Thottal Thodarum

Jun 1, 2015

கொத்து பரோட்டா - 01/06/15

90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர்

என் மூத்த மகனின் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டுக்காக தொட்டால் தொடரும் ரிலீஸின் போது கூட அடையாத டென்ஷனையும், திரில்லையும் அனுபவித்தேன்.
காரணம் இதோ இன்னைக்கு வந்திரும், நாளைக்கு வந்திருமென ரமணனின் அறிவிப்புகள் போல வந்த செய்திகளினால்தான். 8.8 எடுத்திருக்கிறான். சி.பி.எஸ்.ஈயில் இந்த பர்செண்டேஜ் நல்ல விஷயம் தான். இவனின் மார்க் நிலவரத்தை பேஸ்புக்கில் போட்ட போது அதில் ரெண்டொரு பேர் ‘உங்களுக்கு பத்தாப்பூ படிக்கிற பையன் இருக்கானா?” என்று கேட்டது அவர்களது வெள்ளந்தித்தனத்தையும், அன்பையும் காட்டுகிறது என்று மட்டும் புரிந்து கொண்டேன் ;)
@@@@@@@@@@@@@@@@@@@
கோணங்கள் தொடர் தமிழ் இந்துவில் முடிவடைந்துவிட்டது. விரைவில் அத்தொடர் டிஸ்கவரி புக் பேலஸின் மூலமாய் புத்தக வடிவெடுக்கப் போகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@
The  Verdict
2013ல் வெளி வந்த பெல்ஜிய படம். படத்தின் முதல் காட்சியில் மித வயது இளைஞன் ஒருவன் பதட்டமாய் திரும்பிப் பார்த்தபடி, மெல்ல நடக்க இயலாமல், ரோட்டின் மேல் உள்ள ப்ளாட்பார படியில் உட்கார்ந்து திரும்பிப் பார்க்கிறான். அவனின் கண்களில் கண்ணீர். கை விரல்கள் பதட்டத்தில் அவனையும் அறியாமல் மெல்ல விதிர்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. முதல் காட்சியிலேயே நம்மை படத்தினுள் கொண்டு செல்ல விழைவதை உணர்கிறேன். அழகான மனைவி, அற்புதமான பெண் குழந்தை, உயர்தர சி.ஈ.ஓ வாழ்க்கை என சுகமாய் போய்க் கொண்டிருக்கும் அவனது வாழ்க்கை ஒர் சுப நாளின் முடிவில் கோரமாகிறது. பாசர்பை ஸ்டாப் ஷாப்பில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஒருவனிடம் மாட்டிக் கொண்டு, மனைவி அடித்தே கொல்லப்படுகிறாள். கடைக்கு போனவள் வரவில்லையே என்று தேடி போகும் போது, மனைவியை கொன்றவனை பார்த்து அவனை தடுக்கப் போக, அதைப் பார்த்த அவனது குழந்தை காரை விட்டு பதட்டத்தோடு ஓடி வருகிறது. வந்த குழந்தை வேகமாய் வந்த காரில் அடிப்பட்டு உயிரிழக்கிறது. கொள்ளைக்காரன் வண்டியை கிளப்பிக் கொண்டு போய்விடுகிறான். சடுதியில் நடக்கும் துக்கம் அவனை புரட்டிப் போடுகிறது. சட்டத்தின் துணையை நாடி, கொள்ளைக்காரனை கண்டு பிடித்து போலீஸில் ஒப்படைக்கிறார்கள்.

