உத்தம வில்லன்

SPOILERS AHEAD - கேபிள் சங்கர்
இன்னும் சில மாதங்களில் மூளைக் கட்டியால் சாகப் போகும் சூப்பர் ஸ்டாரான ஹீரோ. தன்னுடய கடைசி படமாய் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் ஒர் படம் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறார். அவர்கள் படமாய் எடுக்கும் கதையின் நாயகன் உத்தமன், சாகாவரம் பெற்றவன். என்ன ஒரு ஐரணி. நிஜ வாழ்க்கையில் ஹீரோவை ஹீரோவாக மட்டுமே பார்க்கும் மக்களுக்கு அதன் பின் அவனது வாழ்க்கை, அவன் கடந்து வந்த துரோகங்கள், காதல், பாசம், காமம், வன்மம் என முடிக்க வேண்டிய கணக்குள் ஏராளம் நிஜ வாழ்வில் யாரோ ஒருத்தருக்கு வில்லனாய்த்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் திரையில் வரும் கதையில் உத்தமனாய் ஹீரோயிச வேலை காமெடியாய்.


ஓப்பனிங் பாடல் காட்சியில் நாற்பது வயது கமல் பூஜாகுமாருடன் ஆடும் கெட்ட வலிப்பு ஆட்டம். பின்பு அப்படத்தின் பார்ட்டியில் காட்டப்படும் அதே பாடலின் மேக்கிங் காட்சிகளுடன் படத்தின் தலைப்பு வீர விளையாட்டு என காட்டப்படுவது, நாடக காட்சியில் பாம்பு உத்தமனின் பிருஷ்டத்தை கடித்துவிட, “நம்மாளுங்கிறதுக்காக, அங்கேயெல்லாம் வாய் வச்சி உறிஞ்ச முடியாது” என்று பாம்பாட்டி சொல்லுமிடமாகட்டும், ராஜா நாசருக்கு வயிற்று ப்ரச்சனை ஆரம்பித்து, கதிகலங்க ஓடும் போது, பீப்பிரப்பீ என இசைக்குமிடமாகட்டும், ஆரம்பக் பாடல் காட்சியில் ஆரம்பித்து, படம் நெடுக சர்காஸமும், ப்ளாக் காமெடியுமாய் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். 

படத்தில் நடிப்பென்று சொல்லப் போனால் கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்று எழுதுவதே தவறானது. இப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள் என்று பார்த்தால், ஆண்ட்ரியா. குட்டிக் குட்டி ரியாக்‌ஷகளில், காதலையும், காமத்தையும், ஒருங்கே சேர்த்து வெளிப்படுத்துமிடம் க்ளாஸ். அதிலும் க்ளைமேக்ஸில் ஆஸ்பிட்டலில் அனஸ்தீஸ்யா கொடுத்து மயங்குமிடத்தில் மாஸ்கினுள்லிருந்து கமல் முத்தம் கொடுக்க, அதை முகம் மூடியிருக்கும் ஆண்ட்ரியா கண்களில் காதல் பொங்க சிரித்து, அவர் மயங்கியது வெளிப்படுத்தும் இயலாமையான பார்வை.. வாவ்.. வாவ்.. எம்.எஸ்.பாஸ்கருக்கு இது ஒரு வாழ்நாள் படம். தன் சாவைப் பற்றி தன் மகனுக்கு சொல்லுமிடம். கமலும் , அந்த பையனும். வாவ்..வாவ்.. க்ளாஸ். கண் கலங்காமல் இருக்க முடியாது. தன் காதலியின் பெண்ணான பார்வதிக்கும், கமலுக்கும் நடக்கும் பேச்சு, ஊர்வசிக்கும் கமலுக்குமான கணவன் மனைவி உறவு. காட்டாமலேயே சொல்லப்படும் முன்னாள் காதலியும், அவளுடய கணவனான ஜெயராம்.  லூசு மன்னனாக வரும் நாசரும், அமைச்சர்களாய் வரும் சண்முகசுந்தரமும், ஞானசம்பந்தமும் அடிக்கும் கூத்து ரணகளம். எக்ஸெண்ட்ரிக் வீர இளவரசியாய் வரும் பூஜா குமாரின் நடிப்பும் சிறப்பு.  குட்டிக் குட்டியாய் நிறைய இடங்களில் வசன இடைவெளிகளில் புரிந்து சிரிக்க வைக்கிறார்கள். ஒரு இடத்தில் நாசர் தொடையை படுத்த படி சொறிந்து கொண்டிருக்க, அப்போது ஷண்முகராஜன் “நீங்க கை வைத்தாலே அது “ என சொல்ல ஆரம்பிக்க, நாசர் சட்டென சொறிவதை நிறுத்தி, கையெடுக்க, அதை பார்த்த கமல் “இல்ல உங்களை இல்லை.. நீங்க தொடையை சொறிங்க” எனும் இடம் க்ளாஸ். ஒரு சாதாரண ஆளை மனோரஞ்சனாக்கி உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்து, தன் மகளையும் கொடுத்து, ஆளாக்கியவன் என்கிற அகங்காரத்தோடும், மாப்பிள்ளையை, ஒரு சூப்பர் ஸ்டாரை கட்டியாளும் மாமனார் கே.விஸ்வநாத். குறிப்பாய் அவர் எப்போது பேசினாலும், ஏ, பி என சொல்லி வரிசைப்படுத்தும் வசனங்கள் அட்டகாசம். பாலசந்தருக்கு ஒரு சமர்பணப் படம் தான். நிறைய நாகேஷை நினைவுப்படுத்துகிறார். ரெண்டு பேரும் லெஜெண்ட்ஸ். கமல் மாமனார் கே.விஸ்வநாத்திடம் மீண்டும் கமலுக்காகவும் அவரின் வியாதிக்காவும் போய் நிற்குமிடம். அங்கே ஆரம்பிக்கப்படும் வசனமும், அதை பாலசந்தர் வெளிப்படுத்திய விதம் Only Masters can do that.

