திருவாதிரை களியும்.. பேலியோ டயட்டும்
வாரத்துக்கு ஒரு முறை சீட்டிங்கில் இருக்கும் நிலையில் திங்களன்று மீண்டும் டயட் முருங்கையில் ஏறலாம் என்றால் திருவாதிரை இன்னைக்கு, களி வேண்டாமோ? என்று எகத்தாளமிட்டாள் மனைவி. வெல்லம், நெய்யோடு, அரிசியை ரவையாய் உடைத்த மாவோடு, தேங்காய், எல்லாம் போட்ட களி ஒரு விதமான அசட்டு தித்திப்போடு இருக்கும். வெறும் களியை விட, உடன் வழங்கப்படும் காய்கறிகள் எல்லாம் சேர்த்த கூட்டுக் குழம்பு தான் திருவாதிரை களியின் ஸ்பெஷாலிட்டி. தித்திக்கும் களியோடு, காரம், மணம் நிரம்பிய காய்கறிக்கூட்டு ஒரு மாதிரி தத்தக்கா பித்தக்காவாக இருக்குமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சாரி.. வாவ்..வாவ்.. சூடான களியோடு, கூட்டை குழைத்து வாயில் போட்டால்.. டிவைன். ”இன்னொரு கரண்டி போடேன்” “டயட்டுன்னு சொன்னீங்க?” “அப்படியா சொன்னேன். அது நாளைலேர்ந்து. சாமி குத்தம் ஆயிரப்பிடாது இல்லை..” வாழ்க திருவாதிரையும், நடராஜரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@