ரச்சனை. அப்பிரச்சனையுள்ள சில்லு கதை நாயகனின் உடலில். நாடெங்கும் உடலில் சில்லு பொறுத்தியதை எதிர்த்து கூட்டம் வருடங்களாய் போராட, நாயகனின் திருமணத்திற்கு முன்பு அவன் சாகப் போகிறானா? இல்லையா? என்பது தான் க்ளைமேக்ஸ்.  ச யின்ஸ் பிக்‌ஷன் நாடகம். கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிலும் செட், காஸ்ட்யூம் என படுதா போட்ட நாடகங்களை விட அதிக மெனக்கெடல்கள் செய்தாக வேண்டிய கட்டாயம். பின்னணியாகட்டும், உடை அலங்காரம், மேக்கப் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். நாடகத்தை எழுதியவர் எழுத்தாளர் இரா. முருகன். கொஞ்சம் சுஜாதாவின் சொர்க்கத்தீவு, என் இனிய இயந்திராவெல்லாம் உட்டாலக்கடி ஆகியிருக்கிறது என்றாலும், நாடகம் நெடுக சர்காஸ்டிக்கான வசனங்கள், கிண்டல் நகைச்சுவை நிறைந்த வசனங்கள் என வாத்தியாரை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். முக்கியமாய் புருஷனும் பொண்டாட்டியும் பேசிக் கொள்ளும் அல்லது ஆர்க்யூ செய்யும் போது, பேச்சு வாக்கில் உனக்கு ஹைட்ரோசில் ப்ராப்ள...

சாப்பாட்டுக்கடை - குமார் மெஸ் - சென்னை

Image
வடபழனி லஷ்மண் ஸ்ருதி சிக்னலை க்ராஸ் செய்யும் போதெல்லாம் சென்னையில் வாழும் 80 சதவிகித மதுரைக்காரர்களும், சாப்பாட்டுப் பிரியர்களும், எப்படா கடை திறப்பீங்க?ன்னு எதிர்பார்த்த மதுரை புகழ் குமார் மெஸ் ஒரு வழியாய் ஆரம்பித்தே விட்டார்கள். ஆரம்பித்த நாளிலிருந்து கூட்டமான கூட்டம். க்யூ கட்டி நிற்கிறது என்றும். டோக்கன் போட்டெல்லாம் சினிமா பிரபலங்கள் காத்திருக்கிறார்கள் என்று பேச்சாய் இருந்தது.

சில்லு - ஒர் முன்னோட்டம்.

Image
என்ன தான் நாம் சினிமாவை சிலாகித்தாலும், அது கொடுக்கும் பிரம்மாண்டத்தை வாய் பிளந்து பார்த்தாலும், எனக்கு நாடகம் என்பது அதை விட பாகாசூரத்தனமான பிரம்மாண்டம். ஏனென்றால் நாடகத்தில் ஒன்ஸ்மோரே கிடையாது. எதுவாக இருந்தாலும் ஸ்பாண்டினிட்டியோடு, வெளியாக வேண்டும். குட்டோ, பாராட்டோ அவ்வப்போதே கிடைக்குமிடம். என் தந்தையின் நாடக குழுவில் தொடர்ந்து நாடகங்கள் போடப்படும் போது அந்நாடகங்களில் ரிகர்சலை மிக ஆவலுடன் பார்ப்பேன். அதிலும் அரங்கேற்றத்திற்கு முதல் நாள் நாடகம் நடக்கும் மேடையிலேயே ஒரு காட்சி முழுக்க, முழுக்க ஒத்திகை பார்ப்பார்கள். அப்படி நாடகம் அரங்கம் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் முழு நாடகத்தையும், நடத்துவார்கள்.   

