Thottal Thodarum

May 11, 2015

கொத்து பரோட்டா-11/05/15

சல்மான்கானின் வழக்கு 12 வருடங்களுக்கு மேல் நடந்து தீர்ப்பு வெளியாகி ரெண்டு மணி  நேரத்தில், மேல் கோர்ட்டுக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு, விடுதலையாகியிருக்கிறார். 18 வருடங்களுக்கு மேல் இழுக்கப்பட்ட கேஸின் மேல் முறையீட்டை 7 மாதங்களுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதும் பார்க்கும் போது, ட்ரிபிள்ஸ் ஓட்டுவது, சரக்கடித்துவிட்டு வண்டியோட்டுவது, லஞ்சம் வாங்குவது, கொடுப்பது, இன்ன பிற கெட்ட சிவா வேலைகள் ஒன்றும் மாபெரும் தவறாய் தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@
அக்னி நட்சத்திர ஆரம்ப நாளன்று மதியம் எதிர்பாராமல் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒர் சந்திப்பு நிகழ்ந்தது. அறைக்கு சென்று கைகுலுக்கிய மாத்திரத்தில் “கடகடவென” நெடு நாள் பேசிப் பழகியவர்களைப் போல பேச ஆரம்பித்தோம். என்னைப் பற்றி,  எழுத்தைப் பற்றி, தொட்டால் தொடரும்,  தமிழ் சினிமா, உலக சினிமா, மலையாள சினிமா, மணி ரத்னம், பரதன், கமல், நாகேஷ், திரைக்கதை, வசனம், ஆன்லைன் விமர்சனங்கள், உத்தம வில்லன், பாபநாசம், ஓகே கண்மணி குறித்தான விஷயங்கள். ஜிம்மி ஜிப் இல்லாமல் படம் எடுக்க முடிவு செய்யப்பட்ட, க்ளீஷேக்கள், நெஞ்சை நக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட்ட, முழுக்க முழுக்க இளைஞர்களால் ஆன டீமோட மணிரத்னத்தின் ஓகே கண்மணி பற்றி, தமிழ் சினிமா பற்றிய தமிழர்களின் மனோநிலை குறித்தும், என கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் போனது.  சமயங்களில் கிட்டும் இம்மாதிரியான சந்திப்புகள் தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது. சந்திப்பைப் பற்றி, ஜெயக்\மோகன் தன் தளத்தில் எழுதியிருக்கிறார். . http://www.jeyamohan.in/74985#.VU7cMPmqqk 
@@@@@@@@@@@@@@@@@


