Thottal Thodarum

Mar 13, 2015

சாப்பாட்டுக்கடை - Absolute Barbeque

பேலியோ டயட் பாலோ செய்ய ஆரம்பித்ததிலிருந்து சாப்பாட்டுக்கடை பக்கம் அதிகம் செல்வதில்லை. அதையும் மீறி சில அன்பு உள்ளங்கள் என்னை தீண்டி, உசுப்பேத்தி வாரத்தில் ஒரு நாள் எடுக்கும் சீட்டிங் டயட்டை ரெண்டு நாளாக்கி விட துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தூண்டிய நண்பர் தான் எழில். இந்த சாப்பாட்டுக்கடையைப் பற்றி ஒரு பத்து நிமிஷம் அஹா ஓஹோவென சொல்லி, நான் இன்னும் சாப்பிடலை. ஒரு நாள் போகணும் என்றார். சாப்பாட்டுக்கடை ஓனரான என்னிடம் இப்படி சொன்னவுடன் “அட நாம அவுட்டேட் ஆயிட்டா அப்புறம் தமிழ் சாப்பாட்டுச் சமூகத்தை யார் காப்பாத்துறது?’ என்ற பெரும் பொறுப்பு என்னை விடாமல் துரத்த, ரெசிடென்ஸிக்கு பக்கத்தில் உள்ள பழைய நட்ஸ் அண்ட் ஸ்பைஸ் கடையின் மூன்றாவது தளத்தில் அமைந்திருக்கும் அப்சல்யூட் பார்பிக்யூ வில் ஆஜரானேன். 


லிப்டில், மாடிப் படிகளில் லாபியில் நிற்கும் காரில் எங்கெங்கு காணிணும் செட்டுப்பிகர்கள், ஆண்டிகளின் அணிவகுப்பு. வாசலில் இருந்த அசாம் பையன் அசாம் போலவே ஆங்கிலத்தில் இன்னைக்கு நைட்டுக்கு ஆகாது. போய்ட்டு நாளைக்கு வாங்கன்னான். அஹா.. நாம ஒரு முடிவெடுத்துட்டா அதை நாமளே மாத்த நினைச்சாலும்  முடிவு மாத்திக்காதே.. பரவாயில்லை வெயிட் பண்ணுறேன் என்று அடமாய் அங்கிருக்கும் சோபாவில் போய் அமர்ந்தேன். வெயிட்டிங்கில் உட்கார்ந்திருந்த லெக்கின் அழகியின் பக்கத்தில். அது என்ன மாயமோ தெரியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு இடம் அளித்தார்கள். 

வழக்கப்படியான டேபிளின் நடுவில் குமுட்டி வைப்பதற்கான இடத்தோடு இருக்க, வெஜ் ஆர் நான் வெஜ் என்றான் இன்னொரு அசாமியன். எட்டு நூறு கொடுப்பதற்கு என்ன இதுக்கு வெஜ் மட்டுமென்று முடிவுடன் நான் வெஜ் என்றேன். சடசடவென குமுட்டி அடுப்பை கொண்டு வந்து வைத்தவன், ப்ரான், கொரியன் சிக்கன், ஃபிஷ், பன்னீர், ஆலு, மஷ்ரூம் என அயிட்டங்களை குச்சியில் குத்தி அடுப்பின் மேல் வைத்து ஒவ்வொரு பெயராய் சொன்னான். அவன் சொன்ன பெயர்களை புரிந்து நான் இதை எழுதவில்லை. மெனுவைப் பார்த்து புரிந்து கொண்டேன். அம்பூட்டு தெளிவு அசாமிய பையன் உச்சரிபில்.

வழக்கமான சிக்கன், பிஷ், ப்ரான், வெஜ்ஜில் பன்னீர், மஷ்ரூம், மட்டன் ஷவர்மா ரோல், உருளை,என வரிசை கட்டியது. சிக்கனை கொரியன் சிக்கன் என்றான். குட்டிக் குட்டி பீஸ்களாய் மசாலாவோடு ஊறி அதை மிக அழகாய் கம்பியில் சொருகியிருந்தான் ஒரு சில நிமிடங்களில் அதை சூடு படுத்தி வாயில் போட்டால் வாவ்.. வாவ்.. நிஜமாகவே டிவைன். வழக்கம் போல் ப்ரான் கொஞ்சம் கடுக்கு முடுக்கு என்றிருந்தது. பைனாப்பிள் வாவ்..வாவ்.. செம்ம.. கூடவே பன்னீர் செம்ம ஸாப்ட்டாய், பஞ்சு போல..  அடுத்ததாய் மெயின் கோர்ஸ் என பிரியாணி, நான், தால், என வழக்கமாய் வரிசைக்கட்டி வைத்திருந்தார்கள். ஆனால் தேவையான அளவிற்கு பார்பக்யூவையே ஒரு கட்டு கட்டிவிட்டதினாலும், மேலும் ஸ்பெஷல் பார்பக்யூ அயிட்டங்களான வெஜ் மற்றும் நான் வெஜ் ஷார்க், ரேபிட் போன்றவை மற்றுமில்லாமல், ஸ்பெஷல் ஐஸ்க்ரீம் மிக்ஸிங்கும், பதர் பேணி போன்ற அற்புதமான டெசர்ட்டும், உடன் வரும் கேக், மற்ற அயிட்டங்களைப் பற்றி இங்கே எழுதினால் உங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட பாவம் வரும் என்பதால் உடனடியாய் ஒரு ரவுண்ட் அடித்துவிடுங்கள். திங்கள் முதல் புதன் வரை 650+டாக்ஸ் வியாழன் முதல் ஞாயிறு வரை 850+டாக்ஸ்.. என் ஜாய்










கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Ramesh said...

"எட்டு நூறு கொடுப்பதற்கு என்ன இதுக்கு வெஜ் மட்டுமென்று முடிவுடன் நான் வெஜ் என்றேன்" -
தயவு செய்து தங்களின் தமிழ் வாக்கிய அமைப்பை சீர் திருத்திக் கொள்ளுங்கள். மேலே கொடுத்துள்ளது ஒரு உதாரணம் மட்டுமே. நம் தலைவர் மறைந்த சுஜாதா அவர்கள் படித்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.அன்புடன் ரமேஷ், மதுரை.

அமர பாரதி said...

கேபிள்ஜி எழுத்து எனக்குப் புரியுது, ஜன ரஞ்சகமா இருக்கு. அந்த வாக்கியத்தை எப்படி சீர் திருத்தி அமைப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?

குரங்குபெடல் said...

"ஆண்டிகளின் அணிவகுப்பு.லெக்கின் அழகியின் பக்கத்தில் "



வெளங்கிடும் . . . அண்ணே . . .

Devi said...

Since when you have become a female unfriendly blogger Mr.Sankar? Seetu figure, leggings Azhagi n aunties anivagupu. You have many female followers and fans too. Try not to forget. :(