Thottal Thodarum

Feb 9, 2015

கொத்து பரோட்டா - 09/02/15

இன்று ஒரு தகவல்
வழக்கமாய் ராத்திரியில் டி&டி செக் செய்து கொண்டிருந்த போலீஸார்கள், தற்போது மாலை ஆறு மணிக்கே தங்கள் சேவையை காட்ட ஆரம்பித்திருப்பது வசூல் வேட்டையை இரவில் குறைந்திருப்பதினால் என்பது உ.கை.நெ.கனி. பெரும்பாலும் இம்மாதிரியான இரவு நேர செக்கிங்கின் போது காரின் கதவை இறக்கி, “சார் எங்கிருந்து வர்றீங்க?”என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில் “டெய்லி இந்த ரூட்டுல வர்றேன். செக்கிங் இருப்பீங்கன்னு தெரியாதா? சரக்கடிச்சா அதுக்கு வேற ரூட்டு  சார். அங்கெயெல்லாம் நீங்க ஆளு போட முடியாது. ஏன்னா துட்டு பேறாது” என்பேன். சிலர் சிரிப்பார். சிலர் கடுப்பார். “இதுல எவ்வளவு வந்துச்சுன்னா குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது?” என்று கேட்டதற்கு இது வரை யாரும் சரியான பதிலே சொன்னதில்லை. பெரும்பாலான பத்திரிக்கைகளும் அதை சொல்ல விழைவதில்லை. இன்று ஹிந்துவில் அதை விளக்கமாய் போட்டிருக்கிறார்கள். 30 சதவிகிதத்திற்கு மேல் ப்ரீத் அனைலைசர் காட்டியது என்றால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று.
@@@@@@@@@@@@@@@@@



