நிகில் சித்தார்த் ஹேப்பி டேஸ் படத்தின் மூலமாய் அறியப்பட்டவர். மெல்ல முன்னேறி ஒரிரண்டு படங்களில் ஹீரோவாக தலை காட்டினாலும், பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படியான படம் அமையாமல் இருந்தவருக்கு சுவாமி ரா.. ரா படம் ஒரு ப்ரேக்கை கொடுத்தது. பின்பு இதோ இந்த கார்த்திகேயா.. தற்போதைய ஹாட்ரிக் ஹிட் சூர்யாv/s சூர்யா. இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் ரிலீஸான போதே தமிழில் ரிலீஸ் செய்ய தயாராய் இருந்தார்கள். படத்தை பார்த்துவிட்டு ஆர்.பி.சவுத்ரி ரீமேக் செய்ய விருப்பப்பட்டு வாங்கி வைத்துவிட்டதாய் சொன்னார்கள்.
சுப்ரமணியபுரம் எனும் ஊரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அதனால் அக்கோயிலை மூடி வைத்திருக்கிறார்கள். அக்கோயிலைப் பற்றி விசாரிப்பவர்கள் பாம்பு கடித்து இறக்கிறார்கள். மெடிக்கல் படிக்கும் ஹீரோ தன் சகாக்களுடன் ஊருக்கு மெடிக்கல் கேம்புக்கு வர, விஷயம் தெரிந்து தன் ஆர்வக்குட்டி வேலையை காட்ட, பாம்பு அவரை அழிக்க வருகிறது. பாம்பை பிடித்து ரெப்டைல் டிபார்ட்மெண்டில் விசாரிக்க, கிடைக்கும் விஷயம் அமானுஷ்யத்திலிருந்து திரில்லராய் மாறி முடிகிறது. படத்தின் கதை என்னவோ பழசுதான் அதை சொன்ன விதத்தில்தான் சுவாரஸ்யம்.
இளைமையான ஹீரோ, அழகு சுவாதி, உறுத்தாத நகைச்சுவை. விறு விறு திரைக்கதை, நல்ல விஷூவல் எபெக்டுகள் என கலந்து கட்டி அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். நல்ல சுவாரஸ்ய த்ரில்லருக்கு கார்த்திகேயா
Cable Sankar
இளைமையான ஹீரோ, அழகு சுவாதி, உறுத்தாத நகைச்சுவை. விறு விறு திரைக்கதை, நல்ல விஷூவல் எபெக்டுகள் என கலந்து கட்டி அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். நல்ல சுவாரஸ்ய த்ரில்லருக்கு கார்த்திகேயா
Cable Sankar
Post a Comment
1 comment:
Actually in recent times I stopped watching tamil movie because of weak content and bad acting etc telegu movie always kept a safe distance , but got interest in the plot and lord murga watched this movie with a little fear inside of watching a telegu movie , ,showed typical telegu movie standard , absolute disaster.2 hr movie ,1:30 hr with love and comedy and 30 ....... this is funny to know that this is a hit , still telegu audience still not changed ......
Post a Comment