அண்ணாநகர் ரவுண்டானா வந்ததும் வண்டியை சரவணாபவன் பக்கம் நிறுத்தச்சொல்லி, அருகிலிருந்த ஒரு ப்ளாட்டை காட்டி அதில்தான் தான் இருப்பதாகவும், F4 என்றும் சொன்னாள். “ஓகே நாளை பார்க்கலாம்..பை..” என்றபடி இறங்கியவள், சட்டென்று தோள் மீது கை போட்டு மெல்ல தன் பால் இழுத்து என் கன்னத்தில் அழுத்தமாய் “பச்சக்” என்ரு முத்தமிட்டு தன் ப்ளாட்டை நோக்கி ஓடி நின்று, “பை. ‘ என்றாள் அந்த ராட்சசி ஷ்ரத்தா.
**********************
அன்று இரவு முழுவதும் அவள் முத்தமிட்ட கன்னத்தையே தொட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். முத்தமிட்ட போது சில்லென்றிருந்த முத்தம், இரவு பூராவும் கன்னத்திலேயே உறைந்தது கிடந்தது. அவளும் என்னை காதலிக்கிறாள் என்ற எண்ணமே துள்ளலை ஏற்படுத்தியது. கன்னத்தில் முத்தமிட்டாள் அவ்வளவுதானே..? இதுக்கு போய் இவ்வளவு அலட்டலா..? அவள் அமெரிக்காவில் படித்தவள், அங்க உதட்டோடு முத்தமிடுவதையே பெரிசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், இதில் அவள் கொடுத்தது கன்னத்தில் நாளை வந்து “அண்ணா” என்று அழைத்து விடுவாளோ? என்றெல்லாம் ஒரே குழப்பம் என்னை தூங்கவிடவில்லை.
அன்று இரவு முழுவதும் அவள் முத்தமிட்ட கன்னத்தையே தொட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். முத்தமிட்ட போது சில்லென்றிருந்த முத்தம், இரவு பூராவும் கன்னத்திலேயே உறைந்தது கிடந்தது. அவளும் என்னை காதலிக்கிறாள் என்ற எண்ணமே துள்ளலை ஏற்படுத்தியது. கன்னத்தில் முத்தமிட்டாள் அவ்வளவுதானே..? இதுக்கு போய் இவ்வளவு அலட்டலா..? அவள் அமெரிக்காவில் படித்தவள், அங்க உதட்டோடு முத்தமிடுவதையே பெரிசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், இதில் அவள் கொடுத்தது கன்னத்தில் நாளை வந்து “அண்ணா” என்று அழைத்து விடுவாளோ? என்றெல்லாம் ஒரே குழப்பம் என்னை தூங்கவிடவில்லை.
அடுத்த நாளே அவள் கூப்பிடுவாள் என்று நான் அவளை அழைக்காமலே இருந்தேன். அவள் கூப்பிடவேயில்லை. கட்டி பிடித்து முத்தம் கொடுத்தவளுக்கும் என் உணர்வே இருந்தால் அவளே கூப்பிடட்டும் என்று முடிவு செய்து காத்திருந்தேன். வீம்பு அடுத்த சில நிமிடங்களில் உடைந்து நானே கூப்பிட்டேன்.
“ஹலோ. ஷ்ரத்தா..?”
“சொல்லு ஷங்கர்.. “
“நாம மீட் பண்ணனுமே..?”
“எதுக்கு?”
“கொஞ்சம் பேசணும்”
“போன்ல சொல்லேன்..”
“இல்லை நேர்லதான்பா பேசணும். ஒரு பத்து நிமிஷம் அது போதும். ப்ளீஸ்”
“ஓகே.. ஈவினிங் காபி டேக்கு வ்ந்துவிடு” என்று போனை வைத்து விட்டாள். ஈவினிங்குக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. காபி டேவில் உட்கார்ந்தால் நூறு ரூபாய் பழுத்துவிடும். அதனால் வெளியே இருந்த டீக்கடையில் ஒரு தம்மை வாங்கி பற்ற வைத்து ஷ்ரத்தா மாலையில் என்ன சொல்வாள் என்ற யோசனையே டென்ஷனை ஏற்றியது. நன்றாக புகையை இழுத்து உள்ளே நுரையிரலுக்கு செலுத்தி புகையை விட்டபோது, எதிரில் ஷ்ரத்தா நின்றிருந்தாள். எனக்கு ஏதும்புரியவில்லை. கையில் தம்மோடு பார்த்துவிட்டாள். இப்போது இதற்கு வேறு என்ன சொல்லப்போகிறாளோ என்று ஒரு பயம் கவ்விக் கொண்டது. என் அப்பாவுக்கு கூட பயந்ததில்லை. கைகட்டி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சும்மா .. எப்பவாவது. நீ வேற வர்றதுக்கு லேட்டாகும்னு சொன்னியா..? அதான். ரொம்ப ரேர்..” என்று வழிந்தேன்.
