எப்பவுமே நம்ம ஊர் ஆளுங்க எதையாச்சும் ஆரம்பிச்சாத்தான் பேரணி, ஊரணியெல்லாம் நடத்துவாங்க. வெளியூர்காரன் முக்கியமா வடநாட்டுக்காரன் ஆரம்பிச்சா சேட்டு கம்பெனின்னு வாயை மூடிட்டு போயிருவான். ஏன்னா பணத்தால அடிச்சிருவான் என கார்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினாலும், சென்னையின் இம்சையான ஆட்டோ மீட்டர் கட்டணத்தைப் பொறுத்தவரை, அட்ராசிட்டியாய் மாற்றியமைத்த பெருமை ஓலாவையே சேரும். இன்றைய போட்டி உலகில் பாஸ்ட்ட்ராக் போன்றோருக்கு சிம்ம சொப்பனமாய் மாறி இருக்கும் இந்நிறுவனம், தற்போது ஆட்டோ சேவைகளையும் மீட்டர் காசுக்கு மேல் பத்து ரூபாய். அதுவும், நாம் இருக்கும் இடத்தில் வந்து பிக்கப் செய்து கொள்ளும் வசதிக்காகவே கன்வீனியன்ஸ் சார்ஜாக வாங்கிக் கொள்கிறார்கள். கார் போல ஆட்டோ இன்னும் மக்களுக்கு பழகவில்லை என்றாலும், இன்றைய தேதிக்கு மொபைல் ஆஃப்பில் பார்க்கும் போது எப்போதும் பத்திருபது ஆட்டோகள் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் இருப்பதில்லை என்ற குறையைத் தவிர, பெரியதாய் குற்றம் குறையில்லை என்னளவில். நான்கைந்து முறை பயணித்திருக்கிறேன்.ஓலாவினால் வந்த ஒர் பெரிய நன்மை என்னவென்றால் நிறைய ஆட்டோ ட்ரைவர்கள் மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னாளில் இம்மாதிரியான கார்பரேட்டுகள் நம்மை அவர்கள் வசம் பழக்கத்திற்கு அடிமைப்படுத்தி விலையேற்றுவார்கள். போன்ற விஷயங்களை எல்லாம் மீறி.. இம்முயற்சியை பாராட்டி ஆதரிப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@
இசை
வழக்கமான எஸ்.ஜே. சூர்யா படம். ராஜா, ரஹ்மான் இருவருக்குமான ஈகோவெல்லாம் படம் இல்லை. சத்யராஜுக்கு முழு வேலை.ஒரே அறைக்குள் திரும்பத் திரும்ப பேசியதையே பேசுவது கொஞ்சம் போரடித்தாலும் மனுஷன் கலக்குகிறார். காதல் காட்சிகள் என்கிற பெயரில் சாப்ட் போர்ட் வகையில் டபுள் எக்ஸ் காட்சிகள். அதுவே நீளூம் போது நெளிய வைக்கிறது. இசை வீசியில் மட்டும் அட. பின்னணியிசை எல்லாம் ம்ஹும். க்ளைமேக்ஸ் அதை விட ம்ம்ம்ம்ஹ்ஹூஊஊஊம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழுக்கு எண்1 ஐ அழுத்தவும்
படத்தின் ஆரம்பத்திலேயே ப்ளாட்டை சொல்லி விடுகிறார்கள். சென்னையில் பாம் வைக்க வரும் தீவிரவாதி, ஒரு கால் டாக்ஸியில் அதை பொறுத்தியிருக்கிறான். இன்னொரு பக்கம் கன்ஸ்ட்ரக்ஷன் சேல்ஸில் இருக்கும் தினேஷுக்கும், பிந்து மாதவிக்குமான காதல். பிந்து மாதவி கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் பள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்க, மேலே 82 ஆயிரம் டன் வாஸ்து கல் எப்போது வேண்டுமனாலும் அவரின் தலை மேல் விழ தயாராக இருக்கிறது. எக்ஸெண்ட்ரிக் லோக்கல் சயிண்ட்டிஸ்டாகவே வலம் வரும் நகுல், அவனிடம் ப்ராஜெக்ட் வாங்க வரும், மாணவி. காந்தப் புயலால் ஆகஸ்ட் 15 அன்று