திருவாதிரை களியும்.. பேலியோ டயட்டும்
வாரத்துக்கு ஒரு முறை சீட்டிங்கில் இருக்கும் நிலையில் திங்களன்று மீண்டும் டயட் முருங்கையில் ஏறலாம் என்றால் திருவாதிரை இன்னைக்கு, களி வேண்டாமோ? என்று எகத்தாளமிட்டாள் மனைவி. வெல்லம், நெய்யோடு, அரிசியை ரவையாய் உடைத்த மாவோடு, தேங்காய், எல்லாம் போட்ட களி ஒரு விதமான அசட்டு தித்திப்போடு இருக்கும். வெறும் களியை விட, உடன் வழங்கப்படும் காய்கறிகள் எல்லாம் சேர்த்த கூட்டுக் குழம்பு தான் திருவாதிரை களியின் ஸ்பெஷாலிட்டி. தித்திக்கும் களியோடு, காரம், மணம் நிரம்பிய காய்கறிக்கூட்டு ஒரு மாதிரி தத்தக்கா பித்தக்காவாக இருக்குமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சாரி.. வாவ்..வாவ்.. சூடான களியோடு, கூட்டை குழைத்து வாயில் போட்டால்.. டிவைன். ”இன்னொரு கரண்டி போடேன்” “டயட்டுன்னு சொன்னீங்க?” “அப்படியா சொன்னேன். அது நாளைலேர்ந்து. சாமி குத்தம் ஆயிரப்பிடாது இல்லை..” வாழ்க திருவாதிரையும், நடராஜரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
மார்கழி சீசனும் புத்தக வெளியீடுகளும்
வாரத்துக்கு ஒரு முறை சீட்டிங்கில் இருக்கும் நிலையில் திங்களன்று மீண்டும் டயட் முருங்கையில் ஏறலாம் என்றால் திருவாதிரை இன்னைக்கு, களி வேண்டாமோ? என்று எகத்தாளமிட்டாள் மனைவி. வெல்லம், நெய்யோடு, அரிசியை ரவையாய் உடைத்த மாவோடு, தேங்காய், எல்லாம் போட்ட களி ஒரு விதமான அசட்டு தித்திப்போடு இருக்கும். வெறும் களியை விட, உடன் வழங்கப்படும் காய்கறிகள் எல்லாம் சேர்த்த கூட்டுக் குழம்பு தான் திருவாதிரை களியின் ஸ்பெஷாலிட்டி. தித்திக்கும் களியோடு, காரம், மணம் நிரம்பிய காய்கறிக்கூட்டு ஒரு மாதிரி தத்தக்கா பித்தக்காவாக இருக்குமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சாரி.. வாவ்..வாவ்.. சூடான களியோடு, கூட்டை குழைத்து வாயில் போட்டால்.. டிவைன். ”இன்னொரு கரண்டி போடேன்” “டயட்டுன்னு சொன்னீங்க?” “அப்படியா சொன்னேன். அது நாளைலேர்ந்து. சாமி குத்தம் ஆயிரப்பிடாது இல்லை..” வாழ்க திருவாதிரையும், நடராஜரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
மார்கழி சீசனும் புத்தக வெளியீடுகளும்
வழக்கம் போல டிசம்பர் மாசம் ஆரம்பித்த மாத்திரத்திலேயே குளிரும், மார்கழி பஜனையும், சங்கீத கச்சேரிகளும், புத்தக வெளியீடுகளின் அழைப்புமாய் வந்த வண்ணம் இருந்தது. இந்த வாரம் மூன்று குட்டி பட்ஜெட் படங்கள் வெளியானதாய் தினத்தந்தி மட்டும் சொல்கிறது. தியேட்டர் லிஸ்டில் உள்ள அரங்குகளில் போஸ்டரைக் கூட காணோம். நண்பர்கள் அதிஷா, யுவகிருஷ்ணா, போகன் ஆகியோரின் நூல்கள் உயிர்மையில் வெளியானது. விழாவிற்கு நெடு நாள் கழித்து சென்றிருந்தேன். நண்பன் சுதர்சன் புதியதாய் வாங்கிய டி.எஸ்.எல்.ஆரில் வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தான். நான் கேமராவை வாங்கி மேனுவல் போகஸுக்கு மாற்றி ”அழகா” படமெடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தேன். உள்ளே இருந்த கூட்டத்தை விட வெளியில் நல்ல கூட்டமிருந்தது. பத்து புத்தகங்கள் என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் புத்தகம் பற்றி பேசியவுடன் அவர்களின் நட்புகள் இடம் பெயர்ந்தார்கள். மாதொருபாகன் நாவல் ப்ரச்சனைக்கு பின்னால் பெரும் சதி வேலை இருக்கிறது என்றும், அது நாவல் விற்க போட்ட ப்ளான் என்றும் ஒரு கூட்டம் பேசிக் கொண்டிருந்தது. கூட்டத்தில் நானும் இருந்தேன். நிகழ்ச்சிக்கு போனதில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாய் புரிந்து கொள்ள முடிந்தது. பேலியோ டயட்டிலிருக்கும் நான் முன்பை விட நன்றாக மெலிந்திருப்பதை நாள் கழித்துப் பார்த்தவர்கள் ஊர்ஜிதப்படுத்தினார்கள். நாளை வேறொரு புத்தக விழாவிற்கு செல்ல வேண்டும். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா வியாபாரம் -2
சாரு மட்டும்தான் செக்ண்ட் பார்ட் எல்லாம் எழுதுவாரா? நானும் எழுதுவேன். வாசகர்களிடையேயும், சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற என் சினிமா வியாபாரம் புத்தகத்தின் அடுத்த பாகத்தை இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு முன் கொண்டு வர இருக்கிறோம். இம்முறை தியேட்டரைப் பற்றியும், தியேட்டர்களின் பிரச்சனை பற்றியும் அதன் வியாபார முறைகள் பற்றியும் எழுதியிருக்கிறேன். புத்தகம் பற்றி ஒர் சிறிய ட்ரைலர்.