அவள் ஏதும் பேசாமல் நேரே காபி டேவுக்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்ததுமே. அவளுக்கு பிடித்த கேப்பசினோவை ஆர்டர் செய்துவிட்டு, “ஷங்கர்.. ஏன் உன்னை நேற்று முத்தமிட்டேன் என்றே எனக்கு தெரியவில்லை. என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. உன்னை ஏன் எனக்கு பிடிக்கிறது என்றே புரியவில்லை. பட் என்னால் தூங்ககூட முடிய்வில்லை. இது போல நான் எப்போது அவஸ்த்தை பட்டதேயில்லை. நீ சொல்லும் காதல் இதுதான் என்றால் ஐ…லைக்..இட்.. ஐ.லவ் இட். ரொம்ப புதுசாய் இருக்கிறது. ஆனால் ஒரே குழப்பமாகவும்கூட இருக்கிறது. இது இப்போது தேவையில்லையோ என்றும் தோன்றுகிறது. நான் இங்கிருக்க போகிறவள் இல்லை. இன்னும் ஒரு வருஷத்தில் அமெரிக்கா போகப் போகிறவள். உன் எய்மோ.. சினிமா டைரக்டராவது. இரண்டும் ஒன்று சேர்வது கஷ்டம். எனக்காக உன் வாழ்கையை மாற்றி கொள் என்று சொல்வதோ, இல்லை உனக்காக என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள சொல்வதோ ஞாயமாக தெரியவில்லை. ஏன் இப்படி தேவையில்லாத் கமிட்மெண்ட் வைத்துக் கொள்ள வேண்டும்?.”
இவள் ஏன் இப்படி குழம்பிப் போகிறாள் என்று எனக்கு புரியவேயில்லை. நாளை நடக்கப் போவதை பற்றி இப்போதே யோசித்து முடிவு தேடுவது என்பது முட்டாள் தனம் என்றே தோன்றுகிறது. இவளை பார்த்ததும், உடனே காதலிக வேண்டும் என்று முன்பே முடிவு செய்தா காதலிக்க ஆரம்பித்தேன். இவள் இப்படி குழம்புவது எனக்கு எரிச்சலாய் இருந்தாலும், பிடிக்கவும் செய்தது. அதில் தெரியும் குழந்தைத்தனத்தை பார்க்கும் போது அப்படியே கட்டி எடுத்து முத்தமிடலாமா என்று தோன்றியது.
“இதோ பார் ஷ்ரத்தா. தேவையில்லாமல் குழம்பிக்காதே.. இப்ப என்ன யாருக்காகவும் யாரையும் மாத்திக்க வேணாம். புரியுதா.. நாம நாமளா இருப்போம். உனக்கு என்கூட பழகறதுக்கு பிடிச்சிருக்கு இல்லை. அது போதும். பழக்கம் ஆளுக்கேத்தா போல மாற்றத்தை நமக்குள்ள வர ஆரம்பிச்சிரும். அப்படி வரலைன்னு வச்சிக்க, நான் உன் மேல வச்சிருகிற காதலோ, அல்லது உன்னுடயதோ டெம்ப்த் இல்லாத காதல்னு முடிவு பண்ணிரலாம். ஓகே.. இப்போதைக்கு ஐ. ப்ரபோஸ் யூ. ஐ.லவ்.யூ.. “ என்று டேபிளின் மேல் வைத்திருந்த ப்ளவர்வாஸிலிருந்த காகித ரோஸை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் வெட்கப்பட்டு சிரித்த படி அதை வாங்கிக் கொண்டு, என்னை அணைத்தாள். அந்த அணைப்பில் காதல் இருந்தது.
