Thottal Thodarum

Apr 27, 2015

கொத்து பரோட்டா- 27/04/15

என்ன தவம் செய்தேன்
பாப்தாவின் ஆரம்ப விழாவில்  முதல் முறையாய்  இயக்குனர் மகேந்திரனை சந்திக்கும் பாக்யத்தை பெற்றேன். நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடனேயான சந்திப்புகளுடனேயே இயங்குவதால் என்னால் நிறைய பேரைப் பார்த்து பிரம்மிக்க முடிவதோ, முயல்வதோ இல்லை. அவர்கள் மேலிருக்கும் மரியாதை என்பது தனி. ஆனால் இவர் மீது எனக்கு பிரம்மிப்பும், மரியாதையும் அதிகம். விழாவின் முடிவில் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்ட போது, “அஹா.. மிஸ்டர்.சங்கர். உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். உங்க புத்தகம் ஒன்று என்னிடம் இருக்கு. சாப்பாட்டுக்கடை இனி நாம அடிக்கடி சந்திப்போம்” என்று தன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார். எனக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.

அதன் பிறகு ஒரு நாள் பாப்தாவில் அவரை சந்திந்து என் புத்தகங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு, பேச ஆரம்பித்தோம். என் சினிமா அனுபவங்களைப் பற்றி கஷ்டத்தை கூட சிரிக்கக் சிரிக்கத்தான் சொல்வேன். அவர் ரசித்தார். பின்பு இன்றைய சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பேச்சு, மதியம் லஞ்ச் என்று அவரிடமிருந்து ப்ரியவே மனமில்லாமல் பிரிந்தேன். பின்பொரு நாள் அவரின் மகன் ஜான் எனக்கு ட்விட்டரில் “என்னவோ தெரியலை கடந்த ஒரு மாசத்தில அப்பாவை பாக்கும் போதெல்லாம் உங்களை பத்தி பேசாம இருக்கறதேயில்லை” என்றார். எனக்கு சந்தோஷத்தில் கை கால் ஓடவில்லை. அடுத்த நாள் அவரை அழைத்தேன். என் சினிமா வியாபாரம் புத்தகத்தை படித்துவிட்டு, பாராட்டினார். சுவாரஸ்யமா எழுதுறீங்க மிஸ்டர் சங்கர். என்னதான் படம் பண்ணாலும், எழுதுறதை விட்டுறாதீங்க. என்றார். பின்பு பல  உலக படங்கள், இந்திய படங்கள், எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டுத்தான் ஓய்ந்தோம். அடுத்த நாள் அவரை மீண்டும் பாப்தாவில் சந்தித்தேன். எல்லா புத்தகங்களையும் படித்து முடித்திருந்தார். அருமையான கதைகள் மிஸ்டர் சங்கர். நிறைய கதைகளை படமாய் பண்ணலாம் என்று பாராட்டிவிட்டு, அவருடய “சினிமாவும் நானும்” புத்தகத்தை கையெழுத்திட்டு பரிசளித்தார். அதன் பிறகு வேறு வேலையில் மூழ்கிவிட, இரவு மீண்டும் அழைத்து என் கதைகளைப் பற்றி மதியம் பேச முடியாததை சொல்லி, பாராட்டிவிட்டு, மீண்டும் சினிமாப் பற்றிய பேச்சு. எவ்வளவு பெரிய ஆளூமை. அவருடன் நான் சினிமா பற்றி அளவளாவுகிறேன். எக்சைட்டிஙாக இருக்கிறது.  இதை விட வேறென்ன பாக்கியம் வேண்டுமெனக்கு?  ஒரு வகையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
60ஜிபி 1099க்கு என ஏர்டெல்லின் விளம்பர பேனரைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் கோபம் கோபமாய் வந்தது. நான் தற்போது இருப்பது. 8 ஜிபி, 4mbps 1000 ரூபாய் ப்ளான். ஆனால் புதிதாய் இணைப்பு எடுக்கிறவர்களுக்கு முன்னே சொன்ன ப்ளான். வருஷங்களாய் இணைப்பு வைத்திருக்கிறவனுக்கு 8ஜிபி, புதுசாய் வாங்குகிறவர்களுக்கு 60ஆ என்ற கடுப்புடன் கஸ்டமர் சர்வீஸுக்கு போன் போட்டேன். செய்தியை கேள்விப்பட்ட மாத்திரத்தில் எதிர்முனை கொஞ்சம் இருங்க உங்களுக்கு அவ்வைலபிளிடி இருக்கான்னு பாக்குறேன் என்று ஹோல்டில் போட்டு பக்கத்து டேபிள் உயரதிகாரியோட பேசினார்கள். கொஞ்சம் நேரம் கழித்து, சார் வேண்டுமானால் உங்களுக்கு 40ஜிபி, 4mbps 1099 ருபாய்க்கு தர முடியுமென்றார். அதெப்படி புதுசா வர்றவங்களுக்கு மட்டும் 60ஜிபி என்று மீண்டும் ஆரம்பித்தேன். எதிர்முனை கீறல் விழுந்த ரெக்கார்டு போல உங்களுக்க் பீஸிபிலிட்டி கிடையாது என்பதையே மறுக்கா.. மறுக்கா