மினி ரிவ்யூ -100
days of Love
துல்கர்,
நித்யாமேனன், இருவரையும் போஸ்டரில் பார்த்த மாத்திரத்தில் அட பார்க்கலாமே என்று முடிவெடுத்தேன்.
500 days of summer போல 100 நாள் கதை. ஆனால்
அதை ஜிக்சாக்காக சொல்லாமல் ரிவர்ஸில் சொல்லியிருக்கிறார்கள். துல்கர் நித்யாவை ஒரு
மழை தருணத்தில் பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்ள, அவர் மிஸ் செய்த பழைய பிலிம் கேமராவில்
உள்ள பிலிமை டெவலப் செய்து அவரை தேடுகிறார். நித்யாவை கண்ட மாத்திரத்தில் தெரிகிறது
பழைய பள்ளி தோழியென. பின்பு காதல் சொல்லலாம் என்றால் வில்லனாய் வேறொஉ உயர் ரக காதலன்.
அவனுடனான நிச்சயதார்த்தம். என டெம்ப்ளேட் மின்னலே கதையாய் போகிறது. நித்யா மேனனை தேடுகிறேன்
பேர்விழி என அமைத்திருக்கும் திரைகக்தை ஆமை வேகம். அதிலும் பின்னணியிசை எரிச்சல். பின்
பாதியில் வரும் ஒரிரு காட்சிகளும், க்ளைமேக்ஸ் நெருக்கத்தில் வரும் எமோஷன் காட்சிகள்
சேவிங் கிரேஸ். ஐரோப்பிய படங்களைப் பார்த்து அங்கிருந்து சுட்ட காட்சிகளாய் இருந்தாலும்
காதல் படம் என்று வரும் போ குட்டியாய் ஒரிரு இடங்களில் வந்தாலும் புதிய இளைஞர்கள் விரும்பத்தான்
செய்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் வருகிறது
‘ எனக்கு காதல் பிடிக்காது. அது கொடுக்கும் மொக்கை ரொமான்ஸை மீறி அதன் பின்னணியிலிருக்கும்
அழுக்கு பக்கங்கள் எனக்கு தெரியும். இருந்தாலும் ஐ லவ் யூ” என்று நித்யா மேனன் சொல்வார்.
அப்படித்தான் 100 டேஸ் ஆப் லவ்வும்.
மினி ரிவ்யூ –Vadakkan Selfie
மலையாள
சினிமாவின் இளைமை பட்டாளம். நிவின் பாலி, வினித் சீனிவாசன் காம்பினேஷன். முதல் பாதி
முழுவதும் படிப்பே வராமல் சினிமாவில் சேர்ந்தால் பெரிதாய் சம்பாதிக்கலாம் என்ற அடிப்படையில்,
அதுவும் தமிழ் சினிமாவில் கெளதம் வாசுதேவ் மேனனிடம் சேர்ந்தால் அஜித் பழக்கமாகி, அஜித்தை
வைத்து படமெடுக்கலாம் என்ற கனவில் தாந்தோன்றியாய் திரிகிறார் நிவின் பாலீ. ஒரு கட்டத்தில்
அப்பா கடையில் உட்காரச் சொல்ல, சினிமாவில் சேரும் கனவோடு, சென்னைக்கு ரயிலேறி விடுகிறார்.
ரயிலில் பக்கத்துவீட்டு சைட்டும் வர, திருட்டுத்தனமாய் ஒரு செல்பி எடுத்து பேஸ்புக்கில்
போடுகிறார். சென்னைக்கு வந்த நாலு நாளில் சினிமா நமக்கு ஒத்துவராது என்று பேக் டூ பெவிலியன்
வந்தால் ப்ரச்சனை தலை மேல் உட்காந்திருக்கிறது பக்கத்து வீட்டு பெண்ணுடன் அவர் ஓடி
போனதாய். இல்லை என்றால் நம்ப ஆளில்லை. அதனால்
ஆமா என்று சொல்லி அவளை கூட்டி வருவதாய் சென்னை செல்கிறார். அவள் எங்கேயிருக்கிறாள்
என்று தெரியாமல் தேட ஆரம்பிக்க, பின்பு நடக்கும் சுவாரஸ்ய விஷயங்கள் தான் படம். வழக்கமான மலையாள படங்கள் போல
சவ சவ முதல் பாதி. கிரிப்பிங் செகண்ட் ஹாப். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்களினால்
இன்றைய காலங்களில் நடக்கும் விஷயங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். வினீத்
சீனிவாசன். ஒரே ஒரு காட்சியில் பாபி சிம்ஹா வருகிறார்.
@@@@@@@@@@@@@@@@@@
கோணங்கள்.
தமிழ் இந்துவில் எழுதி வரும் கோணங்கள் பற்றி நல்ல பீட் பேக் வந்து கொண்டிருகின்றது. வாரா வாரம் வரும் கடிதங்களே அதற்கு சாட்சி. நிறைய சந்தேகங்கள் கொண்ட மெயில் ஒரு பக்கம் என்றால் இன்றைய சினிமாவின் நிலை குறித்து விவாதிக்கும், அல்லது மேலும் பல தகவல்களை அளிக்கக்கூடாதா? என்ற கேள்விகளோடு வரும் கடிதங்கள் அதிகம். சமீபத்தில் ஒரு கடித்தத்தில் தமிழ் சினிமாவில் எப்படி தங்களை இணைத்துக் கொள்வது. அதாவது தயாரிப்பு, இயக்கம், மற்ற தொழில் நுட்ப சங்கங்களில் இணைவது எப்படி என்றெல்லாம் கேட்டு வருகிறது. எழுத பல விஷயங்கள் இருந்தாலும் இரண்டொரு வாரங்களில் இத்தொடர் முடிவடைய இருக்கிறது. மேலும் பல விவரங்களை அடுத்து வரும் தொடர்களில் எழுத விழைகிறேன். ஆதரவு தெரிவித்த உங்களுக்கும் வாய்பளித்த தமிழ் இந்துவுக்கும் என் நன்றிகள் பல. விரைவில் புத்தக வடிவில் உங்களை கோணங்கள் வந்தடையும்.