கொத்து பரோட்டா - 31/08/15

Image
கேட்டால் கிடைக்கும் கேட்டால் கிடைக்கும் ஐநாக்ஸ் விருகம்பாக்கம் திரையரங்கில் எப்போது 10 ரூபாய் டிக்கெட்டுக்கள் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், உடன் பெப்ஸி மற்றும் கோக்குகள் சகிதம் 120 கொடுத்தால் தான் டிக்கெட் தருவேன் என்பார்கள். இதற்காக ஒரு முறை சண்டைப் போட்டு, பத்து ரூபாய்க்கே டிக்கெட் வாங்கிய அனுபவத்தை எழுதியிருந்தேன். இது பற்றி மேனேஜரிடம் புகார் செய்த போது, இப்போதுபுதிய டீம் வந்துவிட்டது. அம்மாதிரியெல்லாம் இல்லை என்றார்கள். நேற்றிரவு பாண்ட்தம் படம் பார்ப்பதற்காக மீண்டும் ஐநாக்ஸ் படையெடுத்தோம். பத்து ரூபாய் டிக்கெட் தான் இருப்பதாகவும், பேக்கேஜ் டிக்கெட் தான் தருவோம் என்றார்கள். விலை 120 ரூபாய். 10 ரூபாய்க்கு டிக்கெட் மீதிக்கு கோக். நான் எதற்காக அப்படி நீங்க விற்க வேண்டும் என்று கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாது. பேக்கேஜாகத்தான் விற்போம். இல்லாவிட்டால் மேனேஜரிடம் பேசிக்கங்க. என்றார். பின்பக்க வழியாய் மேனேஜரை பார்க்க போன இடத்தில் இருந்த செக்யூரிட்டி, மேனேஜர் யாரும் இல்லை. பார்க்க முடியாது என்றார். நான் தொடர்ந்து அங்கு நட்க்கும் விஷயத்தைப் பற்றி பேச, உன்னைப் போல நூறு பேரு வர...

சாப்பாட்டுக்கடை - தூத்துக்குடி சிம்னி

Image
சென்னையில் பரோட்டா கிடைக்குமிடங்கள் எது என்று கேட்டால் முக்குக்கு முக்கு கிடைக்குமென்ற டேட்டா கிடைக்கும். அதில் நல்ல தரமான பரோட்டா என்று கேட்டால் கொஞ்சம் யோசித்துத்தான் பதில் வரும். நிலைமை அப்படியிருக்க, விருதுநகர் சைட் போடப்படும் பொரித்த பரோட்டா சென்னையில் கிடைக்குமிடம் பற்றிக் கேட்டால் நிச்சயம் அதற்கான பதில் உடன் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தாலும், பெரும்பாலும் அங்கே நல்ல தரமான பரோட்டாவாக இருப்பதில்லை. பரோட்டாவே உடம்புக்கு கேடு, இதுல எண்ணெயில பொரிச்சதா? என்று அலறியடித்துக் கொண்டு ஓடுகிறவர்கள் அதிகமிருக்க, அதை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன்.

கொத்து பரோட்டா -17/08/15

Image
10 எண்றதுக்குள்ளே சமீபத்தில் பார்த்த அட்டகாசமான டீசர். வாழ்த்துக்கள் விஜய் மில்டன். போன வாரம் ஆபீஸுல பாத்த போது கூட காட்டவேயில்லை .. இருக்கட்டும் இருக்கட்டும். @@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -11/08/15

Image
www.yummydrives.com சாப்பாட்டுக்கடை எழுத ஆரம்பித்ததிலிருந்து நிதம் ஒரு போன் காலாவது கடை பற்றியும், வழி கேட்டும் வரும் விசாரணை வராத நாளில்லை. எவ்வளவு பிஸியாய் இருந்தாலும் நான் வழி சொல்வேன். நண்பர் பதிவர் சுரேஷ்குமார். என்னை குருவாய் ஏற்றுக் கொண்டு அவர் தன் பங்குக்கு சாப்பாட்டுக்கடை விஷயங்களை எழுத , ஒரு நாள் ஏன் நாம் இதை ஒரு ஆங்கில சைட்டாய் கொண்டு வரக் கூடாது என்றார். அப்போது நான் தொட்டால் தொடரும் படப்பிடிப்பில் இருந்த நேரம். அதனால் என்னால் முழுதாய் அதில் ஏதும் ஈடுபட முடியவில்லை. ஆனால் மனுஷன் அஞ்சாமல் தனியே வேலை பார்த்து டெக்னிக்கல் சைட் எல்லா வேலையும் முடித்து வைத்துவிட்டு, எப்படி இருக்குன்னு கேட்டார்.. நான் வழக்கம் போல அது நொள்ளை இது நொட்டை என்று விமர்சனம் செய்து அதில் சில மாறுதல்கள் எல்லாம் சொல்லி, ஏன் இதை ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்பாகவும் கொண்டு வரக்கூடாது என்று கேட்டேன். அதும் ரெடியாயிட்டிருக்கு சார் என்றார். இப்போது வருகிற வெள்ளியன்று அதாவது 14 தேதி, நான், சுரேஷ்குமார், கோவை நேரம் ஜீவா ஆகியோரின் முனைப்பில் yummydrives.com தளமும், ஆஃப்பும் லாஞ்ச் செய்கிறோம்.  இதில் வசதி என்னவென்றால்...