UGLY
காதல், காமம், மனைவி, காதலி, நட்பு, உரிமை, அன்பு, பாசம் என மனித உறவுகளிடையேயான உணர்வுகளின் பின்னணியில் உள்ள மன விகாரத்தை, அழுக்கைப் பற்றிய படம். சினிமா வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் முன்னாள் கணவன். இந்நாள் கணவனும், கல்லூரி நண்பணுமான போலீஸ் கமிஷனர், கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து டிப்ரஷனில் தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ள மனைவி. மனைவியின் போன் காலை ட்ரேஸ் செய்யும் அளவிற்கு துஷ்ட வக்கரமும், முன்னாள் கணவன் மேல் வஞ்சமும், பொறாமையும் கொண்ட போலீஸ் கமிஷனர் புருஷன். நடிகரின் மனைவியுடன், கேஸ்டிங் டைரக்டர் நண்பன் நடத்தும் காமம். பணம் மட்டுமே வாழ்க்கையாய் கொண்டு, புருஷனைக் கூட கழட்டி விட்டு, நடிகருடன் வாழும் நடிகை. நடிகர் மூலமாய்  பிறந்த பெண்  குழந்தை, அப்பாவுடனான நாளில் கடத்தப்பட,  போலீஸ் கமிஷனர் தன் முன் விரோதத்தை வைத்து அக்குழந்தையின் அப்பாவான நடிகரையும், அவனது நண்பனையும், வதம் செய்ய, அவன் பதிலுக்கு அலைய, இதை பயன்படுத்தி, உடனிருக்கும் நண்பன் அவன் கடத்தாத குழந்தைக்காக மிரட்டல் விட்டு பணம் கேட்க, இன்னொரு பக்கம், குழந்தையின் மாமாவே தன் அக்காவிடம் குரல் மாற்றி தான் தான் கடத்தி வைத்திருப்பதாக சொல்லி 50 லட்சம் கேட்க, அதை குழந்தையின் அம்மாவே 65 லட்சமாக்கி, மீதி பதினைந்து லட்சத்தை லபக்கிக் கொள்ள, இவர்களுடய பிரச்சனைகளுக்குள்ளேயே உழன்று, கடைசியில் கவனிக்கப்படாத குழந்தை உடலெங்கும் புழு நெளிய கண்டுபிடிக்கப் படுகிறது.  நிஜம், உண்மை, வாழ்க்கை மிக அழுக்கானது. UGLY. Very .. very much Dark
@@@@@@@@@@@@@@@@@@
சல்மான் கானின் கேஸ் இவ்வளவு வருஷமா இழுத்தடிக்கப்பட்டு, இம்பூட்டு சீக்கிரமா தீர்ப்பை நிறுத்தி வைத்ததைப் பற்றி, பிரபல ஒளிப்பதிவாளருடன் பேசிக் கொண்டிருந்த போது  அவர் சட்டம் மக்களுக்கு ஒன்றாய் பணமிருக்கிறவர்களுக்கு ஒரு மாதிரியாய் தான் நடக்கிறது என்று சொன்னாலும் சல்லு பாய் பாவம் ரொம்ப நல்ல மாதிரி என்றார். அவருடன் ஒரு படத்தின் பணியாற்றிய போது, மதியம் தான் நடிக்க வருவார். மீண்டும் குடி, மற்றும்,  உடற்பயிற்சி இதுதான் அவரது டெய்லி ரொட்டீன் என்றார். அதெல்லாம் சரி இதை வைத்து எப்படி அவரை நல்லவர் என்கிறீர்கள் என்று கேட்டேன். நிறைய சமூக சேவையெல்லாம் செய்யுறார். ஹெல்ப் பண்ணுறார் என்றார். எத்தனை வருஷமா? என்று கேட்டதற்கு “பத்து பனிரெண்டு வருஷமா இருக்கும்” என்றார். அதாவது ஆக்சிடெண்ட் செய்ததுக்கு அப்புறம். கிட்டத்தட்ட குற்றவுணர்ச்சிக்கு மாற்றாகவும், தன்னை ஒரு சமூக சேவகர் நிலைக்கும் வைத்துக் கொள்ள அப்படித்தானே என்றேன். அதன் பிறகு அவர் சல்லு பாய் பற்றி பேசவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மூழ்குற கப்பலேர்ந்து எலி ஓடுறாப்புல.. சுஜாதா‪#‎கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன்‬

செம்ம மீட்டிங்.. நன்றி ஜெயமோகன் smile emoticon போகிற போக்கில்…http://t.co/QAOa2ukQE0


மிக அருமையான மதியம். சந்திப்பு. சிரிப்பும், சந்தோஷமுமாய்.. எழுத்தாளர் ஜெயமோகனுடன்


its a distrubing Dark Movie ‪#‎Ugly‬


ஏனோ தெரியவில்லை உலகம் முழுவதும் அறிவாளிகளை பாமரர்கள் தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள்.frown emoticon


Life like film. with all is lethargic.. so. moving and excellent film‪#‎UttamaVillain‬

நமக்கு பிடிச்சா மாதிரி யாராவது பேசி பேட்டி கொடுத்துட்டா தலையில தூக்கி வச்சிட்டு கொண்டாடாம இருக்க மாட்டாங்களே 

Got a very good feed back from Legend Dir Mahendran For My Thottal Thodarum தொட்டால் தொடரும் அருமையான காலை நன்றி சார்.

இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்

What a smooth motion film smile emoticon ‪#‎Pikku‬

@@@@@@@@@@@@@@@@@@@@@@
45 சதவிகிதம் லஞ்சம் கேட்ட PWD அதிகாரிகள் லிஸ்டை வெளியிட்டும் அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலும் இல்லாமல் இருப்பது அரசின் நேர்மையான நிலைப்பாட்டை காட்டுகிறது. ஆனால் இதை சொல்லும் போது திமுக மட்டுமென்ன வாங்காமயா செய்தார்கள்? என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விழைகிறேன். எதற்கெடுத்தாலும் அவன் செய்யலையா? இவன் செய்யலையா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு நாட்டைப் பற்றி, ஏன் உங்களைச் பற்றிக் கூட கருத்து சொல்ல அருகதை கிடையாது என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@
சாலிகிராமம்  பைக் ஆக்சிடெண்ட் கேஸில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களாம். போலீஸ் ஒன்று தான் ஏதோ கடமைக்காகவாவது கொஞ்சம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் அடிக்க ஆரம்பித்து அவர்கள் மீதான பயம் போய்விட்டால் அம்பூட்டுத்தான் நாடு விளங்கிடும். அதற்காக அவர்கள் செய்ததை நான் ஆதரிக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் ட்ரிபிள்ஸ், அத்துடன் குடித்துவிட்டு வண்டியோட்டி வரும் ஆட்களை காவலர்கள் பிடிக்க முயற்சிக்கையில் அவர்களுக்கு கட் அடித்துவிட்டு, எஸ்ஸாகும் நேக் தெரிந்தவர்கள் நம்மூர் ஆட்கள். அவர்களை பிடிக்க முடியவில்லையென்றால் பின்னால் போகிறவனின் சட்டை காலரையோ, அல்லது தன் கையில் இருக்கும் லட்டியையோ , சுழட்டி வீசி, வண்டியோட்டுகிறவன் மண்டையையோ, அல்லது வீல் நடுவில் கம்பு மாட்டி, ஸ்கிட் ஆகி வீழ்ந்து பிடிபடுகிறவர்களை  பின்லேடனை பிடித்தது போல வீராப்புடன் ராத்திரி முழுக்க ஸ்டேஷனில் வைத்து கும்மியடித்து அனுப்புவார்கள். ஆனால் நிஜமாய் ஒரு திருடனையோ, தீவிரவாதியையோ கூட அவ்வளவு ஈடுபாட்டுடன் பிடிப்பதில்லையே ஏன்? என்று கேள்விக்கு பதில் தீவிரவாதியை பிடிச்சா, மெடல் மட்டும்தான் இவங்களை பிடிச்சா கட்டிங். எது முக்கியம். நான் என்ன சொல்ல வர்றேன்னா.. சட்டத்தை எப்படி மக்கள் மதிக்கணும்னு அவங்க எதிர்பார்க்குறாங்களோ, அதே அளவுக்கு அவங்களும் மக்களுக்குத்தான் சட்டங்கிறத மதிக்கணுங்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
MARGARITA WITH A STRAW
செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட ஒர் பெண்ணைப் பற்றிய கதை. இக்கதை அவளுடய வியாதியின் தாக்கத்தை பற்றியோ, அல்லது அவளது குடும்பத்தைப் பற்றியோ அல்ல அவளது பாலியல் ப்ரச்சனையைக் குறித்து. தன்னைப் பற்றி தன் வியாதியைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்ட பெண். அவளுக்கு ஆதரவாய் இருக்கும் குடும்பம். தன் இசையார்வத்தை வெளிப்படுத்த ஏதுவான நட்புக் குழு என சந்தோஷமாய் வாழ்ந்தாலும், இயல்பான வயதுக்கே உரிய பாலியல் ஏக்கம் அவளை வாட்டுகிறது. அவள் மனதினுள் காதலிப்பவன் அவளை தோழியாய் பார்க்கிறானே தவிர, காதலியாய், ஒரு பெண்ணாய் பார்க்கவில்லை. மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் போது அங்கே சந்திக்கும் கண் தெரியாத பங்களாதேஷ் பெண்ணுடனான நட்பு