செல்போன் நெட்வொர்க் செயலிழக்கும் என்ற விஷயம். அப்படி செயலிழந்த நெட்வொர்க்கினால் மேற் குறிப்பிட்ட எல்லா இடங்களிலும் ப்ரச்சனை தொங்கலில் தொங்குகிறது. இது ஏதும் அறியாத நகுல் குழுவினர் அவரின் சயின்ஸ் வித்தைகளை வைத்து செல் போன் டவரை ஆக்டிவேட் செய்கிறார். பின்பு என்ன நடந்தது என்பதை சுவாரஸ்ய த்ரில்லரை கொடுத்திருக்கிறார்கள். தினேஷ், பிந்து மாதவி காதல் கொஞ்சம் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், பின்பு நிரடுகிறது. நகுல், மாணவி காதல் இன்ஸ்டெண்ட் தான் என்றாலும் க்யூட். சதீஷ், அவரின் பல் நோக்கு காதலி மேட்டர் சுவாரஸ்யம். கார் பாம், அவரிடமிருந்து போன் திருடிய பையன், தீவிரவாதி, காம்பினேஷன் இப்படித்தான் போகுமென்று முன்பே தெரிந்து விடுகிறது. ஒரு காலேஜ் பிரின்சிபல் பியூன் லெவலுக்கு அறிவுடன் இருப்பதாய் கலாய்க்க வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் ஒட்டவில்லை. நகுல் ஐந்தாவது படித்த அம்மா நகுலின் ஆர்வத்தினால் சயின்ஸ் பற்றி பேசுவது சுவாரஸ்யம். இரண்டாம் பாதி முழுக்க, கொஞ்சம் ட்ராமா, கொஞ்சம் எமோஷன், அதிகம் டெக்னிக்கல் சமாச்சாரங்கள், டயலாக்குள் ப்ரெடிக்டபிளான முடிவை கொடுத்திருக்கிறார்கள். தமனின் பின்னணியிசை குட். நல்ல ப்ளாட் முடிந்தவரை கிடைத்த பட்ஜெட்டில் சிறப்பாய் கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள் ராம் பிரகாஷ் ராயப்பா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Badlapur - Don't Miss The Begining

ஏக்
ஹசீனா தீ, ஜானி கத்தார், போன்ற சிறந்த படங்களை அளித்த ஸ்ரீராம் ராகவனின் மீடியோகர்
ஏஜெண்ட் விநோத்துக்கு பிறகான படம். வாள் மறக்கலாம், ஆனால் மரம் மறக்காது. எனும் அரேபிய
பழமொழி தான் படத்தில் காட்டப்படும் முதல் வாசகம். இது ஒன்றே படத்தின் ஒன்லைனை சொல்லிவிடும்.
அந்த அளவிற்கு படமும் ஷார்ப் தான். பழிவாங்குதல் தான் படத்தின் அடிநாதம் என்றாலும்
அதை கொடுத்த விதத்தில் தான் இப்படம் ஒர் வித்யாச களேபரமாய் ஆகியிருக்கிறது. படத்தின்
ஆரம்பக் காட்சியை மிஸ் செய்யாதீர்கள் என்று டைட்டிலிலேயே போட்டிருப்பார்கள். அது உண்மைதான்
அதை மிஸ் செய்தால் நிச்சயம் படத்துடன் ஒன்ற முடியாது. சமீபத்தில் பார்த்த மிக அற்புதமான
ஓப்பனிங் சீன் எது என்று கேட்டால் பதல்பூரின் காட்சியை சொல்வேன். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும்
அந்த பேங்க் கொள்ளைக் காட்சி கொடுக்கும் பதைபதைப்பு
நன்றாக எடிட் செய்யப்பட்ட காட்சியில் கூட கிடைக்காது. இதில் கதை நாயகனாய் வேண்டுமானால்
தவானாய் இருக்கலாம். நவாசூதீன் சித்திக்கைப் பொறுத்தவரை அவருக்கு இவர் வில்லைன் இவருக்கு
அவர் வில்லன். வயதுக்கு மீறிய வேடமென்றாலும் அதை சிறப்பாய் செய்திருக்கிறார் தவான்.
லாயக்காக வரும் நவாசுதீன் சித்திக் தன்னுடய கேரக்டரை திரையில் கொண்டு வரும் விதம் அபாரம்.