@@@@@@@@@@@@@@@@@@
புத்தக வெளியீட்டு விழாவில் என்னை பார்த்த எழுத்தாளர் பத்மஜா ஆச்சர்யமாய் “ என்ன இங்கயெல்லாம் சினிமாவை விட்டுட்டு?” என்றார் ஆச்சர்யத்துடன்.
“உங்களையெல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சே? அதான்” என்றேன்
“அஹா. அநேகமா உங்க புக்கு ஏதாச்சும் ரிலீஸாகப் போவுதோ?” என்றார். நம்ம டிசைன் அப்படி போல.. முகத்திலேயே தெரிஞ்சுறுது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு புதிய நம்பரிலிருந்து கால். பேசியது ஒர் பெண். என் தொழில் முறை ஒருவரின் முன்னாள் கில்மா தோழி. நண்பர் இறந்துவிட்டார் என்று சொல்லி உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். எனக்கு பெரியதாய் வருத்தமில்லை. கொஞ்சம் காலமாய் உடல் நலமில்லாமல் இருந்தார். வயதும் ஆகியிருந்தது. “ரொம்ப நன்றிங்க.. தகவல் சொன்னதுக்கு” என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கு யார் சொன்னாங்க?” என்றேன். “அவரு மச்சினர் நம்ம கஸ்டமர் தான்” என்றார். ஙே...
@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
கருத்து சொல்வதற்கு முன் எதைப் பற்றி சொல்கிறோமென்று தெரிந்து சொன்னால் இந்நாள் பொன்னாளே.
உண்மைக்கும் நேர்மைக்கும் உடனடியாய் மதிப்பு கிடைப்பதில்லை. வரும் ஆண்டிலாவது கிடைக்கிறதா என்று பார்ப்போம்
போதை என்பது உன்மத்தத்தை தேடிச் செல்லும் வழி
Most of the websites give wrong information about this year hits.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில மாதங்களுக்கு முன் மாண்டேஜ் என்றொரு கொரியன் படம் பார்த்தேன். இறந்து போன தன் பெண்ணை கொலை செய்தவனை தேடியலையும் தாயின் கதை. மிக அழகாய், ஆர்பாட்டமில்லாமல் எடுக்கப்பட்ட ஒர் திரில்லர். நான் அப்படத்தின் கதையைப் பற்றி சொல்ல வரவில்லை. வழக்கமாய் கொரியன் படங்களிலிருந்து தான் நம் தமிழ் படங்கள் சுடுவதாய் ஒர் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இப்படத்தில் அஞ்சாதேவில் வரும் நரேன் வீட்டில் போலீஸ்காரர்கள் கடத்தல் காரர்களிடம் பேரம் பேச அமைக்கும் செட்டப், வேறொரு போன் வர அதனால் சம்பந்தப்பட்டவர் மாட்டிக் கொள்ளும் காட்சியெல்லாம் அப்படியே அச்சு அசலாய். உடனடியாய் மாண்டேஜ் வெளிவந்த காலத்தையும், அஞ்சாதேவையும் சரி பார்த்தேன். அஞ்சாதேதான் முன்னோடி.#தட் ப்ரவுட் மெளமெண்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்கழி உற்சவம்
Q: What did the hurricane say to the coconut palm tree?
A: Hold on to your nuts, this is no ordinary blow job!
கேபிள் சங்கர்
மார்கழி உற்சவம்
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்Q: What did the hurricane say to the coconut palm tree?
A: Hold on to your nuts, this is no ordinary blow job!
கேபிள் சங்கர்
Post a Comment
3 comments:
கொத்துப் பரோட்டா அருமை அண்ணா...
Anjathey seen was taken from Akira kurasowa's film "high and low",prasana wears handkerchief because the kidnapper in high and low also wears the handkerchief with tattoo
அவரு மச்சினர் நம்ம கஸ்டமர் தான்” என்றார். ஙே..
சிரிப்ப அடக்க முடியல
இது தான் அடல்ட் கார்னர் ல வர வேண்டியது மாத்தி போட்டுடீங்க போல
Post a Comment