ஆனால் ஒரு பிரச்சனை. ப்ரோசீஜரல் எரர் எனும் ஒரு லூப் ஹோலை வைத்துக் கொண்டு அந்த கொள்ளைக்காரன் விடுதலை செய்யப்படுகிறான். இதை தாங்காத ஹீரோ, கொள்ளைக்காரனை பாலோ செய்து திருட்டுத்தனமான துப்பாக்கியின் உதவியோடு, கொன்று விடுகிறான். அவனே போலீசிலும் சரணடைந்து குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். தன்னை விடுதலை செய்ய வேண்டி வக்கில் வைத்து வாதாடுகிறான். சட்டத்தின் ஓட்டை காரணமாய் தன்னைப் போன்ற ஒருவனின் வாழ்க்கை எப்படி நிர்மூலமாகிறது என்று நிருபிக்க விரும்பி, போராடுகிறான் வெற்றி பெறுகிறான்.

இரண்டாம் பாதி முழுவதும் கோர்ட் ரூம் ட்ராமா. பட் சொன்ன விதம் அருமை. படம் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த “பத்லாப்பூர்” படம் நியாபகம் வரத்தான் செய்தது. பட்.. பழிவாங்கலைத் தவிர வேறேதும் பெரிய சிங்க் இல்லை. பட். மிக ஆழமான கதை. எடுத்த விதம் எல்லாமே க்ளாஸ்..
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ரயில்வேக்கு இனிமே ரிலையன்ஸிலேர்ந்து டீசல்/ பெட்ரோல் வாங்கப் போகுதாமே மத்திய அரசு?. அம்பூட்டு சீப்பாவா கொடுக்கிறாய்ங்க..‪#‎டவுட்டு

ஒரு தடவை பாக்கலாம்னு சொல்றவனெல்லாம் மத்த படத்தையெல்லாம் இருபது வாட்டியா பாக்குறான் அவ்வ்வ்.‪#‎டவுட்டு‬

எலக்ஷன்ல நிக்காட்டியும் திமுகவ திட்டத்தான் போறாங்க. பின்ன போட்டியிருந்தா நாலு காசு பார்பாங்க இல்ல ஓட்டாளிகள்

என்னையும் மதிச்சு மோடிஜி ட்வீட் பண்ணியிருக்காரு. அதுவும் டி.எம். என் ஓட்டு பி.ஜே.பிக்கே.

