கொத்து பரோட்டா -30/03/15
மினி ரிவ்யூ -100 days of Love துல்கர், நித்யாமேனன், இருவரையும் போஸ்டரில் பார்த்த மாத்திரத்தில் அட பார்க்கலாமே என்று முடிவெடுத்தேன். 500 days of summer போல 100 நாள் கதை. ஆனால் அதை ஜிக்சாக்காக சொல்லாமல் ரிவர்ஸில் சொல்லியிருக்கிறார்கள். துல்கர் நித்யாவை ஒரு மழை தருணத்தில் பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்ள, அவர் மிஸ் செய்த பழைய பிலிம் கேமராவில் உள்ள பிலிமை டெவலப் செய்து அவரை தேடுகிறார். நித்யாவை கண்ட மாத்திரத்தில் தெரிகிறது பழைய பள்ளி தோழியென. பின்பு காதல் சொல்லலாம் என்றால் வில்லனாய் வேறொஉ உயர் ரக காதலன். அவனுடனான நிச்சயதார்த்தம். என டெம்ப்ளேட் மின்னலே கதையாய் போகிறது. நித்யா மேனனை தேடுகிறேன் பேர்விழி என அமைத்திருக்கும் திரைகக்தை ஆமை வேகம். அதிலும் பின்னணியிசை எரிச்சல். பின் பாதியில் வரும் ஒரிரு காட்சிகளும், க்ளைமேக்ஸ் நெருக்கத்தில் வரும் எமோஷன் காட்சிகள் சேவிங் கிரேஸ். ஐரோப்பிய படங்களைப் பார்த்து அங்கிருந்து சுட்ட காட்சிகளாய் இருந்தாலும் காதல் படம் என்று வரும் போ குட்டியாய் ஒரிரு இடங்களில் வந்தாலும் புதிய இளைஞர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் வருகிறது ‘ ...