Thottal Thodarum

Jun 8, 2015

கொத்து பரோட்டா -08/06/15

மேகி நூடூல்ஸ் ப்ரச்சனை ஆரம்பித்து ஒருவிதத்தில் நல்லதே. மக்களிடம் விற்கும் பொருட்களின் குவாலிட்டி குறித்த கவனம் அதிகமாகும். ஆனால் அதே நேரத்தில் இத்தனை வருடமாய் இதை செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? இதற்கு தரச் சான்றிதழ் கொடுத்த அரசு  அதிகாரிகளின் மேல் என்ன நடவடிக்கை? என்று கேட்டீர்களானால் அதற்கு பதிலில்லை.
சரி இன்னைக்காவது ஆரம்பித்தார்களே என்று சந்தோஷப்பட வேண்டியிருக்கிறது. கூடவே இன்னும் எத்தனை இன்ஸ்டெண்ட் புட் வெரைட்டிகளில் லெட்டோ, அல்லது வேறு ஏதாவது பிரசர்வேட்டிவோ அதிகமாய் இருக்கிறது என்று கண்டுபிடித்தால்தானே தெரியும். தமிழ்கத்தில் மட்டும் ரிலையன்சின் நூடுல்ஸுக்கும் சேர்த்து தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் நூடூல்ஸ் என்றாலே மேகி என்றாகிவிட்டபடியால் தனியாய் அவர்களுக்கு ஏதும் பாதிப்பிருப்பதாய் தெரியவில்லை. அப்படியே தடை வந்தாலும் தமிழகத்தில் மட்டுமே தடை என்பதால் மெல்ல திருட்டுத்தனமாய் ஆரம்பித்து, பார்த்தியா தடை செய்யப்பட்ட விஷயத்தை விற்கிறாய் என்று கட்டிங் வாங்கிக் கொண்டு விற்க அனுமதிக்கப்படுவார்கள். பான், குட்கா, தடை தமிழ்நாட்டில் இருக்கிறது. அது கிடைக்காத கடை ஏதும் இருக்கிறதா? சாதாரண விலையை விட அதிக விலைக்கு மிகச் சாதாரணமாய் சரமாய் தொங்கவிடாமல், உள்ளிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது  சட்டம் போட்டால் தானாகவா செயல்படும்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரோட்டரி கிளப்பில் பேச முடியுமா? என்று கேட்டார் சார்மினார் லஷ்மணனின் மனைவி ரோட்டேரியன் வித்யா. அது ஒண்ணும் பிரச்சனையில்லை. பேசுறது எல்லாம் ஒரு விஷயமா? என்றேன். “எதைப் பத்தி?” என்று கேட்க, “எதைப் பத்தி வேண்டுமென்றாலும்” என்றேன். சினிமா, கலை, இலக்கியம், எழுத்து, சாப்பாட்டுக்கடை, கடைசியாய் கேட்டால்கிடைக்கும் பற்றி சொல்லி அதைப் பத்தி பேசுறேனே என்றேன். சரி என்றார்கள். சவேரா ஓட்டலில் மாலை ஆறரை மணிக்கு அழைத்திருந்தார்கள். டீசெண்டான கூட்டம். நல்ல மொறு மொறு மசால்வடையும், பூரி கிழங்கும் கொடுத்தார்கள். டயட்டை மீறி வடையின் மொறுமொறுப்பு காரணமாய் ஒன்றை லபக்கினேன். பூரியை நண்பரிடமிருந்து கொஞ்சூண்டு பிய்த்து கிழங்கில் தோய்த்து சாப்பிட்டேன். கிழங்கில் உப்பில்லை. எப்படி இருந்த ஓட்டல்? ம்ஹும் என்று யோசித்தபடி காப்பியை சாப்பிட ஆரம்பித்தேன். வந்திருந்தவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். கொஞ்சம் பார்மலாய் ஆரம்பித்தது கூட்டம்.  முன் அறிமுகத்தில் என் பெயரைப் பற்றி நிறைய கேள்விகள் இருக்க, பெயர், சினிமா, எழுத்து என ஆரம்பித்து மெல்ல சீரியஸ் சப்ஜெக்ட்டான கேட்டால் கிடைக்கும் விஷயத்திற்கு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நிறைய கேள்விகள். சமீபத்திய மீட்டிங்கில் ஒரு ஆள் கூட அங்கிங்கு அசையாமல் முழுக்க உட்கார்ந்த மீட்டிங் இதுதான் என்றார்கள். நிஜமாய் இருக்கும் பட்சத்தில் சந்தோஷமே. மீட்டிங் முடிந்து எல்லோரும் உடனே கிளம்பாமல் ப்ரெசிடெண்ட், செகரட்டரியிடம் நிறைய கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். கேட்டால் கிடைக்கும் ஒர்க்கவுட் ஆக ஆரம்பித்துவிட்டது :)
@@@@@@@@@@@@@@@@@@@
பிரேமம் - மலையாளம், The verdict -பெல்ஜியம், The Sources - ப்ரெஞ்சு, காக்கா முட்டை - தமிழ் என கடந்த ஒரு வாரமாய் பார்க்கும் படங்கள் எல்லாம் சினிமா எனும் ஊடகத்தின் மேல் உள்ள காதலை அதிகமாக்கிக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து இம்மாதிரி சிறந்த படங்களைப் பார்க்கும் போது நம்பிக்கை உற்சாகமும் பொங்குகிறது. ஒரு ஒரு தலை ராகம், ஒரு சேது, ஒரு காதல் , ஒரு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு காக்கா முட்டை போன்ற படங்கள் தான் நிறைய புது நம்பிக்கைகளை, அறிமுகப்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மாகி மட்டுமில்லாது மேலும் ரிலையன்ஸ் மற்றும் சில நிறுவனங்களின் நூடூல்ஸுக்கும் சேர்த்துதான் தடை. ஏனோ மேகி பேர் மட்டும் அடிபடுகிறது.

காக்கா முட்டை.-பொன்முட்டை

It was a nice eve with Rotarians. 

நாளைலேர்ந்து சரக்குகடை டைமிங் 2-10ஆமே? சேல்ஸ் இன்னும் பிச்சிக்க போவுது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A husband comes home to find his wife with her suitcases packed in the living room. "Where the hell do you think you're going?" he says. "I'm going to Las Vegas. You can earn $400 for a blow job there, and I figured that I might as well earn money for what I do to you free." The husband thinks for a moment, goes upstairs, and comes back down, with his suitcase packed as well. "Where do you think you going?" the wife asks. "I'm coming with you...I want to see how you survive on $800 a year!!!" 

கேபிள் சங்கர்


Post a Comment

1 comment:

Unknown said...

Ji first time we make a short flim.we want review from you.if u have time plesae tell me positive and Negative of our flim.

regards

MN Vijayakumaran


https://www.youtube.com/watch?v=GI99NVMrnJw&app=desktop