Thottal Thodarum

Apr 13, 2015

கொத்து பரோட்டா - 13/04/15

CINDERELLA
பணக்காரப் பெண், பாசமான தந்தை, அம்மாவின் இறப்பு, கொடுமைக்கார சித்தி என ஏற்கனவே தெரிந்த கதை தான். கஷ்டப்படுவதாய் காட்டப்படும் அத்தனை பெண்களும் என்றைக்காவது ஒரு ராஜகுமாரன் தன்னை வந்து தூக்கிக் கொண்டு போக மாட்டானா என்று ஏங்கும் பேண்டஸி டெம்ப்ளேட் கதை. அனிமேஷன்,
கதை, என பல முறை பார்த்து, படித்து, கேட்டு பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் மீண்டும் டிஸ்னி அதை திரைப்படமாய் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். வழக்கம் போல சூப்பர் ஹிட். இன்றும் ஏதாவது மிராக்கிள் நடந்து வாழ்க்கை மாறிவிடாதா என்ற குழந்தைத்தனமான ஏக்கம் யாருக்குத்தான் இல்லை?
@@@@@@@@@@@@@@@@
FAST AND FURIOUS 7
குருவியில் விஜய் ட்ரையின் ஜம்ப், லிங்காவில் ரஜினியில் பலூன் ஜம்ப் எல்லாவற்றையும் பார்த்து “ஐ தபாருடா” என்று கிண்டல் பண்ணியவர்கள் எல்லோரும், வாயைப் பிளந்து கொண்டு பார்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூல். பால் வாக்கரின் மயிர்கூச்செரியும் பஸ் ஜம்ப் உட்டாலக்கடியாய் இருந்தாலும் கூட,செம்ம. அவரின் மறைவு. அதற்காக அவரை சாகடித்து இந்திய முறைப்படி நெஞ்சை நக்காமல், எங்கே போனாலும் நீ என்னோடதான் இருப்பே எனும் விதமாய் அமெரிக்கத்தனமாய் நக்கி தீர்த்திருக்கிறார்கள். கார் பறக்கும் போதெல்லாம், தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் “ஆம்பல.. ஆம்பல” என்று ஒரிஜினல் படத்தில் பாடியது போலவே சின்ன “ல” போட்டு பாடியது சூப்பர் காமெடி. அந்த சிக் பெண்ணின் பீச் நடை, அட்டகாசம். பின் சீட்டில் வரிசையாய் அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தி “என்னமா இருக்கா? பாரு” என்று சத்தமாகவே பொறாமைப்பட்டாள். லாஜிக், கதை, என்ற கருமத்தை எல்லாம் பார்க்காமல் விஷுவலுக்காகவும், பிரபல நடிகர்கள் நடித்த படம் என்பதற்காகவும், பார்க்க தயார் என்றால் கோ.. ஃபார் இட். 
@@@@@@@@@@@@@@@@@@
சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது
முழுக்க முழுக்க கேனான் 5டியில் செய்திருக்கிறார்கள். ஊரு விட்டு ஊரு வந்து அவரவர் கனவுகளை சுமந்து கொண்டு அலையும் இளைஞர்களின் இளைபாறலுக்கான இடம் குறித்த படம். சேவல் பண்ணைகளாய் இருக்கும் மேன்ஷன், அல்லது பேச்சுலர் ரூம்கள், அதன் சந்தோஷம், துக்கம், ப்ரச்சனை, அதில் இருக்கும் ஒவ்வொருவருடய வாழ்க்கை என போகிறது கதை. பாபி சிம்ஹாவின் தேசிய விருதை வைத்து பொங்கல் வைத்திருக்கிறார்கள். குரலும் அவருடயது இல்லை. நண்பர்கள் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். பாபி உட்பட. மைனஸாய் நிறைய இருந்தாலும்,  கிடைத்த பணத்தில் எடுக்கபட்டிருக்கும் படமென்று நன்றாக தெரிகிறது. அதனால் கிடைத்த ரிசல்ட் படம் முழுக்க கண்டெண்டிலிருந்து, ப்ரசெண்டேஷன் வரை தெரிகிறது. மேன்ஷன் வாழ்க்கையை அனுபவித்திராதவர்களுக்கு கொஞ்சம் போராக தோன்றும், அனுபவித்தவனுக்கு நாஸ்டால்ஜியாவாக இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
S/O.Sathya Moorthy
தெலுங்கு பட ஹீரோக்கள் எல்லோருக்கும் தற்போதைய ஃபீவர் குடும்பப்பாங்கான, மசாலா படமெடுப்பது. கொஞ்சம் மிடில் ஏஜ் நடிகர்கள் என்றால் முழுக்க, முழுக்க, குடும்பம், லைட் ஆக்‌ஷன், இள வயது ஹீரோக்கள் என்றால் இரண்டும் கலந்து கட்டி, மசாலாத்தனமான கதையாய்  செலக்ட் செய்வது. மகேஷ்பாபுவும், வெங்கடேஷும், சிறு மல்லி மூலம் ஹிட் கொடுத்தால், பவன் கல்யாண், அத்தாரிண்டிக்கு தாரேதியின் மூலம் பேமிலி எண்டர்டெயினர் கொடுக்க, இப்போது அதே இயக்குனர் திரிவிக்ரமுடன் அல்லு அர்ஜுன். பெரும் பணக்கார வாழ்க்கை வாழ்ந்த ஹீரோ ஒரே ராத்திரியில் நடு ரோட்டுக்கு வந்து, பின்பு எப்படி குடும்பத்தையும், குடும்ப பெருமையும் காப்பாற்றி எழுகிறான் எனும் கதைதான். விஷுவல் செம்ம ரிச் என்றால் ஹீரோயினை விட அம்மா கேரக்டரில் வரும் நடிகைகள்  எல்லோரும் செம்ம பளீச். தேவி ஸ்ரீ ப்ரசாத் வழக்கம் போல கைவசமிருக்கும் நான்கு ட்யூன்களை வேறு வேறு பாடகர்களைக் கொண்டும், தானே பாடியும், பாடல்களை கொடுத்திருக்கிறார். வில்லனாய் கன்னட ஹீரோ, இயக்குனர் உபேந்திரா. பாவம் அவர். சிநேகா வேறு இருக்கிறார். படம் முழுக்க, தப்புப்தப்பாய் தமிழ் எழுதியிருப்பதை பார்த்தால் இரு மாநில உறவுகளை நாசம் செய்ய தெரிந்தே செய்த சதியாய் தோன்றுகிறது. சமந்தாவின் லோ ஷுகர் மேட்டர் சுவாரஸ்யம். நித்யா மேனன் என்னத்துக்கு வருகிறார் என்றே தெரியவில்லை. ம்ஹும். ஆங்காங்கே சில சுவாரஸ்யங்களை தவிர்த்து பார்த்தால் அப்பா பேரை காப்பாத்தலை.
@@@@@@@@@@@@@@@@@@@
தமிழில் முதல் பாயிண்டாப் வியூ படமாய் வந்தது ஓர் இரவு. அது ஒரு பேய் படம். இயக்கியவர்கள் ஹரீஷ், ஹரி சங்கரும். தற்போது கிட்டத்தட்ட ஒர் ஆக்‌ஷன் கேமுக்கான விஷ்வலோடு ஹார்ட்கோர் என்ற ஒரு படம் வெளிவர இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வருஷங்கள் கழித்து கன்னட திரைப்படத்தை வெண் திரையில் அதுவும் சென்னையில் மிடியலை..லூசியா எடுத்த ஊரில் தான் இதையும் எடுக்குறாங்க ‪#‎RanaVikrama‬

