சல்மான்கானின் வழக்கு 12 வருடங்களுக்கு மேல் நடந்து தீர்ப்பு வெளியாகி ரெண்டு மணி நேரத்தில், மேல் கோர்ட்டுக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு, விடுதலையாகியிருக்கிறார். 18 வருடங்களுக்கு மேல் இழுக்கப்பட்ட கேஸின் மேல் முறையீட்டை 7 மாதங்களுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதும் பார்க்கும் போது, ட்ரிபிள்ஸ் ஓட்டுவது, சரக்கடித்துவிட்டு வண்டியோட்டுவது, லஞ்சம் வாங்குவது, கொடுப்பது, இன்ன பிற கெட்ட சிவா வேலைகள் ஒன்றும் மாபெரும் தவறாய் தெரியவில்லை. @@@@@@@@@@@@@@@@@@@ அக்னி நட்சத்திர ஆரம்ப நாளன்று மதியம் எதிர்பாராமல் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒர் சந்திப்பு நிகழ்ந்தது. அறைக்கு சென்று கைகுலுக்கிய மாத்திரத்தில் “கடகடவென” நெடு நாள் பேசிப் பழகியவர்களைப் போல பேச ஆரம்பித்தோம். என்னைப் பற்றி, எழுத்தைப் பற்றி, தொட்டால் தொடரும், தமிழ் சினிமா, உலக சினிமா, மலையாள சினிமா, மணி ரத்னம், பரதன், கமல், நாகேஷ், திரைக்கதை, வசனம், ஆன்லைன் விமர்சனங்கள், உத்தம வில்லன், பாபநாசம், ஓகே கண்மணி குறித்தான விஷயங்கள். ஜிம்மி ஜிப் இல்லாமல் படம் எடுக்க முடிவு செய்யப்பட்ட, க்ளீஷேக்கள், நெஞ்சை நக்கும்...