சொல்லிக் கொண்டிருந்தான். உன்னிடம் பேசி வேலைக்காகாது உன் உயரதிகாரியிடம் கொடு என்றேன். லைன் மாறியது. அவரும் அதே போல சொன்னதையே சொல்ல, நான் கனெக்‌ஷன் கேன்சல் செய்து கொள்ளுங்கள் என்றேன். சற்றும் யோசிக்காமல் வேண்டுமானால் 40 ஜிபி, 8Mbps 1099 ரூபாய்க்கு தருகிறோம் என்றார். புதுசாய் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஸ்கீம் என்றால் போன் செய்து கேட்க மாட்டீர்களா? என்றால். நாங்கள் வெப்சைட்டில் அப்டேட் செய்கிறோம் என்றார். இதற்கு முன் என் ப்ளான் அப்டேட் செய்ய நானே தான் ரெக்வெஸ்ட் செய்தேனா? என்று கேட்டேன். மீண்டும் கீறல் விழுந்த ரெக்கார்டாய் பேச, இருக்கட்டும் உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைக்கத்தான் Act 60 -80 -100 Mbpக்கு  வெறும் 1200 ரூபாய்க்கெல்லாம் தர ஆரம்பிச்சிட்டாங்க.. இன்னும் ஒரு மாசத்து என் ஏரியாவுக்கும் வருது. இப்ப சிரிங்கடா.. நல்லா சிரிங்க.. அப்ப பூமா தேவி சிரிக்கப் போறா.. அப்படியே கூண்டோட போகப் போறீங்க. இப்ப புது ப்ளானுக்கு மாத்து என்றேன். இரவுக்குள் மாறும் என்றவர் அடுத்த பத்து நிமிஷத்தில் என் பில் ப்ளான் முடிய இன்னும் ரெண்டு நாள் இருக்கும் முன்னரே.. மாற்றினார்கள் 40GB -8Mbps -1099க்கு. கேட்டால் கிடைக்கும். எல்லாரும் விடாமல் கேளுங்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தி.மு.க
தந்தி டிவியின் இணைய தள வாக்கெடுப்பில் 2016ல் யாருக்கு ஓட்டு என்கிற ஓட்டெடுப்பில் திமுக முன்னிலையில் உள்ளது. வழக்கமாய் ஆளுங்கட்சி டிவி, பேப்பருக்கு சமமாய் செய்திகளைப் போடும் ஒரு நிறுவனம் இப்படியொரு செய்தியை வெளியிடுவதே திமுகவிற்கு நல்ல காலம் தான் என்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@
பவர் ஸ்டார்
விஜயகாந்த் எல்லா கட்சித் தலைவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட ஆரம்பித்ததைக் குறித்து நண்பர் சொன்னது. “ பார்த்தா அரசியல் பவர் ஸ்டார் போலத்தான் இருக்காரு. ஆனா கரெக்டா எலக்‌ஷன் டைம்ல வேலைய ஆரம்பிச்சிடுறாரு” என்றார். எனக்கென்னவோ பவர் ஸ்டார்களுக்கென்று ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது எனத் தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
விவாத மேடை
சன் நியூஸ் சேனலில் விவாத மேடைக்கு அழைத்திருந்தார்கள். வழக்கமாய் தலைப்புகளைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வது இல்லை. அங்கே போய் கேட்ட பிறகு அதற்கேற்றார்ப் போல என் கருத்துக்களை சொல்வேன். சமயங்களில் எதிரெதிர் கருத்துள்ளவர்களை தெரிந்தெடுக்காமல் நான்கு பேரில் மூன்று பேரோ, சமயங்களில் நான்கு பேருமே ஒத்த கருத்துடையவர்களாய் வந்து, பல சமயங்களில் பேச வந்த டாப்பிக்கின் போக்கை மாற்றி பேசிய காலங்கள் பல உண்டு. நேற்றைய டாப்பிக், தமிழ் சினிமாவில் கலாச்சாரம் குறித்து. நான் பேச ஆரம்பித்த போது எழுப்பிய முதல் கேள்வி “கலாச்சாரம்னா என்ன?”
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிறு முதலீட்டு படங்களும் மானியமும்
2011,12,13 ஆம் ஆண்டுக்கான சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கான தமிழக  அரசின் மானியம் மற்றும் சிறப்பு பரிசுகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எட்டு பிரிண்டுகளோ அல்லது குறைந்த பட்ச டிஜிட்டல் திரையரங்குகளில் வெளியான படங்களுக்கு அரசின் சப்சிடி உண்டு. 2007 ஆம் ஆண்டிலிருந்து மானியம் பெற தெரிந்தெடுக்கப்பட்ட படங்களுக்கே இன்று வரை இன்னமும், மானியம் கொடுக்கப்படவில்லையாம். இதில் எதற்கு புது வருஷ லிஸ்ட் என்று தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் வாங்க கஷ்டப்பட்டவங்க கண்டுபிடிச்ச விஷயமாத்தான் இருக்கும் இந்த லிவிங் டூ கெதர். ஈஸியாடைவெர்ர்ஸ்ஸ்னு போயிரலாமில்ல:)