குடும்ப, செண்டிமெண்ட், வயலண்ட் மசாலா தூவிய சாதாரணமான படம் ‪#‎SunofSubramaniyam‬

பத்து குருவி, இருபது வில்லு, முப்பது ஆம்பளை எல்லாம் சேர்த்து‪#‎FastFurious7‬

சுட்டது தப்புன்னா.. திருடப் போனது சரியா?


சுட்டதும் தப்பு, திருடனதும் தப்பு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் ஒரு வாரத்துக்கு தெலுங்கு படம் பார்க்க போறதில்லை. போதுமாய்யா..
smile emoticon


உங்க கிட்ட சொல்லாம ஒரு விஷயம் பண்ணிட்டேன்?

என்னம்மா?
மிஸ்ட் கால் கொடுத்து பி.ஜே.பில சேர்ந்திட்டேன்.
தமிழகத்தின் விடிவெள்ளி தயார்.
smile emoticon

சுட்டதும் தப்பு, திருடனதும் தப்பு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் ஒரு வாரத்துக்கு தெலுங்கு படம் பார்க்க போறதில்லை. போதுமாய்யா
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
ஜூவில் மனித குரங்கைப் பார்த்த மனைவி கணவனிடம் “மனித குரங்கு அப்படியே ஒர் ஆணைப் போல” என்று சொல்லியபடி “தன் இடது பக்க மார்ப்பை திறந்து காட்டினாள். மனித குரங்கு டென்ஷனாகி கம்பியை பிடித்து குதிக்க ஆரம்பித்தது, மனைவி கணவனைப் பார்த்து “பார்த்தியா?” என்றபடி வலது பக்க மார்பையும் திறந்து காட்ட, குரங்கு ரொம்பவும் டென்ஷனாகி, கம்பியை உடைத்து வந்துவிடும் போல செய்கை செய்தது. “நான் சொல்லலை குரங்கும் மனித இன ஆணும் ஒன்றென்று ஈஸியா ஆணுக்குள்ள மிருக குணத்தை கொண்டு வந்திருவாங்க” என்றபடி தன் பின் பக்கத்தை ஸ்கர்ட் தூக்கி காட்ட, குரங்கு டென்ஷனாகி, கம்பியை வளைத்து வெளியே வந்து அவளுடன் உறவு கொள்ள தயாராக பயந்து போன மனைவி கணவனிடம் “அய்யோ இப்ப என்னங்க செய்யுறது? “ என்று கேட்டாள். “நீ தானே சொன்னே குரங்கும் ஆம்பளையும் ஒண்ணுன்னு அதுங்கிட்ட இப்ப எனக்கு இண்டர்ஸ்ட் இல்லை அதனால வேண்டாம் சொல்லிப் பாரு.. மனுஷ ஆம்பளைங்களைப் போல கேட்டுட்டு போயிருதான்னு பாப்போம்னான்.

Post a Comment

3 comments:

Unknown said...

நீர் பச்சையான RSS என்பது உமது எழுத்தில் இருந்தே தெரியும் ...இப்ப என்ன புதுசா பிஜேபியில் சேர்ந்துட்டேன் என்று தகவல் ....................

Unknown said...

aama kashmiril HP yil vellam endral army varuthu. tamil naattil malai polinthaal army varathu een endral avargal indiyargal naam tamilargal power plant ellam center invest panni maintain pannuthu northmadras powerplantil irunthu power keralavukku kettal thaan oravansanai

நெல்லைத் தமிழன் said...

எழுத்தை ரசிப்பதற்குப் பதிலாக ஏந்தான் தமிழர்கள் அரசியலைப் புகுத்துகிறார்களோ. கேபிள் எந்தக் கட்சியா இருந்தா என்ன. அவர் கருத்தையும் அனுபவத்தையும் எழுதறார். ரசிப்பதை விட்டு விட்டு...