சமயங்களில் அவர் நடிக்கிறாரா? இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. விபசாரிக்காதலி
பேரழகி ஹூமா குரேஷியிடம் தவான் லாயக்கின் பார்ட்னரைப் பற்றி கேட்குமிடத்தில் பிடிக்காமல் குரேஷி, தவானின் கண்களைப் பார்க்காமல் ஆடும் ஆட்டமாகட்டும்,
லாயக்கின் தோல்விக்கு பிறகு தன்னை கீப்பாக வைத்திருப்பவர் கண் முன்னே பேசும் வசனமாகட்டும்,
யோகாவுக்கு பதிலாய் வீட்டு துடைக்கும் ப்ரைவேட் டிடெக்டிவ், ரெண்டு முறை ஹார்ட் சர்ஜரி,
மூணு ப்ரோமோஷன் பெற்று இன்னமும் நேர்மைக்கும், ஆசைக்குமிடையே அலைபாயும் இன்ஸ்பெக்டர்.
கணவனுக்காக படுக்கையை பகிர தயாராக இருக்கும் ராதிகா அப்தே, செய்த செய்கைக்கும், நிஜத்துக்கும்
இடையே மருங்கி நடுக்கும் அவளது கணவன் முன்னாள் கொள்ளைக்காரன் விநய் பதக், நவாசூதீனை
பின் தொடரும் போலீஸ், பழைய காதலியை தேடிப் போகும் விடுதியில் காதலியை கேட்க, இது என்ன
மராத்தா மந்திரா என்று கேட்கும் மிக நுட்பமான நகைச்சுவை என ரொம்ப நாளுக்கு பின் நம்மூள்
ஊடாடும் ஒர் நியோ – நார் வகைப் படமிது. டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதாலேயே அது உண்மையாகிவிடும் எனும் கூற்று சோசியல் நெட்வொர்க்கில் பொய்யாகிக் கொண்டிருக்கிறது.
The axe forgets. The tree remembers.#Badlapur
What a movie #Badlapur
Intresting Plot. nicely presented. all the best to the team thamizhukku en ondrai azhuthavum @Udhaystalin @imnagulan
though i can able to predicted the climax.. i love this movie #Birdman
Why dont i have self respect? youren actress honey #BirdmanMovie
Popularity is the slutty little cousin of prestige #BirdmanMovie
you always do confuse love for admiration #BirdmanMovie
டேய்.. என்னா பேசுன.மீட்டருக்கு மேலகொடுக்கணுமாம், ரிட்டனுக்கும் சேர்த்து கொடுக்கணுமாம், வச்சானில்ல ஆப்பு ஆப் மூலமா #OlaAuto
ஓலா ஆட்டோவில் பத்து ரூபா மீட்டருக்கு மேல வாங்குறாங்களாம். இது தவறாம்.ஹி..ஹி..#ஆட்டோஓட்டுனர்கள்
@@@@@@@@@@@@@@@@@@
Temper
பெயரே சொல்கிறது படம் எப்படி இருக்குமென்று. வழக்கமாய் ப்ரகாஷ்ராஜ் நடிக்கும் படத்தில் ஹை டெஸிபலில் அவர் தான் கத்தி பேசிக் கொண்டிருப்பார். இதில் வித்யாசமாய் ஜூனியர் என்.டி.ஆர். நம்மூர் உள்ளே வெளியே கதை தான் அதையே உட்டாலக்கடி அடித்திருக்கிறார்கள். என்ன ஹீரோயிசம் காட்டுகிறேன் என்று ஏழெட்டு முழம் பூவை சுற்றாமல் நான்கைந்து முழம் சுற்றியிருப்பது சந்தோஷம். அனூப் ரூபனின் பாடல்கள் அவ்வளவு ஒன்றும் சுவாரஸ்யமில்லை. தமனின் பாடல்களை கேட்டது போலவே இருந்தது. காஜல் அகர்வால் வெயிட் போட்டிருக்கிறார். வழக்கமான வில்லன், ஹீரோ சண்டை போலில்லாமல் ஹீரோவும் வில்லன் போலவே இருந்து கட்டங்கடைசியில் மாறுவதும். நிர்பயா மேட்டரை கையில் எடுத்து ஏதோ படம் பார்க்கிறவர்கள் டெம்பர் ஏற்றுவதாய் நினைத்து ஜூனியருக்கு தூக்கு என்றெல்லாம் சீன் போடுவதும், தூக்கு தண்டனையன்று ஜெயிலுக்குள்ளேயே நடத்தும் பைட் எல்லாம் உலக சினிமா அரங்கில் தெலுங்கு படத்தில் மட்டுமே நடக்கும் விஷயம். ஜெய் பாரத் மாதாகி ஜே
@@@@@@@@@@@@@@@@
Adult Corner
Three words to ruin a man's ego...?
"Is it in?"
கேபிள் சங்கர்

Post a Comment
No comments:
Post a Comment