மன்மோகன் ஆட்சியின் போது முதன்மை மாநிலமாய் இருந்த குஜராத் இப்போது மோடியின் ஆட்சியின் கீழ் எப்படி உள்ளது? #டவுட்டு
@@@@@@@@@@@@@@@@@@@
666
சென்ற வாரம் இக்குறும்படத்தின் இயக்குனர் கார்த்திக் பேஸ்புக்கில் என் தொலைபேசி எண்ணை கேட்டிருந்தார். கூப்பிட்டார். அவரது குறும்பட வெளியீட்டுக்கு கண்டிப்பாய் வரவேண்டுமென கேட்டுக் கொண்டார். ரெண்டொரு நாளில் அப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்கள். சிறப்பாய் இருந்தது. நேற்று குறும்பட வெளியீடு. வாசலில் ஏற்கனவே நாற்பது பேருக்கு மேல் காத்திருந்தார்கள். நானும் ராஜதந்திரம் இயக்குனரும் அழைக்கப்பட்டிருந்தோம். ரெண்டு பேரும் பேசிக் கொள்ளும் போதே ட்ரைலர் நல்லாருந்தது இல்லை என்றோம். வழக்கம் போல ஏவிஎம் ப்ரிவீயூ தியேட்டரில் தடங்கலோடு ஆரம்பித்தது. அமானுஷ்ய பேய்க்கதை. டைட்டில் கண்களுக்கு புரிபடவில்லை. ஆனால் நேர்த்தியாய் எடுக்கப்பட்டிருந்த ஒர் அமானுஷ்ய படம். கேமரா கோணங்கள் ஆகட்டும், பின்னணியிசையாகட்டும் அருமையாய் செய்திருந்தார்கள். சமீபத்தில் பார்த்த மூன்று நான்கு பேய்ப்படங்கள் கொடுக்காத இம்பாக்டை இந்த குறும்படம் கொடுத்தது. குறையாய் படத்தில் நடித்த நடிகர்களில் சில பேரின் நடிப்பைத்தான் சொல்ல வேண்டும். பட் நீட்டான குறும்படம். வாழ்த்துக்கள் கார்த்திக், விக்னேஷ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
மீண்டும் ஒரு காதல் கதை தொடராய் வந்த போதும், பின்பு புத்தகமாய் வெளிவந்த போதும் அதீத ஆதரவு அளித்த வாசகர்களுக்கு நன்றி. மீண்டும் இந்த பதிவுகளில் ரீ பப்ளிஷ் செய்த போது நண்பரொருவர் இதை ஏன் ஆங்கிலத்தில் எழுதக்கூடாது என்று கேட்டார். என் தோழி பிரியாவுக்கு எழுத்து மீது அபாரமான ப்ரியமுண்டு. ஆனால் ஏனோ அதை மெனக்கெடாமல் தள்ளீ வைத்திருந்தார். அப்போது மீண்டும் ஒரு காதல் கதை நாவலை கொடுத்து படிக்கச் சொன்னேன். படித்துவிட்டு பாராட்டியவரிடம் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமா? என்று கேட்ட போது “நானா?” என்றார். ஆனால் தொடர்ந்து கொடுத்த ஊக்க தொல்லையால் இன்று முடித்துவிட்டு, "Dejavu" என்கிற பெயரில் மீண்டும் ஒரு காதல் கதையின் மொழியாக்க வெளிவர ஆரம்பித்திருக்கிறது. உங்களது மேலான ஆதரவு பிரியாவுக்கு உண்டு என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம். நன்றி
@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்பட வெளியீட்டின் போது பல பழைய குறும்பட ஆர்வலர்கள், இயக்குனர்களை சந்தித்தேன். பல பேரின் ஆசையே எப்படியவது ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி பெரும் திரை இயக்குனர் ஆகிவிட வேண்டியதுதான். ஒவ்வொரு முறை குறும்படம் பார்த்துவிட்டு வரும் போது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிவிட்டு வருவேன். ஒரு காலத்தில் இணையத்தின் மூலமாய் குறும்படம் வெளியாகி அது நன்றாக இருக்கும் பட்சத்தில் உணமையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு பிரபலாகிக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ. வழக்கமான சினிமா ஆசையின் காரணமாய் அங்கே வரும் ஆட்களில் பெரும்பாலானோர் நடிகராகவோ, இயக்குனராகவோ, அல்லது ஏதாவது ஒரு வகையில் சினிமாவில் கலந்துவிட மாட்டோமா என்கிற ஆசையுடன் அலையும் நண்பர்களே அங்கே அதிகம் தென்படுகிறார்கள். தொடர்ந்து நான்கைந்து குறும்பட விழாக்களுக்கு சென்றால் எல்லாரையும் பரிச்சயம் செய்து விட முடியக்கூடிய அளவிலேயே ரிப்பீட்டட் கூட்டம். அதனால் வழக்கமான ப்ரிவியூ கருத்துக்களான “சூப்பர்.. ஓகே.. நல்லாருக்கு ப்ரோ” போன்ற்வைகளே கேட்க முடிகிறது. அதை ரெண்டு ஷோ இலவசமாய் போட்டுக் காட்டிவிட்டு.. செம்ம ப்ரொமோ, நல்ல ரீச் என்று சொல்லிக் கொண்டு அடுத்த குறும்படத்துக்காக காசு சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். என்னதான் கல்யாணமெல்லாம் வேண்டாம் நான் படாத பாடு படுறேனு சொன்னால் தேடிப் போய் காதல் பண்ணி கல்யாணம் பண்றவங்க மாதிரிதான் இதுவும்.
@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
why do girls never miss the class?
because if they miss the period they will get pregnent



Post a Comment

1 comment:

Shanmugasundaram said...

Hi Sir,

Is that 666 movie present in youtube, if so, please share the link.
I could fine https://www.youtube.com/watch?v=z3vJrpM5wjo , but it is WS666