அதன் பிறகு எங்களூக்குள்ளான நெருக்கம் இன்னும் அதிகமாகியிருந்ததே தவிர, குறையவேயில்லை. தினமும் என் வீட்டிலிருந்து கிளம்பி அண்ணாநகரில் அவளை பிக்கப் செய்து கொண்டு, நுங்கம்பாக்கத்தில் அவளின் ஆபீஸில் ட்ராப் செய்துவிட்டுதான் என் வேலைக்கு போகலானேன். அந்த இருபது நிமிட பயணம் சொர்கம். அதை பற்றி உங்களுக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. மனதுக்கு பிடித்த பெண்ணின் இறுக்கமான அணைப்பில் எதிர் காற்றில் பயணிப்பதை போன்ற ஒரு சுகானுபவத்தை வார்த்தைகளால் புரிய வைக்க முடியுமா.? அவளுக்காக நான் எவ்வளவு மாறியிருக்கிறேன். காலையில் எட்டரை மணி வரை இழுத்து போர்த்திக் கொண்டும் தூங்குபவன்.
‘அதிகாலை சூரியனின் வெப்பத்தில் என்றாவது நின்றிருக்கிறாயா..?’
ஆறு மணிக்கு எழுந்திருக்க ஆரம்பித்தேன். பீரடித்து, பீரடித்து லேசாய் வயதுக்கு மீறின வெயிட்டும், வயிற்று மேடும் ஆரம்பித்திருக்க,
‘எழுந்து என்ன ப்ரயோஜனம். அப்படியே ஒரு வாக்கோ.. அல்லது ஷட்டில் கேமோ ஒரு ஆட்டம் ஆடினால். உடம்பும் பிட்டாக இருக்கும். மனசும்”
நிஜம் தான் என்று எனக்கு புரிய ஆரம்பித்தது.
‘ஸ்மோக் பண்ணும் போது நீ ஸ்டைலாய் விடும் புகை அழகாய்தானிருகிறது. நீ என்னருகில் முத்தமிட வரும் போது வரும் நிக்கோடின் வாசனைதான்.. பட் குறைத்துக் கொள். உன் பிட்னஸுக்கு ப்ராப்ளம்”
உண்மைதான் காலையில் விளையாடுகையில் ஓட முடியவில்லை. கொஞ்சம், கொஞ்சமாய் நிறுத்த ஆரம்பித்தேன். மீரா கூட ஒரு நாள் கேட்டாள் “எத்தனை முறை சொல்லியிருப்பேன். நிறுத்தசொல்லி.. முகத்தில் புகைய ஊதுறவன். எல்லாம் அததுக்கு ஆள் வந்தாத்தான்” என்றாள். ஷ்ரத்தா.. “நான் சொல்லி எல்லாம் இல்லை.. மீரா.. அவன் நிதமும் ஷட்டில் ஆடுகிறான். தம்பிடித்து ஓட முடியவில்லை அதான்.” என்று எனக்காக சப்பை கட்டு கட்டுவது எனக்கு பிடித்திருந்தது.
எனக்கு பிடிக்காத லோகட் டைட்ஸை அவள் போடாமல் இருப்பதும், சுவிங்கம் மெல்வதையும், நடு நடுவே பேசும் அவளது குணத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டதையும், என்னால் உணர முடிந்தது. அவ்வப்போது ஷ்ரத்தாவின் வருகைக்காக காத்திருப்பின் போது நான் அடிக்கும் தம்மை பற்றி ஏதும் சொல்ல மாட்டாள். எனக்கான முடிவுகளை டாமினண்டாக அவள் எடுப்பதை தவிர. ஆனால் அது எனக்கு இன்னமும் பிடித்துதானிருந்த்து
.
.
இந்த் மூன்று மாதங்களில் இருவரும் ஒரு மாதிரி மேட் பார் ஈச் அதர் போன்ற ஒரு உணர்வு வந்துவிட்டது. என்றே சொல்ல வேண்டும். எல்லாம் ஸ்மூத்தாக போய் கொண்டிருக்கும் போது காதலுக்கு பிரச்சனையில்லை என்றால் அப்புறம் என்ன காதல்? எங்களுக்குள் முதல் முதலாய் வந்த ப்ரச்சனை. அன்று மட்டும் நானும் அவளும் அந்த மழை நேரத்தில் தனியாய் அவளின் ப்ளாட்டில் தங்குவதை தவிர்த்திருந்தால் நிச்சயம் சண்டை வந்திருக்காது.
Post a Comment
1 comment:
மீண்டும் வாசிக்கும் போது இன்னும் சுவராஸ்யமாஉ....
Post a Comment