கோணங்கள் -19 -

Image
குறும்படக் கொத்து! இது சுப்புராஜின் கெத்து! செங்கல்பட்டில் சினிமா எடுக்க ஆசைப்படும் ராஜ்கிரண்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் குறும்படங்கள் மூலமாய் சினிமாவின் கதவை நெட்டித் திறக்கலாம் என்கிற நம்பிக்கையில் வேலையை விட்டு, குறும்படம் எடுத்துத்தள்ளும் கூட்டம் பெருகிவிட்டது. முன்பு கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதைப் போல, தற்போது குறும்பட வெளியீடு நடந்து கொண்டிருக்கிறது. ஊரும் உறவும் நண்பர்களும் கூடி, குறும்பட வெளியீட்டுவிழாவுக்குப் பெருந்தொகை செலவழித்தபின், அதை யூடியூபில் போட்டு நண்பர்கள் வட்டம் மூலமாய் பகிர்ந்து ஒரு பத்தாயிரம் ஹிட்ஸ் தேத்திவிட்டால், அடுத்தக் குறும்பட முயற்சிக்கு போக வேண்டியதுதான். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது குறும்பட உலகம். ஆனால் செலவழித்த தொகையையாவது திரும்ப எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதே இல்லை. இவர்களது அடுத்த இலக்கு சினிமாவாக இருப்பதும் ஒரு பிரச்சினைதான். உலகமெங்கும் குறும்படம் மற்றும் ஆவணப் படங்களுக்கான சந்தை என்பது தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. குறும்படங்கள் மூலமாய் வருமானம் ஈட்டுவதும் புகழ் பெறுவது...

கொத்து பரோட்டா - 27/07/15

Image
சுஜய் கோஷின் அகல்யா நிறைய பேரின் கண்களை, வியாபாரத்தை திறக்கும் விஷயமாகியிருக்கிறது. நெடு நாளாய் நான் சொல்லிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் மீடியாவைப் பற்றிய ப்ராஜெக்டுகள் அதெல்லாம் நடக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அட.. ஆமாமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது தவிர ராமாயண அகலிகை கதையை மிக சுவாரஸ்யமான திரில்லராய் மாற்றியதோடல்லாமல், ராதிகா ஆப்தேவின் கண்களையும், உடலையும், மிக அழகாய் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். முடிவை என்னால் முதலிலேயே உணர முடிந்தாலும், அதை சொன்ன விதத்தில் மேக்கிங்கில் அட்டகாஷ். பல புதிய கதவுகள் திறக்கப் பட இருக்கின்றன.

Dejavu -7

PART 7 It had been raining incessantly all day. It was Meera’s birthday. We had already made plans for a movie and dinner. It was midnight and it was pouring. By the time I dropped Shraddha at her apartment, we were soaked to the bones. That was the first time she’d ever asked me to come home. It was a tastefully done up two-bedroomed apartment. She quickly changed into pyjamas and a casual T-shirt. The few droplets of water that still remained in her hair gleamed as they caught the lights in the room. She disappeared into one of the rooms and came back with a towel and some clothes. “Go, change. They are my brother’s clothes. He stays here when he comes to India.” I kept looking at her without moving. As if to stop me from saying anything more, she pressed the clothes into my hands and nudged me into a room nearby, “C’mon, go,” she said. By the time I changed and got back, the living-room was filled with the most pleasant aroma of coffee. The coffee was comforting in the heavy...

