கொத்து பரோட்டா - 18/05/15
தொட்டால் தொடரும் படத்தின் பைரஸியோ, அல்லது டோரண்ட் லிங்கோ இது வரை வராமல் பார்த்துக் கொண்டோம். அது எப்படி என்று பலர் கேட்டார்கள். எப்.எம்.எஸ் உரிமையை நாங்களே வைத்திருந்ததும் ஒரு காரணம். போனவாரம் தான் வெளிநாட்டு இண்டநெட் உரிமையை டெண்டுகொட்டா.காமிற்கு அளித்தோம்.
இத்தனை நாள் கட்டி காப்பாற்றிய பைரஸியை கட்டவிழ்த்து விட்டோம். வெள்ளி மாலை டெண்ட்கொட்டாயில் வெளியான அடுத்த ரெண்டு மணி நேரத்தில் புதிய படங்களுக்கு ஈடாய் எல்லா டோரண்டுகளிலும் பரபரவென வேலை பார்த்துவிட்டார்கள். லோக்கல் மார்கெட்டில் 5.1 டிவிடி வரை வெளியாகிவிட்டது. பாருங்கள் பைரஸி இண்டஸ்ட்ரி எவ்வளவு வேகமாய் இருக்கிறதென்று. அது மட்டுமில்லாமல் டோரண்டில் வெளியான சில மணி நேரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டவுன்லோட் செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். எனிவே புதிய படங்களான புறம்போக்கு, 36 வயதினிலேவை மீறி தொட்டால் தொடரும் படத்திற்கு கொடுத்தற்கு நன்றி. பார்காதவர்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
இத்தனை நாள் கட்டி காப்பாற்றிய பைரஸியை கட்டவிழ்த்து விட்டோம். வெள்ளி மாலை டெண்ட்கொட்டாயில் வெளியான அடுத்த ரெண்டு மணி நேரத்தில் புதிய படங்களுக்கு ஈடாய் எல்லா டோரண்டுகளிலும் பரபரவென வேலை பார்த்துவிட்டார்கள். லோக்கல் மார்கெட்டில் 5.1 டிவிடி வரை வெளியாகிவிட்டது. பாருங்கள் பைரஸி இண்டஸ்ட்ரி எவ்வளவு வேகமாய் இருக்கிறதென்று. அது மட்டுமில்லாமல் டோரண்டில் வெளியான சில மணி நேரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டவுன்லோட் செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். எனிவே புதிய படங்களான புறம்போக்கு, 36 வயதினிலேவை மீறி தொட்டால் தொடரும் படத்திற்கு கொடுத்தற்கு நன்றி. பார்காதவர்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@
Mad Max
படம் ஆரம்பித்த நிமிடத்திலிருந்து சும்மா பரபரவென ஒரே ஒரு சேஸ். அதான் படம் முழுக்கவே. கிட்டத்தட்ட சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டார்கள். முந்தைய பாகங்களின் அடி நுனி எல்லாம் தேவையேயில்லை. மிக சிறிய லைன். வண்டி, சேஸ், விடுதலை, கனவு, துரோகம், எல்லாம் கலந்த கலவை. என்ன ஒரு பர்பெக்ஷன். என்ன மாதிரியான விஷுவல்ஸ். அந்த சேஸ். வில்லன் க்ரூப்பில் எலக்ட்ரிக் கிட்டார் வாசித்துக் கொண்டே வரும் ஆள், அந்தரத்தில் கம்பில் தொங்கியபடியே செய்யும் சாகசங்கள். எதுக்கு எலலத்தையும் சொல்லிகிட்டு. அட்ரிலின் பம்ப் செய்து எகிற வைக்கும் சாகசப் படம் பார்க்க வேண்டுமா? டோண்ட் மிஸ் இட். ஒரே நாளில் ரெண்டு வாட்டி பார்த்த படம் என் வாழ்நாளில் இதுவாகத்தான் இருக்கும். சத்யம் எஸ்2வை விட ஐநாக்ஸ் மைலாப்பூரில் 3டியும், ஒளி,ஒலி துல்லியமாய் இருந்தது. எஸ்.2வில் 3டியில் கருப்பு ஏறியிருக்கிறது கவனிக்கவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் இந்துவில் கடந்த முப்பது வாரங்களாய் எழுதப்பட்டு வரும் கோணங்கள் கட்டுரை தொடர் வருகிற வெள்ளியோடு முடிகிறது. மிகச் சிறந்த அனுபவத்தை இக்கட்டுரைத் தொடர் கொடுத்தது. தமிழ் இந்து தமிழ் நாட்டின் மூலை முடிக்கிலிருக்கும் வாசகர்களை எல்லாம் தேடி எனக்கு தந்தது. இணையத்திலும் நல்ல ஆதரவு நம் தளத்திலும், தமிழ் இந்து தளத்திலும் கிடைத்தது. விரைவில் புத்தகமாகவும் வெளிவர இருக்கிறது. அதற்கும் உங்கள் ஆதரவை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
பாம்பே வெல்வெட்
அனுராக் காஷ்யப், ரன்பீர், அனுஷ்கா, கரண் ஜோஹர் 100 கோடி பட்ஜெட் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். பிலிம் மேக்கிங்கில், கதை சொல்லலில் அநாயசமாய் பல விஷயங்களை தாண்டிய படம். வெள்ளைக்காரர்களை வெளியே அனுப்பிவிட்டு, வெள்ளைக்காரர்களைப் போல வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்களை கண் முன் நிறுத்திய படம். ப்ளாஷ்பேக் காட்சிகளை கடந்த விதம், ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மாறியவிதம், சின்னச் சின்ன ரியாக்ஷன்கள், 50-60களில் நடந்த அரசியல், அதன் பணபலப் பின்னணி என படம் நெடுக சிலாகிக்க ஆயிரம் மெனக்கெடல்கள் இருந்தாலும், அடித்து துவைத்து காயப்போட்ட கதையாலும், பெரும் திருப்பங்கள் இல்லா திரைக்கதையாலும், படத்தின் நாயகன் பிக் ஷாட் ஆக ஆசைப்பட்டு இறந்து வீழ்ந்ததைப் போல படமும் வீழ்வதை தடுக்க முடியவில்லை. அவுட் ஆப் த பாக்ஸ் படங்களால் பெரிதும் பேசப்பட்ட இயக்குனரின் கமர்ஷியல் படம் இந்த கட்டத்திற்குள் தான் இருக்க வேண்டும் கட்டாய சிக்கலில் வீழ்ந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. ஒரு திரைக்கலைஞனாய் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிற படம்.