@@@@@@@@@@@@@@@@@
டான்பாஸ்கோ பள்ளி நிறுவனம் தீபிகா சார்பாக வருடா வருடம் நடக்கும் உலக குறும்பட விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராய் என்னை அழைத்திருந்தார்கள். இயக்குனர்கள் எஸ்.எஸ்.ஸ்டான்லி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குனர் ராம்பிரசாத், ராமதாஸ், பேரரசு, ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், தீபக் பாண்டே, மற்றும் பலர் கலந்து கொண்ட விழா. விழாவில் எத்தனை நாளைக்குத்தான் இலவசமாய் குறும்படங்களை போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது?. இலவசமாய் திரையரங்கு கொடுத்தவர்கள் எல்லாரும், அதை பணமாய் மாற்ற ஆரம்பித்து வருடங்களாகிவிட்ட நிலையில், குறும்படங்களை பணமாக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பேசினேன். எல்லோரும் கை தட்டினார்கள். பார்ப்போம் நானும் தொடர்ந்து பேசிக் கொண்டுதானிருக்கிறேன் எத்தனை பேர் குறும்பட திரையிடலுக்கு பணம் பெற மணி கட்டுகிறார்கள் என்று பார்ப்போம்.
டான்பாஸ்கோ பள்ளி நிறுவனம் தீபிகா சார்பாக வருடா வருடம் நடக்கும் உலக குறும்பட விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராய் என்னை அழைத்திருந்தார்கள். இயக்குனர்கள் எஸ்.எஸ்.ஸ்டான்லி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குனர் ராம்பிரசாத், ராமதாஸ், பேரரசு, ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், தீபக் பாண்டே, மற்றும் பலர் கலந்து கொண்ட விழா. விழாவில் எத்தனை நாளைக்குத்தான் இலவசமாய் குறும்படங்களை போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது?. இலவசமாய் திரையரங்கு கொடுத்தவர்கள் எல்லாரும், அதை பணமாய் மாற்ற ஆரம்பித்து வருடங்களாகிவிட்ட நிலையில், குறும்படங்களை பணமாக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பேசினேன். எல்லோரும் கை தட்டினார்கள். பார்ப்போம் நானும் தொடர்ந்து பேசிக் கொண்டுதானிருக்கிறேன் எத்தனை பேர் குறும்பட திரையிடலுக்கு பணம் பெற மணி கட்டுகிறார்கள் என்று பார்ப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Naan match parka aramvichen wicket outtttuuuu
கர் ஆபீஸு ப்ளான் நடந்திட்டிருக்கு மக்களே நம்பி ஆபீஸ் போவாதீங்க..
தினத்தந்திய படிக்கும் போதுதான் தெரியுது. அனைத்து தரப்பு மக்களும் அரசின் செல்போன் வரி குறைப்புக்காகத்தான் காத்திட்டிருக்காங்கன்னு #தினத்தந்தி
வரிசையாய் முப்பத்திஏழு டூவீலரில் ஹெட் லேம்ப் எரிகிறது. அதில் ஒர் ஆண்டியின் வண்டியும் அடங்கும். நேத்து சனிக்கிழமைக்கூட இல்லையே..
ஆயிரம்தான் காரணங்கள் சொன்னாலும் முட்டாள்தனத்தின் உச்சம் #தற்கொலை
மிகப் பெரிய ரிஸ்குகளைமிகச் சாதாரணமாய் எடுக்கும் அதே பெண்கள் தான் உயிரையும் மிகச் சாதாரணமாய் விடுகிறார்கள்#தற்கொலை
Though we know the story.. film work very much.. #Cinderella
After a long time a movie tells me to think about me and about my life#evudasubramaniam
Met Mr. Singaravelan two days back.. intresting meet.
டைட்டில்” என்கிற குறும்பட வெளியீட்டிற்கு போயிருந்தேன். நிறைய நாஸ்டால்ஜியா. #தொட்டால்தொடரும்
ஒரு லீவு இல்லை, கடையடைப்பு இல்லை, நாப்பது பேராவது சாவலை என்னாங்கடா தலைவன் இத்தேகாண்டி நம்மூராயிருந்த. சும்மா அதகளம் பண்ணியிருக்க மாட்டோம்
பேசாம கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சிர வேண்டியதுதான் விக்கெட் வேணுமாம். இந்தியாவுக்கு வர்றேண்டா.. வர்றேன்.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Maria went home happy, telling her mother about how she earned $20 by climbing a tree. Her mom responded, "Maria, they just wanted to see your panties!" Maria replied, "See Mom, I was smart, I took them off!"
கேபிள் சங்கர்
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Maria went home happy, telling her mother about how she earned $20 by climbing a tree. Her mom responded, "Maria, they just wanted to see your panties!" Maria replied, "See Mom, I was smart, I took them off!"
கேபிள் சங்கர்
Post a Comment
No comments:
Post a Comment