டயட்
சமீபகாலமாய் என்னைப் பார்க்கும் நண்பர்கள் எல்லோரும் கேட்பது ”என்ன இவ்வளவு வெயிட் குறைஞ்சிட்டே. தொப்பையக் காணோம்? என்றிருந்தால், இன்னொரு பக்கம் “என்ன சார் வர வர சாப்பாட்டுக்கடை எழுத மாட்டேன்குறீங்க?” என்ற கேள்விகள் தான். கடை கடையாய் சாப்பாட்டை தேடியலைந்து புத்தகம் எழுதியவன் டயட் பற்றி பேசுகிறானே என்று யோசிப்பீர்கள். அதற்கு காரணம் ஆரோக்கியம் & நல்வாழ்வு என்கிற பெயரில் பேஸ்புக்கில் இருக்கும் குழுதான் காரணம். டயட்டுக்கும் நமக்குமான தூரம் மைல்களில் இருக்கும் என்ற உண்மையை புரிந்து கொண்டவன் என்கிற முறையில் படிக்க மட்டுமே சுவாரஸ்யமாக இருந்த விஷயம் அதை பாலோ செய்யும் சங்கர் எனும் வலைப்பதிவர் பலாபட்டரையை நேரில் பார்த்ததும் அட.. நாமும் பாலோ செய்தால் என்ன என்று தோன்றியது. ஸோ.. சீரியஸாய் படிக்க ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கு முன் அவர்களின் டயட் சார்ட்டை தொடர அரம்பித்தேன். ஆரம்பித்து முதல் வாரத்தில் என் ஷுகர் லெவல் பாஸ்டிங்கில் சல்லென குறைந்தது. இரண்டாவது வாரத்தில் கிட்டத்தட்ட நார்மல். 89 கிலோ இருந்த என் எடை தற்போது 83.5. இத்தனைக்கும் நான் டயட்டை வாரம் முழுவதும் தொடரவில்லை. பெரும்பாலும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பவன் என்பதால் கிடைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு பழகியவன்.  நோ.. கார்போஹைட்ரேட் எனும் விஷயம் வரும் போது சமயங்களில் தேடித்தான் சாப்பிட வேண்டியிருக்கும். அதையெல்லாம் மீறி ஆரம்ப டயட் டென்ஷன் நாட்களை கடந்து விட்டால்.. கூல்.. சமயங்களில் பெரிதாய் பசிப்பதேயில்லை. அப்போதுதான் தெரிகிறது இத்தனை வருடங்களாய் எம்பூட்டு அதிகமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமென. குட்.. அதற்காக நான் சாப்பாட்டுக்கடை தேடி போகாமல் இருக்கப் போவதில்லை. அடிக்கடி என்றிருந்ததை அவ்வப்போது என்று மாற்றிக் கொண்டேன். அந்த கேப்பில் சாப்பிடப் போனதுத்தான் கண்ணப்பா தட்டு இட்லி எல்லாம். உடல் நலம் பேண, சுகர், பிபி குறைய என சர்வ ரோக நிவாரணியாய் கருதாமல் ஒரு ட்ரை செய்து பாருங்கள். பின் குறிப்பு: இந்த டயட் சார்ட்டை பாலோ செய்வதற்கு முன் உங்களுடய டாக்டரை ஒரு முறை கன்சல்ட் செய்து கொள்ளவும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஷமிதாப்
அமிதாப், தனுஷ், அக்‌ஷரா, பால்கி, பி.சி.ஸ்ரீராம், இவர்களுடன் இளையராஜா. இதற்கு மேல் ஒரு சினிமாவிற்கு என்ன வேண்டும்? என்ற ஆச்சர்யத்திலேயே தியேட்டரில் இருந்தேன். அமிதாபின் ஸ்லீக் ஸூத்திங் பர்பாமென்ஸ், தனுஷின் கொஞ்சம் கண்ட்ரோல்ட் பர்பாமென்ஸ், இரண்டு நடிப்புக்காரங்ககூட இருக்கோமேங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லாத நடிப்புக்காரன் பொண்ணு அக்‌ஷரா, ஆறாம் க்ளாஸ் பையன் கூட முணுமுணுத்துக் கொண்டிருக்கும் இன்றைய “சன்னாட்டா” நம்ம “ஆசைய காத்துல தூதுவிட்டு”. எல்லாம் இருந்தும் ப்ரெடிக்டபிளான, கம்பர்டபிளாய் அமைக்கப்பட்ட, காட்சிகளினால், ஆச்சர்யம் கரைந்து போய்விட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என்னை அறிந்தால்
அழகான அஜித், சுமாராக காண்பிக்கப்பட்ட இரண்டு ஹீரோயின்கள், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, படங்களின் கோலாஜ், கொஞ்சம் குறைந்த தலைமுடியுடனான வில்லன், பரபர க்ளைமேக்ஸ், ஸேம் ஓல்ட் கவுதம் மேனன். காதல் காட்சிகளில் மட்டும் பழசானாலும், ஸ்வீட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அருணகிரி பெருமாளே
ப்ரதீப் இவரது குரல் எனக்கு மிகவும் பிடித்தமான குரல்களில் ஒன்று.  சந்தோஷ் நாராயன் மூலமாகவும், ஷேன் ரோல்டனின் மூலமாகவும் இவரது திறமைகள் குறித்து நெருக்கமாய் அறிய நிறைய கேட்கக் கிடைத்தது. அட்டக்கத்தியில் ஆரம்பித்து,  தற்போதைய மெட்ராஸ் வரை இவரது பாடல்களில் இருக்கும் அற்புதமான மெலடி என்னை மயக்கும். இவர் தற்போது புதிய ப்ராஜெக்ட் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழை இசை வடிவமாக்கி, ஒரு டாக்குமெண்டரி செய்விருக்கிறார். அதற்காக க்ரவுட் பண்டிங் முறையில் பணம் திரட்டுகிறார். தமிழிசையை உலகமெங்கும் பரப்ப உதவும் மனதுடையவர்கள் நிச்சயம் உங்களால் ஆன உதவிகளை இவர்களுக்கு செய்வோமானால் பின்னாளில் வரும் சந்ததிகள் உங்கள் பெயர் தெரியாவிட்டாலும் வாழ்த்தும். https://www.wishberry.in/campaign/arunagiri/
@@@@@@@@@@@@@@@@@@@@@
பெண்ணே.. பெண்ணே
நா.முத்துகுமாரின் வரிகளில் அமைந்த இனிமையான மெலடி. இசையமைப்பாளர் பி.சி.சிவனிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் பாடல். தொடர்ந்து போனில் பேசி பாடலின் முடிவில் இருவருக்குமிடையே ஒர் நெருக்கம் வருவது தான் கான்செப்ட். இப்பாடலுக்கான ஷாட்கள் எல்லாமே தனியே பாடல் படப்பிடிப்புக்கென நேரம் ஒதுக்காமல்,  வழக்கமான காட்சிகள் எடுக்கப்படும் போது கிடைக்கும் கேப்பில் எடுக்கப்பட்ட ஷாட்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.  
@@@@@@@@@@@@@@@@@@
கேட்டதில் பிடித்தது
டம் பொருள் ஏவல் படத்தின் பாடல்களை கேட்க நேர்ந்தது. யுவனின் இசையில் வெகு நாள் கழித்து ஒரு பளிச். குறிப்பாய் “குறும்தொகை” பாடல், கொஞ்சம் இஞ்சி இடுப்பழகாவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்வீட் மெலடியென்றால் “எந்த வழி” வைக்கம் விஜயலஷிமியின் குரலில் ஹாண்டிங். பட் பிக் ஆப் த ஆல்பம் இஸ் ‘கொண்டாட்டமே” பாடல் தான். ஆர்பாட்டமில்லாத இசை, ஸ்ரீராம் பார்த்தசாரதியின் அற்புதமான குரல், வைரமுத்துவின் மிக அற்புதமான வரிகள். வாவ்.. நிச்சயம் கேட்கப்பட வேண்டிய ஆல்பம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Whats a condom and a coffin got in common? 
They both hold stiffs but one is cumin and one is going! 
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

குரங்குபெடல் said...

" நடிப்புக்காரன் பொண்ணு அக்‌ஷரா, " . . .


" நடிப்புக்காரன் ". . . அண்ணே . . . சூப்பர் டைட்டில்

Unknown said...

பதிவு நல்லா இருக்கு..........பகிர்வுக்கு மிக்க நன்றி

மலர்

Desingh said...

சார் உங்களை பற்றி சுருக்கமா சொல்லணும்-னா சினிமா ஆசை கொண்ட வேங்கை. விடாமல் துரத்தி டைரக்டர் ஆயிட்டிங்க. வாழ்த்துக்கள்.
உங்க ப்ளாக் ரொம்ப புடிக்கும். உங்கள் இரண்டாயிரம் நண்பர்களில் நானும் ஒருவன்.

Shivaraman said...

தொட்டால் தொடரும் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ?

புலிகேசி said...

...

'பரிவை' சே.குமார் said...

எப்பவும் போல் சூப்ப்ப்ப்ப்பர்...

Unknown said...

"எனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் திருட்டு விடியோவோ, அல்லது, இணைய டோரண்டோ இதுவரை வெளியாகவில்லை. அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை நாங் களே வைத்திருப்பதே இதற்குக் காரணம். " கோணங்கள் -16

very funny