பயணம்
பெஞ்ச் டாக்கீஸ் -1
நேற்று மாலை நண்பர் முரளி சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஓலாவில் ஆட்டோ புக் செய்தேன். முதலில் வந்த ட்ரைவர் போன் செய்து தான் ஆலந்தூரில் இருப்பதாகவும், உடனே வர முடியாது என்றார். பின்பு மீண்டும் ஆட்டோவே ட்ரை செய்த அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆட்டோ ஆஜர். மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து அம்பாமால் வரைக்குமான கட்டணம் 104 ரூபாய் சில்லறை. +10 ரூபாய். மீண்டும் இரவு பத்து மணிக்கு ஓலா ஆட்டோவே புக் செய்தேன். அம்பா மால் வாசலில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை. இம்முறை 110 ரூபாய் ஆனது +10 ரூபாய். ஆனால் மிக அருமையான கஸ்டமர் சர்வீஸ். இன்று பேப்பரில் ஆட்டோ சங்க ஆட்கள் நேற்று போராட்டம் செய்தார்களாம். ஓலாவில் 10 ரூபாய் அதிகமாய் பணம் வாங்குகிறார்களாம். அது சட்டத்திற்கு விரோதமாம். பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமாம். நேற்று இரவு அம்பா மாலில் ஆட்டோ ஏறுவதற்கு முன்னால் ஆட்டோவை லொக்கேட் செய்ய அவருக்கு கால் செய்து கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரர் “எங்க சார் போகணும்?’ என்று கேட்டார். இப்பவாச்சும் திருந்தியிருக்காங்களா?ன்னு பார்க்கிறதுக்காக பக்கத்தில இருக்கிற நுங்கம்பாக்கம் ஹைரோட்டுக்கு போலாமா என்றேன். 150 ரூபா என்றார். நான் வரும் போது சைதாப்பேட்டைலேர்ந்தே 104 ரூபாய்க்குத்தான் இங்க வந்தேன். என்றேன். இவனுங்களும் திருந்த மாட்டாங்க.. திருந்தி தொழில் பண்றவனையும் வாழ விட மாட்டாங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@
பெஞ்ச் டாக்கீஸ் -1
ஆறு குறும்படங்களை முழு நீளத் திரைப்படமாய் தொகுத்து வெளி வந்திருக்கும் படம். வழக்கமாய் இம்மாதிரியான் படங்களுக்கு ஏதேனும் ஒரு பொதுத்தன்மை இருக்கும். கேரளா கஃபேயில் வரும் காப்பி கிளப், மும்பை காலிங் போன்ற படங்களில் நகரின் பின்னணி. சமீபத்தில் வந்த வைல்ட் டேல்ஸில் வன்மமும், துரோகமும் போல. ஆனால் இப்படத்தில் அம்மாதிரியான பொதுத்தன்மை இல்லை. ஆறும் ஆறு விதமான படங்கள். The Lost Paradise இது தான் முதல் படம். ஹாப் வேயில் ஜெயிலிருந்து வெளியாகும் ஒரு கைதி தன் குடும்பத்தை தேடிப் போகும் கதை. முடிவு செண்டிமெண்டலாக இருந்தாலும் பெரிய திரைக்கும் ஏற்ற வைட் ஆங்கிள் விஷுவல்களும், கிரேன் ஷாட்களும்,நல்ல இசையோடு பயணித்தது. பட் ட்ரை. கோபக்குமாரின் அகவிழி இண்ட்ரஸ்டிங். டிவிஸ்டோடு இருந்தது. மது இத்தொகுப்பில் இருக்கும் ரிலாக்ஸ் ப்ளீஸ் எபிசோட். கொஞ்சம் லெந்தியாய் இருந்தாலும் சுவாரஸ்யமான வசனங்கள், நடிப்பு என போனது. க்ளைமேக்ஸாய் வந்தது கார்த்திக் சுப்புராஜின் நீர் குறும்படம். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற படம். இது தவிர புழு, நல்லதோர் வீணை போன்ற படங்கள் வன்மம், ஹோமோ செக்சுவல் போன்ற விஷயங்களை டீல் செய்திருந்தாலும் பஞ்ச் இல்லை. மொத்தத்தில் நல்ல முய்றசி. அடுத்த முறை ஏதாவது ஒரு கான்செப்டோடு, புதிதாய் பெரிய திரைக்காக எடுக்கப்பட்ட குறும்படங்களை தொகுத்தால் இன்னும் சிறப்பான விஷயமாய் அமையும். நான் கூட ரெடி என்று கார்த்திக்கின் சொல்லியிருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
எனக்குள் ஒருவன்.
கன்னட லூசியாவின் ரீமேக். கிட்டத்தட்ட அப்படியே எடுத்திருக்கிறார்கள். பாடல் காட்சி மற்றும் மிகச் சில விஷயங்களை மட்டுமே மாற்றி. சித்தார்த்தின் உழைப்பு படம் நெடுக. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, சந்தோஷின் பாடல்கள், ப்ரசாத் ராமரின் இயக்கம் என சிறப்பாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைகிறார் போல இருக்கிறது. கன்னடத்தில் பார்த்த கிரிஸ்ப்னஸ் இதில் இல்லையோ? சந்தோஷ் என்னாச்சு? எனிவே தமிழ் சினிமாவில் இம்மாதிரியான முயற்சிகள் தான் கேட்டலிஸ்டாய் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை
சென்னையிலேயே மல்ட்டிப்ளெக்ஸ் தவிர பெரும்பாலான சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களில் ப்ரொஜக்டர் பல்ப் மாற்றாமல் கருகும்மென படம் பார்க்கும் நிலைக்கு 80ம் 100 கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நல்ல தரமான ஒளி, ஒலியோடு, 50 ரூபாய் ஒரிஜினல் டிவிடியில் கொடுத்த சி2ஹெச் நிறுவனத்தின் முயற்சிக்கு வாழ்த்துகள். ஜே.கே என்பவன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் படம். அவன் ஏன் 35 ஆயிரம் சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு சுய தொழில் செய்கிறான்?. எதற்காக சீக்கிரம் பணம் சேர்க்க வேண்டுமென்று முயல்கிறான்?. எப்படி நல்ல நண்பனாய் இருக்கிறான்?. ஏன் ஏதோ ஒன்று அவனை துரத்துவது போலவே வாழ்கிறான்? என்பது போன்ற பல கேள்விகளை முதல் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன். படம் நெடுக பாஸிட்டிவான விஷயங்களை மட்டுமே முன் வைத்து, திரைக்கதையை அமைத்திருக்கிறார். வசனங்கள் ஆங்காங்கே பளிச். சித்தார்த்தின் ஒளிப்பதிவு ஸூத்திங். ஜி.வியின் பாடல்கள் மைன்ஸ்தான். நித்யா மேனன், உடன் வரும் நண்பர்கள், எல்லோரும் இயல்பு சந்தானத்தை தவிர, பிஸினெஸ் ஐயிடியாக்களும், அதை செயல்படுத்தும் விதமும் இம்ப்ரசிவ். ஆனால் இவையெல்லாம் எதற்கு என விளக்கும் இரண்டாம் பாதி தான் சீரியசாகி வாழ்க்கை, வலி, இறப்பு என பயணித்து நெகட்டிவான விஷயங்களை நோக்கி சென்று, அதையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ளும் படியான திரைக்கதையை அமைத்ததினால், கான்பிளிக்ட் இல்லாமல் போய்விட்டதினால், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை அழுத்தமில்லாமல் போய் விடுகிறது. படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒர் விஷயம் ஆர்ட் டைரக்ஷன் விஷுவலாய் நம் மனதையும், கண்ணையும் பறிக்கும் லொக்கேஷன்களின் பின்னணியாகட்டும், இண்டீரியரில் செய்த முனைப்பாகட்டும் உங்களுக்கு ஒரு பொக்கே
@@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும் படம் பார்த்துவிட்டு, போலீஸ் உயரதிகாரி ஒருவர் என்னை சந்திக்க அழைத்திருந்தார். எஸ்.எம்ஸிலும் பாராட்டியிருந்தார். நேரில் சந்திக்க போயிருந்தோம். நானும் என் இசையமைப்பாளரும். படத்தின் நிறைகளை எல்லாம் மிகச் சரியாய் சொல்லி, உங்களுக்கு இதுதான் முதல் படம்னா என்னால நம்பவே முடியலை என்றார். சந்தோஷமாய் இருந்தது. எல்லா படங்களையும் பார்த்திருக்கிறார். எழுதுகிறார். கலாரசனை உள்ளவராய் இருந்தார். ஆக்ஸிடெண்ட் செய்து கொல்லும் முறை பற்றியும், அதற்கான லாஜிக் பற்றியும் நிறைய பேசினார். படத்தில் அதை மீறாமல் செய்ததை பற்றியும் மேலும் இம்மாதிரியான கேஸ்கள் பற்றி பேச்சு போனது. அப்போது ஆக்சிடெண்ட் செய்து கொலை செய்யப்பட்ட்வரை மீண்டும் சாவு உறுதிபட ரிவ்ர்ஸ் எடுத்து ஏற்றியதை வைத்து கண்டுபிடிக்கப்பட்ட கேஸை பற்றி சொன்னேன். அவர் என்னை ஆச்சர்யமாய் பார்த்தார். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயம். அந்த கேஸை டீல் செய்தவர் அவர்தான். இன்னும் ரெண்டு மூணு சந்திப்பு நடந்தால் செம்ம ஐயிடியாக்கள் கிடைக்கும் போல.
@@@@@@@@@@@@@@@@
C2H மூலமாய் ஒரிஜினல் டிவிடி வெளிவந்த ஒரு மணி நேரத்தில் எட்டு ஜிபி வீடியோவாய் இருக்கும் அப்படத்தை ஒரு ஜிபி அளவிற்கு கம்ப்ரஸ் செய்து டோரண்டில் ஏற்றி விட்டார்கள். ஒரிஜினலுக்கு பைரஸி ரெடி. அதே குவாலிட்டியில். அவ்வளவுதான் பைரஸியை ஒழிக்கவே முடியாது. யாரும் காசு கொடுத்து வாங்கவே மாட்டார்கள், இத்திட்டம் தோல்விதான் என்று ஒரு புறம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பைரஸி டவுன்லோட் செய்தாலும், பணம் கொடுத்துத்தான் டவுன்லோட் செய்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாக்கு எட்டு ஜிபிக்கு ப்ராட் பேண்ட் வைத்திருப்பவர்கள் அதி ஒரு ஜிபிக்கு டவுன்லோட் செய்தால் கிட்டத்தட்ட 125 செலவு செய்துதான் பார்க்கிறார்கள். எல்லா புதிய விஷயங்களுக்கும் த்ரெஷ்ஹோல்ட் பீரியட் என்று ஒன்று இருக்கிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாய் நடத்த குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்காகவாவது தொடர்ந்து படங்களை அளித்து இதற்கான மார்கெட்டை நிலை நிறுத்தினால் பைரஸியை தேடியலைந்தோ, டவுன்லோடிட்டோ அலைவது நின்று, புதிய பழக்கத்திற்கு மக்கள் நடைமுறை பெறுவார்கள். கூடவே தமிழக அரசும், தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இவர்களோடு பைரஸியை லீகலாய் ஒழிக்க செயல்பட்டால் நிச்சய வெற்றி உண்டு என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A man bought a Lie detector robot that slaps people who lie. He decided to test it at dinner
DAD : Son where were you today during school hours?
SON : At school (robot slaps the Son and he immediately changes his mind) Okay I went to the movies!
DAD : Which one?
SON : Harry Potter (robot slaps Son again!) Okay I was watching porno.
DAD : What? When I was your age I didn’t even know porno! (robot slaps dad)
MUM : hahahahaha! After all he is your Son! (robot gives Mum a hot dirty slap)
கேபிள் சங்கர்

Post a Comment
3 comments:
cheran needs more marketing and visibility. i was serching the DVD in komarapalayam and couldnt find one.
namakkam district dealer didnt left the phone.
நிறைய விஷயங்கள்...
அருமை அண்ணா.
FYI, ACT broadband, annul subscription, rs.750per month, 45GB download. Need to pay 12 x 750 at beginning..
Post a Comment