கொத்து பரோட்டா - 20/07/15

என் ட்வீட்டிலிருந்து ஏசுவே உண்மையான தேவன். அடப்பாவிகளா அவரையும் தேவராக்கிட்டாங்களே.. ‪#‎ கார்பின்புறவாசகம்‬ mmm... ம்ம்ம்ம்ம்... மா.....ம்ம்ம்ம்ம்மா.. உழைப்பால் உயர்ந்த உத்தமரேன்னு பாட்டு பாடிச்சி ரோடெல்லாம். யாருடா அதுன்னு பார்த்தேன் காமராஜர் பர்த்டே. அப்ப சரியாத்தான் பாடியிருக்காங்க துரோகங்கள் நமக்கு வலிமையலிக்க வந்த தந்திருஷ்ட்டி லேகியம் பிதற்றல்  உலகில்  முட்டாளின்  தீர்க்க தரிசனம் எல்லோரும் நலம் வாழ நலம் வாழ்த்துக்கள்  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாப்பாட்டுக்கடை - Bawarchi

Image
ஒவ்வொரு முறை ஹைதராபாத் போகும் போதும் அங்குள்ள பிரபல பிரியாணிகளை ஒரு கை பார்க்காமல் வந்ததில்லை. முதல் முறை செகந்தராபாத் பாரடைஸில். பின்பு ஒரு முறை ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பாரடைஸில். அப்போதெல்லாம் நிறைய பேர் சொல்வார்கள் பாவர்சியில் இதைவிட அட்டகாசமாய் இருக்குமென. சென்ற வருடம் சென்ற போது கூட ஹலீமும், பிரியாணியும் பாரடைஸிலேயே முடிவடைந்தது. எனவே இம்முறை பாவர்சியில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்ற முடிவில் பேலியோ விடுமுறை விட்டேன்.

கொத்து பரோட்டா - 13/07/16

பாகுபலி ராஜமெளலி தெலுங்கு  பட உலகின் சூப்பர் ஸ்டார் இயக்குனர். நான் ஈ மூலம் தமிழ் நாட்டிலும் தன் கால் பதித்தவர். இன்று இந்தியாவெங்கும், ஏன் உலகமெங்கும் தன் தடத்தை பதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சரித்திர பின்னணி கொண்ட பேண்டஸி கதை. அதற்கு ஏற்றார்ப் போல பார்த்து பழகிய இளவரசன், நல்ல அரசன், வஞ்சகர்கள், துரோகம், கொலை, பழிவாங்கல் என்ற அரைத்தமாவுதான் ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா பின்பு பிரபாஸ் என வரிசைக்கிரமப்படி நடித்து தள்ளியிருக்கிறார்கள். முதல் பாதியில் எல்லா கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களது உறவு முறைகளை சொல்லி, கொஞ்சம் நேரம் காதல், பாட்டெல்லாம் போட்டு, எல்லாம் செட்டில் ஆனப் பிற்பாடு, இரண்டாம் பாதியில் வரும் போர்க் காட்சிகள் படத்தை பட்டாசாக்குகிறது. அனுஷ்காவை இளமையாய் பார்க்க காத்திருந்தவர்கள் எண்ணங்களில் மண்ணை வாரிப் போட்டாலும், அடுத்த பாகத்தில் கலக்குவார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ராஜமெளலியின் படத்தின் கதைகள் ஏதும் ஆவுட் ஆப் த பாக்ஸாய் இருந்ததில்லை. அதை சிறப்பான வெகுஜன ப்ரசண்டேஷனில் கொடுத்து அசத்திவிடுவார். இதிலும் அதையே பின்பற்றியிருப்பத...

Déjà vu - Part 6

Déjà vu - Part 6 Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by  Cable Sankar PART 6 I couldn’t get a wink of sleep all that night. I kept touching my cheek all the time. Something told me she might be in love with me too. But I wasn’t sure. She comes from a country where even a kiss on the lips is no big deal. What’s a little peck on the cheek? Who knows if she were to tell me the next day that I reminded her of her brother! I was very confused.