நல்ல சினிமாவை பார்க்க நல்ல திரையரங்கம் தேவை. நேற்று சாந்தமில் இரண்டாம் முறையாய் ஓகே கண்மணி. காசி தியேட்டர்காரரே.. கொஞ்சம் பல்பு மாத்துங்கஜி.

குடும்பத்தோட டபுள் மீனிங் டயலாக்குக்கு சிரிச்சுட்டு வர்றவங்க எல்லாரும் லிவிங் டுகெதர் ஆபாசம்னு சொல்றது தான் நம்ம சமூகம்
@@@@@@@@@@@@@@@@@@@@@
அதிர்ச்சியடைய வைக்கும் ஆவணப்படம்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம். பார்க்கையில் என்னையும் அறியாமல் அழுது விட்டேன். என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து தொய்ந்து போயிருந்த தமிழ் திரைப்பட உலகம் கொம்பன், காஞ்சனா 2, ஓகே காதல் கண்மணியில் விருட்டென நிமிர்ந்து நின்றிருக்கிறது. மூன்றுமே வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்ற படங்களாகிவிட்டது. இவற்றில் இரண்டு படங்கள் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவின் வெளியீடு. அதனால் தானோ என்னவோ அவரின் சமீபத்திய மாஸ் பட ட்ரைலரில் அவர் பெயர் வரும் போது “நான் திரும்ப வருவேன்னு நினைக்கலை இல்லை” என்கிற டயலாக்கோடு வருவது சிங்கில் இருக்கிறது. சினிமா என்பது பெரும் ஆட்டம். அதில் சிறந்தது, மோசமானது என்பதையெல்லாம் விட, சரியான நேரம் என்பது ஒர்க்கவுட் ஆக வேண்டும். அதற்கு செய்யும் தொழிலின் மேலான நம்பிக்கை அவசியம். வாழ்த்துக்கள் ஸ்டூடியோ க்ரீன் 
@@@@@@@@@@@@@@@@
Dubsmash.com  ஆப் வந்தாலும் வந்தது, யாரையும் அது விட்டு வைக்கவில்லை. என்னையும் சேர்த்துத்தான். எங்கு பார்த்தாலும் டப்பிங் ஆட்டம் தான். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டமோ தெரியவில்லை.  பத்து செகண்ட் வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்ய முடியவில்லை. பேஸ்புக்கில் சில சமயம் ஐந்து விநாடிகளுக்கு மேல் வருவதில்லை. ஆரம்பக் கட்ட டெக்னிக்கல் குளறுபடிகளை மீறி பல சுவாரஸ்ய தருணங்களை இந்த ஆப் மூலம் பெறத்தான் செய்கிறோம் என்பது உண்மைதான். நீங்களும் ஒரு முறை ட்ரை செய்துதான் பாருங்களேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
தேசிய விருது பெற்ற புத்தக பாராட்டு விழா
கோ. தனஞ்செயன் எழுதி தேசிய விருது பெற்ற Pride of Tamil Cinema புத்தக பாராட்டு விழாவில் பேச அழைத்திருந்தார்கள். அதன் காணொளி.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why do men pay more for car insurance?  
Women don't get blowjobs while they're driving. 

Post a Comment

2 comments:

Seeni said...

பகிர்வுக்கு நன்றி..

Krishna said...

என்ன தவம் செய்தேன்
Unmai Unmai saar
Padikom pothu
Appadiyaa Jivvu Nnu Irruku
What a Director
Ur Really blessed Sir
Best Wishes, Very Happy For you