@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் ட்வீட்டிலிருந்து
what a cinematic experience..WoW!!!... Twice in a day.. Visually exotic. and nail biting dont miss #MadMaxFuryRoad
ஓவர் நகாசு உடம்புக்கு ஆகாது #BombayVelvet
fter seeing How Old r U? there are plenty of chances for Jothika to score sixer in tamil version. what a feel good film. all the best Jo
இனிமே கணக்கு வாத்தியாரையும் கூட வச்சிட்டுத்தான் தீர்ப்பு சொல்லணும். #உஸ்ஸ்கண்ணக்கட்டுதே
For the last one week other than social network and gmail all the other site are not able to access very often why? @airtelindia
இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
How Old Are U?
ரொம்ப நாளாக பார்க்க வேண்டுமென்று நினைத்து பார்க்காமல் விட்ட படம். ஜோதிகாவின் 36 வயதினிலேவை பார்க்கும் முன் பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். கணவனால், மகளால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒர் மிடில் ஏஜ் பெண்ணின் மன உணர்வு மற்றும் அவளது தன்னம்பிக்கையை பற்றிய படம். அரசு அலுவலகத்தில் பணி புரியும் மஞ்சு வாரியர். ரேடியோவில் வேலை செய்யும் அவளது கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து போக விருப்பம். அச்சமயத்தில் மகளின் பள்ளியில் தன் அம்மா கேட்ட கேள்வி ஒன்றை ஜனாதிபதியிடம் சொல்ல, அம்மாவை சந்திக்க விரும்புகிறார் ஜனாதிபதி. சந்தித்த வேளையில் அங்கிருக்கும் கெடுபிடி தாங்காமல் மயக்கமடைகிறார். ஊரூக்கே கேலிக்குரிய விஷயமாய் ஆகிப் போகிறார் மஞ்சு வாரியர். பின்பு அதிலிருந்து எப்படி மீண்டார்? குடும்பம் எப்படி மதித்தது? என்பதுதான் கதை. மஞ்சு வாரியர், திலீப் பிரிவுக்கு பிறகு எடுக்கப்பட்ட படம். அதனால் படத்தில் மஞ்சுவின் கணவர் கிட்டத்தட்ட சுயநலமிக்க வில்லன் போலவே சித்தரிக்கப்படுவது கொஞ்சம் ஒவர். அதே போல மொட்டை மாடி தோட்டம் மேட்டர் சுவாரஸ்யமென்றாலும், அவர் அதில் ஈடுபட்டு வெளிவரும் இடங்களில் எல்லாம் பெரிய இடர் இல்லாத அகஸ்மாத்தான நிகழ்வுகளினால் நடப்பது டூ ட்ராமாட்டிக். 35 வயதானால் என்ன இம்மாதிரியான கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் உடல், மனம் சார்ந்த விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் நெகிழ்வை தந்திருக்கும். அதையெல்லாம் மீறி அருமையான வசனங்கள். சிறந்த நடிப்பு. மெலோட்ராமா சில காட்சிகள், குடும்பம் சார்ந்த படமென்றாலே சீரியல் பாதிப்பு என சொல்லும் உலகில் இம்மாதிரியான படங்கள் க்யூட்டாய் மனதை வருடுவதை கண்டு சந்தோஷம் தான் பட வேண்டும். 36 வயதினிலேவை பார்க்காமலேயே ஜோதிகா மஞ்சுவை விட அவர் வழக்கப்படி எக்ஸ்ட்ராவாக நன்றாக நடித்திருப்பார் என்று நம்புகிறேன். மற்றபடி திரைக்கதை அப்படியே எனும் பட்சத்தில் மேற்கண்ட கருத்தே அதுக்கும் :)
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுவாரஸ்யமான மேஜிக் வீடியோ
சுவாரஸ்யமான மேஜிக் வீடியோ
@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
What does fucking a woman and cooking an egg in the microwave have in common?
Both end with a loud, annoying sound and a gooey mess to clean up.
கேபிள் சங்கர்
அடல்ட் கார்னர்
What does fucking a woman and cooking an egg in the microwave have in common?
Both end with a loud, annoying sound and a gooey mess to clean up.
கேபிள் சங்கர்
Comments
சங்கர் திருநெல்வேலி
மற்றபடி படம் விறு விறு.. சுறு சுறு .... better than OK Kanmani...
Best wished for next movie.