கொத்து பரோட்டா -06/07/15

Image
பாபநாசம் த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு மிரண்டு போய் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் திரிஷ்யங்களையும் பார்த்தாயிற்று. எல்லாமே அந்தந்த ஊர்களில் ஹிட். தமிழில் கமல்ஹாசன் என்றதும் அவ்வளவுதான் கமல் படத்த காலி பண்ணிடுவாரு. நடிச்சி, தலையிட்டு கெடுத்துருவாரு என்றெல்லாம் ஒரு பக்கம் பேச்சிருந்தது. அதற்கேற்ப ஒட்டு மீசையுடன் வந்த ட்ரைலரைப் பார்த்ததும், இன்னும் பேச்சு அதிகமானது. நெகட்டிவ் பேச்சுக்கள் அத்தனையும் ஒரு சேர சுழட்டி அடித்திருக்கிறது கமல்ஹாசனின் பாபநாசம். பத்திரிக்கையாள நண்பர் ஒருவர்.. தின்னவேலி பாஷை புரியாது. கமல் படத்துக்கு இப்பல்லாம் ஓப்பனிங் இல்லை. கிறிஸ்டியன் பேமிலியை வேணும்னே இந்துவா மாத்தியிருக்காரு கமலு. எல்லாத்துலேயும் தலையிட்டு கெடுத்திருக்காராம் என்று படம் பார்ப்பதற்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியான எல்லாவிதமான எதிர்புகளையும், எதிர்பார்ப்புகளையும், கமலும், ஜீத்து ஜோசப்பும் உடைத்தெறிந்திருக்கிறார்கள். மோகன்லால் நல்ல நடிகரா? கமல் சொதப்பிட்டாரா? என்றெல்லாம் பேசுகிறவர்கள் மோகன்லாலின் எத்தனை மொக்கை படங்களை பார்த்திருக்கிறார்கள் என்று கேட்டால் அது தெரியாது. இருவரும் அவரவர் ...

Déjà vu -5

Déjà vu Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by  Cable Sankar Part 5 The name displayed on my phone was enough to wipe away the slightest hint of sleep in my eyes. I grabbed the phone, sat up in a hurry but answered the phone with a pretense of coolness, “Yes Shraddha!” “Are you in love with me?” Now, that was something I hadn’t expected from her. I didn’t know what to say. Before I could realise, I had blurted out a ‘yes’. Woah! That was quite fast. There wasn’t any response. I kept calling out, there was complete silence. I knew she hadn’t hung up. I then heard a crackly voice, “Let’s meet tomorrow evening at Nungambakkam... Coffee  Day,” she said before hanging up. I was thrilled to bits. My heart was in my mouth. Tomorrow evening...that was a good fifteen-plus hours away. What would I do until then? I couldn’t go back to sleep after the phone call. I did go to work but c...

சாப்பாட்டுக்கடை - Haleem@Charminar

Image
வருடா வருடம் ஹலீம் சாப்பிடுவது என்பது ஒர் வழக்கமாய் போய்விட்டது. சென்ற வருடம் லொக்கேஷன் பார்ப்பதற்காக ஹைதராபாத் போன போது பாரடைஸில் ஹலீம் சாப்பிட்டோம். இந்த வருடம் வழக்கம் போல சார்மினாரில்.  ஆனால் அவர்கள் வழக்கம் போல அவர்களுடய ரெஸ்டாரண்ட் வாசலில் இம்முறை போடாமல் உள்ளேயே வைத்திருந்தார்கள். 

Déjà vu -4

Déjà vu Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by Cable Sankar PART 4 Why was I falling in love with her? Was it the beauty? If it was just looks, I should have been in love with Meera instead. Was it her mesmerizing curls? Or was it her boyish gait? Until today, I don’t know what it was about her that drove me crazy. Try as I might, I couldn’t take my mind off her. Her thoughts didn't leave me in my sleep too. Funnily, I'd been dreaming of her prancing around like a gaudily dressed Telugu film actress! No one had ever bothered me so much until that time. "Dude, she isn't the regular type. Theirs is not just a loaded but a reputed family. You'd better watch out," warned Meera the next day. I didn't make a big deal out of these new feelings even at that point. But then, I couldn't get even one item off my ‘To Do List’ for that day. I was distracted out of my wits. All I wanted to do was to...

Déjà vu - Part 3

Image
Déjà vu - Part 3 Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by  Cable Sankar pic courtesy: Alan Cleaver/https://www.flickr.com/photos/alancleaver/ PART 3 I walked over to my bike and started it, this time using the electric starter though. I parked the bike, headed straight to the elevator and reached the seventh floor. I told the lady at the reception desk, “I’d like to meet Shraddha Reddy please.” The receptionist looked at me and punched a few numbers on the intercom. I was restless and impatient. I flipped out my phone and called Meera. “Hey, wassup?” she asked, sounding a little irritated. “Can you please step out with Shraddha for a while?” “Hey! Now what? Listen. Don’t mess up things further, okay?” “Don’t worry. There won’t be any trouble. I just need to tell her something and I will leave once I’m done. I swear.” As we were talking, the lady at the reception informed me that S...