போனவாரம் எழுதின சாப்பாட்டுக்கடைக்கு நல்ல வரவேற்பாம். கடைக்காரர் போன் செய்து சொன்னார். நாற்பது பேர்களுக்கு மேல் வந்து சென்றிருப்பதாகவும், ரொம்ப சந்தோஷமென்றார். டயட்டிலிருக்கும் என்னை டெஸ்ட் செய்து பார்க்கவைக்கும் காலமிது. வாரம் ஒரு நாள் சீட்டிங் டேயில் நடத்தி விடுகிறேன் என் ஆட்டத்தை. அன்றைக்கு என்னைக் கூட்டிப் போன ரகோ நேற்று ஈ.சி.ஆரில் ஒரு உணவத்தில் சாப்பிட்டுவிட்டு என்னைப் பற்றி சொல்லியிருக்கிறான். கடைக்காரர் ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லிவிட்டு, யாருக்கோ போன் செய்து “நீங்க யார் பெயரையோ சொன்னீங்களே அவரு பேர் என்ன என்று கேட்டிருக்கிறார்.
வந்த பதிலில் அவர் முகம் மகிழ்ச்சியில் பூரித்து, நீங்க சொன்னவர் பேர் தான் சொன்னாரு. அவரு நம்பர் கொடுங்க நம்ம ஹோட்டலுக்கும் கூப்பிடணும் என்றாராம். ரகோவுக்கு சந்தோஷம். என் டயட்டுக்கு சோதனை வந்திரும் போல இருக்கே.. பேலியோ கடவுள் ரட்சிப்பாராக..:)
வந்த பதிலில் அவர் முகம் மகிழ்ச்சியில் பூரித்து, நீங்க சொன்னவர் பேர் தான் சொன்னாரு. அவரு நம்பர் கொடுங்க நம்ம ஹோட்டலுக்கும் கூப்பிடணும் என்றாராம். ரகோவுக்கு சந்தோஷம். என் டயட்டுக்கு சோதனை வந்திரும் போல இருக்கே.. பேலியோ கடவுள் ரட்சிப்பாராக..:)
@@@@@@@@@@@@@@@@@@@
ஓகே காதல் கண்மணி
தடதடக்கும் இரண்டு ரயில்களுக்கு நடுவில் நாயகன், நாயகி அறிமுகம், நாயகி ரயில் முன் விழுந்து தற்கொலை செய்யப் போகிறாள் என்ற காட்சியில் ஆரம்பித்து, அதன் பிறகு நடக்கும் அத்துனை விஷயங்களும் க்யூட்..க்யூட்.. க்யூட். ஷார்ட் அண்ட் ஸ்வீட் வசனங்கள். இளமை ததும்பும் விஷுவல்ஸ், நித்யா, துலகர் கண்களில் தெரியும் குறும்பும், இளமை கெக்கலிப்பும். வாழ்க்கையில் கமிட்மெண்ட் இல்லாமல் வாழ தயாராகும் இருவருக்கும், கமிட்மெண்ட்டையே வாழ்க்கையாய் வாழும் தம்பதிகளிடையே இருக்கும் உருக்கமென மெலோ ட்ராமா, அழுகாச்சி இல்லாத காட்சிகள். ஸூத்திங் பின்னணியிசை. மணி சார். குறையாய் காரா ஆட்டக்காரா, மனமன மெண்டல் பாடல்களைத் தவிர அலைபாயுதே போல கட்டிப் போடும் பாடல்கள் இல்லாமை, கான்பிளிக்ட் இல்லாத திரைக்கதை, அதனால் அழுத்தம் குறைந்து போய் கொஞ்சம் நீர்த்தாலும், நீட்டான, உற்சாகமான காதல் படம் பார்த்து எத்தனை நாளாகிவிட்டது. மணி சார் இஸ் பேக்.
@@@@@@@@@@@@@@@@@@
காஞ்சனா-2
முனி 3 ஆக ஆரம்பித்து, ஏற்கனவே ஹிட்டடித்த காஞ்சனா இருப்பதால் அதன் ப்ரான்சைஸாக பெயர் வைத்தால் இன்னும் மைலேஜ் கிடைக்குமென்று காஞ்சனா 2 ஆக்கிவிட்டார்கள். கோவை சரளா, லாரன்சின் கேரக்டரை மட்டுமே வைத்துக் கொண்டு போன எபிசோடில் வந்த பல பேரின் கேரக்டரை மாற்றியிருக்கிறார்கள். ஸோ.. லாஜிக் என்ற வஸ்துவை கண்டிப்பாக பார்க்க கூடாது என்பது புரிந்து கொள்ள வேண்டியது. முதல் பாதி முழுக்க, வழக்கம் போல யார் இடுப்பிலாவது ஏறி உட்காரும் காமெடி, உச்சா போகும் காமெடி, டபுள் மீனிங் காமெடி என காமெடியாய் போகிறது. பாத்ரூமிற்கு துணைக்கு இருக்க, வாட்ச்மேன் மயில்சாமி மேட்டர் செம்ம. பேய் பிடிக்கும் வரை ஓகே. ஆனால் ஒரு பேய்க்கே முடியாதுடா சாமி எனும் போது ஐந்தாறு பேயை வைத்துக் கொண்டு, சென்ற படத்தில் அரவாணி சிம்பதி என்றால் போலியோவால் பாதிக்கப்பட்ட பெண். அவருக்கும் லாரன்ஸுக்குமான காதலில் கொஞ்சம் கூட அழுத்தமேயில்லை என்னவோ காதல், ஊனம், வில்லன், குட்டிப் பெண் சிநேகிதி, அவள் புருஷன் என கதை சொல்லி, இரண்டாம் பாதி முழுவதும் பேய் முழி முழிக்க வைத்திருக்கிறார்கள். போதும்.. விட்டுருங்க..
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் ட்வீட்டிலிருந்து
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்,... இத்தோட நிறுத்திக்கங்க மிடியல.
U/a for ok kanmani. Ivanga comedykku alaveyillai
காதலிச்சவங்களுக்கும் காதலிக்கிறவங்களுக்கும் #OKKanmani
என் தலைவன் ரிட்டர்னாம்..#OKKanmani
U/a for ok kanmani. Ivanga comedykku alaveyillai
காதலிச்சவங்களுக்கும் காதலிக்கிறவங்களுக்கும் #OKKanmani
என் தலைவன் ரிட்டர்னாம்..#OKKanmani
Post a Comment
1 comment:
nice
Post a Comment