ஷம்ஷத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாய் கொடுத்திருக்கிறார். ஜிப்ரானி பாடல்கள் ஏற்கனவே கொஞ்சம் கல்ட்டாய் பிரபலமாகியிருக்க, பின்னணியிசையில் தன்னை நிருபித்திருக்கிறார்.பல இடங்களில் அவர் கொடுக்கும் அமைதி தேவையான ஒன்று. கதை திரைக்கதை என்று கமல்ஹாசனின் பெயர் போடுகிறார்கள். ஆனால் வசனத்திற்கு யார் பெயரும் வந்ததாய் தெரியவில்லை. பட் பல இடங்களில் ரைட்டிங் அட்டகாசம். புலியுடன் நடந்து வரும் இளவரசியைப் பற்றி வரும் பாடலில் “இவள் முறத்தால் புலியை துறத்தியவள்” என்பது போன்ற வரிகள் செம்ம கிண்டல்.  கமலின் பெண், அவளின் அம்மாவுக்கு அவர் எழுதிய லெட்டர், அதை படிக்கும் காட்சியில் பார்வதி படிக்க ஆரம்பிக்க,  கமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவரின் மேக்கப்பை கலைத்து கொண்டே வர, கடைசியாய், பார்வதி தெளிந்து தன் தந்தையின் மேல் இருக்கும் கோபம் மறைந்து அழ ஆரம்பிக்க, கமல் முழுவதும் மேக்கப் கலைத்த முகத்தோடு ஒர் சின்ன ஸ்மைல் கொடுக்குமிடம் வாவ்.. வாவ்.. இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.

மைனஸாய் இருக்கும் விஷயங்கள் என்று பார்த்தால் கொஞ்சம் லெந்தியான உத்தமனின் கதை. பாலசந்தர் ஒவ்வொரு காட்சியிலும், கமலை, அட்டகாசம்டா.. கலக்கிட்ட, பின்னிட்டடா என்று பாராட்டிக் கொண்டேயிருப்பது, பிராமணிய துவேஷ வசனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வருமிடம், புலி சிஜி,  போன்ற சிற்சில விஷயங்களே. எல்லாவற்றையும் மீறி படம் உங்களை நெகிழ்த்தாமல், இருக்கவே முடியாது. முக்கியமாய் க்ளைமேக்ஸ். இயக்குனரும் எழுதியவரும், நடித்தவரும் நினைத்திருந்தால் ஒப்பாரி வைத்து நம்மையெல்லாம் அழுதே தீர வேண்டுமென்று கட்டாயப் படுத்தியிருக்கலாம். பட்.. முடித்தவிதம் க்ளாஸ்.   

கேபிள் சங்கர்

Comments

Jude said…
Good one!
NAVEEN said…
I am waiting Bro.....
கேபிள் சங்கர், நீங்கள் கண்டிப்பாக இந்தப்படம் ரிலீசுக்கு முன்பு நடந்த சினிமா வியாபாரம் சம்மந்தப்பட்ட விசயங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். சமீபகாலமாக ரிலீசாகும் எல்லா படங்களும் இந்த மாதிரி ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிகொள்கிறது. என்னை போன்ற சாமானியர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை!
" படம் நெடுக சர்காஸமும், ப்ளாக் காமெடியுமாய் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். ... "



அண்ணே . . .நீங்க பார்த்தது உத்தம வில்லன் தானே . . .
Unknown said…
http://uttamavillaindissection.blogspot.in/2015/05/uttama-villain-multi-layered-biopic.html
ithu than kamal ithu than antha fantasy portion
இரண்டு முறை பார்த்தாகிவிட்டது.. சூப்பர் தலைவரே

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.