மெல்ல, லெஸ்பியன் உறவாகி, அதே நேரத்தில் உடன் படிக்கும் ஸ்மார்ட் இளைஞனுடனான செக்ஸ் எனப் போகிறது கதை. ஆண், பெண் பைசெக்ஸுவல் பற்றி தன் தாயுடன் பேச விழைகிறாள். அவளது உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் அம்மாவிற்கு அதை ஆதரிக்க தெரியாமல தவிக்கும் நேரத்தில் உடல்நிலை பாதிப்பால் இறக்கிறார். பின்பு என்ன ஆகிறது என்பதுதான் கதை. இக்கதையில் கதாநாயகி சுய இன்பத்தில் ஈடுபடுகிறாள். தன் செக்ஸ் உணர்வுகளை மிக அழகாய் வெளிப்படுத்துகிறாள். லெஸ்பியன் உறவில் ஈடுபடுகிறார். தன்னை ஒரு பெண்ணாய் உணர்ந்து கொள்ள விழையும் தருணங்களுக்காக, இயல்பாய் தன்னிடமில்லாத அழகை கொண்டில்லாமல், தன் ஏக்கத்தை விரகத்தை தன்னை கொண்டு போய் ஆண் நண்பனின் டாய்லெட்டில் உட்கார வைக்க சொல்லி, அங்கிருந்து ஆரம்பிக்கும் இடம். அவன் அவளுடனான உறவுக்கு முன்” கால்களை நார்மலாய் விரிக்க முடியுமா?’என்று கேட்குமிடம் அவளின் ரியாக்‌ஷன் இப்படி எல்லாமே கொஞ்சம் கூட அருவருப்பு இல்லாமல் இயல்பாய் நம் உடனிருக்கும் ஒர் பெண்ணுக்கான உணர்வாய் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஷோனாலி போஸ். கல்கியின் நடிப்பு படு யதார்த்தம். உடன் அம்மாவாக நடிக்கும் ரேவதியை திரையில் பார்த்து வருஷங்கள் ஆகிவிட்டாலும், பெண்ணின் லெஸ்பியன் உறவு, அவளது ஏக்கம், இண்டர்நெட்டில் போர்னோ சைட்டைப் பார்த்து ஆகும் அதிர்ச்சி, இறக்கும் தருவாயில் காட்டும் வாஞ்சை இப்படி நெஞ்சை நக்காமல் நெகிழ வைக்கிறார். இதை தமிழில் எடுக்க முடியுமா? என்று கேட்டால் சாத்தியமேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பின்ன தமிழ் கலாச்சாரம் கெட்டுப் போய்விடாது?. தமிழ்நாட்டில் உள்ள உடற்குறைபாடு கொண்டோர்களைப் பற்றி படமெடுக்க, அவர்களது வாழ்க்கை, சமுதாய மறுப்பு என ஆயிரம் இருக்க, அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டு பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதே கலாச்சார கேடாகும் இடத்தில் இதெல்லாம் பகல் கனவு அல்ல. அதுக்கு மேல. நெடு நாள் முன்பு செரிபரல் பால்ஸியால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவனின் காதல் பற்றி விண்மீன்கள் என்றொரு படம் தமிழில் வந்ததாய் நியாபகம். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் பார்த்த சுவாரஸ்யமான இந்தி ஷார்ட் பிலிம். கொஞ்சம் நீளம் அதிகம் தான். ஆனால் எடுத்திருந்த விதம் குட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராஜ்கிரண் வேட்டி விளம்பரத்தில் நடிக்காததைப் பற்றிய பேட்டியை படித்ததிலிருந்து பல பேரின் பாராட்டுக்களை அவர் பெற்றுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் வேட்டி என்ற கலாச்சாரமே இன்றைய இளைஞர்களிடமிருந்து போய்க் கொண்டிருக்கிற வேளையில் மீண்டும் வேட்டி பல்கி பெருக வைட் மார்கெட்டிங்கும் ஒரு காரணம். வாழ்க தமிழன், வளர்க தமிழ் என்ற கோஷங்களையெல்லாம் மீறி ப்ராக்டிகலாய் யோசித்தால் அவர் கூறிய கருத்து ஒரு அபத்தம் என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Q: Which sexual position produces the ugliest children? 
A: Ask your mother
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: