Thottal Thodarum

Mar 16, 2015

கொத்து பரோட்டா -16/03/15 -ராஜதந்திரம், தண்ணில கண்டம், கதம் கதம், மகாபலிபுரம்,ஓலா, தமிழ் சினிமா, ட்ராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமியை அதிகாலையில் போய் கைது பண்ணியிருக்கிறார்கள். போலீஸ் பாதுகாப்போடு இருக்கிறவர் தப்பியோடவா போகிறார். அதுவும் அவர் மிரட்டல் விட்டாராம். புகார் கொடுத்தவரின் பாதுகாப்பு கருதி கைதாம். ம்ஹும். மிடியலை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@



இந்த வாரம் ராஜ தந்திரம், தண்ணில கண்டம், ஐவராட்டம், வானவில் வாழ்க்கை, சொன்னா போச்சு, மகாபலிபுரம், கதம் கதம், மேலும் ஒரு படமோ ரெண்டு படமோ வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது தவிர போன வாரப் படங்கள் பேருக்காகவாவது நாலைந்து ஸ்கீரின்களில் ஓட்டியாக வேண்டிய சூழ்நிலை வேறு. இத்துடன் ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் படங்களின் வெளியீடு. என்ன செய்யப் போகிறது தமிழ் சினிமா உலகம்?. இதை யாரும் வரையரைப் படுத்தாத வரை ரொம்பவே கஷ்டம் தான். ரசிகனுக்காக படமெடுத்த காலம் போய், சாட்டிலைட் சேனலுக்காக எடுத்து, தற்போது தியேட்டர்காரர்களுக்காக படமெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
@@@@@@@@@@@@@@@@@@
மகாபலிபுரம்
குறும்படத்திற்கான கதையை எடுத்துக் கொண்டு, அதை ரெண்டு மணி நேர படமாக்க எழுத தெரிந்திருக்க வேண்டும். என்ன செய்வது  என்று புரியாமல் முதல் ஒரு மணி நேரம் போய்க் கொண்டிருக்கிறது. ரெண்டாவது பாதியில் தான் கதை சொல்கிறார்கள். அதனால் செக்ஸ் வீடியோ, நண்பனின் துரோகம், என ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். பட்.. கேரக்டர்களை சரியாக நம்முள் விதைக்காததினால் பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@
கதம் கதம்
இந்தியில் ராஜ்குமார், தெலுங்கில் மோகன்பாபு என ஒவ்வொரு ஊரிலும் வசனங்கள் இவர்களால் பேசப்படும் போது சுவாரஸ்யம் கொடுக்கும். அந்த லிஸ்டில் தமிழில் நிறைய பேர் இருந்தாலும் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் சதுரங்க வேட்டை நட்டி. படத்தில் பெரிய பலம் ஷார்ப்பான வசனங்களும், இவர் பேசிய விதமும் தான். அப்படி இவரது டயலாக் பேசும் விதத்தினால் “கதம் கதம்” சுவாரஸ்யமாகிறது. ஒரு பக்கா 80"s ஃபீல் மசாலா
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Nice, engaging, interesting, con film#rajathandhiram
சட்டம் தன் கடமைய எவ்வளவு சீக்கிரமா செய்யுது
Intresting, feel good movie.‪#‎SuryaVsSurya‬
Semma First half.. telugu pada second half ‪#‎kingsmen‬
A pioneer has to suffer a lot because he is the only person who believes
என்னதான் ஆண் பிஸ்தா என்று சொன்னாலும் நிஜத்தில் அவன் அட்டக்கத்திதான் ‪#‎மகளிர்தினவாழ்த்துகள்‬ 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
King’sman The secret Service

The Secret service எனும் காமிக் புக்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த கிங்ஸ்மென். ஜேம்ஸ்பாண்ட் சீரியஸ் போல, பிரிட்டிஷ் உளவு துறை போலவே செயல்படும் கிங்ஸ்மென் குழுவில் பணியாற்றி தன் ஆட்களை காப்பாற்ற தன் உயிரை துறந்த ஒருவரின் பையன் தத்தாரியாய் திரிகிறான். அவனை கிங்ஸ்மென் குழுவில் ட்ரையின் செய்து எப்படி அவன் சிறந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டாகி உலகை காப்பாற்றுகிறான் என்பதே கதை. செம்ம ரிச்சான விஷுவல்கள். ட்ரையினிங் ப்ரோக்ராம்கள், அசத்தலான எடிட்டிங் ஆங்காங்கே வரும் சுவாரஸ்ய ஒன்லைனர்கள் என  முதல் பாதி முழுவதும் அதகளப்படுத்தியவர்கள் ரெண்டாவது பாதியில் வில்லன் கொலைகார வில்லன் சாமுவேல் ஜாக்ஸனை வைத்து ஆடும் க்ளைமேக்ஸ் எல்லாம் தெலுங்கு படங்களுக்கு ஈடாகப் போய் விடுகிறது. இருந்தாலும் ஒன் டைம் வாட்சபிள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
தண்ணீல கண்டம்
டிவி நடிகர் தீபக், சின்ன பாப்பா பெரிய பாப்பா புகழ் எஸ்.என் சக்திவேல் கூடவே மொட்டை ராஜேந்திரன். காம்பினேஷன். வழக்கமான சீரியஸ்னெஸ், லாஜிக் இல்லாத காமெடிதான். முதல் பாதியில் ஆங்காங்கே மிக லேசான புன்முறுவலைத்தான் கொடுக்கிறார்கள். பின் பாதியில் ராஜேந்திரனின் அறிமுகக் காட்சியில் அட போட வைக்கிறவர்கள். மெல்ல சுருதியிழந்து கடைசி சில காட்சிகளில் மீண்டும் புன்முறுவல் பூக்க செய்கிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@
ராஜ தந்திரம்
படம் பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களில் உள்ளிழுத்த படம். அதிகம் அறிமுகமில்லாத நடிகர்கள். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகிறது. பெட்டி கேஸுகளில் ஈடுபட்டு வாழும் மூன்று இளைஞர்கள் பெரிய மேட்டர் செய்ய விழைந்து மாட்டிக் கொள்ள, அது அவர்களுக்கு வைத்த ட்ராப் எனும் போது அதிலிருந்து ப்ரச்சனைக்கு காரணமான வில்லனுக்கு, போலீஸுக்கு, நடத்த போகும் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லியே கொள்ளையடிக்கிறார்கள். கடை ஓனர் ஏன் அதை ஒத்துக் கொள்கிறார்? கொள்ளை நடந்ததா? போலீஸ் என்ன செய்தது? என படு சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள். சிவா எனும் புதியவர் படம் நெடுக நகைச்சுவை இழையோட கொள்ளையடித்திருக்கிறார். நம் மனதையும் சேர்த்து. ஆங்காங்கு விழும் காதல் காட்சிகள் தவிர செம்ம கிரிப்பிங். திரைக்கதை, எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு, சந்தீப் சௌதாவின் பின்னணியிசை என எல்லாமே கிரிஸ்ப் அண்ட் ஷார்ட்.  இந்த வார டோண்ட் மிஸ் படம் ராஜ தந்திரம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் தாம்பரம் ஸ்டேஷனில் வாடிக்கையாளர்களை பிக்கப் செய்ய வந்த ஓலா மினி டாக்ஸியை அங்கிருந்த ஆட்டோ ஸ்டேண்ட் காரர்கள் அடித்து நொறுக்காத குறையாய் துரத்தி விட்டிருக்கிறார்கள். இதை நண்பர் ஜோ முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். நான் சொல்லலை.. இவனுங்களூம் திருந்த மாட்டாங்க.. திருந்தவும் விடமாட்டானுங்க..  இன்பேக்ட் சமீபத்தில் மேற்கு மாம்பலத்திலிருந்து லாயிட்ஸ் ரோடுக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் சேர்த்து ஓலா ஆட்டோவில் வெறும் 96 ரூபாய்தான் ஆனது. அங்கிருந்து மேற்கு மாம்பலம் வழியாய் ஓ.எம்.ஆருக்கு 600 சொச்சம். ஐ சப்போர்ட் ஓலா..
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
How do you make your girlfriend scream while having sex? 
Call her and tell her. 

Post a Comment

2 comments:

குரங்குபெடல் said...

விரைவில் ஆரம்பம் . . . . " ஓலாவில் ஓர் உலா " . . . இயக்கம் - கேபிள் சங்கர்

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...